Ads 468x60px

Saturday, August 4, 2012

வரமாய் உனைத்தந்து ...!


தாய் அவள் அரவணைப்பில்
தழைத்த என் உயிர்மூச்சு
தாயவள் போனபின்னும்...
தாயாய் எனை வாழவைத்து!

தானே முன் வந்து
வரமாய் உனைத்தந்து
வாழ்வாய் நிலைத்து விட்ட
என் தமிழே!

காலமென்ற தேடலில்
கண்டெடுத்த நல்முத்து
காவலென்றே எனைக் காத்து
இனிக்குமுந்தன் சொல்முத்து!

இருப்பதெல்லாம் அன்பென்றால்
இழப்பதென்னவோ வம்பு.

காப்பேன் எனக்கூறி
காத்திருப்பில் நானிருக்க
காலமது கழியுமுன்னே
கனிந்திடுமோ காதலது.

உனக்காக பேசிடுதே
உனைக் கண்டே உருகிடுதே
இனிக்குமுந்தன் செந்தமிழே.


வா என்றேன் வரவில்லை
தா என்றேன் தரவில்லை
போ என்றேன் போனதென்ன மாயமோ?

நான் என்ற கூட்டினிலே
தஞ்சமென நீயும் வந்தாய்
வரவென்றே அன்பு வைப்போம்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்.

வேண்டாம் என்று ஏதுமில்லை
வேண்டுவதெல்லாம் புவி நலமே!

கோடி கோயாய் சேர்த்தாலும்
கூட வருவதென்ன ஏதுமில்லையே.

சந்தோஷமாக வாழ
சட்டம் தேவையில்லை
சர்ச்சையும் தேவையில்லை
சந்நிதியாய் அன்பு போதும்.

43 comments:

 1. //கோடி கோயாய் சேர்த்தாலும்
  கூட வருவதென்ன ஏதுமில்லையே.

  சந்தோஷமாக வாழ
  சட்டம் தேவையில்லை
  சர்ச்சையும் தேவையில்லை
  சந்நிதியாய் அன்பு போதும்.//

  அருமையான வரிகள் சகோ. வாழ்த்துகள்.

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. சிறு, சிறு வரிகளால், சிந்தனையை தூண்டும் விதமாக அழகு கவிதைகள், அனைத்தும் அருமை.

  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி,

  வாழ்த்துகளும், நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்தும் வருகையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா.

   Delete
 3. அன்பே சிவம் என்பதை உணர்த்திய மகத்தான கவிதை. வார்த்தையாடல்கள் அருமை தென்றல். கோடி கோடியாய் சேர்த்தாலும் கூட வருவது எதுவுமில்லை என்பதை அனைவரும் உணர்ந்தால் மக்களிடையே என்றும் மகிழ்ச்சிதானே... நல்ல கவிதை வாசித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வான வார்த்தைகள் மனம் நிறைத்துப்போயின நன்றி வசந்தமே.

   Delete
 4. "கோடி கோயாய் சேர்த்தாலும்
  கூட வருவதென்ன ஏதுமில்லையே"/

  பிடித்த வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வருகை மிகவும் மகிழ்வளித்தது நன்றி சகோ.

   Delete
 5. ///சந்தோஷமாக வாழ
  சட்டம் தேவையில்லை
  சர்ச்சையும் தேவையில்லை
  சந்நிதியாய் அன்பு போதும்///

  அருமையான வரிகள் (TM 4)

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வருகை மிகவும் மகிழ்வளித்தது நன்றி சகோ.

   Delete
 6. //வேண்டாம் என்று ஏதுமில்லை
  வேண்டுவதெல்லாம் புவி நலமே!//
  நல்ல சிந்தனை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. குட்டி குட்டியாய் குறுங்கவிதைகள் மனசைப் பிடிச்சுட்டதுக்கா. அதிலயும் 7லருந்து 10 வரை சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. 6 லிருந்து 60 வரை மாதிரியா...

   நன்றிமா.

   Delete
 8. அனைத்திற்கும் அன்பு ஒன்றே ஆதாரம்...
  அந்த அன்பு இல்லாமல் ஏங்கி பைத்தியமாய்
  போனவர்கள் ஏராளம் உண்டிங்கே நானறிவேன்...
  என்பதைவிட இவ்வுலகம் அறியும் என்பதே உண்மை..
  எதனாலும் தீராது ஒருவரின் அன்புடன் கூடிய ஆதரவு...
  ஆதரவில்லா ஆட்களுக்கு தேவை காசுபணம் கிடையாது...
  அன்பான வார்த்தைக்கு ஈடாகாது எத்தனை கோடி ரூபாயும்...
  அன்பெனும் பேச்சில் தாணடா இவ்வுலகமே இயங்குது பாரடா...
  பட்டுத்தெரிந்தவனை கேளடா..சொல்லுவான் அவன் சோகக்கதையடா...

  எதிரிக்கும் வரக்கூடாது அன்பில்லா ஆதரிக்க யாருமில்லா ஒரு வாழ்வு...
  அப்பேற்பட்ட வாழ்வு என்பதோ பூமியில் இருக்கும் நரகமாகும்...
  வேண்டுமா அந்த நரக வாழ்க்கை உங்களுக்கு..முடிவு உங்கள் கையில்...
  அதனால் அன்பாக பழகுவோம்...ஆதரவாக பண்பாக பேசுவோம்...
  காசுபணம் என்பது நம்மால் தேடும் நிலையில்லா ஒன்று...
  அன்பு மட்டுமே பிறரால் நாம் பெறுவதும் நாம் கொடுப்பதும் ஆகும்...
  அன்பை கொடுத்து பெறுவதால் மட்டுமே அமைதியான வாழ்க்கை கிட்டும்...
  அன்பை பெறுவதற்கு யாதொரு கட்டுப்பாடும் இங்கில்லை..
  அழகாக சொன்ன சசி உங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்...
  அன்பை விதையுங்கள்...ஆதரவான உறவினை பெற்று இன்பமாக வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான கருத்துரை பதிவை விளக்கிச் சொல்லும் விதம் அழகு.

   Delete
 9. வா அப்படினா வருவதே இல்லை..
  தா அப்படினா தருவது இல்லை..
  போ அப்படின்னு சொல்லவும் முடியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ என்ன செய்வது.

   Delete
 10. அன்புதான் எல்லாம் சகோ
  அழகான உன்னத கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 11. அன்பை கொண்டு ஆயிரம் சாதிக்கலாம்.அன்பிருந்தால் அகிலமே காலடியில்..கோடி கோடியாய் சேர்த்தாலும் கூட வருவது எதுவும் இல்லை.உண்மையான வரிகள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பைக் கொடுத்து அன்பால் வெல்வோம் உண்மைதான் சகோ.

   Delete
 12. " அன்பே அனைத்தும் " என்பதை கவிதை மூலம் அழகாக சொன்னதற்கு நன்றி சகோ ! பாராட்டுக்கள்...
  (த.ம. 6)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. // சந்தோஷமாக வாழ
  சட்டம் தேவையில்லை
  சர்ச்சையும் தேவையில்லை
  சந்நிதியாய் அன்பு போதும். //

  உங்களின் வரிகள், உண்மையான வாழ்க்கைக்கு அன்பே போதும் என்பதனை உணர்த்தும் வரிகள். அன்பால் சாதிக்க வேண்டிய சில விஷயங்களை சிலர் சட்டத்தால் சாதிக்க நினைத்து கோர்ட் வரை சென்று, வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 14. அகம் நிறைந்த
  அன்பினால்
  அகிலமும் வசப்படும்
  அகந்தையும்
  ஆணவமும்
  அன்றே தோன்றி
  அன்றே அழிந்துவிடும்..
  கோடிகோடியாய் சேர்த்தாலும்
  கோடிக்கரைக்கு செல்கையில்
  துளிநீர் சிந்த
  ஒருவரும் இலரே..
  வாழும் நாட்களில்
  அன்பினைப் பகிர்ந்தால்
  வான்மழை பொழியுமே...
  கண்ணீர் அஞ்சலியாய்...

  அருமையான கவிதை தங்கை சசி..

  ReplyDelete
  Replies
  1. அழகான கவியால் அன்பாய் வருடும் வரிகள் அழகு அண்ணா.

   Delete
 15. தாய் உலகிலேயே மிகப்பெரிய பலசாலி

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 16. என் தாயின் கைப்பிடித்து நடக்கையில் யானை பலம் எனக்குள்:)

  ReplyDelete
 17. தன்னலமில்லா வாழ்வில்லை
  தமிழ்வளமின்றி கவியில்லை
  தரணிபோற்ற கவிதைதந்த
  தங்கக் கவியொளிக்கு எம்
  தலைவணங்கி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அன்பை சிறப்பிக்கும் அருமையான வரிகள்! அழகானகவிதை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 19. சந்தோஷமாக வாழ
  சட்டம் தேவையில்லை
  சர்ச்சையும் தேவையில்லை
  சந்நிதியாய் அன்பு போதும்//

  அன்பின் மகத்துவத்தை சொல்லும் கவிதை அழகு.
  அன்புதான் அனைத்தும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. இருப்பதெல்லாம் அன்பென்றால்
  இழப்பதென்னவோ வம்பு.

  தமிழால் அகம் நனைத்தீர்கள். தெள்ளத் தமிழில் இதமான அன்பை உணர முடிந்தது. தொடர வாழ்த்துக்கள்
  (த ம. 10)

  ReplyDelete
 21. அன்பு இதற்காக ஏங்கும் பல உருவங்களை பூமியில் உலாவ கண்டுள்ளேன்
  அன்புக்கு மிகப் பெரிய சக்தி இருப்பதாய் எனக்கு உணர்த்தியதும் அவைகள்தான்

  அழகான வரிகள்

  ReplyDelete
 22. அன்பே சிவம் என்பது போல்
  தமிழே சிவம் என்றே நான் புரிந்தேன்
  நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 23. சந்தோசத்தை தருவது மன எண்ணங்களே அதை மீறியதாய் ஒன்றுமில்லை.
  பணம்,பதவி அந்தஸ்த்து எல்லாம் உண்மையான சந்தோசத்தை தந்து விடுவது இல்லை,நிறைந்த கடை வீதியில் அவ்வளவு நடமாட்டங்களுக்கு மத்தியிலும்,
  சப்தங்களுக்கு இடையிலும் பூட்டியிருக்கிற கடையின் வாசல்படியில் துண்டை விரித்து தூங்கிற உழைப்பாளியின் நிம்மதி பெரும்பாலானோருக்குக்
  கிடைப்பதில்லை இங்கு.அதுவே அவர்களுக்கு உன்மையான சந்தோசமாய் ஆகிப்போகிறது.

  ReplyDelete
 24. அன்பு பற்றிய அழகிய கவிதை.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி