Ads 468x60px

Thursday, October 11, 2012

துளித் துளியாய்...!

                                                 
                                              கொஞ்சல் பேச்சில்
                                              கெஞ்சலில் நிற்கும்
                                               வெட்கம்.
                                                


குளிரெடுத்தும்
சிலிர்க்காத உடம்பு
உன் குரல் கேட்டு
சிலிர்க்கிறதே

பேனா எழுதும் 
வார்த்தைகளை கூட
பேதை என்னால்
பேச முடிவதில்லை.


எல்லாக் கனவுமே
நிறைவேறியதாய் 
நினைவேயில்லைதான்
உன்னை பார்க்கும் போதும்.

கண்ணாடி முன்பு
நின்று விடாதே
காட்டிக்கொடுத்துவிடும்
உன்னில் எனை.
--திரைச்சீலை கூட
தினுசு தினுசாய் உடுத்துகிறது
எனை மட்டும் ஏன்
வெட்க ஆடை மட்டுமே
உடுத்தச்செய்கிறாய்.


50 comments:

 1. குட்டிக்கவிதைகள் சிறப்பு..

  ReplyDelete
 2. முதலும் கடைசியும் வெகு அருமை. மற்றவை குறை ஒன்றுமில்லை ரகம். நன்று.

  ReplyDelete
  Replies
  1. முதலும் கடைசியுமா சொல்றேன் அப்படினு திட்ற மாதிரி இருக்குங்க (சும்மா)

   Delete
 3. கண்ணாடி முன்பு
  நின்று விடாதே
  காட்டிக்கொடுத்துவிடும்
  உன்னில் எனை.

  குளிரெடுத்தும்
  சிலிர்க்காத உடம்பு
  உன் குரல் கேட்டு
  சிலிர்க்கிறதே

  இந்த இரண்டும் ரொம்ப அழகு

  மகிழ்கிறேன் தங்கையே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா.

   Delete
 4. பேனா எழுதும்
  வார்த்தைகளை கூட
  பேதை என்னால்
  பேச முடிவதில்லை.

  அழகு..மற்ற கவிதைகளும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. கடைசி கவிதை சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. ம்ம்ம் ..ஒவ்வொன்றும் அருமை சகோ

  ReplyDelete
 7. முதலிரண்டை மிகவும் இரசித்தேன்!
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. அருமை ,தங்களின் புதுத்திறனை தனித்துவம் காட்டி விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. துளித்துளியாய் எனை நனைத்த கவிதைத்தூறல்...

  1) வெட்கத்தை வரவேற்க கெஞ்சலால் மட்டுமே முடியும்.

  2) குளிர் எல்லோருக்கும் பொது - உன் குரலோ எனக்கு மட்டுமல்லவா...

  3) பேசாத வார்த்தையும் எழுத்தில் அரங்கேற்றமாகிவிடும்...

  4) நிறைவேறினால் மீண்டும் கனவு வாராதே என்ற பயத்தினால்...

  5) நீயும் ஒருவகை இச்சாதாரி பாம்பு தானோ...

  6) எனக்கு பிடித்த விஷயத்தை எப்படி அப்பட்டமாக சொல்வேன்....

  ஆறும் அசத்தலான அருமையானவைகள். பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு.. எண்ணிக்கையில் மேலும் வளர...  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. கண்ணாடி முன்பு
  நின்று விடாதே
  காட்டிக்கொடுத்துவிடும்
  உன்னில் எனை.
  >>>
  உனக்கு பதில் அண்ணாவை காட்டுறதாலதான் உன் வீட்டு கண்ணாடி இன்னும் உடையாம இருக்கு

  ReplyDelete
  Replies
  1. அப்படியா நாத்தனாரே.

   Delete
 11. அனைத்தும் நல்ல வரிகள்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 12. நச்னு
  இருக்கு
  நாலுவரி
  கவித

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. நச்னு
  இருக்கு
  நாலுவரி
  கவித

  ReplyDelete
 14. அனைத்தையும் ரசித்தேன்...

  முக்கியமாக

  /// கண்ணாடி முன்பு
  நின்று விடாதே
  காட்டிக்கொடுத்துவிடும்
  உன்னில் எனை... ///

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 15. கொஞ்சிப்பேசுவதும், பேசத்தவிர்த்தால் கெஞ்சுவதும்.... வெட்கத்தை விடச்செய்யாமல் நாணத்தைப்போர்த்தி இருக்கும் என்று சொன்ன கவிதை வரிகள் அழகு....

  குரல் கேட்டு சிலிர்க்கிறது என்றால் காதலில் இது சகஜமப்பா என்று சொல்லத்தோன்றுகிறது.. அழகிய மெல்லிய காதல் இழையோடும் வரிகள்...

  நேரில் கண்டால் பார்வை தரை பார்ப்பதும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொள்வதும் உடல் நடுங்குவதும்.... அதே கடிதத்தில் எழுதும்போது பத்தி பத்தியாக பேப்பர் பேப்பராக எழுதி காதலை தெரிவிக்க சிரமம் இருப்பதில்லை.. வெட்கம் தான் காரணமாக இருக்குமோ?

  கனவுகளுக்கும் முடிவில்லை.... கற்பனைகளுக்கும் முடிவில்லை... காதலுக்கும் முடிவில்லை என்று சொல்லவைத்த வரிகள் இந்த கவிதைவரிகள்...

  கண்ணாடிக்கு அத்தனை பவர் இருக்காப்பா? மனதில் இருக்கும் நேசத்துக்குரியவனை காட்டிக்கொடுத்துவிடும் அளவுக்கு? அழகு....

  வெட்கப்போர்வையில் காதல் தத்தளிப்பதும்....
  காதலில் வெட்கம் தன்னைப்போர்த்திக்கொள்வதும்....
  கவிதை வரிகளில் அழகு கொஞ்சுகிறது...
  காதலில் வெட்கம் மிஞ்சுகிறது.....

  அழகு அழகு சசி... கவிதை முத்துக்கள் அத்தனையும் அழகு....

  அன்புவாழ்த்துகள்பா....


  ReplyDelete
  Replies
  1. நான் வேற விளக்கம் கொடுக்க இருக்கா?..!! .எங்க அக்கா மஞ்சுபாஷினி
   இவர்களைப் போல் கருத்திட்டு பிறரை ஊக்கிவிக்கும் யாரையும்
   நான் அதிகம் காணவில்லை !!!!!.....கவிதை வடித்த உங்களுக்கும்
   ஆழமான கருத்துக்களை அழகாய்ச் சொல்லிச் சென்ற சகோதரிக்கும் .
   வாழ்த்துக்கள் .கவிதை அருமை !...மேலும் மேலும் வெக்கம் தொடரட்டும்
   சகோதரி :))))

   Delete
  2. இரண்டு அக்காக்களின் கருத்துக்களுமே எனை விழி அகல மெய்சிலிர்க்க வைத்தன நன்றி அக்காக்களே.

   Delete
 16. பேனா எழுதும்
  வார்த்தைகளை கூட
  பேதை என்னால்
  பேச முடிவதில்லை.

  அருமை அருமை...
  அனைத்துக் கவிதைகளும் சூப்பர் சசிகலா.

  ReplyDelete
 17. துளித்துளியாய் மழைத்துளிபோல்
  வார்தையழகு கோர்தநேர்த்தியழகு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 18. அருமையான கவிதை வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 19. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

   Delete
 20. அருமையான கவிதை வரிகள்! இதற்க்காவே இன்னொருமுறை பிறந்து யாரவையாது காதலிக்கனும் போல இருக்கு...ஹூம் ஏற்கனவே காதலித்து கல்யாணம் பண்ணிவிட்டதால் இந்த பிறவியில் யாரையும் காதலிக்க முடியாது அப்படி செய்தால் என் உயிருக்கு உத்தர்வாதம் இல்லை என்று மிரட்டல்வருகிறது

  ReplyDelete
  Replies
  1. மிரட்டலோட விட்டாங்களே சந்தோஷப்படுங்க.

   Delete
 21. சின்ன கவிதைகளுக்கு வந்து ஒரு ராஜ்ஜியம் பண்ணுங்க அக்கா ...
  அட்டகாசமா இருக்கு ... இன்னும் முயலுங்க ...

  ReplyDelete
 22. ;
  துளித் துளியாய் சொட்டிய அமுதத் தேன்துளிகள் அனைத்தும்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

   Delete
 23. கையடக்கமாய், கருத்தான குறுங்கவிதைகள்! அருமை!

  ReplyDelete
 24. குட்டித்தனமாக அருமையான கவிதைகள் §

  ReplyDelete
 25. உங்களின் குறும்கவிதைகள் ரசித்து படித்தேன்... அருமை சகோ!

  ReplyDelete
 26. இதமான தென்றலாய் சில கவிகள்
  ஒவ்வொன்றும் அழகு

  ReplyDelete
 27. படங்களும் அதற்கேற்ற கவிதைகளும் மிக அழகு சகோ. பாராட்டுகள்.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி