Ads 468x60px

Monday, February 4, 2013

அக்கம் பக்கம் பேசாதவரா நீங்கள் ?

கிராமப் புறங்களில் பொதுவாக ஒரு பழக்கம் எவ்வளவு ஓடினாலும் கிடைக்கும் நேரத்தில் அக்கம் பக்கத்தில் சகஜமாக ஒருவருக்கொருவர் பேசிப் பழகி அவங்க வீட்ல என்ன குழம்பு இவங்க வீட்ல என்ன குழம்பு என்பது வரை தெரிந்திருக்கும் இது இன்றைய கால கட்டத்தில் வெட்டிப் பேச்சு வீண் வம்பு என்பது பரவலாக இருக்கும் கருத்து. இதில் எனக்கு உடன்பாடில்லை.

 என்ன வாழ்க்கை இது சம்பாதிக்கனும் சாப்பிடனும் புருசன் பொண்டாட்டி பிள்ளைகள் இவர்களுக்கு இடையே பெற்றவர்களையும் சேர்ப்பதில்லை இன்றைய உறவுகள். இதனால் கிடைப்பதென்னவோ குறுகிய மனப்பான்மை தான் இதனால் அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் பெயர் ஊர் கூட தெரியாத நிலை தான் இருக்கிறது.

 கிராமப் புறங்களில் ஒரு தபால் வந்தால் இன்னாருக்கு என்று வாங்கி வைத்து கொடுப்பார்கள் இன்று நாம் வீட்டில் இருந்தாலும் அப்படி யாரையும் தெரியாதுங்க என்ற பதிலால் நான்கு தெரு சுற்றி திரிந்து நம் கைக்கு வருவதற்குள் ஒரு வழி ஆகிவிடுகிறோம்.

 இந்த சூழலில் ஒரு சம்பவம் ஒரு காம்பவுண்டில் எட்டு குடித்தனங்கள் வசித்து வந்தனர் அதில் கிராம புறத்தில் இருந்து குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தலைவி அங்கிருந்த மாதிரியே அக்கம் பக்கத்தில் நன்றாக பேசி பழகி வந்தாங்க. நாகரீக முறையை விரும்பும கணவர் தினமும் இது தவறு எதற்கு அக்கம் பக்கம் பேசி வம்பை விலைக்கு வாங்குகிறாய் என திட்டி வந்திருக்கிறார் இந்த நிலையில் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வருகிறார் தான் காலையில் சோலிங்கர் செல்வதாகவும் இவர்கள் குடும்பத்தையும் அழைக்க வந்ததாகவும் சொல்ல இந்த பெண் சரி யாருக்கும் சொல்ல வேண்டாம் கணவருக்கு தெரிந்தால் திட்டுவார் என்பதால் யாரிடமும் எந்த தகவலையும் சொல்லாமல் அதிகாலை பயணம் சென்று விடுகிறார்கள் .  பேருந்து நிலையம் வந்த பிறகு தான் தெரிகிறது கணவன் மனைவி இருவருமே தனது செல் போனை மறந்து வந்தது. சரி யார் நம்மை அழைக்கப் போகிறார்கள் என்று அப்படியே கிளம்பி விடுகிறார்கள்.  திடிரென்று உறவினர் ஒருவர் செல்லில் அழைத்துள்ளார் இருவர் செல்லும் பதிலளிக்காததால் அச்சமுற்ற உறவினர் அனைத்து உறவினருக்கும் தொடர்பு கொண்டு விசாரித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் குழம்பி மற்ற உறவினர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் இல்லம் சென்று பார்க்கிறார்கள். அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறார்கள் . நல்லாதான பேசிட்டு இரவு உறங்கப் போனாங்க என்ன ஆச்சி தெரிய வில்லை. காலையில் வீடு பூட்டி இருப்பதாக தகவல் கிடைக்கிறது.

 இந்த நிலையில் அவர்கள் உறவினர்களில் ஒரு குடும்பத்தினர் சிறிது நாட்களுக்கு முன்பு தான் பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்ததை நினைவு படுத்தி பதறி ஜன்னல் கதவு துவாரங்களை ஆராய்து செல் மட்டும் அலறும் சத்தம் கேட்கிறது . மற்றபடி எந்த தகவலும் இல்லாததால் தவிக்கின்றனர். கடவுளுக்கு நேர்ந்து கொண்டெல்லாம் தேடலில் இருக்கும் நிலையில் மாலை 5 மணி அளவில் சுமார் 1400 படிகளை உடைய மலையடிவாரம் அடைந்த நண்பர் சரி பக்கத்தில் இருக்கும் உடன் பிறந்த தமக்கைக்காவது தகவலை சொல்வது சிறந்தது என நினைத்து செல்லில் அழைக்க என்ன நடந்திருக்கும் நினைத்து பாருங்கள். தகவல் அறிந்ததும் நிம்மதி ஒரு புறம் அவர்களுக்கு இருந்தாலும் காலை முதல் மாலை வரை அலைக்கழித்த நிலையால் சரியான வசவு. வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கம் முதல் உறவுகளிடையேயும் நீண்ட நாட்களுக்கு நகைச்சுவையாக அலசப்பட்டது இந்த நிகழ்வு. இந்த நிலை இப்படி தனித்திருக்கும் இக்கால குடும்ப சூழலுக்கு தேவையா என்பதை சற்றே சிந்தியுங்கள். எங்கோ தொலைவில் இருக்கும் உறவினர்களை விடவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆபத்தில் உதவுபவர்கள் என்பதை உணர்ந்து அளவோடு பேசி பழகி நட்புறவை வளர்ப்போம்.

15 comments:

 1. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் அனைத்தும் சமூகத்தில் அன்றாடம் நடக்கக்கூடியதே !


  // எங்கோ தொலைவில் இருக்கும் உறவினர்களை விடவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆபத்தில் உதவுபவர்கள் என்பதை உணர்ந்து அளவோடு பேசி பழகி நட்புறவை வளர்ப்போம்.//

  நல்லதொரு கருத்துடன் ஆக்கத்தை முடித்திருப்பது அருமை.

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. இன்றைய சூழலில் பேசிப்பழகுவது என்பது சாத்தியமற்றது .. நாம் முயன்றாலும் எதிரே இருப்பவர் யோசிக்கலாம்.. இருந்தும் சில இடங்களில் நன்கு பேசிப்பழகும், நட்பு கொண்டாடுவதும் இருக்கத்தான் செய்கிறது அக்கா

  ReplyDelete
 3. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நாம் முதலில் பேச / பழக ஆரம்பித்தால், அனைவரையும் கவர்ந்து விடலாம்... "அதை தடுப்பது யார் ?" என்றால்... ஒரு நீண்ட பதிவே எழுத முடியாத நிலையில் உள்ளதால்... நம்மிடம் உள்ள மனதை கேட்டால் வரிசையாக பட்டியலிடும்...

  ReplyDelete

 4. இன்றைய சூழ்நிலையில் நகரத்தில் உள்ளோர் தங்களை சுற்றி ஒரு ‘திரை’ போட்டுக் கொள்வதால்தான், அநேக அடுக்ககங்களில் கொலையும் கொலையும் நடக்கும்போது யாருமே எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் அதுபோல் இல்லை. அனைவரும் எல்லோரோடும் பழகுவதால் புதியாய் யார் வந்தாலும் அனைவருக்கும் தெரிந்துவிடும்.
  அதனால் “எங்கோ தொலைவில் இருக்கும் உறவினர்களை விடவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆபத்தில் உதவுபவர்கள் என்பதை உணர்ந்து அளவோடு பேசி பழகி நட்புறவை வளர்ப்போம்.” என்ற உங்களின் கருத்து ஏற்புடையதே.

  ReplyDelete
 5. நல்ல பதிவு! அளவோடு பேசுவதுதான் சிறந்தது

  ReplyDelete
 6. அக்கம் பக்கம் நட்பு அவசியம் தான் அதற்காக ரொம்பவும் நெருங்கி விடவும் கூடாது பழகாமலும் இருந்து விட கூடாது நல்லதொரு கருத்தை கொண்ட கட்டுரை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தகவல் முக்கியம்?உறவினர்களை கூடவே அழைத்து செல்லலாம் அல்லது தகவல் சொல்லிவிட்டு போகலாம்

  ReplyDelete
 8. உண்மைதான்! அளவோடு பழகினால் யாருக்கும் துன்பமில்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. //அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆபத்தில் உதவுபவர்கள் என்பதை உணர்ந்து அளவோடு பேசி பழகி நட்புறவை வளர்ப்போம்.//
  இது மிக அவசியம்!

  ReplyDelete
 10. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு கண்டிப்பாக எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் பழக வேண்டும். அதுபோல நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்துவரவேன்டும் முக்கியமாக அவர்களில் குடும்ப பெர்ஷனல் விஷ்யங்களில் நாம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்

  நாங்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் நாங்கள் இருப்பது இந்தியர் அதிகம் இருக்கும் பகுதியாகும் அதிலும் எங்களை சுற்றியுள்ள வீடுகள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலததை சேர்ந்தவர்கள் ஆனாலும் ஒருவருக்கொருவர் நன்று உதவி விடுமுறை நாட்களில் யாரவது ஒரு வீட்டில் கூடி சாப்பிடு விளையாடி வருவோம் அதனால் ஊரில் இருந்து பெற்றோர்கள் வந்தால் அவர்களுக்கு இங்கு போரடிக்காமல் இருக்கும்..

  கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதான்


  ReplyDelete
 11. கண்டிப்பாய் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் நட்புறவு இருக்க வேண்டும்- ஒரு எல்லைக்குட்பட்டு. அப்படி இருந்திருந்தால் இத்தனை குழப்பம் நேர்ந்திராது. ஒருநாள் என் செல்போனை மறந்து வைத்துவிட்டு ஆபீஸ் சென்றுவிட, வந்த கால்களால் என் அம்மா அவžதைப்பட்டு என்னைத் திட்டிய விஷயம் இதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது தென்றல். சரியான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.!

  ReplyDelete
 12. எதுவுமே அளவோடு இருந்தால் என்றைக்கும் ஆபத்தில்லை. உற்றார் உறவினரை விட்டு வெகு தொலைவில் இருக்கும்போது அக்கம்பக்கத்தினர்தான் உறவினரை விட சீக்கிரம் உதவிக்கும் வருகிறார்கள்.

  ReplyDelete
 13. நல்ல பதிவு! நன்றி!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி