Ads 468x60px

Monday, August 27, 2012

அலமுவோடு ஓர் அலசல் !
அலமு : என்னடிமா நேத்து எத்தன மணிக்கு வந்த ஏன்டிமா டல்லா இருக்க.

சசி :  வாங்க மாமி நேத்து 7.30 க்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன் மாமி. விழா மிக மிக சிறப்பா நடந்துச்சி மாமி எல்லோரையும் இருந்து வழியனுப்பிட்டு வர முடியலைங்கிற சின்ன வருத்தம் தான் மாமி.

அலமு : சரிடி மா காலைல இருந்து என்ன நடந்துச்சி சொல்லு.

சசி :  எனக்கு புத்தகம் வீட்டுக்கு வரவே காலை 7 ஆகிடுச்சி மாமி அந்த பயம் நேரம் ஆக ஆக புத்தகம் வரமா போய்ட்டா என்ன பண்றது நிகழ்ச்சிக்கு போய் என்ன சொல்றதுனு. அதன் பிறகு விழாவுக்கு உள்ளே போகவும் தமிழ்த் தாய் வாழ்த்துடனே வாசலில் சீனு வரவேற்றார். மகேந்திரன் அண்ணா சிரிச்ச முகத்தோட விழா முகப்புள இருந்து வரவேற்றார்.

பெண் பதிவர்கள் ராஜி ,கோவை சரளா, அகிலா ,ஸாதிகா ,லஷ்மி அம்மா, ருக்மணியம்மா ,ரஞ்சனி நாரயணன், நாச்சியார் அம்மா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் மாமி. அன்பா பேசினாங்க.

அலமு : என்னடிமா இப்படி பண்ணிட்ட நீதானே முன்னாடி இருந்து எல்லோரையும் வரவேற்று இருக்கனும்.

சசி : ஆமா மாமி அதான் சொன்னேனே .மாமி ஆரணியில இருந்து ராஜி வந்திருந்தாங்க அவங்க பிள்ளைகளோட பார்க்க உண்மையிலேயே கணேஷ்யும் ராஜியும் அண்ணன் தங்கைகள் மாதிரியே இருந்தாங்க மாமி . நான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.

அலமு : அஹா அப்படியாடிம்மா.

சசி :  பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்தனும் என்று ஆவலோடு இருந்த புலவர் ஐயா சென்னை பித்தன் ஐயா மதுரையில் இருந்து வருகை தந்த சீனா ஐயா மேடையில இருந்தாங்க. குட்டி பிள்ளை மாதிரி ஆரம்பத்தில் இருந்து ஆர்வமா செயல் பட்ட மதுமதி விழா முடியும் வரையிலும் அதே ஆர்வத்தோட இருந்தாங்க மாமி மதுமதி சகோதரரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரை மட்டுமா ?

வரவேற்புரை வழங்கிய திரு மோகன் குமார் புலவர் ஐயா பற்றி சிறப்பா பேசிய கவிதை வீதி மதுரையிலிருந்து வந்திருந்த பிரகாஷ் .

அலமு : இருடி மா பிரகாஷ் தம்பியா உன்னுடைய வலைய அழகா டிசைன் பண்ணதா சொன்னியே அந்த தம்பியா ?

சசி: ஆமா ஆமா மாமி தம்பிய சந்திச்சி பேச கூட முடியள மாமி. என் வலைய அலங்காரம் செய்த வரிசையில் கணேஷ் மதுமதி அதுக்கு முன்னமே அண்ணன் மகேந்திரன் இப்படி நிறைய பேர் இருக்காங்க மாமி. பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது மாமி அதை தொகுத்து வழங்க முன்னனிப் பதிவர்கள் கேபிள் சங்கர் சிபி ஜாக்கி சார் சங்கவி நான்கு பேரும் மேடையில் அமர்ந்தாங்க அவரவர்களுக்கென்று சிறப்பா சிரிப்பா கேலி கிண்டலுடன் அறிமுகத்தை அமர்க்கள படுத்திட்டாங்க போங்க. நடு நடுவே நண்பர் வீடு திரும்பல் சசி கீழ மக்கள் தொலைக்காட்சியில பேச வாங்கனு அன்போட அழைச்சாங்க பிறகு புதிய தலைமுறை டிவியில வேற அதனால மின்னல் மாதிரி நாங்க ஒரு சிறு குரூப் போய்ட்டு போய்ட்டு வந்திட்டிருந்தோம்.

அலமு : அப்படியாடிம்மா டிவியில இருந்து எல்லாம் வந்தாங்களா?

சசி : ஆமா மாமி அப்படியே எல்லாம் மதிய உணவு அருந்த வந்தாங்க அறுசுவையுடன் அருமையான உணவு அவரவர்கள் கலந்து பேசி மகிழ்ந்து உண்டாங்க.

அலமு : அடடா இப்படி எல்லோரும் ஒற்றுமையா ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டா நல்லாதான் இருந்திருக்கும்.

சசி : ஆமா மாமி உண்ட மயக்கம் எல்லோரும் எங்க தூங்கிடப் போறாங்க என்று பயந்தேன் மாமி. ஆனா அப்படியில்லாம நம்ம விழாவோட சிறப்பு விருந்தினர் திரு .பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் அவரைப் பார்க்கும் ஆவலில் எல்லாம் பிரஸ்ஸா நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. நம்ம கணேஷ்யும் சுரேகாவும் மேடையில வந்ததும் பழையபடி நிகழ்ச்சி சுவார்சியமாக ஆரம்பித்தது. சுரேகா சார் பேசப் பேச கேட்டுட்டே இருக்கலாம் போல.
மூத்த பதிவர்களை எல்லாம் பாராட்டி விருது கொடுத்தாங்க. பார்க்க சிறப்பா இருந்தது.  ஊர் பெருமைய பேசாம எந்தப் பெண்ணாவது உண்டா மாமி அப்படி பேச வாய்ப்பு இல்லாம எங்க ஊர்க்காரர் ஐயா கணக்காயர் பேசி அசத்திட்டார் மாமி.

அலமு : என்னடிமா உங்க ஊரா ?

சசி : ஆமா மாமி அவர் எங்க ஊர் பக்கதில் இருக்கிற இளங்காடு மாமி. அவங்க மனைவி மகன் மருமகளோட வந்திருந்து என்னை ஆசரிவதிச்சாங்க.
அந்த நிகழ்வு முடிந்ததும் புத்தக வெளியீட்டு விழா மாமி எனக்கு ஒன்னுமே புரியள போங்க ஏதோ கனவுல இருக்கிற மாதிரி இருந்தது.  என்ன என்னமோ பேசனும்னு நினைச்சிருந்தேன் மாமி. அங்க போனதும் எதுவும் பேசத்தோணல முதல் மேடை வேறவா அதான்.

அலமு : ஆமாண்டி மா நீ இங்கயே பேச காசு கேட்ப அங்க மட்டும் எப்படி பேசியிருப்ப.

சசி : கவியரங்கம் ஆரம்பிச்சது எல்லாம் கவி மழையா பொழிஞ்சாங்க. முடிந்ததும் சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசினார் எழுத்தாளர் பேச நாங்க கேட்க கொடுத்து வச்சிருக்கனும் அதுவும் எதிர் பார்க்காத விதமா தென்றலை பற்றியும் பேசினது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது மாமி.
வீ ஜெயக்குமார் சிவகுமார் அஞ்சாசிங்கம் ஆரூர் மூனா செந்தில் பிரபாகரன் எல்லோருக்கும் தனித்தனியா பார்த்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன் மாமி நேரமில்ல நேரத்தோட வீட்டுக்கு போகனும்னு வந்துட்டேன்.
அலமு : அடடா கேட்கவே சந்தோஷமா .இருக்குடி மா என்னையத்தான் விட்டுட்டு போய்ட்ட நீ என்ன மட்டுமா விட்டுட்டு போன உன் புருசன் பிள்ளைகள கூட விட்டுட்டு முன்னாடியே போய்ட்ட போல.

சசி : ஆமா மாமி சத்தம் போட்டு சொல்லாதிங்க .

படங்கள் பதிவுகளில் இருந்து சுட்டது.
இன்னும் வாசிக்க... "அலமுவோடு ஓர் அலசல் !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி