Ads 468x60px

Wednesday, June 19, 2013

வந்துட்டாங்கையா....வந்துட்டாக !


அலமு : சசி....சசி ! என்ன எப்படி இருக்க பதிவுலகம் எப்படி இருக்கு ?

சசி : வாங்கோ மாமி ....வாங்கோ ! என்னதிது நான் உங்களுக்கு கம்பூட்டர் சொல்லித்தந்த நேரமோ என்னவோ அதோட காணமா போயிட்டிங்க.  என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு இருந்தேன்.. 

அலமு : நல்ல அக்கறை தாண்டி மா உனக்கு .

சசி : ஏன் மாமி எனக்கு அக்கறையே இல்லையா ?

அலமு : அது தான் பார்த்தேனே.  எங்கடா மாமிய காணோமே என்னனு தேடினியா ?

சசி : மாமி நீங்க தான் உங்க பேரனை மகளை மகனை பார்க்க போனதா மாமா சொன்னாங்க. அதனால அப்படியே இருந்துவிட்டேன். 

அலமு : அதுக்குத்தான் அப்பவே கேட்டேன். நீங்க எல்லாம் பேசுற மாதிரி எனக்கும் சொல்லி குடுடினு.

சசி : ஆமா டியூசன் வந்தா ஒழுங்கா வரனுமில்லையா ?

அலமு : என் பேரனும் என்னமோ சொன்னான்டி மா. என்னவோ பச்சை லைட்டு எரியும்... அப்ப நீ இருப்பனு நானும் வீட்ல விளக்கு கூட ஏத்தாம பார்த்துட்டே இருந்தேன்டிமா. டமால்னு ஒரு சத்தம்..

சசி : அய்யய்யோ மாமி என்னத்த போட்டு உடைச்சிங்க.

அலமு : அத ஏன்டிமா கேட்குற... இங்க இலவசமா குடுத்தாங்கனு நம்ம மூனாவது வீட்டு கோகிலா பையனோட லேப் டாப்ப விலைக்கு கொடுத்தான் அத வாங்கிட்டு போனேன். அதான்டி மா வெடிச்சிட்டுது.

சசி : பாருங்க மாமி பசங்களுக்கு படிக்க கொடுத்தா இப்படி செய்யுதுங்க. அது கூட பரவாயில்ல தெருவில வச்சிட்டு படம் பாக்குதுங்க. கேம் விளையாடுதுங்க. எங்க போனாலும் பஸ்ல ரயில்லனு கூட இல்லாம ஒரே பாட்டும் கூத்துமா சுத்துதுங்க.

அலமு : அது தாண்டிமா. அரசியல் கால் வயிறு கஞ்சிய கூட முழுசா குடிக்க முடியாத படி அரசி பருப்பு வெங்காயம் எல்லாத்தோட விலையும் ஏத்திடுவா.. இப்படி டிவி லேப் டாப்புனு காச வீணடிப்பா.

சசி : ஆமா மாமி இது என்ன நாமளும் பெட்டி கடை மாதிரி இல்ல திண்ணைல கதை பேச உட்கார்ந்துட்டோம்.

அலமு : இருக்கட்டும் விடுடி மா. இப்படி பேச முடியாம தாண்டி ஒரு மாசமா அவஸ்தப்பட்டேன். என்னத்த சொல்ல. 

சசி : ஆமா நீங்க தான  வடிவேலு சொல்ற மாதிரி நான் வெளிநாட்டுக்கு போறேன் வெளிநாட்டுக்கு போறேன்னு குதிச்சிண்டு போனிங்க.

அலமு : ரெண்டு நாள் மூனு நாள் போனமா வந்தமான்னு இருக்கனும்டிம்மா. அங்க எல்லாம் நமக்கு சரிப்படாது. மெசின் மாதிரி ஓடுறா எல்லாம்.

சசி : பணம் பணம் துட்டு மணி மணி மாமி..

அலமு : நீ ஜாலியா லீவுக்கு உங்க ஊருக்கு எல்லாம் போய் சுத்திட்டு இப்படி பாட்டெல்லாம் பாடுவடியம்மா .

சசி : ஆமா மாமி எங்க இந்த பசங்களுக்கு எங்க ஊரு பிடிக்கலையாம் மாமி . என் சின்ன மகன் அடிச்சான் பாருங்க கூத்து.

அலமு : சரியான வாலுடி அவன் என்ன பண்ணான்.

சசி : எங்க வீடு அழகா திண்ணை பக்கமா ஜன்னல் வச்சி கட்டி வரிசையா இருக்கும் இல்ல மாமி .

அலமு : ஆமாண்டி நானும் வந்திருக்கேனே அழகாத்தான் இருந்தது. அவனுக்கு என்னவாம் ?

சசி : அம்மா இது என்ன ஓட்டை ஓட்டையா இருக்கு நான் இங்க இருக்கமாட்டேன்னு திண்ணையில ஏறி நின்னுட்டான் மாமி. அதோட விட்டானா ?

அலமு : ஏன் அப்பவே கிளம்பிட்டியா ?

சசி : இல்ல மாமி அங்க கரண்டு வேற போய் போய் வருமே அப்ப வெளிய திண்ணைல தான் உட்கார்ந்திட்டு இருந்தோம். பசங்க எல்லாம் விளையாடிட்டு இருந்தாங்க. திண்ணையில ஏறி நின்னா ஓடு கைக்கு எட்டும்படியா இருந்தது . இவன் ஏறி ஓட்டை பிடிச்சிட்டு இருந்தான் மாமி. நான் ஓட்ல எதாவது பூச்சி இருக்குமேன்னு அத ஏன்டா பிடிக்கிற வேனாம்னு சொன்னேன். அதுக்கு அவன் என்ன தெரியுமா சொன்னான் தெருவில் எல்லாம் ஒரே சிரிப்பு. சசிகலா யாரு உன் பையனா இப்படி பேசுறான் அப்படின்னு எல்லாம் கேட்டாங்க.

அலமு : அப்படி என்ன தாண்டி கேட்டான் வாலு .

சசி : ஓட்டுக்கு எல்லாம் ஏன் மா ஸ்குரு போடாம அப்படியே விட்டுட்டாங்கனு கேட்குறான் மாமி. என்ன சொல்ல ?

அலமு :அஹா....அஹா  சரியான கேள்விடிமா. எப்படித்தான் சமாளிக்கிறியோ ? ஆமா கேட்டேனே பதிவுலகம் எப்படி இருக்கு ?

சசி : நல்லா இருக்கு மாமி. நேத்து கூட மஞ்சு அக்காவை புலவர் ஐயா வீட்டிற்கு சென்று பார்த்துட்டு வந்தேன். 

அலமு : துபாய்ல இருக்காங்கனு சொன்னியே அவங்களா ? இங்க வந்திருக்காங்களா ஏன்டிமா என்னையும் அழைச்சிட்டு போயிருக்கலாம் இல்லையா ?

சசி : நீங்க வந்ததே தெரியாது மாமி.  கண்ணதாசன் வந்திருந்தாங்க. அவங்களோட  நம்ம மின்னலு கணேஷ் வந்தாக அவங்களோட ஆவி வந்திருந்தாக...

அலமு : இருடிம்மா என்ன என்ன ஆவியா ?

சசி : ஆமா மாமி அவங்க பெயர் ஆனந்து அவங்க பிளாக் பெயர் ஆவி அதனால அப்படி.

அலமு : பயந்தே போனேன்டிம்மா.

சசி : அப்புறம் நம்ம சீனு அவங்க நண்பர் ரூபக் அப்புறம் ஸ்கூல் பையன் ,மதுமதி , அவங்க நண்பர் , சேட்டைக்காரன் இப்படி மொத்தமா ஒரு குரூப்பா போய் அய்யாவோட தனிமையை விரட்டி அடிச்சிட்டு வந்தோம்.

அலமு : நீ மட்டுந்தான் ஜாலியா இருந்தியா நான் கூடத்தான் உன் நண்பரை பார்த்தேன்டிமா.

சசி : யாரை ..?எப்ப..? எங்க மாமி ?

அலமு : ஏன் இத்தன கேள்வி ?

சசி : சொல்லுங்க மாமி ப்ளீஸ்...

அலமு : என் மகளைப்பார்க்க போன போது நம்ம பூரி கட்டைய (மதுரைத் தமிழன் )பார்த்தேன்டிமா.

சசி : மாமி நிஜமாவா ? என்ன சொன்னாங்க எப்படி இருக்காங்க ? 

அலமு : நல்லா பேசினாங்க . பாவம் ஆனா பூரிக்கட்டை தழும்புகளைத்தான் பார்க்க முடியள எல்லாமே உள் காயமா இருக்குமோடி?


சசி : இருக்கும் இருக்கும் மாமி ....பார்த்திங்களா நாங்க இங்க வருகிற பதிவர்களைத்தான் பார்த்து பேசுறோம் நீங்க பாருங்க வெளிநாட்டு பதிவர்களை அங்கயே போய் பார்த்துட்டு வறிங்க. ம்ம் அசத்துங்க.

முந்தைய அலமுவின் அரட்டையை ரசிக்க இங்கே  கிளிக் செய்யவும்.

52 comments:

 1. அஹா ....பதிவர் சந்திப்புத் தந்த மகிழ்வின் உச்சம் அழகிய உரையாடலில் புலப்படுகின்றதே !!........:)) உங்களையெல்லாம் நாங்கள் எப்போது சந்திக்கப்
  போகின்றோம் தோழி ?....!!!!!!! .வாழ்த்துக்கள் இன்று போல் என்றுமே இந்தச் சந்திப்பும் தொடர வேண்டும் ........

  ReplyDelete
  Replies
  1. அன்புடன் வரவேற்கிறது சென்னை தோழி..தங்களைக் காணும் ஆவலில் நாங்களும்.

   Delete
 2. முதல் வாழ்த்தும் இன்று என்னுடையதா !!!! மிக்க மகிழ்ச்சி அப்போ
  எனக்கும் இந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் போல :)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக கிடைக்கும் சந்திப்போம் தோழி.

   Delete
 3. நல்லா அனுபவிங்கடியம்மா! சென்னைல இருக்குறதால உங்களுக்கு இது ஒரு ப்ளஸ் பாயிண்டா போச்சு :-(

  ReplyDelete
  Replies
  1. அங்க என்ன புகையுது ?

   என்னா ஒரு கோபம் பாருங்க...

   Delete
  2. சொல்லுவீங்களே... நான் நேத்து எவ்வளவு கஷ்டப்பட்டு ஆபிஸ் கட்டடிச்சு போனேன் தெரியுமா.....

   Delete
  3. ஆமா இந்த ஸ்கூல் பையன் அப்படி.. நான் எங்க வீட்ல ஸ்கூலுக்கு பசங்கள அனுப்பிவிட்டு அப்படியே போனேன்.

   Delete
  4. ;நானும்தேங் ரொம்ப சிரமப்பட்டு லீவே போட்டுட்டு வந்துருந்தேனாக்கும்!

   Delete
  5. சகோ ராஜி சொன்னதையே நானும் ரீபிட் பண்ணுகிறேன்

   Delete
  6. சென்னையில் சந்திக்கிறவங்க எல்லாம் வீட்ல போய் அம்மா அல்லது மனைவியை சுத்தி போட சொல்லுங்கப்பா.

   Delete
 4. ஸ்கூல் பையன் மதுமதி
  >>
  பதிவர் ஸ்கூல் பையனையும், மதுமதியையும் பிரிச்சு வைங்க(ஒரு கமா போடும்மா).., மதுமதி ஸ்கூல் பையன் போல இருக்கார்ன்னு அர்த்தம் ச்வருது பாரு.

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கா.

   Delete
  2. ஸ்கூல் பையனும் மதுமதியும் ஒட்டி நிக்கறதுனால அந்த மாதிரி எழுதிட்டாங்க... மன்னிச்சு....

   Delete
 5. அசத்தல் பதிவு
  அதுவும் மாமி பாஷையில் படிக்க அற்புதம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களை சந்திப்பில் காண முடியவில்லை அந்த ஒன்றே வருத்தமளித்தது. மற்றபடி சிறப்புங்க ஐயா.

   Delete
 6. சந்திப்பு சேதி கேட்டு , பார்த்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தோழி.

   Delete
 7. அடடா... அசத்தல் பதிவு தோழி! சூப்பர். ச்சும்மா சொல்லக்கூடாது என்னமாதிரி எழுதியிருக்கிறீங்க...:) திறமைசாலிதான் நீங்க..

  மகிழ்ச்சி தோழி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்வே நன்றிங்க தோழி.

   Delete
 8. மினி பதிவர் சந்திப்பை அழகா அரட்டையில சொல்லி முடிச்சிட்டீங்க! பேஷ்! ரொம்ம நன்னா இருக்கு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 9. காலேஜ் கட்டடடித்த எனக்கு ஆபீசுக்கு கட்டடிக்க முடியவில்லை அதனால் கலந்து கொள்ள முடியவில்லை சந்திப்பு பற்றிய விபரம் தங்கள் அரட்டையில் (பதிவில்) படித்து அறிந்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க வருவிங்க என்று மஞ்சு அக்காவிடம் சொல்லி இருந்தேன்.

   Delete
 10. ஆஹா! சந்திப்புகள் தித்திக்கின்றன. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி.

   Delete
 11. படத்தைவிட உங்கள் பகிர்வு பிரமாதம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 12. ரசிக்க வைத்தது பகிர்வு... வாழ்த்துக்கள் சகோதரி...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ.

   Delete
 13. அடடே நீங்கள் தான் முதல் பதிவா.. அருமை அருமை... யாரையும் விடாம சொல்லிடீங்க :-)

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோ இன்னும் யார் பதிவிடப்போறாங்க.

   Delete
 14. நல்ல சந்திப்பு பற்றி மகிழ்ச்சி சசி!வாழ்த்துகள்
  சீனுவின் இருபக்கங்களிலும் இருப்பவர்களில் யார் ரூபக்,யார் ஆவி?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்க ஐயா நலமறிய ஆவல்.
   மொட்டை பாஸ் ஆவி.
   அடுத்து ரூபக்.

   Delete
 15. மினி பதிவர் சந்திப்பை அற்புதமாக சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 16. அலமுவின் துணை கொண்டு அரட்டையில அசத்தி‌ட்டியேம்மா தென்றல்! நானும்கூட சந்திப்பப் பத்தி எழுதலாம்னு நெனச்சேன்... எதும் மிச்சம் வெக்கலியே நீயி! சூப்பரு!

  ReplyDelete
  Replies
  1. உங்க அளவுக்கு எழுத வராது உங்க பாணியே தனி எழுதுங்க ரசிக்க காத்திருக்கிறோம்.

   Delete
 17. Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 18. //அலமு; என் மகளைப்பார்க்க போன போது நம்ம பூரி கட்டைய (மதுரைத் தமிழன் )பார்த்தேன்டிமா.///

  அலுமு மாமி என்னைப்பார்த்து பேசும் போது சொன்னாங்க. இவ்வளவு அடிவாங்கியும் விடாம பதிவுகள் எழுதும் உங்கள் முயற்சி எனக்கு பிடித்திருக்கிறது அதனால தமிழகம் போய் மேலே படத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் சொல்லி எனக்கு விழா எடுத்து தங்கத்தில் எனக்கு ஒரு பூரிக்கட்டை செய்து பரிசாக அளிப்பதாக சொன்னார்கள். அவர்கள் ஏதோ விளையாட்டாக சொன்னார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு நீங்கள் எல்லோரும் கூட்டமாக கூடி இருப்பதை பார்த்ததும் அது உண்மை என்று புரிந்தது உங்களின் நல்ல மனசுக்கு நன்றிங்க

  ReplyDelete
  Replies
  1. விழா எடுக்க தயாராக இருக்கிறோம்.மறக்காம உங்க மனைவியை அந்த பூரிக்கட்டையுடன் அழைத்து வரவும். ஒரு நேர்க்காணலுக்கு பின்பே தங்க கீரீடம் வழங்கப்படும்.

   Delete
 19. தொடர்ந்து சந்தித்து நிறைய
  பதிவுகள் இட வாழ்த்துகிறேன் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. நீங்க எப்ப சென்னை வருவிங்க சொல்லுங்க. அந்த சந்திப்பை பதிவாக்கிவிடலாம். ஆனா மேலே இருக்கும் கோபக்காரபேர்வழிகளுக்கு தெரியாம சந்திப்போம்ங்க.

   Delete
 20. பதிவர் சந்திப்பை மட்டும் சொல்லாமல் கூடவே நிறைய செய்திகள சுவாரசியமாக சொல்லிய விதம் அருமை தோழி

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் ரசித்து படித்தமைக்கு நன்றி தோழி.

   Delete
 21. அருமை இரு உள்ளங்களின் சந்திப்பின் உரையாடல் பதிவாக அருமை....

  ReplyDelete
 22. நானும் வருவேனே சென்னை.... :-)

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி