Ads 468x60px

Thursday, November 27, 2014

தேன் துளி !


தும்பிக்கை நாதன் துணையிருக்க என்னபயம் !
நம்பிக்கை யோடே நட !

மனப்பாட்டைக் கேட்கும் மனமே தமிழில்
தினப்பாட்டைக் கேட்பாய் திளைத்து .

கன்னித் தமிழைக் கருத்தில் புகுத்திட
மின்னும் அறிவு விளைந்து.

நாளும் வளம்சேர்க்க நாடினேன் உன்னையே !
மேலும் தருவாய் மிகுத்து.

எண்ண எழுத இனிக்கும் தமிழமுதம் !
உண்ணத் திகட்டா துணர் !


18 comments:

  1. நம்பிக்கை உண்டேல் நமக்கேன் சசிஅந்தத்
    தும்பிக்கை யானின் துணை?

    நம்பிக்கை இல்லார் நலம்வளரச் செய்யுமா
    தும்பிக்கை யானின் துணை?

    ReplyDelete
    Replies

    1. கவிஞா் முத்துநிலவன் ஐயா அவா்களுக்கு வணக்கும்!
      நானும் உங்கள் கருத்துடையவன் தான்!

      வெண்பா விளையாட்டாகக் கீழ்வரும் செய்யுளைக் கொள்ளவும்!

      நம்பி அவனடியை நாமடைந்தால், துன்பங்கள்
      எம்பிக் குதித்தோடும்! இன்பூறும்! - எம்..ஓளவை
      போற்றி வணங்கிப் புகழ்பெற்றாள்! மாற்றியே
      துாற்றித் தொடர்தல் துயா்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  2. சிறந்த வெண்பாக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவி தேனாய் இனித்ததே..
    த,ம,2

    ReplyDelete
  4. ஆஹா... அருமை...
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
  5. அற்புதமான குறள் வெண்பாக்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அமுதமாய் தமிழ் இனிக்கும் தும்பிகையானின் துனையிருப்பின்.....

    த.ம.5

    ReplyDelete


  7. வணக்கம்!

    வான்மழை நெஞ்சனை வாழ்த்தி வணங்கி..நான்
    தேன்குறள் உண்டேன் திளைத்து!

    சங்கத் தமிழைச் சசிகலா கற்றோங்கித்
    தங்கக் கவிகளைத் தா!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. வணக்கம் தோழி!

    தேன்துளியே நம்மொழி தித்திக்கும் எப்பொழுதும்
    காண்போம் கருத்தூன்றிக் கற்று!

    அருமையான குறட்பாக்கள்! தொடருங்கள்!..
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தித்திக்கும் தேன்கவிதை தேக்கமின்றி நாள்தோறும்
    எத்திக்கும் எட்டிவிட என்மகளே-புத்திமிக
    அன்னைத் தமிழ்தன்னில் அன்புகொண்டேதந்திடுக!
    உன்னைநான் வாழ்த்த உவந்து

    ReplyDelete
  10. நம்பிக்கை தரும் தேன்துளியை ருசித்தேன்.
    த.ம.9

    ReplyDelete
  11. தும்பிக்கநாதன் மீத் வைக்கும் நம்பிக்கை தன்னம்பிக்கையைத்தான் குறிக்கும். தமிழமுதம் என்றும் திகட்டாது.

    ReplyDelete
  12. பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட சேட்டைக்காரன் பெற்றுக்கொள்ளும் தங்களின் தென்றலின் கனவு நூல் வெளியீட்டு விழாவினை தற்போதுதான் கண்டேன். மிக்க சந்தோசம். தாங்கள் வலைப்பதிவில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. நூல் வடிவில் காண நானும் ஆசை கொண்டுள்ளேன். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. வெண்பா சூப்பர்மா

    ReplyDelete
  14. குறள் வெண்பாக்கள் நன்று
    வாழ்த்துடன்
    இன்று வலையில் ஏற்றுவேன் எனது
    வாருங்கள் அங்கு.
    வேதா. இலங்காதிலகம்......

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி