Ads 468x60px

Tuesday, October 16, 2012

இருவரியில் ஒரு தேடல் !


காலமுனை வெல்லு முன் நற்செயலால்
காலத்தை நீ வெல்!

கற்றாழைக்கும் வாசமுண் டென்றறி யுனது
பிணி நீக்கும் மருந்தாகும்!

நாளை நமதில்லை யெதுசெய்வ தாயினும்
இன்றே நம்பிச் செய்!

முடியா தென்று நினைப்பர்தம் வாழ்வில்
முடிவ தெலாம் கனவுகளாய்!

முன்னுரை யெழுதுமுன் முடிவுரை எழுதுவான்
முகவுரைக் காண்ப தில்லை!

கேடில்லா நெஞ்சம் கொண்டோ ரென்றும்
கேள்வியாய் நிற்ப தில்லை!

கொதிக்கு மெண்ணையில் கைவிட்டாற் போல்
அழவைக்கு மன்பின் பிரிவும்!

போனதெல்லா மென்று இருப்பதையு மிழப்பின்
காலத்தின் கைதி யாவோம்!

18 comments:

 1. சசிக்குறள்! இரண்டே வரிகள்ல நல்ல கருத்துக்களைச் சொன்ன விதம் வெகு அழகு. சொற்களை இடைவெளி விட்டுப் பிரித்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் தென்றல். நன்று.

  ReplyDelete
 2. ஆம் பால கணேஷ் ஐயா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.
  நல்ல கருத்துக்கள். குறளைத் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. க்டைசி ஈரடி ஒன்றே என்னைக்
  கவர்ந்த ஈரடி எனச்
  சொல்லிப்போயின்
  சுவையுமுண்டோ ?

  எதிரதாக்கும் அறிவ்னார்க்கில்லை
  அதிர வருவதோர் நோய்

  எனும் வாய்மொழிக்கேற்ப,

  எந்த பிரச்னையையும் அறிவு பூர்வமாக அணுகி
  என்ன இனி செய்ய வேண்டுமென
  நினைப்பவள்
  நிச்சயம்
  நிம்மதி பெறுவாள் வெற்றிக் கனியெனும்
  வெகுமதியும் பெறுவாள்.

  சுப்பு ரத்தினம்.

  பின் குறிப்பு: அப்பாடா ! வானத்து நிலவு பூமிக்குள் வந்துவிட்டது.

  ReplyDelete
 4. ரெண்டு வரிகளில் நெறைய விடயங்களை தேட வச்சுட்டீங்களே

  ReplyDelete
 5. ஆஹா... அருமை... அதுவும் குறள் போல் எழு சொற்களில்... இது போல் தொடரவும்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 6. குரளரசி ஆன அக்காவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சிறப்பாயிருக்கு சசியின் ‘குறள்’.

  ReplyDelete
 8. ஐயோ அனைத்துக் சூப்பர்
  ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை இரண்டு வரிகளுக்குள் அடக்கிவிட்டீர்கள்

  ReplyDelete
 9. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்! வரிகள் அருமை! தொடர்க!

  ReplyDelete
 10. ம்...புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. இரு வரி கவிதை அருமை!.

  ReplyDelete
 12. இரு வரியில் சொல்லிச் சென்ற கருத்துகள் அருமை... தொடரட்டும்....

  ReplyDelete
 13. இருவரியில் ஒரு தேடல்! சித்தர்களின் சித்தாந்தம் போல் தெரிந்தது.

  காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
  பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
  உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
  குற்றாலத் தானையே கூறு ! - பட்டினத்தார்  ReplyDelete
 14. இருவரியில் ஓர் அழகான தேடல்...

  ReplyDelete
 15. வணக்கம்
  கவிதை மிக அழகாக உள்ளது கருத்துக்கள் பலரை சிந்திக்கவைக்கும்,நல்ல கவிதையை தந்துள்ளிர்கள் இன்று உங்களின் பதிவு வலைச்சரம் கதம்பத்தில் பதிவிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி