Ads 468x60px

Monday, August 27, 2012

அலமுவோடு ஓர் அலசல் !
அலமு : என்னடிமா நேத்து எத்தன மணிக்கு வந்த ஏன்டிமா டல்லா இருக்க.

சசி :  வாங்க மாமி நேத்து 7.30 க்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன் மாமி. விழா மிக மிக சிறப்பா நடந்துச்சி மாமி எல்லோரையும் இருந்து வழியனுப்பிட்டு வர முடியலைங்கிற சின்ன வருத்தம் தான் மாமி.

அலமு : சரிடி மா காலைல இருந்து என்ன நடந்துச்சி சொல்லு.

சசி :  எனக்கு புத்தகம் வீட்டுக்கு வரவே காலை 7 ஆகிடுச்சி மாமி அந்த பயம் நேரம் ஆக ஆக புத்தகம் வரமா போய்ட்டா என்ன பண்றது நிகழ்ச்சிக்கு போய் என்ன சொல்றதுனு. அதன் பிறகு விழாவுக்கு உள்ளே போகவும் தமிழ்த் தாய் வாழ்த்துடனே வாசலில் சீனு வரவேற்றார். மகேந்திரன் அண்ணா சிரிச்ச முகத்தோட விழா முகப்புள இருந்து வரவேற்றார்.

பெண் பதிவர்கள் ராஜி ,கோவை சரளா, அகிலா ,ஸாதிகா ,லஷ்மி அம்மா, ருக்மணியம்மா ,ரஞ்சனி நாரயணன், நாச்சியார் அம்மா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் மாமி. அன்பா பேசினாங்க.

அலமு : என்னடிமா இப்படி பண்ணிட்ட நீதானே முன்னாடி இருந்து எல்லோரையும் வரவேற்று இருக்கனும்.

சசி : ஆமா மாமி அதான் சொன்னேனே .மாமி ஆரணியில இருந்து ராஜி வந்திருந்தாங்க அவங்க பிள்ளைகளோட பார்க்க உண்மையிலேயே கணேஷ்யும் ராஜியும் அண்ணன் தங்கைகள் மாதிரியே இருந்தாங்க மாமி . நான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.

அலமு : அஹா அப்படியாடிம்மா.

சசி :  பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்தனும் என்று ஆவலோடு இருந்த புலவர் ஐயா சென்னை பித்தன் ஐயா மதுரையில் இருந்து வருகை தந்த சீனா ஐயா மேடையில இருந்தாங்க. குட்டி பிள்ளை மாதிரி ஆரம்பத்தில் இருந்து ஆர்வமா செயல் பட்ட மதுமதி விழா முடியும் வரையிலும் அதே ஆர்வத்தோட இருந்தாங்க மாமி மதுமதி சகோதரரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரை மட்டுமா ?

வரவேற்புரை வழங்கிய திரு மோகன் குமார் புலவர் ஐயா பற்றி சிறப்பா பேசிய கவிதை வீதி மதுரையிலிருந்து வந்திருந்த பிரகாஷ் .

அலமு : இருடி மா பிரகாஷ் தம்பியா உன்னுடைய வலைய அழகா டிசைன் பண்ணதா சொன்னியே அந்த தம்பியா ?

சசி: ஆமா ஆமா மாமி தம்பிய சந்திச்சி பேச கூட முடியள மாமி. என் வலைய அலங்காரம் செய்த வரிசையில் கணேஷ் மதுமதி அதுக்கு முன்னமே அண்ணன் மகேந்திரன் இப்படி நிறைய பேர் இருக்காங்க மாமி. பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது மாமி அதை தொகுத்து வழங்க முன்னனிப் பதிவர்கள் கேபிள் சங்கர் சிபி ஜாக்கி சார் சங்கவி நான்கு பேரும் மேடையில் அமர்ந்தாங்க அவரவர்களுக்கென்று சிறப்பா சிரிப்பா கேலி கிண்டலுடன் அறிமுகத்தை அமர்க்கள படுத்திட்டாங்க போங்க. நடு நடுவே நண்பர் வீடு திரும்பல் சசி கீழ மக்கள் தொலைக்காட்சியில பேச வாங்கனு அன்போட அழைச்சாங்க பிறகு புதிய தலைமுறை டிவியில வேற அதனால மின்னல் மாதிரி நாங்க ஒரு சிறு குரூப் போய்ட்டு போய்ட்டு வந்திட்டிருந்தோம்.

அலமு : அப்படியாடிம்மா டிவியில இருந்து எல்லாம் வந்தாங்களா?

சசி : ஆமா மாமி அப்படியே எல்லாம் மதிய உணவு அருந்த வந்தாங்க அறுசுவையுடன் அருமையான உணவு அவரவர்கள் கலந்து பேசி மகிழ்ந்து உண்டாங்க.

அலமு : அடடா இப்படி எல்லோரும் ஒற்றுமையா ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டா நல்லாதான் இருந்திருக்கும்.

சசி : ஆமா மாமி உண்ட மயக்கம் எல்லோரும் எங்க தூங்கிடப் போறாங்க என்று பயந்தேன் மாமி. ஆனா அப்படியில்லாம நம்ம விழாவோட சிறப்பு விருந்தினர் திரு .பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் அவரைப் பார்க்கும் ஆவலில் எல்லாம் பிரஸ்ஸா நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. நம்ம கணேஷ்யும் சுரேகாவும் மேடையில வந்ததும் பழையபடி நிகழ்ச்சி சுவார்சியமாக ஆரம்பித்தது. சுரேகா சார் பேசப் பேச கேட்டுட்டே இருக்கலாம் போல.
மூத்த பதிவர்களை எல்லாம் பாராட்டி விருது கொடுத்தாங்க. பார்க்க சிறப்பா இருந்தது.  ஊர் பெருமைய பேசாம எந்தப் பெண்ணாவது உண்டா மாமி அப்படி பேச வாய்ப்பு இல்லாம எங்க ஊர்க்காரர் ஐயா கணக்காயர் பேசி அசத்திட்டார் மாமி.

அலமு : என்னடிமா உங்க ஊரா ?

சசி : ஆமா மாமி அவர் எங்க ஊர் பக்கதில் இருக்கிற இளங்காடு மாமி. அவங்க மனைவி மகன் மருமகளோட வந்திருந்து என்னை ஆசரிவதிச்சாங்க.
அந்த நிகழ்வு முடிந்ததும் புத்தக வெளியீட்டு விழா மாமி எனக்கு ஒன்னுமே புரியள போங்க ஏதோ கனவுல இருக்கிற மாதிரி இருந்தது.  என்ன என்னமோ பேசனும்னு நினைச்சிருந்தேன் மாமி. அங்க போனதும் எதுவும் பேசத்தோணல முதல் மேடை வேறவா அதான்.

அலமு : ஆமாண்டி மா நீ இங்கயே பேச காசு கேட்ப அங்க மட்டும் எப்படி பேசியிருப்ப.

சசி : கவியரங்கம் ஆரம்பிச்சது எல்லாம் கவி மழையா பொழிஞ்சாங்க. முடிந்ததும் சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசினார் எழுத்தாளர் பேச நாங்க கேட்க கொடுத்து வச்சிருக்கனும் அதுவும் எதிர் பார்க்காத விதமா தென்றலை பற்றியும் பேசினது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது மாமி.
வீ ஜெயக்குமார் சிவகுமார் அஞ்சாசிங்கம் ஆரூர் மூனா செந்தில் பிரபாகரன் எல்லோருக்கும் தனித்தனியா பார்த்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன் மாமி நேரமில்ல நேரத்தோட வீட்டுக்கு போகனும்னு வந்துட்டேன்.
அலமு : அடடா கேட்கவே சந்தோஷமா .இருக்குடி மா என்னையத்தான் விட்டுட்டு போய்ட்ட நீ என்ன மட்டுமா விட்டுட்டு போன உன் புருசன் பிள்ளைகள கூட விட்டுட்டு முன்னாடியே போய்ட்ட போல.

சசி : ஆமா மாமி சத்தம் போட்டு சொல்லாதிங்க .

படங்கள் பதிவுகளில் இருந்து சுட்டது.

70 comments:

 1. விழா நிகழ்வுகளை அலமுவோடு சேர்ந்து அலசிருக்கற விதம் சூப்பர். நேர்முக வர்ணனை மாதிரி உரையாடல் மூலமோவே உங்க உணர்வுகளை அழகா பகிர்ந்துட்டீங்க தென்றல். ஆனா... அதென்ன ராஜியும் கணேஷ்ம் அண்ணன் தங்கை மாதிரி இருந்தாங்களா...? தலையில குட்டுறேன்! அண்ணன் தங்கை வேற எப்படி இருப்பாங்களாம்?

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஒரே மாதரி குண்டா அஹ அஹ அத சொன்னேன்.

   Delete
  2. நாங்கலாம் கள்ளம் கபடு இல்லாதவங்கம்மா சசி

   Delete
  3. அப்படியா அண்ணனுக்கு தங்கை நல்ல ஒத்தும.

   Delete
 2. கவிதை நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள் .. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துரை மிகவும் மகிழ்வளித்தது நன்றிங்க.

   Delete
 3. //
  நான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.
  //

  குட்ட உடைசிட்டீங்களே, ராஜி அக்கா எங்க இருக்கீங்க வேகமா வாங்க! :) :)

  ReplyDelete
  Replies
  1. ஏன் பா ஏன் ....

   Delete
  2. வந்துட்டேன் சகோ. என்கிட்ட இருந்து, சண்டை போட்டு பிடுங்கி சாப்பிட்டதை சசி சொல்ல வேணாம்ன்னு கெஞ்சி கேடுக்கிட்டதால நான் சொல்ல மாட்டேன்.

   Delete
  3. யார் நல்லா சாப்ட்டு இருப்பாங்கனு நம்மை பார்த்தவங்க சொல்வாங்க அக்கா.

   Delete
  4. என்னால முடிஞ்சது ரெண்டு அக்காவிற்கும் சண்டை மூட்டி விட்டாச்சு ஹைய்யா ஜாலி.......... :) :)

   Delete
  5. என்ன விளையாட்டு தம்பி இது.

   Delete
 4. அயல் மண்ணில் வசிப்பதால் உண்மையில் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது! நேரலை ஒளிபரப்பு அந்த வருத்தத்தை நீக்கியது! நேரலைக்கு உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி, பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பா நேரலை ஒளிபரப்புக்கு உதவிய அன்பர்களுக்கு நன்றியை நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 5. நேற்று உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி சசி.மிக வித்தியாசமாக சந்தித்து பதிவர் விழவை பற்றி எழுதி இருப்பது வித்தியாசம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ என்ன பேசத்தான் நேரம் கிடைக்கவில்லை.

   Delete
 6. ஆஹா என்ன ஒரு நடை எழுத்தில்...என்ன ஒரு அழகு தொகுப்பில்...
  பாராட்டுக்கள் நடந்த நிகழ்ச்சியை அப்படியே கண்முன் கொண்டுவாத சசி கலா உங்களுக்கு... யார் அந்த அலமு அவர்களையும் அழைத்து வந்திருக்கலாமே..ஓ.. இந்த அலமுவும் சசிகலாவின் தென்றல் கனவில் வந்தவரா...ஜமாயுங்க சசி...

  ReplyDelete
  Replies
  1. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 7. உங்கள் கனவு நனவானதிர்க்கு வாழ்த்துக்கள் சகோ, மேலும் பல நூல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!

  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நூல் வெளியீட்டிற்கு! :)

  ReplyDelete
 8. ஆஹா ஆஹா...... நேரடி ஒளிபரப்பில் புத்தக வெளியீடு பார்த்தேன்.

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

   Delete
 9. பதிவை வாசிக்கும் போதே புகைப்படம் இணைத்திருக்க மாட்டீர்களா என யோசிச்சேன் ..இணைத்து விட்டீர்கள் பதிவுக்கு புகைப்படம் மேலும் வலு சேர்க்கிறது...

  நிகழ்வுகளை அழகாக த்ஹொட்டுச் சென்ற பதிவு...

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வருகையும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்வளித்து நன்றி பா.

   Delete
 10. நூல் வெளியீட்டு செய்த நூலாசிரியர் தென்றல் ஓனர் சசிகலா அக்காவுக்கு வாழ்த்துக்கள் மேலும் இலக்கியத்தின் பல துறைகளில் கலகி உச்சம் செல்ல இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அற்புதமான நிகழ்வில் உங்களின் புத்தகம் வெளியிடு மற்றும் நம் உறவுகளின் வருகையும் நம் பதிவர் விழா குழுவின் சிறப்பான ஏற்பாடுகளும் நல்லதொரு நிகழ்வை ஏற்படுத்தி சிறப்புடன் அமைந்தமை மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் வராவிட்டாலும் என் சிந்தனைகள் விழாவிலே இருந்தது தோழி. உங்களின் புத்தக வெளியீடு எனக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.. அன்புடன் ஆயிஷா

  என் பதிவில் இன்று "வேண்டாம் தூக்கு கயிறு"...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க மிகவும் அரிதான அற்புதமான விழா தாங்கள் வந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 12. வாழ்த்துக்கள்! தங்கள் கவிதை நூலை வெளியிட்ட பதிப்பகம் பற்றிய விவரங்களை தெரிவித்தால், தபால் மூலம் விலைக்கு வாங்க உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பதிப்பகம் சிவகாசிங்க தங்களுக்கு புத்தகம் வேண்டுமெனில் நானே அனுப்புகிறேனே முகவரி மெயிலில் அனுப்பவும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 13. வாழ்த்துக்கள் சசிகலா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 14. மிக சந்தோசம் விவரமாக எழுதியதற்கு. விழாவில்
  காலையில் தத்தமது அறிமுகம் கொஞ்சம் கேட்டேன்.
  வீட்டில் விருந்தினர்.சத்தமாகக் கேட்க முடியவில்லை.
  எல்லாரும் எழும்ப விழாவில் பகலுணவு இடைவேளை.
  பின்னர் வெளியே போய விட்டோம்.
  மிக நன்றி பதிவுக்கு நல்வாழ்த்து.
  vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துரை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது. மிக்க நன்றிங்க.

   Delete
  2. அழகிய உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து மகிழ்ந்தோம்.
   பாராட்டுக்கள்.

   புதிய நூல் வெளியீட்டுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

   vgk

   Delete
  3. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 15. நல்ல அலசல்:)! புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் சசிகலா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 16. மிக மகிழ்ச்சி புத்தகம் வாசித்து கொண்டுள்ளேன் விரைவில் விமர்சனம் எதிர்பாருங்கள் டிவி யில் எல்லாம் பேசி பிரபலம் ஆகிட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. அடடா பேச சொல்லி கூப்பிட்டு விட்டு என்ன இது?

   Delete
 17. //வீடு திரும்பல் சசி //

  உங்க அண்ணன் மதுமதி வரவேற்புரை வழங்குவது வீடு சுரேஷ்ன்னாரு.

  நீங்க இந்த பதிவில் மக்கள் தொலைக்காட்சிக்கு அழைத்தது வீடு திரும்பல் சசின்னுடீங்க ஒரு பிரபல பதிவருக்கு இது தான் கதியா? ஏ தமிழகமே ! என்ன கொடுமை இது :))

  ReplyDelete
  Replies
  1. சசி என்று கூறியது என்னை. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

   Delete
 18. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

  மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. கிண்டலும் கேளியும் விழா நேரத்தில் இருக்கத்தானே செய்யும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது என் கருத்து. இருப்பினும் விழா குழுவினர் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

   Delete
 19. சிறப்பான பகிர்வு ! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 20. தங்களை சந்தித்ததில் மகிழ்ந்தேன்,

  ReplyDelete
  Replies
  1. சிறிது நேரம் பேச முடியவில்லை சகோ மன்னிக்கவும் எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்வே.

   Delete
 21. பாராட்டுக்கள். தொடர்ந்து பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.
  இளங்காடு உங்க ஊர் பக்கம். சரி, உங்க ஊர் எது? இளங்காடு பக்கமா?

  ReplyDelete
  Replies
  1. வந்தவாசியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அம்மையப்பட்டு.
   தங்கள் பாராட்டுரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

   Delete
 22. உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி...

  வாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்வே பேசத்தான் நேரம் போதவில்லை.

   Delete
 23. விழாவை பற்றி மிக சுருக்கமாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள். கண்ணகி பாண்டியனின் அரசபையில் எப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்களோ அது போல இந்த விழா மேடையில் நீங்கள் சொற்சிலம்பு எடுத்து மிக உணர்ச்சிகரமாக பேசி கலக்குவீர்கள் என்று நிணைத்து இருந்தேன் ஆனால் மிக அடக்க ஒடுக்கமாக பேசி சென்று விட்டீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. உணர்ச்சி வசப்பட்டு போனதால் தான் வார்த்தை வரவில்லைங்க.

   Delete
 24. பாராட்டுக்கள் சசிகலா.

  நான் தான் வரமுடியாமல் போய் விட்டதே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் நிறைய பதிவர்களின் அழகிய வெறியீடு
  மனநிறைவைக் கொடுக்கிறது.
  நன்றிப்பா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. தாங்கள் எல்லோரும் வந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

   Delete
 25. "தென்றலின் கனவு" நேற்று கண்டேன்.
  தேமதுரத் தமிழோசை ஒலிக்கக் கண்டேன்.
  துள்ளி வரும் மான் போலும் சொற்களிடையே
  துயிலாது அசைந்தாடும் மயிலைக்கண்டேன்.

  அன்பொன்றே கோவிலென
  அழகான கவிதையொன்று.
  அதிலே....

  "கொண்டு வந்ததும் கொண்டு போவதும்
  பாவத்தின் சுவடுகளே"

  ஆறு சொற்கள்தான் எனினும்
  இதயத்தை நெருங்குகிறது. நெருடுகிறது. நெருப்பாகச் சுடுகிறது.

  ஈண்டு இவ்வுலகத்தே
  எனது எனது என்போரிடம்
  ஈகைதான் உன் தர்மம் என‌

  உள்ளதை உள்ளபடி சொல்வீர்:
  "இருப்பதைப் பகிர்ந்து
  இல்லாதார்க்கு கொடுப்பார்
  இதயம் உள்ளவரே ."

  என்ன சொல்வேன் !
  ஏற்றமிகு ஏணி.
  இது உண்மை. இதில்
  ஏறிடுவோர் மரிப்பதில்லை.

  பாராட்டுக்கள் சசிகலா.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் ஒவ்வொருவராக தனித்தனியே சென்று விசாரித்த தங்களின் அன்பு பிரமிக்க வைத்தது. தங்கள் ஆசி எனக்கும் கிடைத்ததில் மகிழ்வே வணங்குகிறேன் நன்றி ஐயா.

   Delete
 26. சிறப்பாக நடைபெற்ற பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள் சகோ. அப்படியே புத்தகம் எங்கே கிடைக்கும் [தில்லிக்கு அனுப்புவார்களா?] என்று சொன்னால் வாங்க வசதியாக இருக்கும் சகோ.

  ReplyDelete
  Replies
  1. தில்லிக்கா தாங்கள் சென்னை பக்கம் வரும் போது முயற்சிக்கிறேனே. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 27. அலமுவோடு சேர்ந்து அலசிய பகிர்வு அருமை !

  தென்றலின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

   Delete
 28. பதிவர் சந்திப்பை பல பணிகளுக்கிடையில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்தேன்! விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த பாராட்டுக்கள்! தங்களின் உரையாடல் வடிவ வர்ணனை அருமை!
  கவிஞர் கணக்காயன் அவர்கள் என்னுடைய மாமனார்!

  நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தாங்கள் விழாவிற்கு வந்தீர்களா? மகிழ்ச்சிங்க.

   Delete
 29. நேரலையில் புத்தக வெளியீட்டில் அன்பை பற்றிய உங்கள் கவிதையை பட்டுக்கோட்டை பிரபாகரன் சார் சொன்னது மிக அருமை..கவிதை அருமை சசி..நேரலையில் சசியையும் அனைத்து பதிவர்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நேரில் வர மறுத்துவிட்டீர்கள் எனினும் மிக்க நன்றி சகோ.

   Delete
 30. அலமுவோடு ஓர் அலசல்!!- அசத்தல் சசி அக்கா .... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!! பேச நேரம் கிடைக்க வில்லை .. நீங்கள் புத்தக வெளியீட்டில் சற்று மும்முரமாக இருந்ததால்.. மீண்டும் சந்திப்போம்...அன்புடன் சமீரா!!

  வந்த அனைவர்க்கும் உங்கள் கவிதை தொகுப்பின் பிரதி கொடுத்ததற்கு நன்றிகள்.. தென்றல் வரிகள் இதமாக வருடின...கவிதைகள் அத்தனையும் முத்து...

  ReplyDelete
 31. சசி அவர்களுக்கு கவிதை மட்டுமல்ல,கதை வசனம் எழுதவும் தெரியும் போல ! பயன்படுத்த அதிஷ்டம் உள்ளவுங்கதன அதிர்ஷ்டசாலிகள்

  ReplyDelete
 32. மிகவும் தாமதமாகவே இந்த பதிவைப் படிக்கிறேன். பதிவின் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை லேசாக இழையோடுவது படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
  உங்கள் தென்றலின் கனவை கொஞ்ச கொஞ்சமாக ரசித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் அந்த அனுபவத்தை நிச்சயம் பதிவிடுவேன்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி