Ads 468x60px

Saturday, October 27, 2012

இலவசத்தின் இழி நிலை !


அடுப்பெரிய நாதியில்லை நோய்க்கு எங்கேயோட
அரசுமருந்தகத்தில் மருந்துமில்லை மருத்துவரும்தான்
அதிகாலை வேளையிலே அடுக்கடுக்காய் அவலங்கள்
அதிலும் பத்துரூபாய்க்கு வரிசையில் முன்னுரிமை!

ஆடும்தொட்டில்களதில் குடியிருக்கும் மூட்டைப்பூச்சி
ஆண்டவனே வந்தாலும் கடுகடுவென செவிலியர்
ஆகாயத்திலிருந்து குதிப்பதுபோல் மருத்துவர்வருகை
ஆவலோடு வலிதீர காத்துக்கிடக்கும் ஏழைபாழை!

இறந்தவரை பன்றியென தூக்கிச்செல்ல பிணவூர்தி
இமைமூடி நிம்மதியாய்த் தூங்கவோர் காவலாளி
இயந்திரமாய் மாறிப்போன இதயமணிந்தேயவர்
இரக்கத்தைக்கொன்றுவிட்டு கடமைப்போர்வை!

ஈனங்களும் ஊனங்களும் பாலைமான் நீர்தேடலாய்
ஈடில்லா உயிர் காப்பாரோ பணமொன்றே நோக்கமாய்
ஈக்களின் புகலிடமாய் பொதுமருத்துவமனையிருக்க
ஈன்றவர்போல் கண்காணிப்பு தனியாரின் தயவாக!

உழைக்காமலூதியம் பொதுமக்கள் பணத்தினிலே
உறவாய்த்துடித்து பொய்யெழுதி கோடிகளாய்
உண்மை அழுகிறது சுரண்டலினாலானவலி
உருப்படியின்றி உரிமை கொடிதிலுங்கொடிது!

ஊழியமே மருத்துவம் உறுதிமொழியெங்கே
ஊருக்காயுழைப்பு சுயவிளம்பராய் மட்டும்
ஊஞ்சலாடும் உயிர்வைத்து வியாபாரமெனில்
ஊமையாய்ப் பார்த்திருத்தல் நல்நீதியில்லை!

14 comments:

 1. ஈக்களின் புகலிடமாய் பொதுமருத்துவமனையிருக்க
  ஈன்றவர்போல் கண்காணிப்பு தனியாரின் தயவாக!

  உழைக்காமலூதியம் பொதுமக்கள் பணத்தினிலே

  ஊழியமே மருத்துவம் உறுதிமொழியெங்கே


  இது தான் இன்றைய நிலை
  அதை தெளிவாய் தருகிறது தங்களின் இவ் வரிகள்

  ReplyDelete
 2. இன்றைய நிலைக்கு ஏற்றவாறு உள்ளது உங்களின் பகிர்வ.

  ReplyDelete
 3. அருமையாக பதிந்துள்ளீர்கள்... தோழி

  ReplyDelete
 4. பணம் ஒன்றே பிரதானம்! பணம் இருந்தால் எல்லா வசதியும் இல்லாவிட்டால் ஈயும் மூட்டைப் பூச்சியும் தான்....

  நல்ல கவிதை.

  ReplyDelete
 5. ..இம்... என்ன செய்வது... இன்றைய நிலை... எப்போதாவது மாறுமோ...?

  நல்லதொரு கவிதைக்கு நன்றி...
  tm2

  ReplyDelete
 6. unmaiyaana valikal sonthame.....

  ReplyDelete
 7. அரசு மருத்துவமனைகள் இப்படி இருக்குமானால் நிச்சயம் மாறத்தான் வேண்டும்.
  த.ம. 3

  ReplyDelete
 8. ஊழியமே மருத்துவம் உறுதிமொழியெங்கே
  ஊருக்காயுழைப்பு சுயவிளம்பராய் மட்டும்
  ஊஞ்சலாடும் உயிர்வைத்து வியாபாரமெனில்
  ஊமையாய்ப் பார்த்திருத்தல் நல்நீதியில்லை! /// எப்ப மாறுமோ? நம்புவோம் மாறுமென்று! நன்றி!

  tm4

  ReplyDelete
 9. அரசாங்கமே ஆதரிக்கும் இந்த மருத்துவ திருடர்களை திருந்தினால் மட்டுமே நாடு உருப்படும்

  ReplyDelete
 10. உண்மை நிலையை எடுத்து சொல்லும் நல்ல கவிதை..இந்த அவலம்தான் எங்க போனாலும் பாக்க முடியுது. பணம் தான் பிரதானம்..

  ReplyDelete
 11. சாட்டையடி தொடங்கிவிட்டது....

  நெருப்பாய் சுழன்று ஒவ்வொரு அடியும் அரசியல்வாதியின் நாக்கின் மீது, அவர் தந்த வாக்கின் மீது.... அவர் தந்த இலவசம் மீது....

  ஆத்திச்சூடி வரிசையில் மிக அற்புதமாய் ஆழமாய் இன்றியமையாத வரிகளை ஈர்ப்புடன் தந்து உன்னதமான அரசியலாய் மாற ஊக்கம் தரும் வரிகள் இவை...

  ஆமாம் உண்மையே...

  சாப்பாட்டுக்கே வழி இல்லாதப்ப நோய்க்கு எங்கே ஓட... எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதியுற இறப்புகள் அதிகமாக... டிவி செய்திகளில் டெங்கு காய்ச்சல் வந்து மக்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஆசுபத்திரிக்கு ஓட... அங்கே மருந்துகள் இல்லை, மருத்துவரும் எஸ்கேப்... இறப்பு அவர்களுக்கு ரொம்ப சாதாரணமாகிவிட்டது. தினம் ஒரு மரணம் அவர்கள் மனதில் சலனத்தைக்கூட ஏற்படுத்துவதில்லை.. தலைவலியும் காய்ச்சலும் அவர்களுக்கு வந்தால் தான் போலிருக்கு.

  இவர்கள் சரியாகவேண்டுமென்றால் அரசியல் சீர் பெற வேண்டும்...

  நச் நச் நச் என்று வரிகள்..... சாட்டை எனும் கவிதையில் நெருப்பாய் வரிகளை தோய்த்து இங்கே கவிதை பிரவாகம் ஓடுவதை உணர்கிறேன் சசி...

  மனதில் பொங்கும் கோபம் ஒவ்வொரு குடிமகனின் இயலாமை எல்லாம் இங்கே கோபமாய் தெறிக்கிறது வார்த்தைகளாய் வரிகளாய் கவிதையாய்....

  என் மனம் தொட்ட கவிதை வரிகள் சசி...

  ஹாட்ஸ் ஆஃப்....

  தொடரட்டும் கோபத்தின் வெளிபாடு....

  திருந்தட்டும் அரசியல்வாதிகள்.....

  கிடைக்கட்டும் மக்களின் உரிமைகள்....

  பிழைத்தெழட்டும் உயிர்கள்.....

  வேண்டாம் இலவசங்கள்....

  கிடைக்கவேண்டியவை ஒழுங்காய் கிடைத்தாலே போதுமானது....

  மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்....

  மின்வெட்டு தீரட்டும், விலைவாசி ஏற்றம் இறங்கட்டும்....

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் சசி.....

  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா புள்ள என்னம்மா எழுதுது... திருஷ்டி சுத்தி போடனும் புள்ளக்கு...

  ReplyDelete
 12. ஊசலாடும் உயிருடன் வியாபாரம் எனும் இழிநிலையைச் சாடிய கவிதை அருமை!

  ReplyDelete
 13. எல்லாவற்றிலும் இலவசங்களும் கையூட்டும் பெருகிவிட்டது. நிச்சயம் இது இழிநிலைதான். நன்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

  ReplyDelete
 14. இலவசத்தின் இழி நிலையை தத்ரூபமாக உங்கள் கவிதை மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள், சசிகலா!

  உங்களின் இந்தக் கவிதை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகி இருக்கிறது.
  வாழ்த்துக்கள்!

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி