Ads 468x60px

Wednesday, August 8, 2012

தாய்மை !


பூமாதேவி வடிவெடுத்து மண்ணாய் உருமாறி,
உதிரும் விதைக்கெல்லாம் உயிர் கொடுக்கும்-தாய்மை!
கடலாகி வானாகி வாழும் உயிர்க்கெல்லாம்,
காவலாகி வழியாகி ஒளியுமாகி காக்கும்-தாய்மை!

மொட்டாய் மலராய் காயாய்க் கனியாய்,
விதையாய் செடியாய் மரமாய் வேராய்வாழும்-தாய்மை!
கல்லுக்குள் வாழும் தேரைபோல் கருவறையில்,
மீனாய் நீந்திய உருவில்லா நமக்கு உயிரீந்த-தாய்மை!

சொல்லின்றிப் பொருளின்றி பசித்தழுத போது,
கண்ணே மணியே எனக்கொஞ்சி உதிரமீந்ததும்-தாய்மை!
துன்பமெல்லாம் தான்சுமந்து இன்பம் நமதாக்கி,
இனிமையெனும் அறிவூட்டி இதயமாய் வளர்த்ததும்-தாய்மை!

வடிவங்கள் வேறுவேறு வாழ்வியலும் அப்படியே,
அட்டையாய் உறிஞ்சிடினும் அன்பாய்க் கொடுப்பது-தாய்மை!
''தாய்-மெய்"மற்றெல்லாம் பொய்யாகக் கூடும்,
இதுண்மை என்பதன் உள்மறைப் பொருள்தானோ-தாய்மை!

முகநூளில் தமிழ்ச் சங்கம் எனும் குழுமத்தில் வைத்த போட்டிக் கவிதைகளில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.

42 comments:

 1. உருக வைத்த வரிகள் .. நான் நெடு நேரம் ரசித்தேன் .. என் நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. நல்ல வரிகள்... தாய்மையைப் போற்றும் சிறப்பான கவிதை...

  நன்றி… பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்... (TM 3)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. தாய்மையின் அருமை பற்றி தங்களின் கருத்து பாராட்டத்தக்கது சசி... முதலும் கடைசியுமாய் இல்லாமல் வாழும் காலம் வரை உடனிருந்து நம்மை காக்கும் ஒரு ஒப்பற்ற கண்கண்ட தெய்வம் அல்லவா இந்த தாய்மை... தாய்மையை எப்படி புகழ்ந்தாலும் அதனை யாராலும் முழுமையாக சொல்லால் கவியால் நிறைவு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் மெய்யான உண்மை..

  நிலையில்லா உலகில் உள்ள வேதனை அனைத்தையும் தான் வாங்கிக்கொண்டு இன்பமொன்றையே தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஒப்பற்ற உறவால் ஈடு சொல்ல முடியாத அதன் தெய்வமே வணங்கும் தாய்மை அல்லவா... தாய்மைக்கு மெருகூட்டிய சசி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துரையும் தங்கள் அன்பான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. வடிவங்கள் வேறுவேறு வாழ்வியலும் அப்படியே,
  அட்டையாய் உறிஞ்சிடினும் அன்பாய்க் கொடுப்பது-தாய்மை!
  ''தாய்-மெய்"மற்றெல்லாம் பொய்யாகக் கூடும்,
  இதுண்மை என்பதன் உள்மறைப் பொருள்தானோ-தாய்மை!//
  தாய்மையைப் போற்றும் கவிதை அருமை.
  இராண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. தாய்மை போற்றும் அருமையான கவிக்கும்
  பரிசு பெற்றதற்கும் வாழ்த்துக்கள் சசி !

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. அருமையான கவிதை அதுதான் பரிசு பெற தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் (6)

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. தாய்மை சிறப்பு வரிகள். பரிசிற்குமாக
  இரட்டை நல்வாழ்த்து.
  வளர்க!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. சகோவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

  ReplyDelete
 9. உலகம் முழுமைக்கும் பொதுவான மொழி தாய்மை. அந்தத் தாய்மையைப் பாடிய அற்புதமான கவிதை பரிசு பெறாவிட்டால்தான் ஆச்சரியம். பரிசினைப் பெற்ற தென்றலுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நட்பின் வாழ்த்து வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி வசந்தமே.

   Delete
 10. யக்கோவ்... பரிசு கிடைச்சதுக்கு முதல்ல ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ்த்திக்கிறேன். அம்மான்னா மனசே நெறைஞ்சு போவும்ல. இந்தக் கவிதையப் படிச்சப்பவும் அப்டித்தான் மனசே சந்தோஷத்துல ரொம்பி வழியுதுக்கோவ்... சூப்பரு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தங்காய் நலமா?

   Delete
 11. தாய்மையின் தன்னலமற்றத் தன்மையைக் கவிபாடிய வரிகளில் மனம் பறிகொடுத்தேன். காக்கை சிறகினிலும் கண்ணனைக் கண்ட பாரதி போல், தாய்மை என்னும் உன்னத உணர்வை பார்க்கும் அனைத்திலும் கண்டுணர்ந்த தன்மையை வியந்து பாராட்டுகிறேன். பரிசு பெற்றமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அழகிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 12. உலக உயிர்களின் உயிர் நாடி...


  அழகிய கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. ///முகநூளில் தமிழ்ச் சங்கம் எனும் குழுமத்தில் வைத்த போட்டிக் கவிதைகளில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.//

  வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோதரி

  ReplyDelete
 14. நெகிழ செய்த கவிதை..
  பாராட்டுகள்..

  ReplyDelete
 15. ''தாய்-மெய்"மற்றெல்லாம் பொய்யாகக் கூடும்,
  இதுண்மை என்பதன் உள்மறைப் பொருள்தானோ-தாய்மை!
  அழகான வரிகளில் தாய்மையை அழகா சொல்லீட்டீங்க சகோ..
  இக் கவிதை பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி..! இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சகோ.

  ReplyDelete
 16. தாயைப்பற்றியான அற்புதமான வரிகள்...

  ReplyDelete
 17. பரிசு பெற்ற கவிக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கள்

  // தாய்-மெய்// அற்புதமான வரிகள்... உங்கள் எழுத்தின் திறன் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் வாங்கிய பரிசே சாட்சி சொல்லும்

  ReplyDelete
 18. பூமாதேவி வடிவெடுத்து மண்ணாய் உருமாறி,
  உதிரும் விதைக்கெல்லாம் உயிர் கொடுக்கும்-தாய்மை!“

  என்ன ஓர் அற்புதமான கற்பனை...!!
  வியக்கிறேன் சசிகலா.
  உங்களின் ஒவ்வொரு வரியும் மனத்தைத் தொட்டது.
  வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 19. தாய்மை
  ஆழ் பொருளில் சொல்லப் பட்டு இருக்கிறது
  கவிதை நெகிழ வைத்து விட்டது சகோ

  பரிசுக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 20. தாய்மை! பெண்மைக்கு சிறப்பு.... தாய்மை இறைவனின் மறுபிரதி...
  சகோ! உங்களின் வரிகள் அருமை.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. தாய்மையின் உயர்வைப் பாடினீர்! எனவேதான் பரிசு தேடி வந்தது வாழ்த்துக்கள்! சா இராமாநுசம்

  ReplyDelete
 22. கவிதை எழுத ஆரம்பிச்சப்பவே நெறைய பேரு அம்மாவ பத்தி எழுதுங்கன்னு சொல்லுவாங்க... ஆனா எனக்கு இதே மாதிரி எழுத வராது.. ஒன்னே ஒன்னு மட்டும் எழுதுனேன்...
  முச்சத நாட்கள் கருவில்
  களிப்பாய் சுமந்து
  நிமிடங்கள் சில மூச்சடக்கி
  கிடைத்த முத்தாய்
  எனை வெளிக்கொணர்ந்து
  கருப்பாய் இருந்தும்
  அழகனாய் அன்று ஆராதித்தாள் !

  பிறர் கண்பட்டுவிடாமல் மையிட்டு
  பிஞ்சு பாதம்தனை தரையில் ஊன்றவும்
  கீழே சிந்தாமல் சோறுண்ணவும்
  தானாய் தலைவாரிக் கொள்ளவும்
  மாற்றிக்கொள்ளாமல் காலணி அணியவும்
  வலதுகை கொண்டு எழுதிடவும்
  கைக்குவித்து கடவுளை வணங்கவும்
  அழகு தமிழில் பேசிடவும்
  அக்கறையாய் கற்றுத்தந்து
  கரைசேர்ந்திட என்றோ ஒரு நாள்
  அனுப்பிவைத்தாள்...!

  நண்பரென பலர் கொண்டும்
  நாகரீக கவசத்தில் கேசம் களைத்தும்
  சிறிதாய் சில களவு கற்றும்
  பொய் நிறைய சொல்லியும்
  நரியென நயவஞ்சக பழியறிந்தும்
  நாத்திகனாய் நியாயம் உரைத்தும்
  வன்மையாய் பகை சில வென்றும்
  காமமேறியக் காதலொன்று செய்தும்
  அதனில் ஆறாத காயமொன்றும் கண்டும்
  கற்ற தமிழில் சகிக்காத வார்த்தை பல பேசியும்
  மறக்காமல் மதுவெனும் மருந்துண்டும்
  உலகத்தின் கறையனைத்தும்
  ஒருசேர சேர்த்துவந்து இன்று....

  'அம்மா'-என்று கதவைத் தட்டும்போது,
  'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..."
  என்றென் கன்னம் வருடி
  கலங்கிய மறுநொடியில்
  மீண்டும் அவள் மடியினில்
  மனதில் வெளுத்த,நிறத்தால் கருத்த
  அதே பழைய குழந்தையாகி போகிறேன்..!

  ReplyDelete
 23. வாழ்த்துகள்.. கவிதை அருமை..

  ReplyDelete
 24. உங்கள மாதிரி கவிதை நடையுடன் எழுத பழகனும்... வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
 25. தாய்மையின் வடிவங்களை சிறப்பாக எழுத்தாக்கி பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! சிறப்பான கவிதை!
  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 26. தாய்மையின் உயர்வு கூறும் சிறப்பான கவிதை

  ReplyDelete
 27. 'தாய்-மெய் தாய்மைக்கு புதுமை விளக்கம்

  ReplyDelete
 28. அருமையான கவிதை அக்கா! அவளின்றி இங்கு வேரென்ன என்பது போல்! மிகவும் ரசித்தேன்!

  ReplyDelete
 29. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சசி !

  ReplyDelete
 30. நல்ல வரிகள்.வாழ்த்துக்கள்.தாய்மைக்கு வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 31. அருமை! வாழ்த்துக்கள்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி