Ads 468x60px

Tuesday, February 11, 2014

காவியம் நீ...!

 
கண்கள் கண்டெடுத்த
காவியம் நீ...
கடிதம் ஒன்றை
எழுதிடத்தான்...
எத்தனை எத்தனை
வார்த்தைகளை புரட்டியபடி..

என்னென்று அழைத்திட
அன்பே...
அது தான் நிறைய இருக்கிறதே.
ஆருயிரே...
அது தான் உனக்காக
என் உயிர் இருக்கிறதே.
அத்தானே..
யாரேனும் என்ன
நீயே சிரித்திடுவாய்..
என்னென்று எழுதிட
எல்லாமுமே நீயானபிறகு..
உனை காணும் போதில்
விழிகள் பேசிடும்
வார்த்தைகளை விடவா
இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.


என்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.

43 comments:

 1. அதானே...!

  பார்வை ஒன்றே போதுமே...!
  பல்லாயிரம் சொல் வேண்டுமா...?

  வாழ்த்துக்கள் சகோதரி... கவிதை சங்கமம் குழுமத்திற்கும்...!

  ReplyDelete
  Replies
  1. அழகிய பாடல் வரிகளை நினைவு படுத்தி சென்றமைக்கு நன்றிங்க.

   Delete
 2. இப்படிச் சொன்னால் எப்படி ?..என் தோழிக்கு வார்த்தைகளும் கவிதை
  அருவிகளாகக் கொட்டுவது தான் சிறப்பு இது அவளின் இயல்பு நிலை
  இன்பக் கவிதை வரிகள் இனிதே தொடர வாழ்த்துக்கள் தோழி .அசத்துங்கள்
  அதைக் கண்டும் ரசித்திடுவோம் :))

  ReplyDelete
  Replies
  1. வருக வருக தோழி... நலம் தானே ? தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 3. இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது
  >>
  உன் விரல்கள் அவர் கன்னத்தில பேசாம இருந்தால் போதாதா!?

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் நாத்தனாரே..

   Delete
  2. ///உன் விரல்கள் அவர் கன்னத்தில பேசாம இருந்தால் போதாதா!?//
   சகோ ராஜி தன் அனுபவத்தை சொல்லுறாங்க... சரிதானே ????

   Delete
 4. வார்த்தைகளை விட விரலால் என்ன பேசி விட முடியும்? அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 5. விழி பேசும் வார்த்தைகள் அருமையானதுதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 6. //என்னென்று எழுதிட
  எல்லாமுமே நீயானபிறகு//
  மிக மிக அருமை தோழி! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 7. விழிகளின் மொழி
  விசை ...
  அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 8. எந்தக் காவியம் ?
  உங்க பக்கத்து வீட்டுக் காவியமில்லையே :)

  நன்று

  ReplyDelete
  Replies
  1. இல்லங்க இல்லங்க...

   Delete
 9. கவிதை சங்கமம் அருமை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 10. எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிச்சு வார்த்தைகளில் & வரிகளில் விளையாடுறீங்க. உங்கள் கவிதைகள் மிக எளிமையாகவும் அதே நேரத்தில் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

   Delete
 11. பெண் குழந்தையின் பிஞ்சு விரல்கள் கொஞ்சுகிறதோ?

  ReplyDelete
  Replies
  1. எந்த பெண் குழந்தையின் ?

   Delete
 12. மனதை வருடும் மெல்லிசைக் கவிதை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 13. அன்பிற்கினிய தங்கை சசி..
  இனிய வணக்கம்..
  நானும் நீண்ட நாட்கள் கழித்து தான் இணையம் வருகிறேன்..
  இங்கே உங்களுக்கும் அதே நிலை தான் போல..
  ==
  விழியின் மொழியிருக்க..
  விரல்பேசிடும் மொழிவேண்டுமோ
  என்ற வினா தொடுத்திருக்கும்
  காவிய உணர்வுக் கவிதை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அண்ணா எப்படி இருக்கிங்க ? நலம் தானே..
   ஆமாம் அண்ணா இணையம் வருவதே அறிதாகிவிட்டது.
   தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. நன்றிங்க அண்ணா..

   Delete
 14. ரொம்ப நாள் கழிச்சு உன் தளத்திற்கு வர்ரேம்மா... கவிதை இயல்பா இருக்கு. ஐ லவ் யூ சொல்றதே அதிகம் தான். பார்வையில் புரியாததை வார்த்தையில் புரிய வைக்கவேண்டிய அவலம் சிலருக்கு நேர்கிறது. (நல்ல கவிதைக்கே கோனார் நோட்ஸ் படிச்சவங்களா இருக்கும்) சரி விடு. கவிதைக்குழுமம் படரட்டும் கவிதையும் தொடரட்டும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா வாங்க வாங்க.. நலம் நலம் அறிய ஆவல்.

   Delete
  2. உன் தளத்தை http://veesuthendral.blogspot.in/ என் வலைப்பக்க இணைப்பில் தந்தால் ஏற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே! என்ன தொழில்நுட்பச் சிக்கல்? தெரிந்தால் உதவி செய்யேன்...

   Delete
  3. ஐய்... உன்னிடம் புகார் சொன்னது தெரிஞ்சோ என்னமோ... இப்ப முயற்சிசெய்து பார்த்தேன் ஏ த்துக்கிச்சு! நன்றி பா.

   Delete
  4. ஹஹஹ நன்றிங்க அண்ணா.

   Delete
 15. ஆஹா... காதலர் தினம் நெருங்கும் நேரத்தில அழகா காதலைப் பேசி தென்றலாய் வீசுதே கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வசந்தமே வருக வருக தங்கள் வருகை தந்தும் நாள் பல ஆகிறதே.

   Delete
 16. //விழிகள் பேசிடும்

  வார்த்தைகளை விடவா
  இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.

  // பார்வையாலே நூறு பேச்சு!
  வார்த்தையங்கு மூர்ச்சையாச்சு!" என்ற வரிகளும் பொருந்துமோ?
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 17. விழியே மொழியாக - தென்றல்
  மொழியும் இனிதாக

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 18. thirumba thirumba padiththen.. (puriyaamal alla!! :) ) Nandru!

  ReplyDelete
  Replies
  1. சரிங்க...நன்றியும்

   Delete
 19. ''..கண்கள் கண்டெடுத்த
  காவியம் நீ...''
  Eniya vaalththu sis..
  Vetha.Elanagthilakam.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி