Ads 468x60px

Wednesday, November 5, 2014

அஞ்சியது போதும் !

பயம் கற்பிக்கும் பழமையை ஒதுக்கிடு
சுயம் கற்றே நீயும் தெளிந்திடு
நயமென்ற பேரிலே நம்மை முடக்கும்
கயவரின் சொல்லை காலால் மிதித்திடு. 
 
நஞ்சை விதைப்பரை நயமாக உணர்ந்தே
பஞ்சென்ற ஓரினமே பதுங்கி நிற்காதே
அஞ்சி நடவாது ஆணவமும் கொள்ளாது
நஞ்சை முறிக்கும் நல் மருந்தாவாய்.
 
தொட்டுப் பேசியே தூரநிற்கும் கயவரை
வெட்டி வீழ்த்திடவே வேங்கை யென்றெழுவாய்
கொட்டு முரசெனவே குலம் காத்திடவே
தட்டி எழுப்பிடுவாய் தயக்கமேன் பெண்ணினமே.
 
அஞ்சியது போதும் அடங்கியதும் போதும்
மிஞ்சிடும் கயவரை மிதித்திடு காலால்
நஞ்சென்று உமிழ்ந்தே நால்வரை காக்க
கஞ்சர் இவரென்றே காயத்தே உரைத்திடுவாய்.
 

49 comments:

  1. அப்படிப்போடு... சசீ! அருமையடா! அருமை!
    கோபம் கொப்பளிக்கும் குமுறல் வார்த்தைகளில்
    சாபம் கொடுத்துவிடடால் சாம்பல்தான் எதிரியெல்லாம்!
    -அட உன்கவிதையைப் பாராட்டுவதே கவிதையாக வருதே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகையும் உற்சாகம் தரும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க அண்ணா.

      Delete
  2. அருமையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. பயம் கற்பிக்கும் பழமையை ஒதுக்கிடு
    சுயம் கற்றே நீயும் தெளிந்திடு//

    நன்றாக சொன்னீர்கள் சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. நலம் தானே..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தோழி.

      Delete
  4. நஞ்சை விதைப்பரை நயமாக உணர்ந்தே
    பஞ்சென்ற ஓரினமே பதுங்கி நிற்காதே
    அஞ்சி நடவாது ஆணவமும் கொள்ளாது
    நஞ்சை முறிக்கும் நல் மருந்தாவாய்.

    தென்றலாய் வருடும் வரிகள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  5. Nal vaalththu.
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி. புதிய பகிர்வு உண்டா ?

      Delete
  6. வணக்கம் !

    படத்திற்கு ஏற்ற பதமான கவிதை வருக வருக என் அருமைத் தோழியே
    வலையுலகம் மகிழ்வு பெற மென் மேலும் தருக தருக இனிய கவிதையே !
    வாழ்த்துக்கள் தோழி கவிதையால் உள்ளத்தை அசத்தீற்றீங்க போங்க :))

    ReplyDelete
    Replies
    1. வருக வருக தோழி. நலம் தானே ?
      தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு பெருமகிழ்வு நன்றிங்க தோழி.

      Delete
  7. மீண்டும் எழுச்சிக் கவிதைகள்! வாழ்த்துக்கள்!
    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். தமிழ்மண ஓட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  8. அஞ்சியது போதும் சூப்பர் வரிகள் ..

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

      Delete
  9. கருவுக்கு ஏற்றார்போல
    வார்த்தைகள் இயல்பாக விழுந்து
    கவிதைக்கு மெருகூட்டுகிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  11. வீரத்தின் வெளிப்பாடு மிகவும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. தங்களின் நலன் அறிய ஆவல்.
      தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  12. மிக அற்புதமான வீர வரிகள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. நலம் தானே ?
      தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  14. வணக்கம் அன்புத் தோழியே!

    அஞ்சியது போதுமென்று ஆர்தெழுந்து பா.தந்தீர்!
    துஞ்சுவரோ இன்னும் சுருண்டு!

    அனல்பறக்க அருமையான கவிபடைத்தீர்கள்!
    படமும் சிறப்பு!
    அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி. எப்படி இருக்கிங்க ?
      தென்றலுக்கு வர நேரம் ஒதுக்கியமைக்கு மிகவும் நன்றி.

      Delete
  15. ஆவேசம் மிக்க கவிதை நன்று மீண்டும் எழுதத் தொடங்கியதில் மகிழ்ச்சி.
    \நஞ்சென்று உமிழ்ந்தே நால்வரை காக்க//
    யாரந்த நால்வர்?

    ReplyDelete
    Replies
    1. எல்லா பெண்களும் அஞ்சுவது கிடையாது. அப்படி அஞ்சி நிற்கும் நால்வருக்கு தைரியம் சேர்க்க துணிந்த பெண்களை அழைக்கிறேன்.
      நன்றிங்க.

      Delete
  16. வணக்கம்
    சகோதரி

    கவியின் வார்த்தையில் புரட்சி பிறக்கிறது.. செப்பிய வரிகள்
    கண்டு என் மனம் மகிழ்ந்தது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  17. //நஞ்சை முறிக்கும் நல் மருந்தாவாய்.// :)

    தென்றலாய் வருடி தைர்யம் அளிக்கும் கவிதை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. வீரமிகு வரிகள் நன்றி சகோதரியாரே
    தம 10

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. எழுச்சி மிகு கவிதைக்கு சூட்டிவிட்டேன் தமிழ்மண மகுடம் !

    ReplyDelete
    Replies
    1. வருக ...வருக. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  20. பெண்மையே வீறு கொண்டு எழுந்திடு..... ஐயம் வேண்டாம்.....

    அருமையாகச் சொன்னீர்கள் சகோ. பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  21. தென்றலில் புயலை உணர்கின்றேன்..இந்த தீ அணையாமல் வளரட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றியும் தோழி.

      Delete
  22. முதல்முறை தங்கள் வலைதளம் வந்தேன் ...
    மங்கையர் வீரம்பொங்கும் கவிதை பெண்ணடிமை தீயினை வெல்லும் புது புரட்சியாய் அமையட்டும் தங்கள் வரிகள் தன்னம்பிக்கை ஊட்டட்டும் பெண்களுகு ..
    நன்றி சகோதரி ...

    ReplyDelete
    Replies
    1. வருக வருக முதல் வருகைக்கு நன்றி சகோ. தொடர்வோம் தமிழாய்.

      Delete
  23. சினம் பொங்கிய கவிதைக்குத் தகுந்த படமும் அருமை சகோதரி.

    அன்புடன்
    கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. வருக கில்லர்ஜி முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். ஒரு சந்தேகம் தங்கள் பெயரே கில்லர்ஜி தானா ?
      தங்களை பதிவர் சந்திப்பு படங்களில் பார்த்தேன். மகிழ்ச்சி.
      தொடர்வோம் நன்றிங்க.

      Delete
  24. அன்புத் தங்கையே நலமா?
    வீறுகொண்ட சொற்களால்
    சீர்மிகு கவிதை..
    சிறந்த ஆக்கம்...

    ReplyDelete
  25. அருமையான வரிகள் .

    ReplyDelete
  26. மிஞ்சிடும் கயவரை மிதித்திடு காலால்.........அருமை

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி