Ads 468x60px

Thursday, December 4, 2014

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!

அழகே! அமுதே! அருமை தமிழே!
வழங்க வழங்க மகிழ்வே - பழக
இனிக்கும் மொழியே! இணையிலா வண்ணம்
மினுக்கும் கவிதையை மீட்டு.!

எளிமை! இனிமை! இளமை! புதுமை!
வலிமை! கொழிக்கும் வளமை! -  பொலிவைத்
தருமே எனக்கு! தழைக்கும் தமிழ்ப்பா
வருமே மனத்துள் வளர்ந்து!

மருந்தாக ஆனாய்! மனம்மகிழ்ந்து உண்ணும்
விருந்தாக ஆனாய்!  விரைந்தே - விரும்பி 
எருவாக ஆகுமென ஏட்டில் படைத்தேன்
உருவாகும் பாக்கள் ஒளிா்ந்து!

பாடும் மொழியே! படா்கின்ற இன்பத்தைச்
சூடும் தமிழே! சுவையமுதே! - நாடுகிறேன்
உன்றன் திருவடியை! ஓங்கும் கவிபாட
என்றன் இதயம் இரு!

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!
மன்றம் மணக்கக் கவிபாடு! - என்தாயே!
தன்னோ் இலாத தமிழே! மயங்குகிறேன்
என்னே இயற்கை எழில்!

29 comments:

 1. தமிழ்க்கவி சுவைத்தேன்,,, தேன், தேன்.
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.
   தேன்..தேன் பாடல் தங்கள் தளத்தில் பார்த்த நினைவு வந்தது.

   Delete
 2. தித்தித்த கவி..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 3. என்றன் இதயம் இரு!//

  என்றுமென் இதயம் இரு.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்

   தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி

   என்றுமென் இதயம் இரு
   என்று பாடினால் வெண்பாவின் தளை தட்டும்.

   எனவே இவ்விடத்தில்
   மேல் உள்ள எதுகையை நோக்கி
   என்றன் இதயம் இரு என்பதே சிறப்பாகும்

   Delete

 4. வணக்கம்!

  தமிழ்மணம் 3

  கொஞ்சும் தமிழைக் குழைத்துக் கொடுத்துள்ளீா்!
  நெஞ்சம் நிறைந்து நெகிழ்கின்றேன்! - அஞ்சாமல்
  அன்னைக் கொடியேந்தி ஆற்றல் மறமேந்தி
  முன்னை மரபுகளை மூட்டு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வளம்பெற வேண்டி வழங்கிய வாழ்த்தில்
   பலமே பெறுவேன் பணிந்து.

   ஐயாவின் வருகையும் அமுதென தந்த வெண்பாவும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 5. வண்ணத் தமிழில் வடித்தகவி நெஞ்சத்து
  எண்ணத்தில் ஊறி இனிக்கிறதே - திண்மை
  பொருந்த திசையாளும் பொற்றமிழை! நாளும்
  அருந்திப் படை அமுது !

  அழகிய வெண்பாக்கள் நெஞ்செல்லாம் இனிக்கிறது
  அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. இனிமைத் தமிழில் இமயம் உளதே
   கனியாய்க் கவரும் கமழ்ந்து.

   வருக சகோ. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழந்தேன். நன்றி.

   Delete
 6. இன்தமிழைப் பாவால் இசைத்தே அழைத்திட்டாய்
  உன்னுடனே உள்ளாள் உணர்!

  மிக மிக அருமையான வெண்பாக்கள் தோழி!
  இனிமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இனிதே ஏற்றேன் இளமதியார் வாழ்த்தை
   தனித்தே தெரியும் தளிர்.
   வணக்கம் தோழி. மிகவும் மகிழ்ந்தேன் தங்கள் வருகையாலும் வாழ்த்திய வெண்பா கண்டும். நன்றிங்க தோழி.

   Delete
 7. தென்றலென வீசிடும் தேன்தமிழ் வெண்பாக்கள்
  மன்றங்கள் ஏற்கும் மகிழ்ந்து.

  அருமை. வாழ்த்துக்கள் சசிகலா.

  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. வாராய் வசந்தமே வாழ்த்திய நெஞ்சத்தால்
   நாரும் மணக்கும் மலர்.

   வருக தோழி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

   Delete
 8. மருந்தும் விருந்தும் அளித்தமைக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 9. வாரி வழங்குகிறாய் வண்ணமிக வெண்பாவை
  மாரி என்பேன் மகிழ்ந்து

  ReplyDelete
  Replies
  1. அன்பாய் வழங்கிய அப்பாவின் ஆசியை
   பண்புடன் ஏற்றேன் பணிந்து.

   தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 10. தமிழ் என்றும் உங்களுடன் இருந்து விளையாடும் சகோதரி.அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க. இப்படி உற்சாகும் தரும் வாழ்த்தில் அகமகிழந்தேன். நன்றிங்க.

   Delete
 11. வணக்கம் சகோதரி
  அழகான நேரசை வெண்பாவை சுண்டக்காய்ச்சிய பாலின் சுவை மாறாமல் பருக தந்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.
  ---------------
  நலமாக உள்ளீர்களா சகோதரி? பணி எவ்வாறு போகிக் கொண்டிருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. இங்கு அனைவரும் நலமே சகோ. புதுமாப்பிள்ளை நீங்க எப்படி இருக்கிங்க ?
   நன்றிங்க சகோ.

   Delete
 12. ஆகா...! ரசித்தேன் சகோதரி...

  தொடர்ந்து பதிவு செய்க...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றியும்.

   Delete
 13. அருமையான கவி
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 14. வணக்கம்

  செப்பிய வரிகள் கண்டு
  சிந்தை குளிர்ந்து.....
  பாடித் திரிந்தேன் பரவசமடைந்தேன்

  அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.. சகோதரி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றியும்.

  ReplyDelete
 16. கவிதைத்தேன் சுவைத்தேன்!

  த.ம. +1

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி