Ads 468x60px

Tuesday, December 9, 2014

சூடிக்கொண்ட பேரழகு !

மல்லிப் பூவாய்ச் சிரித்திங்கே
     மனத்தை அள்ள வந்தவளைத்
துள்ளி ஓடி வருகையிலே
      சூடிக் கொண்டேன் பேரழகை!
கிள்ளி உன்னைக் கொஞ்சிடவே
        கிளர்ந்தே எண்ணம் பெருகுதடி!
அள்ளி அணைக்கத் துணிந்திட்டேன்
    அருகே வாடி ஆருயிரே!

மடியில் வைத்து மகிழ்ந்திடவோ
           மரபுக் கவியும் சொல்லிடவோ? 
வடியும் தேனாய் வார்த்தைகளை
       வழங்கி நெஞ்சம் மயங்கிடவோ?
அடியே என்றே அழைத்திடவோ
        அணைத்தே முத்தம் தந்திடவோ ?
பிடிவா தமாக  நீயிருந்தால்
       பிழையா காதோ நம்காதல்!


முந்தி உன்னைப் பார்த்திருந்தால்
           முடிந்தே யிருப்பேன் மனத்தில்தான்!
பிந்தி உன்னை பார்ப்பதினால்
           பித்தாய்  மனமே  அலையுதடி!
தந்தி கண்ட படபடப்பாய்த்
          தாங்கா துள்ளம் துடிக்குதடி!
சந்தி சிரிச்சி போகுமுன்னே
        தாங்கிக் கொள்ளவாய் மடியினிலே!

34 comments:

  1. இது இது கவிதை.... அதுவிட்டு விட்டு வெண்பா அது இதுன்னு சொல்லி மனுசனை குழப்புறீங்கப்பா..

    ReplyDelete
  2. வருக வருக..ஏங்க பெயரை மட்டும் மதுரைத்தமிழன் என்று வைத்துக்கொண்டு தமிழ் எப்படி குழப்பும் ? இப்போதெல்லாம் நின்று பேச யாருக்கு நேரம் இருக்கிறது. எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது தான் மரபில் எழுதும் வெண்பா. அதைத்தானே முயற்சிக்கிறேன். இதுவும் மரபில் எழுதியது தாங்க. அறுசீர் விருத்தம். நீங்களும் மரபில் எழுத ஆரம்பித்தால் பிறகு இப்படி சொல்ல மாட்டிங்க.

    ReplyDelete
  3. ஆஹா ...அருமையான பாமாலை !வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே .
    தொடரட்டும் முத்தான பாமாலைகள் மென்மேலும் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  5. அருமையான கவி தைமகள் நடந்தால்..... நல்ல அகு நடை
    வாழ்த்துகள் இதைப்பார்த்தாவது இனி கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு எல்லாமே எளிதாக வரும். எழுதுங்க சகோ.

      Delete
  6. அழகை அழகாக வர்ணித்த கவிதை அழகு! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  8. தென்றலாய் வீசித் தினமும் மகிழ்வூட்டி
    வென்றிடும் வித்தை வியப்பு!

    அறுசீர் விருத்தத்தில் அமைந்த சுகமான மண் வாசனை!
    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. தங்கள் வாழ்த்து கண்டு அகமகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  9. அற்புதமான கவிதை
    இலக்கணம் தங்களுடன் வெகு இயல்பாய்
    இயைந்து போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

      Delete
  10. மல்லிகைப்பூவாய் மணக்கும் கவிதை வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  11. வாவ் அருமை தோழி! வாழ்த்துகள்! //தந்தி கண்ட படபடப்பாய்த்// அனைவரும் மறந்த தந்தி இனிதாய் இங்கே இருக்கிறதே :)

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  12. அழகு... அருமை...

    மனம் தளராமல் முயற்சி + பயிற்சி = வெற்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  13. உங்களுக்கும் உதவலாம் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் பயன்படும் பகிர்வு.

      Delete
  14. சூடி கொண்ட பேரழகை வரிகளில் வார்த்தெடுத்த விதம் நன்று தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க

      Delete
  15. அழகான கவிதை. பாராட்டுகள் தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க

      Delete
  16. மடியில் வைத்து மகிழ்ந்திடவோ மரபுக் கவியும் சொல்லிடவோ? என்ற வரிகள் என்னை அதிகம் கவர்ந்தன. நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க

      Delete
  17. துள்ளி ஓடி வருகையிலே
    சூடிக் கொண்டேன் பேரழகை!
    கிள்ளி உன்னைக் கொஞ்சிடவே
    கிளர்ந்தே எண்ணம் பெருகுதடி!// இது விருத்தமல்ல.. விருந்து.

    ReplyDelete
  18. ஹஹஹ நன்றிங்க.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி