Ads 468x60px

Thursday, October 17, 2013

காதலாகி !


என் தோட்ட பூப்பறிக்கும் 
எதிர்வீட்டு பெண்ணழகி
சுருட்ட முடி பின்னலிலே
சொக்கத்தான் வைக்கிறியே..

கழனியில களையெடுத்தா
கன்னியுன் முகம் தெரியுதடி
கடுப்பாகி நான் நிமிர்ந்தா
கண்ணெதிரே நிக்குறடி.

போர்த்தி நானும் படுத்துக்கிட்டா
(உள்ளம்)போர்களமா தெரியுதடி...
உறக்கமேது கண்ணுக்குள்ள
உன்னப்பார்த்த நாள் முதலா ..

சட்டியில சோறு திண்ணு
சாக்கடையில் நான் குளிச்சேன்
முச்சந்தியில தான் நின்னு
முத்த மழைக்கு காத்திருந்தேன்.

சிரிப்பா தான் சிரிக்குதடி
சிரிக்கி மவளே என் பொழப்பு
கள்ளத்தனம் இனியுமேன்டி
கண்ணசைவில் சொல்லேன்டி
காதலாகி வந்தவளே.

36 comments:

 1. களை எடுக்கும் போதும் பூப்பறிக்கும் போதும் பேசாமல் இந்தப்
  பாட்டை பாடிடலாம் போல . ...

  ReplyDelete
 2. சூப்பர்.. அருமை.. கலக்கல்..

  ReplyDelete
 3. "களை" கட்ட கூட பாடலாம்..

  ReplyDelete
 4. ஒழுங்கா களை பறிக்காம அங்க பாட்டும், கும்மாளமும்..., ஒழுங்கா வேலையை பாருங்க. இல்லாட்டி கூலில பத்து ரூபா பிடிச்சுக்குவேன்.

  ReplyDelete
 5. களை கட்டுது.....உங்க பாடல்...

  ReplyDelete
 6. கண்ணசைவில் சொல் கேட்கும்
  கருத்தான பாடல்..!

  ReplyDelete
 7. மனதோடு ஒட்டிக் கொண்டது வரிகள் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 8. அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 9. காதலாகி விட்டால் என்னவெல்லாம் நடக்கிறது!
  சுவையான சம்பவங்களுடன் கவிதை கண் முன்னே காட்சிகளைக் கொண்டு வருகிறது.

  ReplyDelete
 10. good .
  Eniya vaalththu.
  Vetha-Elangathilakam.

  ReplyDelete
 11. கழனியில களையெடுத்தா
  கன்னியுன் முகம் தெரியுதடி//

  படமும் கவிதையும் அருமை.
  படத்தில் காதல் கவிதை பாடிக் கொண்டே
  வயலில் வேலைப் பார்க்கிறார்.

  ReplyDelete
 12. ஆணின் காதல் உணர்வுகளைச்சொல்லும் அழகான நாட்டுபுறக் கவிதை. ;) பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. கிராமீய மணம் கமழும்
  அருமையான பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. காதலாகி விட்டால் கழனி என்ன காணும் இடமேல்லாம் கன்னியவள் முகம் தெரியும். காதல் மனங்களை பிரதிபளிக்கும் கவிதை வரிகள்.

  அருமையான கவிதை, எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 15. கவிதனில் காட்சிப் பதிவினையும் சேர்த்துத்தரும்
  கவியரசியன்றோ நீங்கள்!...

  மண்ணின் மணம் மனதை ஈர்த்துக்கொண்டு போகிறது தோழி!

  மிகவும் சிறப்பு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. http://www.youtube.com/watch?v=cSLfJeXPgMw

   subbu thatha

   Delete
 16. நல்லாருக்கு

  ReplyDelete
 17. வணக்கம்
  கடந்த கால நினைவுகளை ஒரு தரம் மீட்டிப்பார்க்க சொல்லுகிறது கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 18. களை கட்டுது உங்க களையெடுப்பு பாடல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. //கடுப்பாகி நான் நிமிர்ந்தா
  கண்ணெதிரே நிக்குறடி.// கலக்கல்!
  //சிரிப்பா தான் சிரிக்குதடி
  சிரிக்கி மவளே என் பொழப்பு
  கள்ளத்தனம் இனியுமேன்டி
  கண்ணசைவில் சொல்லேன்டி
  காதலாகி வந்தவளே.// அருமை சசிகலா!

  ReplyDelete
 20. கிராமத்துக் கவிதை... சூப்பரோ சூப்பர் அருமை...

  ReplyDelete
 21. http://www.youtube.com/watch?v=cSLfJeXPgMw

  subbu thatha.
  www.subbu thatha.blogspot.com

  ReplyDelete
 22. ///கள்ளத்தனம் இனியுமேன்டி
  கண்ணசைவில் சொல்லேன்டி///
  இயல்பான நடை..
  உருத்தாக இன்னும் ஏன் தயக்கமடி
  சொல்லடி பைங்கிளியே
  நில்லடி கொஞ்ச நேரம்
  சீரடி எடுத்துவைப்போம் ..
  நிழல்கூட நம் மீதாக என
  உரைக்கும் அழகுச் சொல்லாடல் தங்கை சசி...

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரி
  கிராமிய மணம் கமழும் கவிதையை சிந்தத்ததே சிறப்பு. ஒரு சில வார்த்தைகள் (சிரிக்கி மகளே, பொழப்பு) கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணிக்கு இணையாக வந்துள்ளது சகோதரி. அதற்கு எனது வாழ்த்துக்கள். கவிதையை அவரது தொணியில் வாசித்துப் பாருங்கள் உண்மை புரியும், பகிர்வுக்கு நன்றீங்க.

  ReplyDelete
 24. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 25. தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

  ReplyDelete
 26. சிரிப்பா தான் சிரிக்குதடி
  சிரிக்கி மவளே என் பொழப்பு

  கிராமத்துக் கவிதை சூப்பர்...


  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. எதுகை மோனையோட படிக்கறப்பவே மனசுக்குள்ள பாடறாப்பல இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் பாடலாக பாடிய சுப்பு தாத்தாவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
  கணினி சரியாக இயங்காததால் அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும்.

  ReplyDelete
 29. காதல் கமழும் கிராமியப்பாடல்.

  ReplyDelete
 30. மண்வாசனையோடு மனத்தை இழுத்துப்பிடிக்கும் காதற்பாடல் அழகு. பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி