Ads 468x60px

Wednesday, February 6, 2013

மீனவனின் காதலி !மழை பார்த்து நாளாச்சி
மன்னவனே 
உன் முகம் பார்த்தும் யுகமாச்சே
சாரல் வந்து நனைக்கையிலே.

சந்தணமா உன் நினைவு
மண் அரிச்ச சுவறாட்டம
மனசரிச்சி போனவறே
நெனப்பெடுத்து உடுத்திகிட்டே
நீண்ட நாளா காத்திருக்கேன்
நித்திரையும் மறந்துடுச்சே
நீ வந்த கனவதனால்...

துப்பட்டாவும் தேடிடுதே
தூரப் போகும் நிழலையுந்தான்
கண்ணடிச்சி போனவரே
கண்ணாமூச்சி ஆட்டமெதுக்கு
சொல்லிடவே வார்த்தையில்ல
சொல்லிபுட்டா நாணமில்ல
மடி சாய்ந்து நானுறங்க
நாளிருந்தா வெரசா வந்து சொல்லிப்போயேன்.

18 comments:

 1. மழை பார்க்க இனியும் முடியாது
  மரத்தைத்தான் நம்மாட்கள் விட்டு
  வைப்பதில்லையே அதனால் தைரியமாக
  சொல்லலாம் காண முடியாத ஒன்றுக்கு...

  மண் சுவர் என்றாலே அரித்துவிடும் என்பதை
  என்னவொரு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
  உதாரணம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்
  அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தென்றலே...

  நல்லதொரு நித்திரையில் தான் கனவு வரும்
  அந்த கனவிலும் நீ வந்ததால் எனக்கு நித்திரையும்
  மறந்திடுச்சே என்னதொரு எழில்மிகுநடை பாராட்ட
  வேண்டிய இடம் பாராட்டுக்கள் சசிகலா...

  துப்பட்டா காற்றில் எப்போதுமே பறக்குமொன்று
  அதுதான் நம்முடைய நிழலை தொட்டுப்பார்க்கும்
  அப்படிப்பட்ட துப்பட்டாவும் நீ விலகி செல்வதால்
  உனையும் தேடிப்பார்க்கிறதே அருமையோ அருமை.

  நாணம் என்றால் அங்கு பேச்சுக்கே வேலையில்லை
  அந்தாள் தான் சொல்லிப்புட்டா அது நாணமில்லை
  என்று அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் இங்கு
  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றென்றும்...

  ReplyDelete
 2. மீனவனின் காதலி kavarnthu vittaal !

  ReplyDelete
 3. ''..சந்தணமா உன் நினைவு

  மண் அரிச்ச சுவறாட்டம

  மனசரிச்சி போனவறே

  நெனப்பெடுத்து உடுத்திகிட்டே

  நீண்ட நாளா காத்திருக்கேன்

  நித்திரையும் மறந்துடுச்சே..''
  நல்ல வரிகள் சசி...சுவை கூட்டுது
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete

 4. பொருத்த மான உவமைகள்! அருமை! வளர்க கவிநயம்!

  ReplyDelete
 5. மீனவர்களின் சிறப்புகள் கவிதை வடிவில் அருமை ! குறிப்பாக அன்பானவளின் ஏக்கம் அருமை !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. “தந்தை மகனுக்கு தினமும் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்க்கை பிரகாசமாகும்” என்பது புதுமொழியாக குறிப்பிடுவார்கள்.

  நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி இதன்மூலம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டும். மேலும் கடலின் இயற்கை வளங்கள் அழிவு மற்றும் மாசுபடுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு தனி மனித மற்றும் சமூகக் கடமையாகும்.

  ReplyDelete
 7. அருமையான ஏக்க கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. சிறப்பான படைப்பு!

  ReplyDelete
 9. சிறப்பான கவிதை சகோ.... வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அற்புதமான உணர்வு வரிகள்....

  ReplyDelete
 11. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.ஒரசிவச்ச சந்தனத்த ஓடவிட்டேன் தண்ணியில பாட்டை ஞாபகப்படுத்துகிறது.

  ReplyDelete
 12. மீனவனின் காதலியாய் ஒலித்த குரல் அருமை! கவியில் இனிமை1 சூப்பர் தென்றல்!

  ReplyDelete
 13. கவிதை அருமையாக உள்ளது சசிகலா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பிரிந்த தலைவனை சீக்கிரம் வரச்சொல்லும் தலைவியின் மனக்குரல் வடித்தகவிதை அருமை.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி