Ads 468x60px

Thursday, August 16, 2012

முத்தான முத்தழகி..!முத்தான முத்தழகி
முன் கோப முகமழகி
முலாம் பழம் வாங்கித்தரேன்
முன்னெதிரே வாடிபுள்ள.

வாழைத்தண்டு காலழகி
வழவழ பேச்சழகி
வாழைப்பழம் வாங்கித்தரேன்
வாக்கப்பட வாடிபுள்ள.

கோவப்பழ உதட்டழகி
கோலமிடும் விரளழகி
கொய்யாப்பழம் வாங்கித்தரேன்
கொல்லைப்புரம் வாடிபுள்ள

வெண்டைக் காய் விரலழகி
வெட்டிப் பேசும் விழியழகு
வெள்ளரிப்பழம் வாங்கித்தரேன்
வௌக்கேத்த வாடிபுள்ள.

40 comments:

 1. ஆஹா......தேவா சாரோட பாடல் ஒன்னு கேட்டமாதிரி இருக்கு.....
  கிராமத்துப் பாணி கொள்ளை அழகு.......

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகையும் ரசித்த விதமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. அழகான அணுகுமுறை...அனுசரிக்க சொல்லும்விதம் பிரமாதம்... இருந்தாலும் வாழைப்பழம் கொடுத்து விட்டு வாக்கப்பட கூப்பிடுவது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை... அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா... திருமணம்...

  எல்லோரும் அதற்காக எவ்வளவோ செலவுகள் செய்து முடியாமல் கஷ்டப்படுகிறார்களே... அதை சுலபமா சொல்லிட்டீங்க... இப்படி நடந்தால் மூப்பெய்தி திருமணம் நடக்காத பெண்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்குமே....சொல்லியிருக்கும் உட்கருத்து வாழ்த்துக்குரியது. எளிமையான நடை... பாராட்டுக்கள் சசி கலா நல்லதொரு கிராமிய மனம் வீசும் வரிகளை சீராக கோத்ததற்கு...

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு சாதாரணமாகவும் உள்ளது எது கொடுத்தாலும் பின்னே போகாத பெண்களும் இருக்காங்க. நான் சும்மா கவிக்காக எழுதியதுங்க நிஜத்தில் இப்படி இருக்க முடியுமா?

   Delete
  2. கவிக்காக என்றால் பரவாயில்லை... சசி கலா. தாங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளலாம்... எனக்கும் அதுதான் யோசனை...ஏனென்றால் கவி என்பது இல்லாததை சொல்வதில்லை... இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்வதுதான்... ஏதோ உங்களால் முடிந்த சேவைப்பணி... வாழ்த்துக்கள்...

   Delete
 3. ஆஹா... அருமை... வரிகளை படிக்கும் போது "ஒத்த ரூபா தாரேன்.." பாட்டு ஏனோ ஞாபகம் வந்தது...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. ஆமாம் பழைய பாடல்கள் நினைவுக்கு வருகிறது சசி.
  நல்ல நாட்டுப் பாடல் வரிகள்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 5. கிராமிய மணங்கமழ்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

   Delete
 6. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 7. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 8. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 9. விளக்கேற்றும் கவிதை நன்றாக இருந்தது. என்னுடைய வலைப்பூவில் ஒத்தை மாட்டு வண்டி, இதுவோ சுதந்திரம் என 2 பதிவுகள் இட்டுள்ளேன்!
  நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies

  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 10. அழகான கிராமிய பாடல்! அசைபோட வைக்கும் சொற்கள்! அருமை!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 11. பழங்களை வாங்கி தந்து பெண்களை கவரும் கவிதை... நன்று

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ வார்த்தையாலும் கவரத் தெரிந்தவர்கள் அல்லவா?

   Delete
 12. கவியுலக பதிவரசி
  நிறை குறைகளை சொல்லிவருகிறேன்
  ஆனால் குறையில்லாமல்
  எழுதிவருகிறாய்
  அதனால் பதிவர்களால் பாராட்டு பெற்ற நீ
  பதிவர்கள்கூட்ட்டத்தில் பல ஆண் சிங்கங்களுக்கு மத்தியில்
  ஒரு பெண் சிங்கமாக வலம் வருகிறாய்

  நேரில் வந்து வாழ்த்து சொல்லும் தூரத்தில் நீங்கள் இல்லாததால்
  தூரத்தில் இருந்தே வாழ்த்துகிறேன்.
  வாழ்க வளமுடன்

  கிராமியப் பாணியான கவிதைகள் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. அல்வாவும் பூவும் வாங்கி கொடுத்து மயக்கும் உலகில் இந்த காதலன் பழம் வாங்கி கொடுத்து வரவழைக்கிறான்.. காரணம் ஜங்க் புட் சாப்பிட்ட்டு அவன் காதலி பெருத்து இருப்பதுதான் காரணமோ?

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா ஆரோக்கிய காதலாம்.

   Delete
 14. மனதை நிறைக்கும் செம்மாந்து வீசும் செழிப்பான வரிகள்... உள்ளம் நிறைய ரசித்தேன் அக்கா ..
  என் வணக்கங்களும் , வாழ்த்துக்களும் .//

  ReplyDelete
 15. விளக்கேத்தக் கூப்பிட இவ்ளோ வர்ணனையா...அழகுதான் !

  ReplyDelete
  Replies
  1. இப்படி கூப்பிட்டாத்தானே நீங்களும் வருகை தருகிறீர்கள்.

   Delete
 16. எளிமையான வரிகளில் அருமையான கவிதை. கிராமிய நடையில் வரும் கவிதைகள் எல்லாமே படிக்க அழகுதான். இப்போதும் அப்படியே.

  ReplyDelete
  Replies
  1. வசந்தத்தின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி வசந்தமே.

   Delete
 17. கிராமத்து வரிகள்,மண்வாசனையுடன் பழவாசனை நாசியில் உரசுகிறது சகோதரி!வாழ்த்துக்கள்


  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 18. அழகிய கிராமத்துக் கவிதை ..நல்லாயிருக்கு சகோ ..

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி