Ads 468x60px

Saturday, June 8, 2013

தென்றலோடு சில நிமிடம் !


நாற்றங்காலின் நலம் விசாரித்து
நறுமணத்தின் மேனி முகர்ந்து
வரப்பின் மடியில் இளைப்பாறி
கதிர் நுனியில் கன்னம் வருடி
சேற்றுவயலில் காலூன்றி...
கிணற்றடியில் சித்திரம் தேடி
செல்லும் அந்த தென்றல்...- அதுவும்
சொன்ன சேதி என்ன சொல்..

மாசில்லா காற்று எங்கே
மயக்கும் கிராமத்து இசையும் எங்கே
நஞ்சில்லா உணவும் எங்கே
நாம் புரண்ட ஆற்றுப்படுகை எங்கே

தேன் சுமந்த கிளைகள் எங்கே
தேனாக பாடிய குயிலுமெங்கே
வான் சுமந்த மழையெங்கே
வானம் பாடிகள் எங்கே

கிளைக்கு கிளை தாவிய மந்தி எங்கே
தென்னங்கீற்று வீடுகள் எங்கே
தெருவில் விளையாடிய குழந்தைகள் எங்கே
மஞ்சள் பூசிய மகளிர் எங்கே - மயக்கும்
மல்லிகை பூக்கள் எங்கே...

எங்கே எங்கே எத்தனை கேள்விகள்
இயற்கையை தொலைத்த 
பாவிகள் நாங்கள்
எங்கே சென்று தேடுவோம் 
உன் தேவையை தென்றலே ?

21 comments:

 1. எங்கே எங்கே என்று எங்கே சென்றாலும் இப்போது எளிதில் பார்க்க முடியாத இன்பங்களை இங்கே தங்கள் கவிதையில் படித்து நினைவுக்குக் கொண்டுவந்ததில், மனதைத் தென்றல் வருடியது போல இன்பமாக உள்ளது..

  பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. தொலைத்தவைகளை நினைக்கத்தூண்டிய ‘தென்றலுக்கு’ நன்றி!

  ReplyDelete
 3. ரசிக்க வேண்டிய இயற்கையை தொலைத்த பாவிகள் தான்.நல வாழ்வை மனிதன் தொலைத்து விட்டான்.

  அழகிய கவிதை!அருமை சகோதரி!வாழ்த்துக்கள் பல!

  ReplyDelete
 4. நாட்டின் வளர்ச்சி விவசாயத்தின் கையில்தான் இருகின்றன.

  அழகிய கவிதை

  ரசித்து வாசித்தேன் !

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தென்றலைத் தேடியலைந்த தென்றலின் கவிதை! “ காலம் ஒருநாள் மாறும் ! நம் கவலைகள் யாவும் தீரும்” என்பதுதான் பதில்.

  ReplyDelete
 6. ஒரு நாள் மாறு(வோ)ம்... நம்பிக்கையோடு இருப்போம்... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete

 7. தென்றலின் தேவையைத் தேடி அலையும் தென்றலே உனக்குத் தெரியாதா, மாற்றம் ஒன்றே மாறாதது என்று.?

  ReplyDelete
 8. எங்கே எங்கே எத்தனை கேள்விகளோடு தென்றலோடு சில நிமிடம் !

  ReplyDelete
 9. நஞ்சில்லா உணவும் எங்கே
  நாம் புரண்ட ஆற்றுப்படுகை எங்கே//வெளிநாட்டுக்காரன் சதி பண்ணிட்டான்

  ReplyDelete
 10. இயற்கையை தொலைத்த
  பாவிகள் நாங்கள்
  எங்கே சென்று தேடுவோம்
  உன் தேவையை தென்றலே ?

  உண்மையான வார்த்தைகள் அருமை கவிதைவாழத்துக்கள் அக்கா

  ReplyDelete
 11. எங்கே என்ற கேள்வி கணை தொடுக்கும் வரிகள் தென்றலுக்காக வாதிடுகிறது காலம் மாறும்

  ReplyDelete
 12. ஆம்! நகர மயமாதலில் தென்றலை தேட வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம்! ஆதங்க வரிகள்! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
 13. முப்பதே வருடங்களில் எத்தனை மாற்றம்!

  ReplyDelete
 14. ''..நாம் புரண்ட ஆற்றுப்படுகை எங்கே.
  இயற்கையை தொலைத்த
  பாவிகள் நாங்கள்
  எங்கே சென்று தேடுவோம் ..''
  நல்ல ஏக்க வரிகள். இயற்கையின் அவசிய வரிகள். நன்று.
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. அட... ஒரு தென்றலே
  தென்றலிடம்
  கவிதை பேசுகிறதே!
  அடடா...!
  ஹையா... நானும் கவிதை எழுதிட்டேனுங்கோ...! இயற்கையைத் தொலைத்த பாவிகளாகி விட்ட நம்மை அடுத்த தலைமுறைதான் மன்னித்து ரட்சிக்கணும். இனி வேற ஏதாவது கிரகத்துலதான் தேடணும் போலருக்கே சசி!

  ReplyDelete
 16. ஆமாம் தோழி! அழகாகச் சொன்னீர்கள். மனதை நெருடும் ஏக்கவரிகள்...

  இயற்கையைத் தொலைத்தோம்
  இருப்பிடத்தையும் தொலைத்தோம்
  இயந்திர மனிதர்களாகி இன்று
  இயமன் வரவைக் காத்து நிற்கிறோம்...

  ReplyDelete
 17. தென்றலை தேடி எங்கும் செல்ல வேண்டாம் உங்கள் வலைதளம் வந்தாலே போதுமே

  ReplyDelete
 18. நித்தம் நித்தம் தேடுகின்றோம் இழந்தவற்றை..... தொடர்ந்து இழந்து கொண்டிருப்பதும் தொடர்கிறது......

  கவிதைகளில் மட்டுமே தென்றலைக் காண முடிகிறது இப்போது!

  ReplyDelete
 19. நாற்றங்காலின் நலம் விசாரித்து....
  கதிர் நுனியில் கன்னம் வருடி...
  ஊற்றென சிலிர்ப்பாய் அங்கே
  ஊற்றிய நீரில் குளித் துவந்து- சோர்வை
  மாற்றிய தென்றலுக்கு...
  மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 20. தென்றலின் ஏக்கங்கள் தீரும் நாளெந்த நாளோ? தீராமலேயே வாழ்நாளும் தீர்ந்திடுமோ? வருத்தம் தரும் ஏக்கத்தை கவிதையாக்கியமை நன்று சசி.

  ReplyDelete
 21. vethanai....

  arumai ..
  padaippu..!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி