Ads 468x60px

Saturday, May 4, 2013

மௌன வேலி..!


நிலவும் ...நீயும்
என் அருகருகே தான்
இருக்கிறீர்கள்...
மன அசைவுகளை
உணராது மௌன வேலியிட்டு.

உற்று நோக்கியபடியே
உறங்கிப்போகிறேன்...
மூடிய இதழ் (இமை) 
வருட வரும்...
பட்டாம்பூச்சியாகிறாய்.

இமைக்குள் இருத்திக்கொள்ள
இதழ் விரிக்கிறேன்.
காற்றசைவுக்கே
காத்தாடியாய் பறக்கும் நீயோ
இமை அசைவிற்கு நிற்பாயா..?
பறந்தோடிப் போகிறாய்
பூத்திருக்கும் மலராகிறேன் நானும்.

28 comments:

 1. மௌன வேலி! அருமையான உவமை. கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 2. மூடிய இதழ் (இமை)
  வருட வரும்...
  பட்டாம்பூச்சியாகிறாய்.

  மௌனவேலியில் மலர்ந்த அழகான வரிகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 3. சிறப்பான கற்பனை! வாழ்த்துக்கள் தோழி!

  மௌனமாய்ப் போட்டவேலியுள்நின்று
  சிந்தை வருடும்சிறப்பான கீதமதை
  தென்றலாய் வந்துதிங்கு தீ(ண்)ட்டினீர்
  திறமையிதே தந்தேன்நல் வாழ்துகள்தனையே...

  த ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி மரபுக்கவியால் பின்னூட்டமிட்டு அசத்துறிங்க.

   Delete
 4. இதய மென் உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க அக்கா.

   Delete
 5. பட்டாம்பூச்சியின் ஸ்பரிசத்தில்
  எட்டா நிலையில் தூங்காமல்
  இதழ் வருடும் இன்பத்தை-இழந்து
  தொட்டால் பறக்கா நிலைஏனோ?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 6. உற்று நோக்கியபடியே
  உறங்கிப்போகிறேன்...
  மூடிய இதழ் (இமை)
  வருட வரும்...
  பட்டாம்பூச்சியாகிறாய்....

  அழகிய வரிகள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 7. கவிதையின் அழகில் நானும் மௌனமாகிப் போனேன் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 8. மூடிய இதழ் (இமை)
  வருட வரும்...
  பட்டாம்பூச்சியாகிறாய்.//
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 9. மிக அழகான கற்பனை!மௌனவேலி மெளனமாக மனதை கொள்ளை கொண்டது!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 10. //என் அருகருகே தான் இருக்கிறீர்கள்...
  மன அசைவுகளை உணராது மௌன வேலியிட்டு//

  பாடல் மிக அருமை. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 11. தலைப்பும் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இனிய வணக்கம் தங்கை சசி...உணர்வுகளின்
  இதமாக இயம்பும்
  அழகுக் கவிதை.

  ReplyDelete
 13. ''..இமை அசைவிற்கு நிற்பாயா..?

  பறந்தோடிப் போகிறாய்

  பூத்திருக்கும் மலராகிறேன் நானும்...''

  arumai.....
  eniya vaalththu.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 14. உறக்கம் தொலைத்து பார்த்திருக்கும் விழியைப் பூத்திருக்கும் மலராக்கிய உவமை கண்டு வியந்தேன். ரசனையான கவிதைக்குப் பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 15. அன்புடையீர்,

  வணக்கம்.

  இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

  தலைப்பு:

  ”ஸ்வர்ண குண்டல அனுமன்”

  இணைப்பு:

  http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

  தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி,

  இப்படிக்குத்தங்கள்,

  வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in

  ReplyDelete
 16. தலைப்பே அருமையான கவிதை.
  சொல்லிச் சென்றதை விட சொல்லாததைத் தக்க வைத்திருப்பது கவிதையின் சிறப்பு.

  ReplyDelete
 17. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
  அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
  அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
  Reply

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி