Ads 468x60px

Monday, December 1, 2014

நினைவுகள் !


பாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா்
நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும்! - மீட்டிச்
சுவைகூட்டி சொல்லும் சுடா்க்கவிகள் என்றும்
அவைகூட்டி ஆளும் அழகு.


எங்கள் ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் கவியரங்க விழாவிற்கு நானும் எழுதியனுப்பிய விருத்தம். தலைப்பு நினைவுகள். விழாவில் கவிதையை வாசித்த திருமதி. சுகுணா ! அவர்களுக்கும் வாய்ப்பை வழங்கிய ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                நினைவுகள் !

எண்ண இனிக்கும் நினைவுகளை
         இன்பத் தமிழால் நானெழுத...
கன்னம் சிறக்கும் அதனுறவால் !
         கவிதை கொடுக்கும் கனியமுதாய் !
சின்னப் பூவாய்ச் சிரித்திருக்கும்
         சிறகை விரித்தே பறந்திருக்கும் !
மின்னல் ஒளியை ஒத்திருக்கும்
          மேனி  யழகாய் மிளிர்ந்திருக்கும் !

மண்ணும் பொன்னாய் மின்னிடுமே
         மவுன மொழியில்  பேசிடுமே !
கண்ணும் கவிதை பாடிடுமே
         கருத்தில் என்றும் நிலைத்திடுமே !
வண்ண மீனாய்க் கவர்ந்திடுமே
        வாழ்வில் நிறைவைத் தந்திடுமே !
உண்ணும் போதும் உறவாடி
       உழன்று இருக்கும் நினைவுகளே !

ஆலைக் கரும்பின் சுவையூட்டி
       அகத்துள் நன்றே உறைந்திருக்கும் !
காலை உதயக் கதிரோனாய்க்
       கவலை தீர்க்கும் தினந்தோறும் !
மாலை நேரம் மயங்கவர
       மலரும் நினைவாய் மணம்வீசும் !
சேலைப் பூவில் நிழலாடி
        சேர்த்தே அணைக்கும் நினைவுகளே !


39 comments:

 1. //ஆலைக் கரும்பின் சுவையூட்டி
  அகத்துள் நன்றே உறைந்திருக்கும்.
  காலை உதயக் கதிரோனாய்க்
  கவலை தீர்க்கும் தினந்தோறும்!
  மாலை நேரம் மயங்கவர
  மலரும் நினைவாய் மணம்வீசும்!
  சேலைப் பூவில் நிழலாடி
  சேர்த்தே அணைக்கும் நினைவுகளே !//

  அழகான வரிகள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. முதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 2. அற்புதம்
  மூன்றாவது
  மரபுக் கவிதைகள் தொகுப்புக்கான கவிதைகள்
  தயாராகிறது என நினைக்கிறேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா. தங்கள் ஆசியுடன் தொகுப்பானால் மகிழ்ச்சியே.

   Delete
 3. அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான வரிகளில் அறுசீர் விருத்தம் பாடிய சகோதரிக்கு நன்றி.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருக வருக.. நன்றியை நான் தானே தங்களுக்கு கூற வேண்டும். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 4. வணக்கம் தோழி!..

  தென்றல் வந்து தீண்டியதோ!
    திங்கள் தழுவி வந்ததுவோ!
  முன்றில் ஒலித்த கவியமுதோ!
    முன்னே விழுந்த மழைத்துளியோ!
  கொன்றைப் பூக்கள் சொரிந்தனவோ!
    கோதை இட்ட கலையழகோ!
  குன்றில் பொறித்து இட்டகவி
    கோலம் கண்டே வாழ்த்துகிறேன்!

  மிக அருமையான விருத்தப் பாக்கள் தோழி!
  மட்டற்ற மகிழ்வு கொண்டேன்!
  உங்கள் சிந்தனையும் கவிப் புனைவும் அற்புதம்!
  தொடருங்கள்! ..

  இனிய வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. விருத்தப்பாவில் தந்த வாழ்த்துரை விருந்தாய் அமைந்தது தோழி.
   வருகை தந்து வாழ்த்தி உற்சாகப்படுத்திய தங்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 5. நல்லதொரு கவிதை கண்டேன்
  மனதில் நிறுத்திக் கொண்டேன்
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. நலம் தானே ?
   தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete

 6. வணக்கம்!

  பிரான்சு கம்பன் கழக மகளிர் அணி மாதந்தோறும் நடாத்தும்
  கவியரங்க நிகழ்வுக்குப் கவிதை படைத்தமைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!

  தென்றல் சசிகலா தீட்டிய இப்பாக்கள்
  மன்றம் மகிழ மணந்தனவே! - என்றென்றும்
  கொஞ்சும் தமிழணங்கை நெஞ்சுள் சுமப்பதனால்
  விஞ்சும் புகழே..உன் வீடு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தாய் தமிழை தரணியில் பாடிடவே
   வாய் மணக்கும் மகிழ்ந்து.

   என்பதையே சொல்லித்தந்த ஆசான் தாங்கள் தானே. வணங்கித் தொடர்கிறேன்.

   Delete
 7. வாழ்த்துகள் மா....கவி அருமை

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தேமா...புளிமாவுக்கா தங்கள் வாழ்த்து. (சும்மா) நன்றிங்க தோழி.

   Delete
 8. தென்றல் மேகத் தமிழ்கடைந்து
    திரளும் கவிதைத் தளையுடைத்து
  நின்று பெய்யும் அறுசீராய்
    நிகழும் மழையாம் நினைவுகளைக்
  ஒன்றும் கண்கள் ஓர்நொடியும்
    ஓய்தல் இல்லை ஆய்ந்தறிந்தே
  நன்றே என்றார் நம்கவிஞர்
    நான்மேல் என்ன கூறுவதோ?

  விருத்தமும் நன்றாய்க கைவரப் பெற்றீர்கள் சகோ!
  தொடருங்கள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நன்றென வாழ்த்த நலமே பெருகிடும்
   கன்றெனத் துள்ளும் கவி.
   ஐயாவின் ஆசியும். தங்களைப்போன்ற சகோதரர்களின் உற்சாக வாழ்த்தும் . என் போன்றவர்களுக்கு மேலும் எழுத ஆர்வத்தை தூண்டும். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 9. காக்கைக் கரையும் பாடல்பல
    காதிற் கருமை என்போரும்
  நோக்கொன் றில்லா பாடல்பல
    நிதமும் எழுதிச் செல்வோரும்
  பூக்கும் பூவாய்ப் பின்வாடிப்
    போகப் பலவும் படைப்போர்‘உம்
  பாக்குள் நுழைந்து வரவேண்டும்!
    பரிசாய்த் தமிழைப் பெறவேண்டும்!

  வாழ்த்துகள்!

    

  ReplyDelete
  Replies
  1. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் ஆற்றும் அரும்பணிதானே அனைவருக்கும் தமிழைப் பரிசாகத் தருகிறது.
   வணங்கி வரவேற்கிறேன் தங்கள் வாழ்த்தை.

   Delete
 10. Replies
  1. வணக்கம் ஐயா. வருக வருக...தங்கள் நலனை அறிய ஆவல்.
   அவ்வப்போது வலைப்பக்கமும் வருகை தரவும்.

   Delete
 11. அருமை...

  பாராட்டுகள் சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 12. விருத்தம் ஒரு விருந்தாய் அமைந்தது. அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருக...வருக. . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 13. அழகான வரிகள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 14. அழகான பாடல்.
  அருமை சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. நலம் தானே ? வலைப்பக்கம் காண முடிவதில்லையே தங்களை..

   Delete
 15. எளிமையான வரிகளில்
  அருமையான கவிதை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.நன்றிங்க சகோ.

   Delete
 16. விருத்தப் பா ஒன்றே விளம்பினாய் நன்றே

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 17. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அழகான கவிதை! பாராட்டுகள்!

  ReplyDelete
 19. அழகான விருத்தம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சசிகலா

  வாழ்க வளமுடன்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி