Ads 468x60px

Monday, August 6, 2012

புரியாத விசித்திரமாய் மானுடம்!


புவியென்ற அழகான வாடகைக் கூட்டின்
புரியாத விசித்திரமாய் மானுடம்!
புன்னகைப் பூவேந்திய வதனங்களோடு
பொய்தேடும் அவலங்கள்!

ஆசைசெல்லும் பாதையில்தானே உயிர்
ஜனனங்களின் விளைச்சல்கள்!
ஆவல்கொண்டவர் பார்வையில் உதிப்பதுவே
மின்னும் விடிவெள்ளிகள்!

பாசங்கொண்ட இதயங்களில் பதிவிருக்கும்
கொடிய மனோபாவங்கள்!
சுயம்வாழ விடும் மூச்சில் நஞ்சுகொஞ்சம்
நடமாடக் கண்டேன்!

மருந்தென்று அதையுரைத்து விருந்துவைத்து
அழைக்கின்ற நிலையுணர்ந்தேன்!
மறைத்துவைத்த உண்மைகள் சாட்சியோடு
சபைநடுவில் வருகையிலே!

மனக்கசப்பாய் அதுமாறி உறவை கொச்சையாக்கி
நிம்மதி பறிக்கக் கண்டேன்!
பார்வைகள் பட்டுப்போயின் பாசங்கள்
மனதில் வேஷங்களாய்!

நம்பிக்கைப் பொய்த்துப்போயின் வாழ்வில்
இல்லறமும் நல் அறமில்லை!
இதயத்தின் பார்வையில் இனிமை இல்லையெனில்
இறப்பது மனித நேயங்களே!

நாவில்வாழும் இனிமையும் அன்பும் மனிதர்
இதயத்தில் இருப்பதே நற்பண்பு!
கற்பொன்றும் உடலின் சொந்தமல்ல-அது
உள்ளத்தின் கண் அறிதல் நன்று!

34 comments:

 1. ம்ம்ம்.. உள்ளொன்று , உதட்டில் ஒன்று ..
  அவர்தம் பெயரே பிழைக்கத் தெரிந்த சாமார்த்தியசாலிகள் ..
  விரக்தி தோய்ந்த கவிதை ..... வேதனைப்படுத்துகிறது சசி !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ நம் கண் முன் வரும் காட்சிகளே வரிகளாக என்ன செய்ய.

   Delete
 2. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மானிடர் நிறைந்த அவனியில் தூய மாசற்ற உள்ளத்தை தேடுவது மிக அரிது..அழகு தமிழ் தங்கள் கவிதையில் அழகாக வெளிப்படுகிறது..அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. தேடவதிலேயே முடிந்து போகிறது வாழ்க்கை சகோ.

   Delete
 3. எத்தனை உருவங்கள் இந்த ஒரு சிறிய மனித முகத்தினிலே...
  உருவங்கள் மட்டும் அத்தனையல்ல..எண்ணங்களும் தான்...
  எண்ணங்களின் வெளிப்பாட்டை யாராலும் எளிதில் தெரிந்து புரிந்து
  கொள்வது ஆகாத ஒன்று என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சசி..
  உண்மைதான் எத்தனையோ எண்ணில்லா பேர்கள் இப்படி வாழ்க்கையில் வருத்தம் அடைந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

  தேர்ந்தெடுத்தவர் மீது நாம் அன்பு வைத்த பின்பு அவரின் நிலைகளையும் நாம் அறிந்தே இருக்கவேண்டும்...அதன் பிறகுதானே இருவரின் பரஸ்பர நிலையும் தெரியும். எங்கோ ஓரிரு ஆட்கள் தான் இப்படி இருப்பார்கள் மற்றவர்கள் எல்லாமே நம்முடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு நம்மை புரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். புல்லுருவிகள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும்.. ஏனைய அனைத்தும் நமக்கு பரமதிருப்தியே அளிக்கும்... நம்பிக்கை வேண்டும் முதலில் இருவருக்கும். அது எந்நிலையிலும் மாறாததாக இருக்கவேண்டும். அந்த ஒன்றுதான் நீடித்த ஒரு வாழ்வுபெறும்...

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. கற்பென்பது உள்ளத்தின் கண்ணே... மனிதர் தம் மனங்களில் இனிமையும் அன்பும் இருப்பதே நன்று. அருமையான கருத்துக்களை எளிமையான அழகான நடையில் சொன்ன நல்ல கவிதையை மிகமிக ரசித்தேன் தென்றல். எக்ஸலண்ட்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. //புவியென்ற அழகான வாடகைக் கூட்டின்// முதல் வரி அருமை கவிதை முழுவது சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. ம் (:
  யதார்த்தம்
  அழகான வரிகளில் சொல்லபட்டு இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 7. யதார்த்தத்தை அழகிய கவிநடையில் பொழிந்திருப்பது அருமை.சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 8. ''...நாவில்வாழும் இனிமையும் அன்பும் மனிதர்
  இதயத்தில் இருப்பதே நற்பண்பு!...''

  இப்படியில்லாதது தானே பெரும் குறையென்பதை அழகாகக் கூறப்பட்டுள்ளது சசி.
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. விசித்திர மானுடத்தினையும் அழகான கவிதையால் ரசிக்கவைத்துவிட்டீர்கள் சசிகலா. தெளிவான கருத்துகளால் ஆன தெள்ளிய தமிழ்க்கவிதைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 10. பார்வைகள் பட்டுப்போயின் பாசங்கள்
  மனதில் வேஷங்களாய்!

  ReplyDelete
 11. புவியென்ற அழகான வாடகைக் கூட்டின்
  புரியாத விசித்திரமாய் மானுடம்!
  புன்னகைப் பூவேந்திய வதனங்களோடு
  பொய்தேடும் அவலங்கள்!

  சொல்லாட்சி மிகமிக அருமை சசிகலா.
  நல்ல கருத்தான கவிதை. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 12. புரியாத மானுடம். இதில் புரிந்துகொண்ட உண்மையாய் உங்கள் இதயக் கவிதை // நாவில்வாழும் இனிமையும் அன்பும் மனிதர் இதயத்தில் இருப்பதே நற்பண்பு! //

  ReplyDelete
 13. நல்ல கவிதை மிக,,மிக.. ரசித்தேன்..

  ReplyDelete
 14. அருமையான வரிகள் அக்கா...

  ReplyDelete
 15. விலங்காய் மனிதன் சில சமயங்களில் விளங்குவது ஏன்? விளங்காப் புதிர்தான் சகோதரி. கவிதை மிக அழகு.

  ReplyDelete
 16. அருமை வரிகள்... ரசித்தேன்...
  என்ன தான் வாய் பேசினாலும், உண்மை முகத்தில் (கண்ணில்) தெரிந்து விடும்... அருமை... நன்றி சகோதரி…(TM. 6)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 17. நம்பிக்கை பொய்த்துப் போயின் வாழ்வில் இல்லறமும் நல்லறமில்லை!
  சிறப்பான வரிகள்! சிறந்த கவிதை! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  ReplyDelete
 18. //நம்பிக்கைப் பொய்த்துப்போயின் வாழ்வில்
  இல்லறமும் நல் அறமில்லை!//

  அஸ்திவாரமே ஆட்டங்கண்டால்,கட்டிடம் நிலைக்குமோ!
  அருமை

  ReplyDelete
 19. நல்லதொரு படைப்பு சகோ.....

  ReplyDelete
 20. ///நாவில்வாழும் இனிமையும் அன்பும் மனிதர்
  இதயத்தில் இருப்பதே நற்பண்பு!
  கற்பொன்றும் உடலின் சொந்தமல்ல-அது
  உள்ளத்தின் கண் அறிதல் நன்று!///

  அருமையான வரிகள் (TM 8)

  ReplyDelete
 21. unmai !

  azhakaana -
  aazhamaaana unarrvu!

  ReplyDelete
 22. மிகவும் எதார்த்தம் அக்கா! நாம் அறிந்துகொண்டவர்கள் என்று நினைத்திருந்தவர்களே சில நேரம் புரியாத புதிராய் எதிரில் எதிர்த்து நிற்கிறார்கள்!

  ReplyDelete
 23. //ஆசைசெல்லும் பாதையில்தானே உயிர்
  ஜனனங்களின் விளைச்சல்கள்!//

  //நம்பிக்கைப் பொய்த்துப்போயின் வாழ்வில்
  இல்லறமும் நல் அறமில்லை!//

  பௌத்த சமயத்தின் அடிப்படை கோட்ப்பாட்டை இரு வரிகளில் விளக்கி வீட்டீர்கள் ...

  //கற்பொன்றும் உடலின் சொந்தமல்ல-அது
  உள்ளத்தின் கண் அறிதல் நன்று!//

  பலரும் உணர வேண்டிய செய்தியை அருமையாக தந்துள்ளீர்கள் ...

  மிக மிக அருமையான ஆழமான கவிதை இது !

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி