Ads 468x60px

Friday, October 5, 2012

நன்மையெது தீமையெது ?தேடுவதுதென்னவோ அன்பைத்தான்
மனம் நாடுவதென்னவோ நட்பைத்தான்
தேன் கூட்டைக் காத்திடும் குலவியும்
மனிதனுக்குத் தேளாய் தெரியும்.

மாணிக்கத்தை காத்து நிற்கும்
பாம்பும் விஷமாய் மட்டுமே
விறகென நினைக்கும் மரக்கிளையும்
வலி கொடுக்கும் முள்ளாய்.

தாகம் தீர்க்கும் நீரும்
தம்மை அழிக்கும் அலையாய்
மோகனமாய் தீண்டும் தென்றலும்
மோதியழிக்கும் புயலாய்.

காத்து நிற்கும் வான்கொடையும்
கருகியழிக்கும் இடியாய் மின்னலாய்
இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
இதில் நன்மையெது தீமையெது  ?

21 comments:

 1. மிகமிகச் சரி. நன்மையும் தீமையும் சரிசமம் தான் இயற்கையின் படைப்பில். தீயதை விலக்கி நன்மையைக் கொள்வது நம் கையில்தான். அருமையான கருத்து பொதிந்த கவிதை தென்றல். நன்று.

  ReplyDelete
 2. சூழலே தீர்மானிக்கிறது நன்மையையும், தீமையையும்.

  ReplyDelete
 3. நன்மையும் தீமையும் நமக்கு நடப்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
  நாம் ஒருவருக்கு செய்யும் நன்மை பிறருக்கு அவர் பார்வையில் அல்லது அவருக்கே தீமையாக அமையும்... இப்படித்தான் இயற்கையின் நிகழ்வும் மனிதர்களுக்கும்... மழை வேண்டும் என்று வேண்டி நிற்பவர்களும் உண்டு..அதே மழை பெய்யும்போது என்னடா இந்த மழை ஏன் பெய்கிறது என்று சலித்து கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

  அரியதொரு நமக்கு தேவையான மழைக்கே இந்த கதி என்றால். இயற்கையின் மற்ற சூழ்நிலைகளை சொல்லவும் வேண்டுமா...
  எந்த ஒரு காரியத்தாலும் ஒருசேர நன்மையை எல்லோருக்கும் நம்மால் கொடுத்துவிட முடியாது... அதனை பார்த்தால் நாம் எந்தொரு விஷயத்தையும் தைரியமாக செய்யமுடியாது... நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்துகொண்டே போகவேண்டியதுதான்.... இது தான் சரியான நன்மையும் கூட...

  அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சசி கலா. பாராட்டுக்கள் தங்களுக்கு...

  ReplyDelete
 4. இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும் நன்மையின் மறுபக்கம் தீமையும் உண்டு தீமையின் இன்னொரு பக்கம் நன்மையையும் உண்டு இதை பட்டியலிட்ட விதம் நன்று

  ReplyDelete
 5. azhakaa sonneenga...

  mudivu nam kaiyil...

  ReplyDelete
 6. ''...தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
  மனிதனுக்குத் தேளாய் தெரியும்...

  இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்...'''

  பேருண்மை கவிதையின் வெளிப்பாடு. சிறப்பு.
  மகிழ்ந்தேன். இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.  ReplyDelete
 7. கடந்துவந்த பாதையிலே
  கண்ணுண்ட காட்சியிலே
  மலர்ந்ததெல்லாம் நன்மையா?
  நேற்றுமனம் சரியென்றதுவே
  இன்று தவறென மனப்பாட்டு!
  இன்றுதவறாய் நினைப்பவை
  நாளை சரியாய்தோன்றின்!
  தவறாய் நாமும் தவறோடு
  மனித குலமும்-இது நியதி!

  ReplyDelete
 8. ஒன்றுக்குள் இரண்டும் அடக்கம்...

  அழகிய கவிதை...

  ReplyDelete
 9. //தாகம் தீர்க்கும் நீரும்
  தம்மை அழிக்கும் அலையாய்
  மோகனமாய் தீண்டும் தென்றலும்
  மோதியழிக்கும் புயலாய்//

  ரசித்த வரிகள்..

  ReplyDelete
 10. எல்லாம் நம் கையில் ...ம்ஹீம்... மனதில் உள்ளது...

  நல்லதொரு சிந்தனை கவிதை சகோதரி... நன்றி...

  ReplyDelete
 11. //தாகம் தீர்க்கும் நீரும்
  தம்மை அழிக்கும் அலையாய்
  மோகனமாய் தீண்டும் தென்றலும்
  மோதியழிக்கும் புயலாய்//
  //இரசித்தேன்! அமதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்! ஞாபகம் வந்தது!

  ReplyDelete
 12. தாகம் தீர்க்கும் நீரும்
  தம்மை அழிக்கும் அலையாய்
  மோகனமாய் தீண்டும் தென்றலும்
  மோதியழிக்கும் புயலாய்.//நல்லதொரு சிந்தனை

  ReplyDelete
 13. அருமையாச் சொன்னீங்க.சசிகலா.இருமை எனபது இணைந்தே இருப்பது!தவிர்க்க முடியாதது.

  ReplyDelete
 14. நன்மையெது..தீமையெது..எல்லாமே நம்கையில்தான்.

  ReplyDelete
 15. //இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
  இதில் நன்மையெது தீமையெது ?//

  நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்... தெரிவு செய்வதில் தான் திறமையே ஒளிந்திருக்கிறது!

  ReplyDelete
 16. காலத்தின் கட்டுபாட்டு அடிமைகளை
  நாம் என்ன செய்ய முடியும்....

  அருமையான கேள்வியுடன்
  அழகிய கவிதை.
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 17. சசிகலா.... நீங்கள் இன்று என் கதைக்கு இட்ட
  கருத்துரை மெயிலில் வந்தது. ஆனால்
  வலைக்குள் வரவில்லை...
  காரணம் தெரியவில்லை.
  (ஆனால் என் தவறு இல்லைங்க)
  நன்றி.

  ReplyDelete
 18. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றிலும் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு என்பதனை உணர்த்தும் கவிதை.

  ReplyDelete
 19. இப்பதிவுக்கு காலையிலேயே கருத்துரை இட்டிருந்தேன். எங்கே போயிற்று சகோ.? ஸ்பேமில் செக் பண்ணவும். அருமையான படைப்பு.

  ReplyDelete
 20. கவிதைக்கு எளிமையழகு என்பதற்கு இந்தக் கவிதை ஒரு நல்ல சான்று!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி