Ads 468x60px

Wednesday, December 24, 2014

உன்னையே தேடும் உயிர் !

 
உன்னகம் தீண்ட உருவாகும் காவியம்!
என்னகம் வந்தே இணைந்திடுக!-பொன்மயிலே!
தன்னகத்தைத் தாங்காது தள்ளாடும் மெல்லியளே!
உன்னையே தேடும் உயிர்.

கன்னம் சிவக்கக் கதைபேசும் பைங்கிளியே!
முன்னிருக்க முன்வருமே முத்தமிழும் - என்னிலையைக்
கண்கொண்டு பாராய் கனியமுதே! என்று...நீ
என்னகம் சேர்வாய் இயம்பு!


வாவென்றாள் வண்ணமகள்! வாஞ்சையுடன் வாய்மணக்கத்
தாவென்றாள் தித்திக்கும் தண்டமிழை! - போவென்றாள்
என்னிதயம் தாங்கிடுமோ? ஏக்கம் பெருக்கெடுத்துப்
பொன்னுதயம் காட்டும் பொலிந்து!


சிந்தை செழித்திடச் சின்னவளின் சிந்தனை
வந்தென் மனத்துள் மகிழ்வூட்டும்! - செந்தேன்
மலரில் நடமிடும் வண்டானேன்! கண்ணுள்
கலந்தே யிருக்கும் கனவு!

21 comments:

 1. இது மரபு கவிதையா அல்லது வெண்பாவா என்று எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் தென்றல் சசி எழுதிய ஒரு நல்ல கவிதை என்பது மட்டும் தெரியும்

  ReplyDelete
 2. செந்தமிழாம் தேனெடுத்தே செம்மைமிக பா தொடுத்தே
  தந்தசில வெண்பாவே தக்கதென்பேன் - சந்தமிக
  ஒப்பில்லை என்றே உரைப்பாராம் காண்போரும்
  தப்பில்லை! உண்மை! அது!

  ReplyDelete
 3. வணக்கம்
  சகோதரி
  உண்மையில் உயின்றாய் வெண்பா உள்ளக்
  களிப்பில் மகிழ்ந்தது நெஞ்சம் ஓதினாய்
  செவ்வென பாடி மகிழ்ந்தது உள்ளம்.

  அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. காதலில்லா வாழ்வேது இவ்வுலகில்

  அக்காதலையும் தமிழோடு இயம்பிய

  அழகை என்னவென்பது எப்படிசொல்வது

  பாராட்ட வரிகள் இருந்தும் வார்த்தைகள் வரவில்லையே

  தென்றல் மேலும் கவியை அள்ளி வீச வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாவென்றாள் வண்ணமகள்! வாஞ்சையுடன் வாய்மணக்கத்
  தாவென்றாள் தித்திக்கும் தண்டமிழை! -
  Happy chritmas and new year..
  Vetha.Langathilakam.

  ReplyDelete
 7. அசத்திட்ட தென்றல்.

  ReplyDelete
 8. அருமை! சிறப்பாக இருக்கிறது வெண்பாக்கள்!
   
  செந்தமிழாள் வந்துனது சிந்தை சிறப்பிக்க
  அந்தமிலா ஆனந்தம் ஆளுமே! - பைந்தமிழே
  சொந்தமாய்ச் சூழ்ந்துன் னுடனிருக்கப் பாக்களும்
  வந்திடுமே பார்க்க வளர்ந்து!
   
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 9. அருமை.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 10. வணக்கம்!

  சிந்தை செழித்தாடும்! சிந்தனைத் தேரோடும்!
  விந்தை விளைந்தாடும் வெண்பாக்கள்! - சந்தைக்..கள்
  மொந்தை முழுதுண்ணும் மோகம் அடைந்தேனே!
  பந்தைப் போல்நான் பறந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 11. தாமத வருகைக்கு வருந்துகிறேன் காரணம் வேலைப்பல்லு Sorry வேலைப்பளு

  கவிதை அருமை

  மலரில் நடமிடும் வண்டானேன் !

  நடனமிடும் 80 சரியா ?

  எனது புதிய பதிவு - இன்றைய Moneyதர்கள்

  ReplyDelete
 12. தடையில்லா தமிழ்ச் சொற்கள் வந்து விளையாடிய கவிதை. வாழ்த்துக்கள்
  த.ம.8

  ReplyDelete
 13. [[[தன்னகத்தைத் தாங்காது தள்ளாடும் மெல்லியளே!
  உன்னையே தேடும் உயிர்.]]
  =====>>>கணவன் மனைவியிடம் [கடைசியில்] தஞ்சம் அடையும் நேரம்! அப்போ உயிரையும் கொடுப்பான்!

  தமிழ்மணம் +1

  ReplyDelete
 14. அருமையான கவிதை சகோதரி.

  ReplyDelete
 15. வெண்பா நன்று.

  ReplyDelete
 16. உன்னையே தேடும் உயிருண் டுடலெரியத்
  தென்றலின் வெண்பா தருசுகந்தான் - என்றுமுள
  எந்தமிழின் அற்புதங்கள் ஏத்திப் புகழ்படைத்துச்
  சந்தனமாய்ச் சேரும் சிறந்து.

  அழகிய வெண்பாக்கள் கவிஞரே!!
  நன்றி

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி