Ads 468x60px

Wednesday, July 17, 2013

நோக்கு வர்மம் !


திறந்திருக்கும் கதவினை
பார்த்தபிறகாவது...
தெரிந்திருக்க வேண்டும்
திருடுவதற்கு ஏதுமில்லையென...

அங்குமிங்கும் பார்த்தபடி
மெல்லென அடி வைத்து
எத்தனை எத்தனை ..
புலனாய்வு செய்த பின்னும்
ஏதுமில்லையென்றானபின்.

சோர்ந்து விடாது
அடுத்து வெளியேறும்
முயற்சியில் தீவிரம் 
காட்டிக்கொண்டிருந்தது பூனை.

சீறிப்பாய்ந்த லாவகத்தில்
சிக்கியிருக்கக் கூடும்.
வாசல் கம்பிகளுக்கு நடுவே..பூனை
அதனை எப்படியாவது
விடுவிக்கும் நோக்கில் நானும்
என் பார்வையில் இருந்து
தப்பும் நோக்கில் அதுவும்.
நோக்கு வர்மத்தால் சில பல
புரிதல்கள் நிகழ்ந்தபடி.

39 comments:

 1. கவிதையும் பூனைக்குட்டியைப் போலவே அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 2. சரி, சரி சீக்கிரம் புரிய வச்சு அந்த பூனையை காப்பாத்துங்க மேடம்!

  ReplyDelete
  Replies
  1. அதுவே என்னிடமிருந்து தப்பி ஓடிவிட்டதுங்க.

   Delete
 3. பாவங்க.. பூனைன்னு பூனைய தானே சொன்னிங்க.. ஏன்னா நேத்து பதிவர் ஒருவர் கவிதையை படித்துவிட்டு பின்னூட்டம் போட்ட பிறகு தானே தெரிந்தது.. அது திவ்யா- இளவரசன் பற்றிய கவிதையாம்.. நமக்கு ஒன்னும் புரிய மாட்டீங்குது.. அதான் கேட்டேன்..

  கவிதையை போலவே பூனையின் படமும் அருமை..  ReplyDelete
  Replies
  1. என்னுடைய வரிகள் எளிமையானவை.. இது படிப்பவர்களுக்கே தெரியும்.

   Delete
 4. Replies
  1. தப்பி விட்டதுங்க.

   Delete
 5. கண்ணிலிருந்து தப்பிய பூனை கவிதையிலிருந்து தப்பவில்லை போல!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க. சரியாக சொல்லிவிட்டீர்கள்.

   Delete
 6. அழகான கவிதை தோழி...பூனை கடைசியில் தப்பிப் போனதா இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அதனுடைய முயற்சியிலேயே தப்பி விட்டதுங்க.

   Delete
 7. உயிர்காக்க ஓடி உணர்விழந்த பூனைக்கு
  துயர்களைய தொடர்ந்த நோக்கு.

  அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. உயிர்காக்க ஓடி உணர்விழந்த பூனை
   துயர்களைய நோக்கு தொடர்ந்து!

   Delete
  2. எங்கங்க நோக்க ஓடிப்போச்சிங்க.

   Delete

 8. வணக்கம்!

  தமிழ்மணம் 5

  நோக்கும் கலையை நுவலும் கவிபடித்தேன்
  போக்கும் துயரைப் புடைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 10. அழகான புரிதல்! அழகான கவிதை! பாராட்டுகள் சசி.

  life of pi திரைப்படம் நினைவுக்கு வந்தது.

  திறந்திருக்கும் வீட்டுக்குள் எதுவுமிருக்காது என்று இனியேனும் அந்தப்பூனை தெரிந்துகொள்ளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தோழி என்ன முயன்றும் அதனிடம் சொல்ல தெரியவில்லை எனக்கு.

   Delete
 11. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 12. பூனை படம் நல்லா இருக்கு..... ! கவிதையும் தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 13. நோக்கு வர்மத்தால் சில பல
  புரிதல்கள் நிகழ்ந்தபடி கவிதை வசீகரித்தது ..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

   Delete
 14. நோக்கு வர்மத்தால் சில பல
  புரிதல்கள் நிகழ்ந்தபடி//

  அனைத்து விஷயங்களிலும்
  பொருத்திப்பார்க்க அதிகப்\பொருள் தரும்
  அருமையான ஆழமான அர்த்தமுள்ள வரிகள்
  தொடர வாழ்த்துக்கள்

  .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 15. ” நோக்கு வர்மம் “ – புதிய சொல்லாடல். அதன் அர்த்தம் என்னவென்று தெரியாத நிலையில் அகராதிகளை, புரட்டிப் பார்த்தும் ஒன்றும் தோன்றவில்லை. வன்மமான நோக்கு என்றே பொருள் கொள்ள வேண்டியதாயிற்று. பூனையின் பார்வையில் வன்மம், உங்கள் பார்வையில் இரக்கம். கவிதை வரிகளை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே “நோக்கு வர்மம்”
   இப்படி இணையத்தில் படித்ததே..
   இக்கவிதை ஒரு பூனையை பார்த்துக்கொண்டிருந்ததால் எழுதியது அவ்வளவே.

   Delete
 16. நோக்கு வர்மம்! அழகு! பூனையின் திருட்டிலும் ஒரு புதிய கவிதை படைத்த கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 17. அழகான கவிதை... எளிய நடையில் உள்ளது...

  ReplyDelete
 18. எப்படியாவது
  விடுவிக்கும் நோக்கில் நானும்
  என் பார்வையில் இருந்து
  தப்பும் நோக்கில் அதுவும்.
  நோக்கு வர்மத்தால் சில பல
  புரிதல்கள் நிகழ்ந்தபடி.

  நல்லாருக்குங்க வரிகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

  ReplyDelete
 20. உங்களின் கவிதை எனது தளத்தின் வாரத்தொகுப்பில் இந்த வாரம் முதலிடத்தைப்பிடித்திருக்கிறது... தொடர்ந்து இன்னும் பல அற்புத படைப்புகளைத்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி