Ads 468x60px

Monday, August 13, 2012

காற்றாய் மூச்சில் கலந்தவளே!


வண்ணமாய் வானில் தோன்றி
எண்ணமாய்த் தோகைவிரித்து
உயிராய்கனவில் பாட்டுப்பாடி
காற்றாய் மூச்சில் கலந்தவளே!

மழைத்துளியாய் மண்ணில் வீழ்நது
பனித்துளியாய்ப் பூவில் வாழ்ந்து
மேகமாக வெண் பட்டாடையணிந்து
துணையாக வழி நடந்தக் கண்ணே!

காலையில் கதிராய் ஒளிர்ந்தாய்
அந்தியில் நிலவாயப் பூத்தாய்
வானிலே மின்மினிப் பூச்சாய்
கடலிலே சிப்பியில் முத்தாய்!

மழலையின் மொழியிசைப் பாட்டாய்
குமரியின் கொஞ்சும் பூந்தமிழாய்
எத்தனைப் பார்வைகள் உன்னில்
அத்தனையும் கவிதையாய் என்னில்!

எழுத்தெடுத்துக் கோர்த்துப் பார்த்தேன்
வார்த்தையாய் வந்து நின்றாய்
வார்த்தையை சேர்த்துப் பார்த்தேன்
அங்கும் காவியத் தமிழாய் நீ!

எனக்கொன்றும் வேண்டாம் தாயே!
நீ மட்டும் போதுமென் தமிழே!
வருவாயா தங்கத்தேரே வரம்
தருவாயா எந்தனுயிர் வாழ்வின் வரமே!

32 comments:

 1. தமிழை கருவாக்கிக்கொண்டீர்களா..பிரமாதம் போங்க..

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 3. எனக்கொன்றும் வேண்டாம் தாயே!
  நீ மட்டும் போதுமென் தமிழே!
  வருவாயா தங்கத்தேரே வரம்
  தருவாயா எந்தனுயிர் வாழ்வின் வரமே!

  கருவாகி, அன்னை தமிழால் உருவாகி
  இன்று 300ம் பதிவு ஈடும் என் சகோதரியே
  தமிழ் வளர்த்து தரணி புகழ் கொண்டு
  மேலும் வாழ்க, தமிழால் வளர்க
  என மனமாற வாழ்த்துகிறேன்

  அன்பு சகோதரன்
  ஜோ.................

  ReplyDelete
  Replies
  1. அண்ணாவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா.

   Delete
 4. எழுத்தெடுத்துக் கோர்த்துப் பார்த்தேன்
  வார்த்தையாய் வந்து நின்றாய்
  வார்த்தையை சேர்த்துப் பார்த்தேன்
  அங்கும் காவியத் தமிழாய் நீ!//

  தமிழ்தாய் வரம் தந்து விட்டாளே!
  இவ்வளவு அழகாய் கோர்த்து மாலை அணிவித்தால் மகிழ்ந்து வரம் கொடுக்காமல் இருப்பாளா தமிழதாய்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மகிழ்வே எனது மகிழ்ச்சி சகோ.

   Delete
 5. தமிழ்த் தாயை பாடுபொருளாய் கொண்டீர்கள்... வரம் கேட்கிறீர்கள் வாழ்வ்வளித்தவள் வரம் தராமல போய் விடுவாள்... முத்திரை பதித்த முன்னூறாவது பதிவு சிறப்பு TM4

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. தமிழ்த் தாய் மட்டும் அல்ல நாங்களும் அகம்
  குளிர்ந்து போனோம் கவி கண்டு.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சகோ மிக்க மகிழ்ச்சி.

   Delete
 7. தமிழ் தாயின் மீது உள்ள பற்று பாசம் ,நேசம் ,ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமாக தெரிகிறது சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 8. தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் கவிதை சகோதரி... நன்றி...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 7)


  அப்படிச் சொல்லுங்க...!(இது என் தளத்தில் !)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. அற்புதமான எழுத்துக்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. தமிழ்
  தாய் பாசம்
  ம்ம்ம்....அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete


 11. தென்றல் கவிதைப் புயலாகி விட்டதோ !!!?

  சா இராமாநுசம்

  ReplyDelete
 12. எதனோடும் சேர்த்து பேசலாமே என் இனிய தமிழ் மொழியை...
  அத்தனையும் மேலும் அழகு சேர்க்கும் என் கன்னித்தமிழுக்கு...
  தாயின் அரவணைப்பின் சுகமும் நம் தமிழ் மொழி கொடுக்குமே...
  பிள்ளைகளின் மழலையிலும் விஞ்சி நிற்பது என் தமிழ் அல்லவா...
  தன்னை கற்று தெரிந்தவனை புகழ் எனும் உச்சிக்கு கொண்டு செல்லுமே...

  எப்படி எல்லாம் நாம் அதை படுத்தினாலும் நம்மை காக்கும் தமிழ்...
  உறவாய் நட்பாய் நம்மோடு பின்னி பிணைந்த உயிர் அல்லவா தமிழ்...
  எத்தனை இனம் இருந்தும் நம்மை தனித்துவமாய் காட்டும் ஒரே மொழி...
  அத்தகைய நம் மொழியை நம் உயிரை விட மேலாக மதிப்போம்...
  அதற்கொரு பங்கமென்றால் நம் உயிரையும் கொடுத்து காப்போம்...

  அழகாக சொன்னீர்கள் சசி கலா. உங்களுக்கு எனது உள்ளப்பூர்வமான பாராட்டுக்கள்.. என்றும் தமிழ் போல் தாங்கள் எல்லையில்லா ஒரு வாழ்வை நீடூடி வாழ்ந்து குறைவேதும் இல்லாமல் நிறைவாக வாழ வாழ்த்துகிறேன்....

  ReplyDelete
 13. எனக்கென்று எதுவும் வேண்டாம். உன் பொன் தமிழ் கவிதைகளே போதும்.....:-)

  ReplyDelete
 14. தமிழோடு தொடருங்கள்

  ReplyDelete
 15. தமிழ் சுரக்கும் வரிகள் .. சிறப்பான படைப்பாக்கம் என் நன்றிகள் அக்கா

  ReplyDelete
 16. சிறப்பான கவிதை! அழகான வரிகள்! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

  ReplyDelete
 17. கவிதை அழகு!பொருளும் அழகு!

  ReplyDelete
 18. தமிழுக்கு தாங்கள் சூட்டிய ஒவ்வொரு அலங்காரமும் அழகு அக்கா! தாங்கள் தமிழ் மேல் கொண்ட காதல் தங்களது ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு வார்த்தைகளிலும், ஒவ்வொரு வரிகளிலும், வார்த்தை பிரயோகங்களிலும் பொதிந்து கிடக்கிறது! வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 19. தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை ....மிகவும் பிரமாண்டமானது
  ஒவ்வொரு கவியிலும் தமிழைப் பற்றி சொல்லாத வார்த்தைகள் இல்லையென்றே சொல்லலாம் போலுள்ளது

  ReplyDelete
 20. கண்ணே மணியே முத்தே என்று குழந்தைக்குத் தாய்பாடும் தாலாட்டு போல் தமிழை வர்ணித்த வார்த்தைகளில் சொக்கினேன். பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 21. மழலையின் மொழியிசைப் பாட்டாய்
  குமரியின் கொஞ்சும் பூந்தமிழாய்  நண்பியே மிகவும் இயல்பான வரிகள்,தங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி