Ads 468x60px

Saturday, September 29, 2012

அலமுவும் சசி டீச்சரும் !சசி : மாமி, மாமி...!

அலமு : வந்துட்டேன்டிம்மா...

சசி : எப்படி மாமி பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு காமெடி மாதிரியா வந்திங்க... எங்க முகத்தில் கருப்பு பவுடர காணோம்?

அலமு : ஏன்டிம்மா... என்னடி உனக்கு என் மேல அம்புட்டு கோபம்?

சசி : ஏன் மாமி, சும்மா கிண்டல் பண்ணக் கூடாதா?

அலமு : உனக்கு என்னடிம்மா கிண்டலும் பண்ணுவ... நான் கேட்டதுக்கு தான் சொல்லி தர மாட்டேன்ற. நீயும் இத்தன நாளா வீட்ல இருந்தயா... எனக்கு கொஞ்சம் பொழுது போச்சி! இப்ப வேலைக்கு கிளம்பிடுவ. எனக்கும் நீ மதுமதி, கணேஷ், ராஜி-யோடல்லாம் பேசற மாதிரி சொல்லி தர சொன்னேனே... என்னடி ஆச்சி?

சசி : ஆமா மாமி, மறந்துடேன். போயும் போயும் என்னைய போய் கேட்டிங்களே... என்னத்த சொல்ல... சரி, மொத்தல்ல ஐடி ஓபன் பண்ணிங்களா?

அலமு : என்னடிம்மா இதுக்குமா ரேசன் கார்டு ஓட்டர் ஐடி எல்லாம் தரணும்?

சசி : அஹா! அஹா! அது இல்ல மாமி... இங்க ஜிமெயில், யாகு அப்படி மெயில் ஐடி ஓபன் பண்ணனும் மாமி!

அலமு : சரி, பிறகு என்ன பண்ணனும்? நீ கவிதை சொல்றியே... அது மாதிரி நானும் சொல்ல முடியுமாடி?

சசி : சுத்தம்! எனக்குச் சொல்லித் தரவே மகேந்திரன் அண்ணா, மதுமதி, கணேஷ், பிரகாஷ்... இவங்க எல்லாம் என்ன பாடு பட்டாங்க எனக்கு தான் தெரியும்.

அலமு : அது என்னடி அவ்ளோ கஷ்டமாவா இருக்கும்?

சசி : ஆமா மாமி, அதுக்கெல்லாம் நிறைய படிச்சி இருக்கணும்! (இப்படியாவது சொல்லி தப்பிக்கலாம்.)

அலமு : சரி அத என் பேரன் ஃப்ரான்ஸ்ல இருந்து வந்த பிறகு பார்த்துக்கிறேன் . இப்ப என் பேரனோட பேசறதுக்கு சொல்லித் தா.

சசி : சரி மாமி, முதல்ல உங்களுக்கு முகநூல் ஐடி ஓபன் பண்ணி தரேன். அதுல பேசுங்க சரியா.

அலமு : தைக்கற நூல் தெரியும். அதென்னடிம்மா முகநூல்?

சசி : ஐயோ... மாமி... ஃபேஸ்புக்னு ஒண்ணு இருக்கு. அதத்தான் தமிழ்ல சொன்னேன். அது மூலமா பேரன்கூட நீங்க பேசலாம்.

அலமு : சரிடி மா ஒரு தடவ சொல்லிக்கொடு .

சசி : முகநூல் பக்கத்தில் உங்களுக்குனு கொடுத்து இருக்கிற ஐடி, பாஸ் வேர்ட் கொடுத்து உள்ள போங்க...

அலமு : என்னடிம்மா... அது என்ன இத்தூண்டு சின்ன பொட்டி மாதிரி இருக்கு? அதுல போய் உள்ள போக சொல்ற... சரி, வலது கால வச்சி மொதல்ல போகவா?

சசி : அஹா! அஹா! மாமி, அது மாதிரி எதுவும் செய்து வக்காதிங்க வெடிச்சிட போகுது.


            தொடரும் என்றால் தொடராது
             தொடராதென்றால் தொடர்ந்து விடும்.

                                                                                     

33 comments:

 1. ஐயோ பாவம் அலமு மாமி... நல்ல டீச்சரைப் பிடிச்சாங்கப்பா. கவிதை எப்படி எழுதறதுன்னு சசிட்ட ட்யூஷன் எடுத்தாலாவது கொஞ்சம் தேறலாம். இதுல... ஹி.... ஹி...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு எல்லாம் பொறாம பா ஒரு டீச்சரா சசி இருந்தா பொறுக்காதே.

   Delete
 2. சசியிடம் சிக்கிய அலமு மாமி இன்னும் என்னென்னத்தையெல்லாம் அனுபவிக்க இருக்காங்களோ?

  ஆண்டவா, அலமு மாமிய மட்டும் காப்பாத்துடாப்பா.

  (நல்ல முயற்சி சசி.)

  ReplyDelete
  Replies
  1. என்னா ஒரு நல்ல எண்ணம் ம்ம் நடக்கட்டும்.

   Delete
 3. ஆஹா..அலமு மாமி கடைசி வரைக்கும் தன் பேரனோட பேசப்போறதில்லேன்னு நினைக்கிறேன்...
  மாமி வலது கால வச்சு உள்ள போயி எப்படின்னு தோனல எனக்கு.. பேரனோட நெரிலே பேசினால்தான்..
  அது சரி சசி உங்களுக்கு ஓய்வு தானே மாமியை வரச்சொல்லி நேரிலேயே கத்துக்கொடுங்களேன்...
  அப்பத்தான் சசி கலா நீங்கள் சொன்னது...அதாவது,

  தொடரும் அப்போதுதான் தொடரும்
  இல்லையேல் தொடராமலே முடிந்துவிடும்

  பாவம் சசி அந்த மாமிக்கு நீங்க எழுதுற மாதிரி
  கொஞ்ச சொல்லித்தான் கொடுங்களேன்... மாமி ரொம்ப நல்லவங்க மாதிரி இருக்காங்க...எத சொன்னாலும் நம்புவாங்க போலிருக்கு..கொஞ்சம் மனசு வையுங்களேன்.. அப்பத்தான் உங்ககிட்டேயாவது பேசுவாங்கள்ள வேலைய முடிச்சு சும்மா இருக்கும்போது...

  ReplyDelete
  Replies
  1. ஏன் நான் நல்லாயிருக்கிறத பிடிக்கவில்லையா உங்களுக்கு ?

   Delete
  2. ஏன் இப்படி சொல்றீங்க..
   மாமி ஒங்கள ஓவர் டேக் பண்ணிருவாங்கன்னு பயமா சசி கலா....

   Delete
 4. ம்ம்ம் .. ம்(;
  சகோ சசியும் அலமு மாமி
  நல்ல கலட்டதாங்க போங்க ஹ ஹ ஹ

  நல்ல முயற்சி சகோ ம்ம்ம் .. அருமை
  மிகவும் ரசித்தேன்

  பாவம் அந்த அலமு மாமி ம்(:

  ReplyDelete
  Replies
  1. இது என்னங்க சசி பாவம்னு யாரும் சொல்ல மாட்றிங்க.

   Delete
  2. இது உங்களுக்கே ஓவரா தெரியலயா...
   உங்கள பாவமுன்னு சொன்னா உண்மையிலேயே
   பாவமுன்னு சொல்லவேண்டியவங்கள என்னன்னு சொல்றது....

   Delete
 5. //
  சொல்லித் தரவே மகேந்திரன் அண்ணா, மதுமதி, கணேஷ், பிரகாஷ்...
  //

  நல்ல குருப்பு.... புரியாத மாதிரி கவிதையும் கட்டுரையும் எழுதுரவங்கதான இவங்க.....

  இவங்க கிட்ட கத்துகிட்டுதான் நீங்களும் எனக்கு புரியாத மாதிரி கவிதை எல்லாம் எழுதுறீங்களா.....

  அப்ப கூட்டு சதிதான் நடக்குதுன்னு சொல்லுங்க.....

  ReplyDelete
  Replies
  1. நல்ல குருப்பு வாங்க எங்க குருப்புல சேர்ந்துடுங்க.

   Delete
 6. யார் அந்த அலமு மாமீ :-))))))))))))))

  ReplyDelete
 7. // என்னடிம்மா இதுக்குமா ரேசன் கார்டு ஓட்டர் ஐடி எல்லாம் தரணும்// ஹா ஹா ஹா

  நல்ல நகைச்சுவையா எழுதி இருக்கீங்க... இதே மாதிரி இன்னும் நிறைய எழுத முயற்சி பண்ணுங்க, சூப்பரா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. சகோ நீங்க மட்டும் பாராட்டி இருக்கிங்க இவங்களோட எல்லாம் சேராதிங்க .

   Delete
 8. மாணவர் வாத்தியாராக முடியுமா? முடியும் என்கிறார் தென்றல்,நல்ல முயற்சி பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஆக முடியாதா ?

   Delete
 9. தென்றல் புயலா மாறலாம்.டீச்சரா மாறிடிச்சே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாள் டீச்சரா இருந்திடுறேனே.

   Delete
  2. யார் யாருக்கோ என்னென்னவோ ஆசை வருது...
   ஊம்..உங்களுக்கு டீச்சரா இருக்க ஆசை...சரி இருந்துட்டு போங்க.. மாமிய அதட்டாம சொல்லி கொடுங்க...ஏன்னா மாமி வீட்ல கூட மாமாவே பயப்படுவாராம் மாமிய பாத்தா....கேள்விபட்டேன் அதனால தான் சொல்லிடலாமேன்னு..

   Delete
 10. இதுவும் நல்லாத்தான் இருக்கு..நடத்துங்க ..நடத்துங்க..

  ReplyDelete
 11. ஆமா மாமி, அதுக்கெல்லாம் நிறைய படிச்சி இருக்கணும்! (இப்படியாவது சொல்லி தப்பிக்கலாம்.)

  இதுக்கு பேர் தான் பில்டப்

  ReplyDelete
 12. தொடரும் என்றால் தொடராது
  தொடராதென்றால் தொடர்ந்து விடும்.

  தொடரட்டும்

  ReplyDelete
 13. தொடரும் என்றால் தொடராது
  தொடராதென்றால் தொடர்ந்து விடும்./ம்ம் நல்ல தத்துவம் !

  ReplyDelete
 14. தொடரானது தொடரட்டும்!

  ReplyDelete
 15. நல்லா இருக்கு... தொடருங்க...

  ReplyDelete
 16. சசி, முகநூல் பக்கம் போய் எனக்கும் பழக்கம் இல்லை. உங்க தயவால் அலமு மாமியோடு சேர்ந்து நானும் கத்துக்கறேன். சொல்லித்தாங்க. குருதட்சணையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். சரிதானே?

  ReplyDelete
 17. வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச ஃபேஸ்புக் வேணும், அவன் வெச்ச பேர் வேணாமா? ஹா ஹா நல்ல வெக்குறீங்கப்பா பேரு. அப்படியே ஆர்குட்,ஸ்கைப்க்குலாம் ஒரு பேர் வெச்சிடு சசி.

  ReplyDelete
 18. சூப்பர்
  தையல் நூல் மேட்டர் நல்ல சிந்தனை
  தொடருங்கள் ஆமா கடைசியில தொடருவன் என்றுதானே சொன்னீங்க...:(
  நாம கொஞ்சம் டியூப்லைட்டு அதுதான்

  ReplyDelete
 19. அலமு மாமி உங்களுக்கு
  ஆட்சேபணை இல்லையென்றால்
  இன்றைக்கே
  முதல் வகுப்பைத் துவங்கலாமென்று சொல்லி,
  தேமா, புளிமா என்றால் என்னச் சொல்லுங்கள்.

  அடடா ! உப்புமா பண்ணிவைக்கச்சொன்னாரே !
  மறந்து போயிட்டேனே ! என்று
  ஓடிப்போய்விடுவார்.

  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
 20. எளிமையாக இணையம் பற்றி விளக்கம்! நன்றி!

  ReplyDelete
 21. நான் காவியம் படைக்க வேண்டும் டீச்சர் சீக்கிரம் எனக்கு கவிதை எழுத சொல்லி தாருங்களேன்.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி