Ads 468x60px

Wednesday, December 31, 2014

வரவேற்போம் புத்தாண்டை !

அன்பை நாளும் விதைத்திடுவோம்!
         அகத்தே தூய்மை அடைந்திடுவோம்!
அன்னைத் தமிழை அரவணைத்து
           அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்!
தன்னைக் காக்கும் நம்பிக்கை
           தளரா திருக்க பார்த்திடுவோம்!
என்ன இல்லை நம்மிடையே
           என்றே துணிந்து செயல்படுவோம்!

தென்றல் வந்து தழுவிடவே
          தேனார் சோலை காத்திடுவோம்!
நன்றி மறவா நல்லொழுக்கம்
          நாளை வளரும் தலைமுறைக்கே
பண்பாய் உணர்த்தி வளர்த்திடுவோம் !
          பசுமை காக்க பயிற்றிடுவோம்!
இன்னல் நீங்க வாழ்வினிலே
          எளிமை தவழப் பழக்கிடுவோம்!

கண்ணாய் நாட்டைக் காத்திடுவோம்!
           கடமை மலராய்ப் பூத்திடுவோம்!
மண்ணின் வளத்தை வளர்த்திடுவோம்!
           மரங்கள் வைத்தே மகிழ்ந்திடுவோம்!
பெண்மை போற்றிப் பெயர்பெறுவோம்!
           பெருமை யாவும் பேணிடுவோம்!
எண்ணம் சிறக்க எந்நாளும்
          இயன்ற உதவி செய்திடுவோம்!

கல்லா திருக்க பழிவருமே
         கற்றே நாளும் தெளிந்திடுவோம்!
நில்லாச் செல்வம் நிதந்தேடி
        நீளும் பயணம் தடைசெய்வோம்!
எல்லை காக்கும் படைசேர்ந்து
         என்றும் நாட்டைக் காத்திடுவோம்!
தொல்லை போக்கும் அருமருந்தாய்த்
         தோழர் துயரை போக்கிடுவோம்.

உயர்வும் தாழ்வும் இல்லாமல்
        ஒன்றாய்க் கூடி வாழ்ந்திடுவோம்!
அயர்வே இன்றி உழைப்பேந்த
         ஆளும் திறனை வளர்த்திடுவோம்!
துயரில் வதியும் இல்லார்க்குத்
         துணையாய் என்றும் இருந்திடுவோம்!
உயிரின் இனிய செந்தமிழை
         உலகம் எங்கும் பரப்பிடுவோம்!

பிறக்கும் இனிய புத்தாண்டில்
       சிறக்கும் வழிகள் உரைத்துள்ளேன்!
பறக்கும் பறவை போலுள்ளம்
       பாடிக் களிக்கப் பணித்துள்ளேன்!
திறக்கும் சொர்க்கம் மண்ணுலகில்
        திறமை ஒன்றே நம்சொத்து!
முறுக்கும் ஆசை நிலைபோக்கி
         முதல்வன் திருத்தாள் ஏத்துகவே!

இன்னும் வாசிக்க... "வரவேற்போம் புத்தாண்டை !"

Wednesday, December 24, 2014

உன்னையே தேடும் உயிர் !

 
உன்னகம் தீண்ட உருவாகும் காவியம்!
என்னகம் வந்தே இணைந்திடுக!-பொன்மயிலே!
தன்னகத்தைத் தாங்காது தள்ளாடும் மெல்லியளே!
உன்னையே தேடும் உயிர்.

கன்னம் சிவக்கக் கதைபேசும் பைங்கிளியே!
முன்னிருக்க முன்வருமே முத்தமிழும் - என்னிலையைக்
கண்கொண்டு பாராய் கனியமுதே! என்று...நீ
என்னகம் சேர்வாய் இயம்பு!


வாவென்றாள் வண்ணமகள்! வாஞ்சையுடன் வாய்மணக்கத்
தாவென்றாள் தித்திக்கும் தண்டமிழை! - போவென்றாள்
என்னிதயம் தாங்கிடுமோ? ஏக்கம் பெருக்கெடுத்துப்
பொன்னுதயம் காட்டும் பொலிந்து!


சிந்தை செழித்திடச் சின்னவளின் சிந்தனை
வந்தென் மனத்துள் மகிழ்வூட்டும்! - செந்தேன்
மலரில் நடமிடும் வண்டானேன்! கண்ணுள்
கலந்தே யிருக்கும் கனவு!
இன்னும் வாசிக்க... "உன்னையே தேடும் உயிர் !"

Tuesday, December 16, 2014

தேன்மதுரத் தமிழுக்கு ஓர் பாமாலை !


துளிர்விடும் விதைகள் தம்மில்
            தோழியின் அகத்தைக் கண்டேன்
தளிரென அவரின் உள்ளம்
            தாய்த்தமிழ் உறவில் சொக்கும்!
விளித்திடும் சொற்கள் யாவும்
           வியப்புற நம்மை ஈர்க்கும்!
களிப்புறத் தந்த நூலைக்
           கருத்தினில் வைத்தேன் நன்றே!

தன்னுயிர் தமிழே என்று
        தாய்மொழி நாட்டைப் போற்றி
என்னிலா மகிழ்வே பொங்க
        ஏற்றமே காண வேண்டும்!
இன்றைக்குக் காணும் இன்பம்
        எஞ்சுமா என்றே எண்ணி
அன்னையின் தேசம் காக்க
         அரும்மழை வேண்டு மென்றாள்.

தண்ணீரா எங்கே என்று
         சாத்திரக் கதையைச் சொல்லி
கண்ணீரே மிஞ்சும் என்றார்
         காத்திடு மரத்தை என்றார்!
விண்ணகம் போனால் தேக்கும்
         வித்தையும் மக்கி இங்கே
மண்ணிதைச் சேருமே என்னும்
         மகிழ்ச்சியை விளித்து நின்றார்.

தளர்விலா வண்ணம் நாளும்
           தந்திட வேண்டும் ஆக்கம்!
வளர்ச்சியே பெற்று வாழ
           மகிழ்விலே வாழ்த்து கின்றேன்!
நளனெனும் பாகன் போன்று
           நற்றமிழ்ச் சுவையை காண
உளமெலாம் இன்பம் பூக்க
          உன்தோழி பாடு கின்றேன்!

குறள் வெண்பா
பூமாலை வாடுமென்றே பொற்றமிழில் நீமகிழப்
பாமாலை சூட்டுகிறேன் பாடு.
இன்னும் வாசிக்க... "தேன்மதுரத் தமிழுக்கு ஓர் பாமாலை !"

Tuesday, December 9, 2014

சூடிக்கொண்ட பேரழகு !

மல்லிப் பூவாய்ச் சிரித்திங்கே
     மனத்தை அள்ள வந்தவளைத்
துள்ளி ஓடி வருகையிலே
      சூடிக் கொண்டேன் பேரழகை!
கிள்ளி உன்னைக் கொஞ்சிடவே
        கிளர்ந்தே எண்ணம் பெருகுதடி!
அள்ளி அணைக்கத் துணிந்திட்டேன்
    அருகே வாடி ஆருயிரே!

மடியில் வைத்து மகிழ்ந்திடவோ
           மரபுக் கவியும் சொல்லிடவோ? 
வடியும் தேனாய் வார்த்தைகளை
       வழங்கி நெஞ்சம் மயங்கிடவோ?
அடியே என்றே அழைத்திடவோ
        அணைத்தே முத்தம் தந்திடவோ ?
பிடிவா தமாக  நீயிருந்தால்
       பிழையா காதோ நம்காதல்!


முந்தி உன்னைப் பார்த்திருந்தால்
           முடிந்தே யிருப்பேன் மனத்தில்தான்!
பிந்தி உன்னை பார்ப்பதினால்
           பித்தாய்  மனமே  அலையுதடி!
தந்தி கண்ட படபடப்பாய்த்
          தாங்கா துள்ளம் துடிக்குதடி!
சந்தி சிரிச்சி போகுமுன்னே
        தாங்கிக் கொள்ளவாய் மடியினிலே!
இன்னும் வாசிக்க... "சூடிக்கொண்ட பேரழகு !"

Thursday, December 4, 2014

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!

அழகே! அமுதே! அருமை தமிழே!
வழங்க வழங்க மகிழ்வே - பழக
இனிக்கும் மொழியே! இணையிலா வண்ணம்
மினுக்கும் கவிதையை மீட்டு.!

எளிமை! இனிமை! இளமை! புதுமை!
வலிமை! கொழிக்கும் வளமை! -  பொலிவைத்
தருமே எனக்கு! தழைக்கும் தமிழ்ப்பா
வருமே மனத்துள் வளர்ந்து!

மருந்தாக ஆனாய்! மனம்மகிழ்ந்து உண்ணும்
விருந்தாக ஆனாய்!  விரைந்தே - விரும்பி 
எருவாக ஆகுமென ஏட்டில் படைத்தேன்
உருவாகும் பாக்கள் ஒளிா்ந்து!

பாடும் மொழியே! படா்கின்ற இன்பத்தைச்
சூடும் தமிழே! சுவையமுதே! - நாடுகிறேன்
உன்றன் திருவடியை! ஓங்கும் கவிபாட
என்றன் இதயம் இரு!

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!
மன்றம் மணக்கக் கவிபாடு! - என்தாயே!
தன்னோ் இலாத தமிழே! மயங்குகிறேன்
என்னே இயற்கை எழில்!

இன்னும் வாசிக்க... "என்றும் எனக்குள் இருந்து விளையாடு!"

Monday, December 1, 2014

நினைவுகள் !


பாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா்
நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும்! - மீட்டிச்
சுவைகூட்டி சொல்லும் சுடா்க்கவிகள் என்றும்
அவைகூட்டி ஆளும் அழகு.


எங்கள் ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் கவியரங்க விழாவிற்கு நானும் எழுதியனுப்பிய விருத்தம். தலைப்பு நினைவுகள். விழாவில் கவிதையை வாசித்த திருமதி. சுகுணா ! அவர்களுக்கும் வாய்ப்பை வழங்கிய ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                நினைவுகள் !

எண்ண இனிக்கும் நினைவுகளை
         இன்பத் தமிழால் நானெழுத...
கன்னம் சிறக்கும் அதனுறவால் !
         கவிதை கொடுக்கும் கனியமுதாய் !
சின்னப் பூவாய்ச் சிரித்திருக்கும்
         சிறகை விரித்தே பறந்திருக்கும் !
மின்னல் ஒளியை ஒத்திருக்கும்
          மேனி  யழகாய் மிளிர்ந்திருக்கும் !

மண்ணும் பொன்னாய் மின்னிடுமே
         மவுன மொழியில்  பேசிடுமே !
கண்ணும் கவிதை பாடிடுமே
         கருத்தில் என்றும் நிலைத்திடுமே !
வண்ண மீனாய்க் கவர்ந்திடுமே
        வாழ்வில் நிறைவைத் தந்திடுமே !
உண்ணும் போதும் உறவாடி
       உழன்று இருக்கும் நினைவுகளே !

ஆலைக் கரும்பின் சுவையூட்டி
       அகத்துள் நன்றே உறைந்திருக்கும் !
காலை உதயக் கதிரோனாய்க்
       கவலை தீர்க்கும் தினந்தோறும் !
மாலை நேரம் மயங்கவர
       மலரும் நினைவாய் மணம்வீசும் !
சேலைப் பூவில் நிழலாடி
        சேர்த்தே அணைக்கும் நினைவுகளே !


இன்னும் வாசிக்க... "நினைவுகள் !"

Thursday, November 27, 2014

தேன் துளி !


தும்பிக்கை நாதன் துணையிருக்க என்னபயம் !
நம்பிக்கை யோடே நட !

மனப்பாட்டைக் கேட்கும் மனமே தமிழில்
தினப்பாட்டைக் கேட்பாய் திளைத்து .

கன்னித் தமிழைக் கருத்தில் புகுத்திட
மின்னும் அறிவு விளைந்து.

நாளும் வளம்சேர்க்க நாடினேன் உன்னையே !
மேலும் தருவாய் மிகுத்து.

எண்ண எழுத இனிக்கும் தமிழமுதம் !
உண்ணத் திகட்டா துணர் !


இன்னும் வாசிக்க... "தேன் துளி !"

Tuesday, November 18, 2014

எல்லாக் கல்லும் சிலையாக !


எல்லாக் கல்லும் சிலையாக
       எண்ணி யிருப்பக் கலையிலையே ?
நில்லாப் பொருளை  நாம்விரும்பி
      நித்தம் தொலையும் நிம்மதியே !
கல்லா திருத்தாற் பூமியிலே
      கல்லும் உன்னை மதிக்காதே !
எல்லாம் இருந்தும் பயனின்றி
     எள்ளி நகைப்பர் பாரினிலே !

மா   மா  காய் அறுசீர் விருத்தம்

இன்னும் வாசிக்க... "எல்லாக் கல்லும் சிலையாக !"

Tuesday, November 11, 2014

கற்க கசடற !

கன்னல் மொழியிருக்க
கற்கண்டு சுவையிருக்க.

எண்ணும் திறனிருக்க
ஏனிந்த வாட்டமடி ?

சொல்லு கவியாலே
சொற்குவியல் திறத்தாலே..

வடிக்கும் பாவெள்ளம்
துவைத்தெடுக்கும் அழுக்கெல்லாம்.

அன்பெனும் அறநிலையை
பகிர்ந்துணர்ந்து கொடுத்திடுவாய்.

பகுத்தறிதல் நலமென்ற

பெரியாரை நினைவுபடுத்திடுவாய்.

வாய்மைவழி நடத்தலையும்
வள்ளுவன் குறளோடு விளக்கிடுவாய்.

கற்றிடவே பல நூல்கள்
கட்டு கட்டாய் பல உண்டு..

கற்றறிந்து தெளிந்திடுவாய்
கற்றதை கலையாய் வடித்திடுவாய்.
 படம் உதவி இணையம்
இன்னும் வாசிக்க... "கற்க கசடற !"

Wednesday, November 5, 2014

அஞ்சியது போதும் !

பயம் கற்பிக்கும் பழமையை ஒதுக்கிடு
சுயம் கற்றே நீயும் தெளிந்திடு
நயமென்ற பேரிலே நம்மை முடக்கும்
கயவரின் சொல்லை காலால் மிதித்திடு. 
 
நஞ்சை விதைப்பரை நயமாக உணர்ந்தே
பஞ்சென்ற ஓரினமே பதுங்கி நிற்காதே
அஞ்சி நடவாது ஆணவமும் கொள்ளாது
நஞ்சை முறிக்கும் நல் மருந்தாவாய்.
 
தொட்டுப் பேசியே தூரநிற்கும் கயவரை
வெட்டி வீழ்த்திடவே வேங்கை யென்றெழுவாய்
கொட்டு முரசெனவே குலம் காத்திடவே
தட்டி எழுப்பிடுவாய் தயக்கமேன் பெண்ணினமே.
 
அஞ்சியது போதும் அடங்கியதும் போதும்
மிஞ்சிடும் கயவரை மிதித்திடு காலால்
நஞ்சென்று உமிழ்ந்தே நால்வரை காக்க
கஞ்சர் இவரென்றே காயத்தே உரைத்திடுவாய்.
 
இன்னும் வாசிக்க... "அஞ்சியது போதும் !"

Wednesday, October 29, 2014

முத்துக்கள் மூன்று ! (2)

விழியிருந்தும்   வையத்தில் வீணாக வாழ
வழியிருந்தும்  தேடாதார் தேவயை- பேச
மொழியிருக்க மௌனமே மாலையாக வாழ்வில்
பொலிவிழந்து போகும் அறி.அஞ்சல்  குணமோ அழகுப் பதுமையோ
தஞ்சமெனக் கொஞ்ச தயக்கமோ- பேதையை
கள்ளென போந்தும்  கயவர் தமக்கோ
உளிகல்லோ பெண்மை உலகு.

கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
பெண்ணென்ற ஓரினமே பேரிடறை தாங்கிடவோ
மண்ணாகும் மாந்தர்  உலகு.

இன்னும் வாசிக்க... "முத்துக்கள் மூன்று ! (2)"

Monday, October 27, 2014

தமிழ்ச்சாரல் !


கண்ணழகு ராதையை கட்டியணைக்க தோனுதடி
பெண்ணழகு பேதையினால் பேராசை கூடுதடி
உன்னழகு ஓவியமே உருகுலையச் செய்குதடி
என்னழகு எதுவென்பேன் எழிலாளை கண்டபின்னே .


மொண்டுவிடத் தோனுதடி முத்தழகுத் தமிழை
கண்டுவிட்ட பின்னே கற்கண்டாய் ஆனதடி
தொன்றுதொட்டு வரும் மரபை நாளும்
வென்றுவிட களியாட்டம் போடும் மனமே.

காலைச் சோலையிலே கன்கவர் வித்தாக
மாலைக் காட்சியிலோ மயக்கிடும் மானாக
சேலைப் பூவிலும் சேர்ந்திடுமே உன்வாசம்
ஆலைக் கரும்பாக ஆனதடி என்னுள்ளம்.

இன்னும் வாசிக்க... "தமிழ்ச்சாரல் !"

Saturday, October 25, 2014

நேசக்கோர்வை !

கோபத்தின் உச்சம் எதுவென்று
கேட்பாய்...
ஊடலுக்கும் கூடலுக்குமான
தொடர்பரியாதவனா நீ..

நாணத்தின் நளினத்தை
ருசிக்கத் தெரிந்தவன் நீ..


நூலிழைப் பிரிவையும்
நேசமெனும் ஊசியால்
கோர்க்கத்தெரிந்தவன் நீ..

நூதனத் திருடனே காதலின்
நுணுக்கத்தை கற்றவனே
என்னிடத்தில் உன் அடமும்
அழிச்சாட்டியமும்..
சிறுபிள்ளையின் பிரியமாகிப்போனது.இன்னும் வாசிக்க... "நேசக்கோர்வை !"

Wednesday, October 15, 2014

தினம் பாடும் பாட்டு !

 
கண்ணழகு கருத்த மச்சான்
காதலிலே கரைய வச்சான்.
காத்து வாங்க நானும் போனேன்
பூங்காத்தா அவனே தொடர்ந்து வந்தான்.
வாசமுல்ல மணக்கவில்ல
வாடக்காத்தும் வீசவில்ல..
காலநேரம் விளங்கவில்ல
காலும் போக திசையுமில்ல..
உண்ண உணவும் எடுக்கவில்ல
ஊரில் உலவும் வசவுத்தொல்ல..
படுத்தா நாளும் தூக்கமில்ல
படுற பாடும்  கொஞ்சமில்ல

சேதி சொல்ல யாருமில்ல
சேம நலம் கூடுதில்ல...
தினம் படும் பாட்ட நானும்
மனமுழுக்க எழுதி வச்சேன்.

மனமிருந்தா வந்திடுவான்
மணக்க மணக்க படிச்சிடுவான்.
இன்னும் வாசிக்க... "தினம் பாடும் பாட்டு !"

Monday, October 6, 2014

முத்துக்கள் மூன்று !

மாய மகிமையோ மாதேவன் மைந்தனோ
நேயக் கரம்நீட்டி நீயணைப்பாய் - தூமணியே
காயப் பெருந்துயர் கானலாய் போகிட
தூய கணபதியே காப்பு.

 தேனே கரும்பே தெவிட்டாத கற்கண்டே
ஊனே உருகுதடி உன்னெழிலாள் -சிட்டாய்
பறக்குதடி உள்ளம் கவிதொடுக்க மொட்டாய்
துறக்குமடி பூவும் களித்து.


உன்னை நினைத்தே துடிக்கும் இதயத்தால்
தன்னை மறந்ததே மாயமோ ?- என்றென்றும்
என்னில் இருக்க நலமும் செழிக்குமே
அன்னையே நீயே துணை.
இன்னும் வாசிக்க... "முத்துக்கள் மூன்று !"

Saturday, October 4, 2014

மீதமாக..

 
எண்ணக்கலவையில்
விழுந்த எறும்பாக...
எம்பி எம்பி தவித்து
மீளமுடியா ஞாபக
தீவுக்குள்ளேயே தள்ளப்படுகிறேன்.
இரவெது பகலெது
அறியமுடியா...
அமானுஷ்யம்.
பசிக்குணவாக
பார்வையையும்.
தனிமைக்குணையாக
நினைவையையும்
மட்டுமே பருகிப் பருகி
காத்திருக்கிறேன்.
பார்வையாளனே பகிர்ந்ததும்
புரிந்ததும் போக
மீதமுள்ள காதலை  மட்டும்
ஏன் விட்டு வைத்திருக்கிறாய்.?
இன்னும் வாசிக்க... "மீதமாக.."

Tuesday, September 23, 2014

பகிர்ந்து மகிழ்தல் ...!

வணக்கம் உறவுகளே நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் விருதுடன் எனை வரவேற்கும் அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த விருது பெற்றவர்களின் விதிமுறையின் படி...

இந்த விருதை எனக்கு  கொடுத்து மகிழ்வித்தவர்கள்

 1. தளிர் சுரேஷ்
2.. அவர்கள் உண்மைகள் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.

முதலில் பகிர்ந்து மகிழ்தல்

1. இ.சே. இராமன்
2. தமிழ்ச்செல்வி
3. விமலன்

 இன்னும் என் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் இவர்கள் தொடர ஐந்து பேர் தேடும் போது சிரமமாக இருக்கும் என்பதால் இவர்களோடு ..... இவர்கள் அன்போடு நான் பகிர்ந்த விருதை பெற்று மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு.

என்னைப்பற்றி
 என் பெயர் சசிகலா.  பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் அம்மையப்பட்டு. தாயாள் உலகுக்கு அறிமுகமானவள் தமிழாள் உங்களின் அன்பை பெற்றவள். எழுதுவதும் படிப்பதும் இயற்கையை ரசிப்பதும் மிகவும் பிடித்தது.   எனக்கு பிடித்த இவற்றையெல்லாம் ரசிக்க தடை சொல்லாத கணவரை மிகவும் பிடிக்கும். பிறகென்ன என் செல்லப் பிள்ளைகளை பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் பிடிக்கும் என்று மட்டும் சொல்கிறேனே என்று கேட்பது புரிகிறது. எனக்கு பிடிக்காதது என் கோபம். (அது எப்பவாவது தான் வரும்... ) இனி வராம இருக்க பார்க்கனும். சரிங்க அன்பால் இணைவோம். அன்பாய் இருப்போம். மகிழ்ச்சி...

இன்னும் வாசிக்க... "பகிர்ந்து மகிழ்தல் ...!"

Monday, September 15, 2014

நீ யாரோ ?

தேடலின் ஆரம்பமும் நீ
தேக்கத்தின் தொடக்கமும் நீ
உள்ளிருந்து உணர்த்துகிறாய்
உயிரோட்டத்தை நிகழ்த்துகிறாய்..
ஆரம்பமும் முடிவுமில்லா
வானலாவிய இருப்பும் நீ.
ஓட ஓட விரட்டுகின்றாய்
ஓரிடத்தில் நிறுத்துகின்றாய்.
நீயில்லா இடத்தினிலே
நின்று போகும் எல்லாமங்கே..
நிம்மதி என்ற பெருமூச்சை
வழங்குகின்ற வள்ளல் நீ..
அறிவுசார் ஜீவனல்லாது
 அனைத்திலுமே நிறைந்திருக்கும்
நீ யாரோ ?

இன்னும் வாசிக்க... "நீ யாரோ ?"

Thursday, September 11, 2014

ஒரு பார்வை ...!

கேட்கவும் சொல்லவுமான
எண்ணற்ற முனகல்களில்
முடங்கிப்போன மௌனங்கள்...
மொழிபெயர்ப்பின் பரிதவிப்பில்
உறங்கிக்கிடக்கும் காதல்...
கடந்து போகும் நேரமெலாம்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
கட்டிவைத்தாவது கொட்டிவிடவேண்டும்
என்றேனும் காதல் சினுங்கள்களை...
அச்சமென்று ஏதுமில்லை
அழிச்சாட்டியத்தின் அலங்காரத்தில்
மழுங்கிப்போன நேசம்
புதுபிக்கும் முயற்சிவேண்டாம்..
அடையாளத்திற்கேனும் அவ்வப்போது
ஒரு பார்வை ...
இல்லையாங்கு கேள்வியாவோம்
தமிழ்க் காதலின் முன்பு...!
இன்னும் வாசிக்க... "ஒரு பார்வை ...!"

Friday, June 27, 2014

நினைவூஞ்சல் !


பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்

பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..

அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.
இன்னும் வாசிக்க... "நினைவூஞ்சல் !"

Friday, June 20, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி தேன்மதுரத் தமிழ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்.
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அது வரை இருக்கமாட்டேன். இருந்தால் அப்போதாவது உறவுகளோடு கொண்டாடுவேன்.

(இது வரை அப்படி ஒரு நாள் வருவதே தொிவதில்லை இதில் இல்லாத போது பிறந்த நாளாம் ?)

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என் தந்தையைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
எனது இரண்டாவது மகன் செய்த சேட்டைக்காக...

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறதே.. என்று மின்சாரம் இல்லாத போது மக்கள் எப்படி இருந்தாா்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்வேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
எப்போதும் ஒருவா்க்கு ஒருவா் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழ்வதே வாழ்வென்பதை சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும் அது தானே ஒழியாது ஆதலால் அவரவா் தேவையை அவரவரே தேட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
கணவரிடம் பிறகு அக்காவிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அதுவும் கடந்து போகும்..


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பட்டினத்தாா் பாடல் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.

இன்னும் வாசிக்க... "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?"

Thursday, June 19, 2014

எங்கோடி நான் தேட.....

தொட்டிலிட்ட கனவுந்தான்
தூங்கத்தான் மறுக்குதடி...

எச்சமிட்ட கன்னத்தை
எட்டி எட்டி பார்க்குதடி...

முந்தாணைய பிடிச்சிகிட்டு
முன்னும் பின்னும் ஓடுதடி...

எப்பத்தான் மடிதருவ
ஏக்கமுடன் கேக்குதடி...

கைக்குள்ள ரேகையாட்டம்
பத்திடுச்சே மருதாணியாட்டம்..

ஆடுபுலி ஆட்டத்துக்கோ
ஆள் சேர்க்கும் தோழியாட்டம்...

நிறைகுடமா நித்திரையில்
நிதமிருக்கும் அடுக்களையில்...

பச்சரிசி பல்லாட்டம்
பருவ மக நெனப்பிருக்க..

எங்கோடி நான் தேட
என்னுள்ளே கலந்தவள..
இன்னும் வாசிக்க... "எங்கோடி நான் தேட....."

Friday, April 11, 2014

முந்தி ஓடும் சனத்தப்பாரு !


ஆளுக்கொரு கட்சிக்கொடி
ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
புத்தம் புதுசா வண்ணம்தான்
புதுசா உடுத்தும் குட்டிச் சுவருந்தான்.
உன்னை என்னை யார் கேட்பா ?
உண்மை ஓட்டு யார் போட்டா ?
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
தோத்தவரும் ஜெயித்தவரும்
தோரணமிடும் வசவுகளும்..
என்னாளும் இது வாடிக்கைதான்
நமக்கென்ன அங்க வேடிக்கைதான்..
வேளை முடிஞ்சி போச்சிதின்னா
வேலி போட்டு போயிடுவார்...
நமக்கு என்றும்
கூலி வேல தான் மிச்சமடி...
கூடக்கும்பிடு வேண்டாமடி.
இன்னும் வாசிக்க... "முந்தி ஓடும் சனத்தப்பாரு !"

Friday, April 4, 2014

இரண்டது ஒன்றானால் !ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.
இன்னும் வாசிக்க... "இரண்டது ஒன்றானால் !"

Wednesday, April 2, 2014

நிலா வரும் நேரத்தில்...

நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.

முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.

இன்னும் வாசிக்க... "நிலா வரும் நேரத்தில்... "

Saturday, March 29, 2014

மானும் மயிலும் !

கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில   தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி  பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?
இன்னும் வாசிக்க... "மானும் மயிலும் !"

Tuesday, March 25, 2014

வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)

வணக்கம் உறவுகளே அனைவரும் நலம் தானே ? தொலைதூர பயணித்தின் நடுவே கடிதப்போக்குவரத்தாக ஆகிவிட்டதா ? தென்றலின் வருகையும். என்ன செய்ய ? சரி விடுங்க. இனி அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது திடீரென அனைவரையும் இங்கழைத்து நலம் விசாரிக்கும் ஆவல் வந்தது. ஆனால் சும்மா யாரும் அழைச்சா வருவாங்களா ? ஆதலால் ஒரு தொடர்பதிவு. யாரும் திட்டாம... தேடிவந்து அடிக்காம சமத்தா எழுதுவிங்களாம் சரியா ? பொதுவா எல்லோரும் பிறந்த ஊர் பற்றி தான் பெருமையா பேசுவாங்க.. நாம் புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசுவோம் வாங்க...காடுகர தோப்பெங்கும் கானக்குயில் பாட்டுசத்தம்
கேட்டுதினம் மதிமயங்கி நடனமிடும் மயிலுநித்தம்
அரவமிடும் ஓட்டத்திலே சலசலக்கும் சருகுகளும்
ஆரவாரம் கேட்டுவரும் கலகலன்னு குருவிகளும்.


மா-பலா வாழையோடு மருகிநிக்கும் தேனினமும்
மாங்கனியில் உள்நுழைந்து மயங்குதங்கே வண்டினமும்
காலைநிறக் கதிரவனின் காட்சியங்கே ஓவியமே
மாலை வரக்காத்திருக்கும் அந்தியொரு காவியமே.
வண்டிமாடு சலங்கையொலி வழிவகுக்கும் பாதையுந்தான்
வாஞ்சையோடு உடனடந்து வயலுழவும் காளைமாடுந்தான்
நடவுப்பாட்டில் நாட்டு நடப்பு நாவசைய இசையுடனே
நாட்டாமையில் நீதி நேர்மை வாழ்ந்திடுதே பாங்குடனே.

அய்யனார் குளமழகு அரளிப்பூ சிரிப்பழகு
அடுக்கடுக்கா படியழகு அதனோரம் பனையழகு
ஊர்க்காக்கும் காளியம்மா உள்ளிருக்கும் காமாட்சி
உடனுறை நீராட்டில் அரசமரத்தான் அருளாட்சி.
கம்மாயில் நீரோடி கழனியெல்லாம் பாய்ந்தோடி
சும்மாயாரும் இல்லாம ஏர் பிடிக்கும் சனம்கோடி
புதனோடு சந்தையில புதிர் போடும் விந்தையில
புது மாடும் ஆடும் வாங்க புதையலாகும் மந்தையில
வான்தொடும் உசரத்தில் வளர்ந்து நிக்கும் தென்னை
வளமோடு நலம்சேர்க்கும் இளநிகிடக்கும் திண்ணை
பகுத்தறிவுப் பாதையில நடக்குமிங்கே சீர்த்திருத்தம்
பண்பாளர்கள் வாழ்ந்திருப்பர் எங்கள் வடசேரி வாழ்வில் நித்தம்.

இனி என்ன நான் அழைக்கும் அன்பு நெஞ்சங்கள்.

ரஞ்சனி நாராயணன்

கோமதி அரசு

தி.தமிழ் இளங்கோ

ஆதி வெங்கட்

ராஜி

குடந்தையூர் சரவணன்

என்ன ஆண் பதிவர்கள் பெயரும் இருக்கே என்று கேட்பது தெரிகிறது. ஏன் அவர்களும் முதன் முதலாக பெண் பார்க்கப் போன அனுபவத்தை எழுதலாமே. இவளின் அன்பு வேண்டுகோளை ஏற்று பதிவிடும் ஒவ்வொருவரும் குறைந்தது நால்வரை அழைக்க வேண்டும்.
இன்னும் வாசிக்க... "வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)"

Wednesday, March 19, 2014

வரமா ? சாபமா ?

 
பகல் இரவு வாடிக்கையாய்
பசிக்குணவு வேடிக்கையாய்.
ஓடும் ஓட்டம் தொடர்ந்திடுதே
ஓடமும் கரை தேடிடுதே.
உழைப்பே நாளும் நோக்கமாய்
உப்பு நீரே வயிற்றின் தேக்கமாய்.
கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.
கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.

உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.
மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?
இன்னும் வாசிக்க... "வரமா ? சாபமா ?"

Wednesday, March 12, 2014

காதலின் லாவகம் !


அவரைக்காய் தோட்டத்திலே
அந்தி சாயும் நேரத்திலே..

ஓடோடி ஒளியும் மச்சான்
ஓரக்கண்ணால் பார்ப்பதேனோ ?
சொரக்காய தேடி வந்தேனு
சொக்கி பொடி போடும் மச்சான்.
அழகான முகம் உனக்கு
அடுக்கடுக்கா பொய்யெதுக்கு ?
அத்த மக உறவிருக்க
அன்ப நீயும் மறைப்பதெதுக்கு?
தை மாசம் தொலவிருக்கு
தண்ணி குடம் பக்கமிருக்கு..
சாடமாட பேச்சு வேணும்
சங்கதிக்கு தூதும் வேணும்.
அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.

ஆத்து பக்கம் நானும் வாரேன்
அங்கோடிப் போவோம் மாமா.
காதலின் லாவகத்தை
கண்ணியமா சொல்லித்தாரேன்.

 பேச்சு வழக்கு : தொலவிருக்கு-தொலைவில்
இன்னும் வாசிக்க... "காதலின் லாவகம் !"

Tuesday, February 11, 2014

காவியம் நீ...!

 
கண்கள் கண்டெடுத்த
காவியம் நீ...
கடிதம் ஒன்றை
எழுதிடத்தான்...
எத்தனை எத்தனை
வார்த்தைகளை புரட்டியபடி..

என்னென்று அழைத்திட
அன்பே...
அது தான் நிறைய இருக்கிறதே.
ஆருயிரே...
அது தான் உனக்காக
என் உயிர் இருக்கிறதே.
அத்தானே..
யாரேனும் என்ன
நீயே சிரித்திடுவாய்..
என்னென்று எழுதிட
எல்லாமுமே நீயானபிறகு..
உனை காணும் போதில்
விழிகள் பேசிடும்
வார்த்தைகளை விடவா
இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.


என்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.
இன்னும் வாசிக்க... "காவியம் நீ...!"

Wednesday, February 5, 2014

வந்தெனைக் காத்துவிடு !


உனக்கென ஒதுக்கிய
நேரமிது நேர்த்தியாய்
கனவுகளை நெய்தபடி...
நிறங்களை கோர்த்தெடுத்து
நிமிடச் சாயத்தில்
நனைந்தபடி...
நாளொன்றிற்கு
இத்தனை நாழிகையா ?
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.
சீக்கிரமே
கடந்து வா...
கடமையில் இருந்து..
கடத்திப்போ..
எனை தமிழ்க் காதலிடமிருந்து.
இன்னும் வாசிக்க... "வந்தெனைக் காத்துவிடு !"

Wednesday, January 29, 2014

பிள்ளையோடு பிள்ளையாய் !


குடம் குடமா நீர் ஊற்றி-வேர்
குளிர நனைய விட்டு
வளர்ந்து வந்த தென்னம்பிள்ள
வாரிசென வளர்ந்த பிள்ள.
கிளை அசைய கீற்றசைய
கீதம் கேட்கும் நெஞ்சினிலே
வருடி விடும் தென்றலாய்
வாரி இறைக்கும் பூவை பன்னீராய்..
தொண்டை நனைக்கும் இளநீராய்.
நிழலாய் காத்து நிற்கும்
நீண்ட நெடிய கதைகள் சொல்லும்
வானை முட்டும் ஆசையுடன்
வளர்ந்து விட ஆசைகொள்ளும்.
கீற்றாய் நாராய் காயாய்
அனைத்தும் கொடுத்து
பயன் தரும்...ஆசையுடனே
நம்மோடு இணைந்து வரும்..
ஆதலால் உறவுகளே
அனைவரும் பிள்ளையோடு
பிள்ளையாய் வளர்ப்போம்
தென்னம்பிள்ளையை !
இன்னும் வாசிக்க... "பிள்ளையோடு பிள்ளையாய் !"

Friday, January 24, 2014

சின்ன சின்ன ஆசை !


அவரைக்காய் கொடி படர
அழகாக பந்தலிட்டு
அதன் கீழே நீ அமர
அருகமர்ந்து நா பேச
ஆச வச்சேன் அருமை மச்சான் .

ஒத்தையடிப் பாதையில
எனை தொடர்ந்து நீ வரவும்
நடையும் தான் நாட்டியமாக
நாளுந்தான் ஆச வச்சேன் .

ஆள் உயர கண்ணாடி
அதன் பின்னே நான் ஒளிய
கரம் பிடித்து  நீ இழுக்க
கண் மூடி ஆச வச்சேன் .

அடுக்கடுக்கா ஆச வர
அம்மிக்கல்லா காத்திருக்கேன்
அன்பு  இருந்தா வாயேன் மச்சான்
அல்லிப் பூவா பூத்திடுவேன் .
இன்னும் வாசிக்க... "சின்ன சின்ன ஆசை !"

Tuesday, January 21, 2014

துரத்தும் நினைவுகள் !


துரத்தும் நிலவாய்
நினைவுகள்...
தூங்கிட விடாத
கனவுகள்...
நிகழ்வுகளை துரத்தி
சம்மணமிட்டு அமரும்
மௌனங்கள்...
உன் சாமத்தியத்திற்கு
முன்பு எதுவுமே
சாத்தியப்படாது தான்..
என்ன தான் செய்து
வைத்தாய்...
எதுவுமே புலப்படாது
எல்லாமே உன்னைச் சுற்றியே
தமிழே என் தாயே
தவிக்கவிடாதே எனை
தாங்கிக்கொள் உன் மடியில்.
இன்னும் வாசிக்க... "துரத்தும் நினைவுகள் !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி