Ads 468x60px

Wednesday, October 17, 2012

அகிலத்தின் தேடல் !


அன்பொன்றையே முன்வைத்து
அகிலத்தின் தேடலென்றால்

அரசாட்சியும் வாழ்ந்திருக்கும்
மக்களாட்சியும் நிலைத்திருக்கும்

நாற்காலிக்கு உயிர் கொடுத்து
நன்றியை நஞ்சென்று கொள்கின்றார்

நாமெனும் நிலை மாறியிங்கே
நானெனும் அகந்தை வாழ்கிறது

இம்சிக்கத் துணிந்துவிட்டதால்
இயற்கையும் மிஞ்சுவதில்லை

இருளாளும் காலமிது துணை
தீமையேயோடி வருகிறது

சுயநலத்தின் மறுவுருவாய்
சுரண்டல்களே கனவுகளாய்

லஞ்சமதை நியாயப்படுத்துகிறோம்
நம்பங்கெது எண்ணுகிறோம்

வஞ்சங்கள் நெஞ்சிலணிந்தோம்
பணமொன்றே வாழ்வென்றோம்

பெண்ணுக்குமிங்கே விலைதான்
மண்ணுக்குமிங்கே கொலைதான்

உயிருக்கு விலையில்லை பலர்
வீதிவாழ் சொறிநாய்களாய்

குப்பையிலேக் குழந்தைகள்
கோபுரத்தின் களவுகளாய்

பாதையெலாம் குப்பைகள்
பரவுதிங்கே தொற்றுநோய்

ஆள்வாரும் சரியில்லையிங்கே
ஆக்குவாரிலும் நேர்மையில்லை

அறிக்கைப்போர் நடக்கிறது
மாறிமாறி சேரிறைத்து

ஜனங்களெங்கேத் தேடுகிறேன்
விசிலடிக்கப் போனார்களாம்!

49 comments:

 1. கவிதை அருமை+
  //இம்சிக்கத் துணிந்துவிட்டதால்
  இயற்கையும் மிஞ்சுவதில்லை//
  என்னை மிகவும் கவர்ந்தவை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. அனல் பறக்கிறது-உண்மை வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. தேடல் என்பதே சுகமானது சுவரஸ்யமானது
  வேண்டுமென்றே தொலைக்கிறேன் தேடுவதால் கிடைக்கும் இன்பத்திற்காக

  ReplyDelete
  Replies
  1. தேடல் என்பது சுகமானது தான்.

   Delete
 4. நாமெனும் நிலை மாறியிங்கே
  நானெனும் அகந்தை வாழ்கிறது

  இம்சிக்கத் துணிந்துவிட்டதால்
  இயற்கையும் மிஞ்சுவதில்லை

  இருளாளும் காலமிது துணை
  தீமையேயோடி வருகிறது

  அருமை வரிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. அடிக்கோடிட்டு சொல்ல வேண்டுமெனில் அனைத்து வரிகளையும் கூற வேண்டும் அக்கா ..
  (யாரெங்கே சசி டீச்சருக்கு ஒரு குண்டர் சட்டம் பார்சல், உண்மையை சொன்னால் அப்படிதானே நடக்குது )

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 6. இருளாளும் காலமிது - மின்வெட்டை இப்படி குத்திக் காட்டறீங்களோ. ஹி... ஹி... ஜனங்களெங்கே தேடுகிறேன், விசிலடிக்கப் போனார்களாம் என்று முடித்திருப்பது வெகு அருமை. மற்ற நல்ல வரிகளுக்கெல்லாம் சிற்ந்த முத்தாய்ப்பு. எனில் கவிதையின் சிறப்பை தனியாய்க் கூறவும் வேண்டுமோ தென்றல்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete

 7. //ஆள்வாரும் சரியில்லையிங்கே
  ஆக்குவாரிலும் நேர்மையில்லை//

  ஆம் அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் கூறி என்ன பயன்?
  ஏதாவது இளவசமாகக் கிடைக்கும் என்றால் முந்திக் கொள்கிறோம். கோவில்களில் சாதாரண வரிசையில் நிற்பது கூட முடியாது. சுயக்கட்டுப்பாடே இல்லாமல் சுயநலத்தால் அடித்துக் கொள்ளும் நாம் நம்மை ஆள்பவர் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது தவறு தானே!

  நல்ல கவிதை! வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் நன்றிங்க.

   Delete
 8. அறிக்கைப்போர் நடக்கிறது
  மாறிமாறி சேரிறைத்து//-உண்மை வரிகள்..

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 9. நடப்பு சரித்திரம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. நடக்கும் இங்கே அவலநிலை
  அருமையாக சொன்னீர்கள்
  வேதனையை மனதில் சுமந்து
  காசு வாங்கி ஓட்டு போட்ட
  மக்களும் எப்படி நியாயம்
  கேட்க யாரிடமும் முடியாதே...

  நமக்கென்ன கடமையென்று
  யாரும் இங்கு உணரலயே..
  காசு மட்டும் வாழ்க்கையென்று
  வாழ்ந்துவிட்டு நம்மக்களுக்கு
  இப்போது தான் தெளிவும்
  தெளிவான எண்ணமும் லேசாக
  எட்டித்தான் பார்க்கிறதிங்கே...

  நம் நாடு நம்மக்கள் அதற்காக
  பாடுபடுவோம் என்ற எண்ணமும்
  எப்போது யாருக்கு உதிக்குமோ
  அவரைத்தானே நாமும் தேடி
  காசு வாங்காம தேர்ந்தெடுத்தா
  இனியாவது மாறட்டுமே இந்த
  இருளிலிருந்து மீளட்டுமே....

  பாராட்டுக்கள் சசி கலா
  படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்
  மக்கள்தானே மாறவேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. இனியாவது மாறட்டுமே இந்த
   இருளிலிருந்து மீளட்டுமே...

   நம்பிக்கை தானே வாழ்க்கை.

   Delete
  2. நம்புவது நாம் தான்...
   நம்பிக்கையும் இருக்கிறது நம்மிடம்...
   அதை நிறைவேற்றுவதோ நம்மவர்களிடம் இருக்கிறதே....
   நம்முடைய எந்த முயற்சியும் செல்லுபடியாகாத நிலையில் நாம்....
   இதைத்தான் நம்முடைய தலைவிதி என்பதா சொல்லுங்களேன்.

   Delete
 11. ஆள்வாரும் சரியில்லையிங்கே
  ஆக்குவாரிலும் நேர்மையில்லை.

  தென்றல் இன்று புயலாகி இருக்கிறது.

  மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டாம் வரி சொல்லும் காரணம் தான் ஆள்வார் சரியில்லாமல் போக காரணம். ஆயிரத்திற்கும் குவார்ட்டருக்கும் விலை போன மந்தைகள் தானே நாமெல்லாம்.

  குறிப்பிட்டுச் சொன்னால் “இலவச” அடிமைகளாகி விட்டோம் நாம். மக்கள் மாறாமல் மக்களாட்சி மட்டும் எப்படி மாறிவிடும்? கட்சி மாற்றி ஓட்டு போட்டு காட்சிகளை மட்டும் மாற்றிப் பார்த்து பொங்கும் நாம் ஒரேயொரு “காந்தி சிரிக்கும் நோட்டை” கண்டதும் வாழ்நாள் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது போல் வாக்களித்து கோட்டைக்கு குதூகலமாய் அனுப்பி வைக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நம்பி பின் வெம்பி ஏமாறுவதே வழக்கமாகி விட்டதே.

   Delete
 12. காலமுனை வெல்லுமுன்னே நீ
  காலன் அவனை வெல்.

  என்றும் சொல்ல லாமோ ?

  நேற்றிட்ட நாற்று காற்றடித்துச் சென்றிடினும்
  இற்றைக்குமோர் பின்னூட்டம் இடு.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் ஐயா நன்றி.

   Delete
 13. லஞ்சமதை நியாயப்படுத்துகிறோம் நம்பங்கெது எண்ணுகிறோம் வஞ்சங்கள்..காலத்தின் கட்டாயம் சரியான வாதம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 14. அருமையான தேடல் கவிதை சசிகலா....
  என்ன...
  நாம் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 15. கடமையும் காசாகிவிட்டது அக்கா! யாரை குற்றம் சொல்வது???

  ReplyDelete
 16. தேடலுக்கு முடிவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 17. நியாயமான வேதனை கவிதையில் மிளிர்கிறது. அருமை!.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 18. இப்படி உண்மையெல்லாம் வெளியில சொல்லக்கூடாது...

  ReplyDelete
 19. விசிலடிக்கப் போனார்களாம்!//

  முத்தாய்ப்பு...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 20. நல்ல கவிதை. நியாயமான ஆதங்கம்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 21. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete

 22. வணக்கம்!

  தென்றல் வலையில் பூந்தாது
  சிக்கும் என்றே உள்வந்தேன்!
  இன்றென் நாட்டின் நிலைமையினை
  எரியும் நெருப்பாய்த் தந்துள்ளீா்!
  என்றென் நாடு மாறிடுமோ?
  ஏற்ற தாழ்வு நீங்கிடுமோ?
  அன்பின் தேடல் தொடா்ந்திட்டால்
  அகிலம் மணக்கும் பூக்காடே!

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் முதல் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 23. தென்றல் புயலானதோ?

  ReplyDelete
 24. இன்றைய அவலத்தை அப்பட்டமாகக் காட்டும் கவிதை

  ReplyDelete
 25. அன்பொன்றை மட்டுமே முன் வைக்கிற நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது நிறைய விஷயங்கள் சரியாகிப்போகின்றன.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி