Ads 468x60px

Wednesday, December 31, 2014

வரவேற்போம் புத்தாண்டை !

அன்பை நாளும் விதைத்திடுவோம்!
         அகத்தே தூய்மை அடைந்திடுவோம்!
அன்னைத் தமிழை அரவணைத்து
           அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்!
தன்னைக் காக்கும் நம்பிக்கை
           தளரா திருக்க பார்த்திடுவோம்!
என்ன இல்லை நம்மிடையே
           என்றே துணிந்து செயல்படுவோம்!

தென்றல் வந்து தழுவிடவே
          தேனார் சோலை காத்திடுவோம்!
நன்றி மறவா நல்லொழுக்கம்
          நாளை வளரும் தலைமுறைக்கே
பண்பாய் உணர்த்தி வளர்த்திடுவோம் !
          பசுமை காக்க பயிற்றிடுவோம்!
இன்னல் நீங்க வாழ்வினிலே
          எளிமை தவழப் பழக்கிடுவோம்!

கண்ணாய் நாட்டைக் காத்திடுவோம்!
           கடமை மலராய்ப் பூத்திடுவோம்!
மண்ணின் வளத்தை வளர்த்திடுவோம்!
           மரங்கள் வைத்தே மகிழ்ந்திடுவோம்!
பெண்மை போற்றிப் பெயர்பெறுவோம்!
           பெருமை யாவும் பேணிடுவோம்!
எண்ணம் சிறக்க எந்நாளும்
          இயன்ற உதவி செய்திடுவோம்!

கல்லா திருக்க பழிவருமே
         கற்றே நாளும் தெளிந்திடுவோம்!
நில்லாச் செல்வம் நிதந்தேடி
        நீளும் பயணம் தடைசெய்வோம்!
எல்லை காக்கும் படைசேர்ந்து
         என்றும் நாட்டைக் காத்திடுவோம்!
தொல்லை போக்கும் அருமருந்தாய்த்
         தோழர் துயரை போக்கிடுவோம்.

உயர்வும் தாழ்வும் இல்லாமல்
        ஒன்றாய்க் கூடி வாழ்ந்திடுவோம்!
அயர்வே இன்றி உழைப்பேந்த
         ஆளும் திறனை வளர்த்திடுவோம்!
துயரில் வதியும் இல்லார்க்குத்
         துணையாய் என்றும் இருந்திடுவோம்!
உயிரின் இனிய செந்தமிழை
         உலகம் எங்கும் பரப்பிடுவோம்!

பிறக்கும் இனிய புத்தாண்டில்
       சிறக்கும் வழிகள் உரைத்துள்ளேன்!
பறக்கும் பறவை போலுள்ளம்
       பாடிக் களிக்கப் பணித்துள்ளேன்!
திறக்கும் சொர்க்கம் மண்ணுலகில்
        திறமை ஒன்றே நம்சொத்து!
முறுக்கும் ஆசை நிலைபோக்கி
         முதல்வன் திருத்தாள் ஏத்துகவே!

52 comments:

  1. Nanry and.....http://kovaikkavi.wordpress.com/2014/12/31/39-well-come-2015-and-best-wishes-to-all-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-2015-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/
    Vetha.Langathilakam.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி.

      Delete
  2. //கல்லா திருக்க பழிவருமே
    கற்றே நாளும் தெளிந்திடுவோம்//

    என்னை தொ(சு)ட்ட வரிகள்...

    இனி நான் எங்கே ? கற்க...

    ஆஹா ஒவ்வொரு வரிகளும் அருமையாக செதுக்கி இருக்கின்றீர்கள்

    எமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வயது ஒரு தடையேயில்லைங்க. தங்களுக்கு எல்லாமே வசமாகும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete
  3. வணக்கம்!

    முத்தொளிரும் வண்ணத்தில் புத்தாண்டு வாழ்த்தளித்தீர்!
    சித்தொளிரும் செந்தமிழின் சீருரைத்தீர்! - இத்தரையில்
    இன்பாம் கவியேந்தித் தென்றல் வலம்வருக!
    அன்பாம் அமுதை அளித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் வருகையையும் வாழ்த்தினையும் வணங்கி ஏற்கிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
      பாட்டெழுதும் பாவலரே பார்போற்றும் ஆசானே
      நாடெழுப்ப நல்லதே நல்கு.

      Delete
  4. புத்தாண்டை வரவேற்ற கவிதை அருமை .புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருக வருக தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  5. நீங்கள் சொன்னபடி செய்து புத்தாண்டை வரவேற்போம்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

      Delete
  7. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  8. திறக்கும் சொர்க்கம் மண்ணுலகில்
    திறமை ஒன்றே நம்சொத்து!
    அழகான உண்மையான வரிகள்..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. வெகுநாட்களாக காணவில்லை தங்களை புத்தாண்டில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி !எண்ணிய எண்ணம் ஈடேற
    இறைவன் அருளும் கிட்டட்டும் .மண்ணில் பிறந்த அனைவர்க்கும்
    மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் தங்களின் இனிய கவிதை வரிகள் போல் !

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

      Delete
  10. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

      Delete
  11. வணக்கம் தோழி!

    சிறக்கும் வழிகளைச் சீராகத் தந்தீர்!
    உறக்கம் கலைத்து உணர்வோமே! - ஏற
    முயற்சியைச் செய்தால் முளைவிடும் வெற்றி
    உயற்சி பெறுமே உடன்!

    அழகிய விருத்தம் தோழி!
    சிறந்த பொருள்! அருமை!

    தொட்டிடும் பணிகள் துலங்கிட நலன்கள் பெருகிட
    உளமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

      Delete
  12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

      Delete
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete
  14. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

      Delete
  15. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

      Delete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

      Delete
  17. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

      Delete
  18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete

    2. அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

      "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

      என்றும் நட்புடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.fr

      Delete
    3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete

  19. சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
    த.ம.10

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக வருக. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete
  20. மனம்நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

      Delete
  21. அழகான வாழ்த்து அருமையான விருத்தத்தில் சகோ !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் சகோ.

      Delete
  22. அன்பை நாளும் விதைத்திடுவோம்!
    அகத்தே தூய்மை அடைந்திடுவோம்!//
    புத்தாண்டு கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வருக தோழி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  24. வணக்கம் சகோதரி
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  25. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி