Ads 468x60px

Friday, August 31, 2012

வரப்போரத்துல கண்ணம்மா !சிலுசிலுணு  காத்தடிக்குதே கண்ணம்மா
தளதளணு விளைஞ்சி நிக்கிர நெல்லம்மா
சலசலணு நெளிந்து வரும் நீரம்மா
கமகமணு மணம் வருதே பூவாசமா ?

தடதடணு அடிச்சிக்குதே கதவம்மா
சடசடணு வந்திடுதே மழையம்மா
மடமடணு எடுத்த வை விதநெல்லம்மா
கடகடணு ஓட்டமிடும் வண்டியம்மா !

குளுகுளுனு குளிரெடுக்குதே வள்ளியம்மா
கூவிக் கூவிக் மருகி நிக்கும் குயிலம்மா
தத்தித் தத்தி நடந்து வரும் மயிலம்மா
தாவியணைக்க பக்கம் வாடி செல்லம்மா !
இன்னும் வாசிக்க... "வரப்போரத்துல கண்ணம்மா !"

Wednesday, August 29, 2012

அறிமுக அம்பலம் !அவரவர் எழுத்துக்களை
முன் நிறுத்தி....
அதற்கான முகங்களை
தேடித் தேடி களைத்துப்போனேன்.

செல்லப் பெயரோ...
ஜாதகப் பெயரோ...
அம்மா வைத்த பெயரோ
அப்பா வைத்த பெயரோ..
எந்தப் பெயரால் அழைத்தும்
அடையாளம் தெரியாது.

விழி வலை விரித்ததில்
வலைக்கு வைத்த பெயரே
எங்களுக்கு முன்
சுயஅறிமுகம் செய்துகொண்டு
எங்களையும் அறிமுகப்படுத்துகிறது.
இன்னும் வாசிக்க... "அறிமுக அம்பலம் !"

Tuesday, August 28, 2012

பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் !

நிகழ்ச்சிக்கு போறோமே புகைப்படம் எடுக்கலாம் என்று ஒளிப்படக்கருவி எடுத்திட்டு வந்தேன் . எனக்கு புகைப்படம் எடுக்க தெரியாது என்று
ராஜி அக்கா மகளிடம் கொடுத்தேன் அவங்க ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்ததால் ராஜி கவிதை வீதிசௌந்தரிடம் தருவதாக சொன்னாங்க 
சரி என்றேன். ராஜி அக்கா சொன்னதோட சரி கொடுக்கவேயில்லை. நானே அவர் இருக்கைக்கு சென்று நண்பரிடம் கொடுத்து உங்கள் விருப்பம்
எப்படி வேண்டுமானாலும் வளைச்சி வளைச்சி எடுங்க என்று சொல்லிவிட்டு வந்தேங்க.

நேற்று எல்லோரும் பதிவர் சந்திப்பு குறித்து பதிவிடுவார்களே நாமும் புகைப்படங்களை வைத்து பதிவிடாலம் என்று என் ஔிப்படக் 
கருவியை எடுத்து பார்த்தால் நண்பர் செய்ததை நீங்களே பாருங்கள்.


இவ்ளோதாங்க இந்த படங்கள வச்சி நான் என்ன பதிவு போட முடியும் ? கீழ இருக்கிற படங்கள திருடி இப்படி பதிவு போட வச்சிட்டாங்க கவிதை வீதி சௌந்தர்.பேசும் போதே இப்படி பார்த்த இவங்களோட நாம எப்படி பேசுறது ?

இவர் தோற்றமே அடிக்கிற மாதிரி இருக்கே அதாங்க அவங்க இருக்க பக்கமே போகல.
என்ன சோகம் தெரியளங்க இவருக்கு அதனால இவரோடவும் பேச முடியள.
யாராவது பேச வந்தீங்க என்று கேட்பது போல் இருக்கு அதனால இவரோடவும் பேச முயற்சிக்கவில்லை.
எப்பவும் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்ட சிபி அதனால் அவரிடமும் பேச முடியவில்லை.
இன்னும் வாசிக்க... "பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் !"

Monday, August 27, 2012

அலமுவோடு ஓர் அலசல் !
அலமு : என்னடிமா நேத்து எத்தன மணிக்கு வந்த ஏன்டிமா டல்லா இருக்க.

சசி :  வாங்க மாமி நேத்து 7.30 க்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன் மாமி. விழா மிக மிக சிறப்பா நடந்துச்சி மாமி எல்லோரையும் இருந்து வழியனுப்பிட்டு வர முடியலைங்கிற சின்ன வருத்தம் தான் மாமி.

அலமு : சரிடி மா காலைல இருந்து என்ன நடந்துச்சி சொல்லு.

சசி :  எனக்கு புத்தகம் வீட்டுக்கு வரவே காலை 7 ஆகிடுச்சி மாமி அந்த பயம் நேரம் ஆக ஆக புத்தகம் வரமா போய்ட்டா என்ன பண்றது நிகழ்ச்சிக்கு போய் என்ன சொல்றதுனு. அதன் பிறகு விழாவுக்கு உள்ளே போகவும் தமிழ்த் தாய் வாழ்த்துடனே வாசலில் சீனு வரவேற்றார். மகேந்திரன் அண்ணா சிரிச்ச முகத்தோட விழா முகப்புள இருந்து வரவேற்றார்.

பெண் பதிவர்கள் ராஜி ,கோவை சரளா, அகிலா ,ஸாதிகா ,லஷ்மி அம்மா, ருக்மணியம்மா ,ரஞ்சனி நாரயணன், நாச்சியார் அம்மா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் மாமி. அன்பா பேசினாங்க.

அலமு : என்னடிமா இப்படி பண்ணிட்ட நீதானே முன்னாடி இருந்து எல்லோரையும் வரவேற்று இருக்கனும்.

சசி : ஆமா மாமி அதான் சொன்னேனே .மாமி ஆரணியில இருந்து ராஜி வந்திருந்தாங்க அவங்க பிள்ளைகளோட பார்க்க உண்மையிலேயே கணேஷ்யும் ராஜியும் அண்ணன் தங்கைகள் மாதிரியே இருந்தாங்க மாமி . நான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.

அலமு : அஹா அப்படியாடிம்மா.

சசி :  பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்தனும் என்று ஆவலோடு இருந்த புலவர் ஐயா சென்னை பித்தன் ஐயா மதுரையில் இருந்து வருகை தந்த சீனா ஐயா மேடையில இருந்தாங்க. குட்டி பிள்ளை மாதிரி ஆரம்பத்தில் இருந்து ஆர்வமா செயல் பட்ட மதுமதி விழா முடியும் வரையிலும் அதே ஆர்வத்தோட இருந்தாங்க மாமி மதுமதி சகோதரரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரை மட்டுமா ?

வரவேற்புரை வழங்கிய திரு மோகன் குமார் புலவர் ஐயா பற்றி சிறப்பா பேசிய கவிதை வீதி மதுரையிலிருந்து வந்திருந்த பிரகாஷ் .

அலமு : இருடி மா பிரகாஷ் தம்பியா உன்னுடைய வலைய அழகா டிசைன் பண்ணதா சொன்னியே அந்த தம்பியா ?

சசி: ஆமா ஆமா மாமி தம்பிய சந்திச்சி பேச கூட முடியள மாமி. என் வலைய அலங்காரம் செய்த வரிசையில் கணேஷ் மதுமதி அதுக்கு முன்னமே அண்ணன் மகேந்திரன் இப்படி நிறைய பேர் இருக்காங்க மாமி. பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது மாமி அதை தொகுத்து வழங்க முன்னனிப் பதிவர்கள் கேபிள் சங்கர் சிபி ஜாக்கி சார் சங்கவி நான்கு பேரும் மேடையில் அமர்ந்தாங்க அவரவர்களுக்கென்று சிறப்பா சிரிப்பா கேலி கிண்டலுடன் அறிமுகத்தை அமர்க்கள படுத்திட்டாங்க போங்க. நடு நடுவே நண்பர் வீடு திரும்பல் சசி கீழ மக்கள் தொலைக்காட்சியில பேச வாங்கனு அன்போட அழைச்சாங்க பிறகு புதிய தலைமுறை டிவியில வேற அதனால மின்னல் மாதிரி நாங்க ஒரு சிறு குரூப் போய்ட்டு போய்ட்டு வந்திட்டிருந்தோம்.

அலமு : அப்படியாடிம்மா டிவியில இருந்து எல்லாம் வந்தாங்களா?

சசி : ஆமா மாமி அப்படியே எல்லாம் மதிய உணவு அருந்த வந்தாங்க அறுசுவையுடன் அருமையான உணவு அவரவர்கள் கலந்து பேசி மகிழ்ந்து உண்டாங்க.

அலமு : அடடா இப்படி எல்லோரும் ஒற்றுமையா ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டா நல்லாதான் இருந்திருக்கும்.

சசி : ஆமா மாமி உண்ட மயக்கம் எல்லோரும் எங்க தூங்கிடப் போறாங்க என்று பயந்தேன் மாமி. ஆனா அப்படியில்லாம நம்ம விழாவோட சிறப்பு விருந்தினர் திரு .பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் அவரைப் பார்க்கும் ஆவலில் எல்லாம் பிரஸ்ஸா நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. நம்ம கணேஷ்யும் சுரேகாவும் மேடையில வந்ததும் பழையபடி நிகழ்ச்சி சுவார்சியமாக ஆரம்பித்தது. சுரேகா சார் பேசப் பேச கேட்டுட்டே இருக்கலாம் போல.
மூத்த பதிவர்களை எல்லாம் பாராட்டி விருது கொடுத்தாங்க. பார்க்க சிறப்பா இருந்தது.  ஊர் பெருமைய பேசாம எந்தப் பெண்ணாவது உண்டா மாமி அப்படி பேச வாய்ப்பு இல்லாம எங்க ஊர்க்காரர் ஐயா கணக்காயர் பேசி அசத்திட்டார் மாமி.

அலமு : என்னடிமா உங்க ஊரா ?

சசி : ஆமா மாமி அவர் எங்க ஊர் பக்கதில் இருக்கிற இளங்காடு மாமி. அவங்க மனைவி மகன் மருமகளோட வந்திருந்து என்னை ஆசரிவதிச்சாங்க.
அந்த நிகழ்வு முடிந்ததும் புத்தக வெளியீட்டு விழா மாமி எனக்கு ஒன்னுமே புரியள போங்க ஏதோ கனவுல இருக்கிற மாதிரி இருந்தது.  என்ன என்னமோ பேசனும்னு நினைச்சிருந்தேன் மாமி. அங்க போனதும் எதுவும் பேசத்தோணல முதல் மேடை வேறவா அதான்.

அலமு : ஆமாண்டி மா நீ இங்கயே பேச காசு கேட்ப அங்க மட்டும் எப்படி பேசியிருப்ப.

சசி : கவியரங்கம் ஆரம்பிச்சது எல்லாம் கவி மழையா பொழிஞ்சாங்க. முடிந்ததும் சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசினார் எழுத்தாளர் பேச நாங்க கேட்க கொடுத்து வச்சிருக்கனும் அதுவும் எதிர் பார்க்காத விதமா தென்றலை பற்றியும் பேசினது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது மாமி.
வீ ஜெயக்குமார் சிவகுமார் அஞ்சாசிங்கம் ஆரூர் மூனா செந்தில் பிரபாகரன் எல்லோருக்கும் தனித்தனியா பார்த்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன் மாமி நேரமில்ல நேரத்தோட வீட்டுக்கு போகனும்னு வந்துட்டேன்.
அலமு : அடடா கேட்கவே சந்தோஷமா .இருக்குடி மா என்னையத்தான் விட்டுட்டு போய்ட்ட நீ என்ன மட்டுமா விட்டுட்டு போன உன் புருசன் பிள்ளைகள கூட விட்டுட்டு முன்னாடியே போய்ட்ட போல.

சசி : ஆமா மாமி சத்தம் போட்டு சொல்லாதிங்க .

படங்கள் பதிவுகளில் இருந்து சுட்டது.
இன்னும் வாசிக்க... "அலமுவோடு ஓர் அலசல் !"

Friday, August 24, 2012

ஜோடிப் பொருத்தம் எப்படி ?

ஸ்லிம்மா இருந்தாலும் என்னா  வெயிட்டு இந்த மனுசங்க எப்படித்தான் தாங்குறாங்க?
உங்களுக்கு மட்டும் தான் ஆடத் தெரியுமா ?
ஏய் ஏய் சீக்கிரம் வா டான்ஸ் ஸோ முடியப்போகுது.

டோன்ட் வொரி செல்லம் போயிடலாம்.

அவசரத்துள அக்கீஸ் வாங்க மறந்துட்டேன்.

படங்கள் உதவி கூகுள் இணையம்.
இன்னும் வாசிக்க... "ஜோடிப் பொருத்தம் எப்படி ?"

Thursday, August 23, 2012

புயலின் வரிகள் !


மண்ணெடுத்து பிசைந்து நின்னேன்
மணிக்கணக்கா பார்த்தவரே
சொல்லெடுத்தே வீசியிங்கே
சொக்கிப்போய் நிப்பவரே.

சோத்துப் பானை செய்ய வந்தேன்
சொப்புச் சாமானும் செய்யலியே
சேத்து நட காலுந்தான்
சேம நலம் பேசிடுதே...

காத்து வழி சேதி சொல்லி
கண்ணடித்து நிப்பவரே
காதலென்ற பெயராலே
கால நேரம் கழிந்திடுதே..

தென்றல் வரும் பாதையிலே
புயலடிச்சி ஓய்ந்ததென்ன
புழுதியாட்டம் மனமிங்கு-உன்னில்
புதைந்தொழிந்து போனதென்ன.
இன்னும் வாசிக்க... "புயலின் வரிகள் !"

Wednesday, August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் .
பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
சங்கவி,கோயம்புத்தூர்
நண்டு@நொரண்டு,ஈரோடு
சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
கோவி(காதல்)கோயம்புத்தூர்
ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
ரஹீம்கஸாலி,அரசர்குளம்
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
இக்பால் செல்வன்,சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
சசிகலா(தென்றல்)சென்னை
மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
ஸ்ரவாணி(தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
ராசின்(நதிகள்) சென்னை
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
நிலவு நண்பன்,திருநெல்வேலி
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
  தேவாதிராஜன்
 மாலதி
பிரேம லதா
 கௌதம
சத்தியன்
ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.
அகிலா (கோயம்புத்தூர்)
இரா.தெ.முத்து(திசைச்சொல்
வடிவேலன். ஆர்
மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
ரிஷ்வன்,சென்னை
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை
  தேவாதிராஜன் (மணவை) காஞ்சிபுரம்.
)

நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி
இன்னும் வாசிக்க... "பதிவர்கள் பெயர் பட்டியல் ."

மனதுக்கு விடியலில்லை !


சட்டெனப் பறந்து பட்டென விழுந்த,
சிட்டொன்று தரையினிலே,
மீண்டுமது தானேஎழுந்து பறக்குமா,
காத்திருந்து பார்த்திருந்தேன்.

தாயோடிவந்து கிளைதனில் அமர்ந்து.
அபயக் குரல் கொடுக்க,
உறவுகள் யாவும் பறந்தோடிவந்து,
அதனுடன் தோள்கொடுக்க.

இறகுகள் முளைக்குமுன் பறக்க நினைத்த,
மழலை அழுகைகண்டு,
தவிப்புடன் அங்கு மிங்குமென பறந்தன,
காப்பாற்ற வழியின்றி!

மனிதவாழ்விலும்  நிகழ்வுகள்,
சகஜம் என்றுணர்ந்தேன்.
சிதறிய கண்ணீரில் ஆயிரம் கதைகள்,
ஒளித்து வாழ்கிறது.

அன்புத் தாகம் அறிவற்ற விவேகம்,
ஆளும் காலமுண்டு.
இளமையில் இதயம் தேடிய நினைப்பில்,
விழுந்தவர் பலருண்டு.

மீண்டுவந்திட நெஞ்சம் துடிக்கும்
குணம் கோடு போடும்.
மீளாத்துயரில் மாண்டுபோகும்
மனதுக்கு விடியலில்லை.
இன்னும் வாசிக்க... "மனதுக்கு விடியலில்லை !"

Tuesday, August 21, 2012

ஐடியா மாமி !


அலமு :  சசி .....சசி

சசி :  வாங்க மாமி என்ன காலையிலேயே .

அலமு : எல்லாம் உன்னால வந்ததுமா. நீ தான சொன்ன புத்தக வெளியீட்டு விழா இருக்குனு.  உனக்கே தெரியும் நான் எங்க வெளிய போனாலும் புதுசா ஒரு புடவை எடுத்துடுவேன்னு .

சசி : அதனால என்ன எடுத்துட்டிங்களா?

அலமு : அத ஏன்டி மா கேட்குற... காலைல மாமாவுக்கு சட்டை அயன் பண்ணிட்டு இருந்தேன்டிமா.  அந்த நேரம் பார்த்து தெருவுல மாச மாசம் தவண முறையில புடவை குடுப்பானே அவன் போய்ட்டு இருந்தான்.  நான் ஏங்க புடவை ....ஏங்க புடவைனு கூப்பிட்டேன்.  பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்த உங்க மாமா என்னடி ஆச்சினு அப்படியே ஓடி வர. தெருவுள போனவனும் அப்படியே நிக்க ஒரே கூத்தா போச்சுடிமா. அதனால இன்னக்கு லீவ போடு நாம திநகர் போய்ட்டு வந்துடலாம் சரியா.

சசி : ஹா  ஹா  சரிங்க மாமி.

இன்னும் வாசிக்க... "ஐடியா மாமி !"

Saturday, August 18, 2012

அன்பொன்றே சேமிப்பாய்!கொக்கரக்கோ குரலெழுப்ப
குயிலோசைக்  கலந்துவர
வெட்ட வெளி மைதானமும்
வெண் பனியால் நனைந்திருக்க!

மரக்கூட்டில் படுத்துறங்கி
மனமயக்கும் பாட்டிசைத்து
மன்னவனாம் சூரியனை
மலர் கொண்டு வரவேற்க!

பசிக்குணவு காட்சியாக
பார்வையழகு இயற்கையாக
எறும்பைப்போல் சுறுசுறுப்பாய்
எந்நாளும் வாழ்வில் ஏற்றம்!

அறுசுவையும் அலங்கரித்து
அழகாய் உண்டு முடித்து
உழைப்பதுவே மூலதனமாய்
அன்பொன்றே சேமிப்பாய்!

வட்ட நிலாப் பார்த்திருந்து
வார்த்தை வரக் காத்திருந்து
எண்ணமது சிறந்திருக்க
எழிலோவியமாய்க் கவிதை!

கங்கையாய் எழுந்திடுவீர்
காற்றாகி உயிர் பெறுவீர்
கண்கண்ட காட்சியெல்லாம்
காவியமாக்கி ஈன்றிடுவீர்...!

இன்னும் வாசிக்க... "அன்பொன்றே சேமிப்பாய்! "

Friday, August 17, 2012

வஞ்சமில்லா மனிதனவன் !


வழிப்போக்கன் அவன் வாழ்வில்
வண்ணங்கள் நிழற்படமாய்!
காற்று அவன்சொந்தம்
கடலலை ஜூவிதப் பாட்டாக!
பச்சைக்கிளி அவனுறவு
பட்டமரமே வாழும் மணிமண்டபம்!

காலைப் பனியில் குளித்திடுவான்!
உச்சிவெயிலில் பாட்டிசைப்பான்!
கட்டாந்தரையவன் பஞ்சணையாக
இரவின் உறவை ரசித்திருப்பான்!

வண்ணநிலா மனதில் நாட்டியமாடும்!
எண்ணவெள்ளிகள் சேர்ந்துபாடும்!
மண்ணின் மணமவன் தாலாட்டு!
மாடப்புறா நெஞ்சின் களைக்கூத்து!

குழலோசையாய் மலை ஈத்தல் உரசல்!
குயில்பாட்டாய் அருவியின் இரைச்சல்!
முரசொலியாய் யானைப் பிளிறல்!
சூரியனாய் மின் மினி ஒளிகள்!

தமிழோடு கைகோர்ப்பான் போகும்
பாதையெல்லாம் அதைவிதைப்பான்!
காடெல்லாம் மனமலைந்தோடினாலும்
நினைவு விஷமில்லா தேனமுதாய்!

பகலுமில்லை இரவுமில்லை
 பட்டினிப் பிரிவால் காயமுமில்லை!
சாஸ்திரம் அவனறியான் சட்டத்தின்
ஓட்டைகளை உணர்ந்தறியான்!
சம்பிரதாயச் சடங்குகளின் மறுபக்கம்
ஒளியா  இருளாப் பொருட்டில்லை!

கரைபடா இதயத்தின் உரிமையை
கேட்கப் புவியில் யாருமில்லை!
இடிதாங்கி அவனில்லை அவனை
மடிதாங்கவும் நாதியில்லை!

அவன்வழிப் பைத்தியமேயானாலும்
வஞ்சமில்லா மனிதனவன்!
அகமொன்றும் புறமொன்றுமெனவாழும்
நமைப்போல் மிருகமல்ல!!
இன்னும் வாசிக்க... "வஞ்சமில்லா மனிதனவன் !"

Thursday, August 16, 2012

முத்தான முத்தழகி..!முத்தான முத்தழகி
முன் கோப முகமழகி
முலாம் பழம் வாங்கித்தரேன்
முன்னெதிரே வாடிபுள்ள.

வாழைத்தண்டு காலழகி
வழவழ பேச்சழகி
வாழைப்பழம் வாங்கித்தரேன்
வாக்கப்பட வாடிபுள்ள.

கோவப்பழ உதட்டழகி
கோலமிடும் விரளழகி
கொய்யாப்பழம் வாங்கித்தரேன்
கொல்லைப்புரம் வாடிபுள்ள

வெண்டைக் காய் விரலழகி
வெட்டிப் பேசும் விழியழகு
வெள்ளரிப்பழம் வாங்கித்தரேன்
வௌக்கேத்த வாடிபுள்ள.
இன்னும் வாசிக்க... "முத்தான முத்தழகி..!"

Wednesday, August 15, 2012

தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி !


திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்!
வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்!
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை!
பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் உரிமை!

சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன!
அகரமான அவர்களெல்லாம் வாழ்ந்தார் வழியாக!
அகிம்சை வழியில் பெற்றதாலோ இம்சை செய்கின்றோம்!
சுயநலப் பூக்களின் சுரண்டும் ஆசையில் வெந்து எரிகின்றோம்!

வீரப்பெண்மணி வேலுநாச்சியின் வீரமெங்கே யார் அபகரித்தார்!
லட்சுமி சரோஜினி கிருபாளினி ஜான்சி விஜயலட்சுமி இந்திரா!
இவர்போல் வாழ எவரையும்காணேன் ஏனிந்த இடைவெளியோ?
ஆணும் பெண்ணும் சரிசமமென்ற மேடைத் தத்துவங்கள்!

உண்மை வாழ்வில் பொய்யின் உறவாய் இதுவே நிதர்சனமாய்!
பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!
பஞ்சம் பட்டினி ஏற்றதாழ்வு மதமினமென்ற பேதங்ககொழிந்து
சமத்துவ மலர்கள் மலரும் நாளே சுதந்திரத் திருநாளாம்!

நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!
இன்னும் வாசிக்க... "தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி !"

Tuesday, August 14, 2012

நிழலுக்கு நீரூற்றி...!


நிழலுக்கு நீரூற்றி வளர்க்கும் மானிடர்கள்
நிஜத்தை ரணமாக்கி வாழ்ந்து பயனில்லை!
நிம்மதி என்றெண்ணி பொய்யோடு உறவாடில்
நிறைகுடமாகாது வாழ்வு பொய்யெழுதும்!

நேற்றொன்று இன்றொன்று நாளை வேறென்று
நேசத்தின் பார்வை ஆசைவழி போகுமெனில்
நேர்கோட்டு பயணம் வளைந்தோடிப்போகும்
நேர்மை என்பது கனவாகி கதையெழுதிமாயும்!

ஒன்றுக்குள் ஒன்றாய் இணைகின்ற பந்தம்
ஒருநாளும் ஒழியா அறமாக வேண்டும்
ஒருவரையொருவர் புரிதல் இருந்தால்
ஒற்றுமையென்பது நிரந்தர வரமே!

அன்பைப்பாடி அன்போடுபாடி தீபமேற்றின்
அனைத்தும் அழகே அதுதான் பொன்வாழ்வே!
அள்ளிக்கொடுக்க காசுபணம் வேண்டாம்
அன்பே தெய்வம் பகிர்ந்தால் அதுவே நிம்மதி!

அழகான மலரெல்லாம் அழகல்லப் பார்த்தேன்
அறிவென்ற பாதையில் அவலமும் கண்டேன்!
அகம் வாழும் அழிவில்லா இதய அன்பதனை
அறிந்து சூடின்  பெருவாழ்வுஅதுவே அறிதல் நன்று!

கதவைத் திறந்து காத்திருக்கும் இதயத்தின்
கனவுகள் மெய்ப்படின் காதல் வாழும்!
கண்ணில் மலரும் காட்சிகள் யாவுமினி
கவிதையாய் உருமாறி என்னாளும் வாழும்!
இன்னும் வாசிக்க... "நிழலுக்கு நீரூற்றி...!"

Monday, August 13, 2012

காற்றாய் மூச்சில் கலந்தவளே!


வண்ணமாய் வானில் தோன்றி
எண்ணமாய்த் தோகைவிரித்து
உயிராய்கனவில் பாட்டுப்பாடி
காற்றாய் மூச்சில் கலந்தவளே!

மழைத்துளியாய் மண்ணில் வீழ்நது
பனித்துளியாய்ப் பூவில் வாழ்ந்து
மேகமாக வெண் பட்டாடையணிந்து
துணையாக வழி நடந்தக் கண்ணே!

காலையில் கதிராய் ஒளிர்ந்தாய்
அந்தியில் நிலவாயப் பூத்தாய்
வானிலே மின்மினிப் பூச்சாய்
கடலிலே சிப்பியில் முத்தாய்!

மழலையின் மொழியிசைப் பாட்டாய்
குமரியின் கொஞ்சும் பூந்தமிழாய்
எத்தனைப் பார்வைகள் உன்னில்
அத்தனையும் கவிதையாய் என்னில்!

எழுத்தெடுத்துக் கோர்த்துப் பார்த்தேன்
வார்த்தையாய் வந்து நின்றாய்
வார்த்தையை சேர்த்துப் பார்த்தேன்
அங்கும் காவியத் தமிழாய் நீ!

எனக்கொன்றும் வேண்டாம் தாயே!
நீ மட்டும் போதுமென் தமிழே!
வருவாயா தங்கத்தேரே வரம்
தருவாயா எந்தனுயிர் வாழ்வின் வரமே!
இன்னும் வாசிக்க... "காற்றாய் மூச்சில் கலந்தவளே! "

Saturday, August 11, 2012

காலத்தின் கண்மணிகள்...!


கோடில்லா நீலவானில்
கோலமிடும் மின்னல்!

நிலவுகரைந்த நாளும்
மின்னும் விடிவெள்ளி!

தனித்திருக்கும் போதும்
நினைத்திருக்கும் மனம்!

தான்பசித்தே இருந்தாலும்
பிள்ளையை ரசிக்கும் தாய்!

உயிரழிந்தே போனாலும்
வாழ்ந்திருக்கும் தியாகம்!

இலையாய் உதிர்ந்தாலும்
உரமாகும் உயிரினங்கள்!

ஏழையாய்ப் பிறந்தாலும்
ஏற்றமிகு மனம்கொண்டோர்!

காலத்தின் கண்மணிகளிவர்
இவர்வாழ வாழும்வாழ்வே
வையகத்தில் பெருவாழ்வு!
இன்னும் வாசிக்க... "காலத்தின் கண்மணிகள்...!"

Friday, August 10, 2012

ஆமைகள்...!

முயலாமையாலே  இல்லாமை சூடின்
வாழ்வே கனவாகும்!
கல்லாமையாலே அறியாமை வந்தால்
எதிர்காலம் பொய்யாகும்!

தேடாமையாலே தெரியாமை வாழின்
நினைவும் குருடாகும்!
எண்ணாமையாலே எழுதாமை நேரின்
கவிதையும் உயிரிழக்கும்!

தேற்றாமையாலே ஆற்றாமை விளையின்
கண்ணீரே கதைபாடும்!
பகிராமையாலே புரியாமை வருமின்
உறவே பிரிவாகும்!

தீண்டாமையாலே கூடாமையிருப்பின்
ஒற்றுமை பாலையாகும்!
பொறாமையாலே போற்றாமை உயிர்ப்பின்
பகையே உறவாகும்!

உண்ணாமையாலே உறங்காமை நேரின்
உலகே கசப்பாகும்!
கொடாமையாலே கொள்ளாமை வந்தால்
வாழ்வில் அர்த்தமில்லை!

இறவாமையென்ற பொன்னாமை தேடல்
என்னாளும் நலமாகும்!
வாய்மை நேர்மை உண்மை மேன்மை
இதுவே உயர்வாகும்!
இன்னும் வாசிக்க... "ஆமைகள்...!"

Thursday, August 9, 2012

முதல் புத்தக வெளியீட்டு விழா...!தென்றலில் பவ்வியமாய் பவனி வந்து
எல்லோரின் சிந்தையிலும் உள்நுழைந்து..
தங்கள் விமர்சனங்களால் வளர்ந்து....
தமிழ் முத்துக்களால் கோர்த்தெடுத்த
கவிதைப் பூமாலை தென்றலின் கனவு 
என் முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கும்....

எண்ணங்களை எழுத்தாக்கி
எழுத்துக்களால் நலம் பகிர்ந்து
வலை உலகில் நட்பு வலைவீசி
நானிலம் தோறும் பரவிகிடக்கும்
சகோதர உறவுகளை...
சிங்காரச் சென்னையில் சிறப்பாக
சந்தித்து மகிழ நிகழவிருக்கும்
சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கும்.....
அனைவரையும் வருக வருகவென அன்போடு அழைக்கிறேன்.
பெண் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதிபடுத்திக்கொள்ளவும்.  
சசிகலா அழைபேசி எண்  :  9941061575.                                           
இன்னும் வாசிக்க... "முதல் புத்தக வெளியீட்டு விழா...!"

Wednesday, August 8, 2012

தாய்மை !


பூமாதேவி வடிவெடுத்து மண்ணாய் உருமாறி,
உதிரும் விதைக்கெல்லாம் உயிர் கொடுக்கும்-தாய்மை!
கடலாகி வானாகி வாழும் உயிர்க்கெல்லாம்,
காவலாகி வழியாகி ஒளியுமாகி காக்கும்-தாய்மை!

மொட்டாய் மலராய் காயாய்க் கனியாய்,
விதையாய் செடியாய் மரமாய் வேராய்வாழும்-தாய்மை!
கல்லுக்குள் வாழும் தேரைபோல் கருவறையில்,
மீனாய் நீந்திய உருவில்லா நமக்கு உயிரீந்த-தாய்மை!

சொல்லின்றிப் பொருளின்றி பசித்தழுத போது,
கண்ணே மணியே எனக்கொஞ்சி உதிரமீந்ததும்-தாய்மை!
துன்பமெல்லாம் தான்சுமந்து இன்பம் நமதாக்கி,
இனிமையெனும் அறிவூட்டி இதயமாய் வளர்த்ததும்-தாய்மை!

வடிவங்கள் வேறுவேறு வாழ்வியலும் அப்படியே,
அட்டையாய் உறிஞ்சிடினும் அன்பாய்க் கொடுப்பது-தாய்மை!
''தாய்-மெய்"மற்றெல்லாம் பொய்யாகக் கூடும்,
இதுண்மை என்பதன் உள்மறைப் பொருள்தானோ-தாய்மை!

முகநூளில் தமிழ்ச் சங்கம் எனும் குழுமத்தில் வைத்த போட்டிக் கவிதைகளில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
இன்னும் வாசிக்க... "தாய்மை !"

Monday, August 6, 2012

புரியாத விசித்திரமாய் மானுடம்!


புவியென்ற அழகான வாடகைக் கூட்டின்
புரியாத விசித்திரமாய் மானுடம்!
புன்னகைப் பூவேந்திய வதனங்களோடு
பொய்தேடும் அவலங்கள்!

ஆசைசெல்லும் பாதையில்தானே உயிர்
ஜனனங்களின் விளைச்சல்கள்!
ஆவல்கொண்டவர் பார்வையில் உதிப்பதுவே
மின்னும் விடிவெள்ளிகள்!

பாசங்கொண்ட இதயங்களில் பதிவிருக்கும்
கொடிய மனோபாவங்கள்!
சுயம்வாழ விடும் மூச்சில் நஞ்சுகொஞ்சம்
நடமாடக் கண்டேன்!

மருந்தென்று அதையுரைத்து விருந்துவைத்து
அழைக்கின்ற நிலையுணர்ந்தேன்!
மறைத்துவைத்த உண்மைகள் சாட்சியோடு
சபைநடுவில் வருகையிலே!

மனக்கசப்பாய் அதுமாறி உறவை கொச்சையாக்கி
நிம்மதி பறிக்கக் கண்டேன்!
பார்வைகள் பட்டுப்போயின் பாசங்கள்
மனதில் வேஷங்களாய்!

நம்பிக்கைப் பொய்த்துப்போயின் வாழ்வில்
இல்லறமும் நல் அறமில்லை!
இதயத்தின் பார்வையில் இனிமை இல்லையெனில்
இறப்பது மனித நேயங்களே!

நாவில்வாழும் இனிமையும் அன்பும் மனிதர்
இதயத்தில் இருப்பதே நற்பண்பு!
கற்பொன்றும் உடலின் சொந்தமல்ல-அது
உள்ளத்தின் கண் அறிதல் நன்று!
இன்னும் வாசிக்க... "புரியாத விசித்திரமாய் மானுடம்!"

Saturday, August 4, 2012

வரமாய் உனைத்தந்து ...!


தாய் அவள் அரவணைப்பில்
தழைத்த என் உயிர்மூச்சு
தாயவள் போனபின்னும்...
தாயாய் எனை வாழவைத்து!

தானே முன் வந்து
வரமாய் உனைத்தந்து
வாழ்வாய் நிலைத்து விட்ட
என் தமிழே!

காலமென்ற தேடலில்
கண்டெடுத்த நல்முத்து
காவலென்றே எனைக் காத்து
இனிக்குமுந்தன் சொல்முத்து!

இருப்பதெல்லாம் அன்பென்றால்
இழப்பதென்னவோ வம்பு.

காப்பேன் எனக்கூறி
காத்திருப்பில் நானிருக்க
காலமது கழியுமுன்னே
கனிந்திடுமோ காதலது.

உனக்காக பேசிடுதே
உனைக் கண்டே உருகிடுதே
இனிக்குமுந்தன் செந்தமிழே.


வா என்றேன் வரவில்லை
தா என்றேன் தரவில்லை
போ என்றேன் போனதென்ன மாயமோ?

நான் என்ற கூட்டினிலே
தஞ்சமென நீயும் வந்தாய்
வரவென்றே அன்பு வைப்போம்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்.

வேண்டாம் என்று ஏதுமில்லை
வேண்டுவதெல்லாம் புவி நலமே!

கோடி கோயாய் சேர்த்தாலும்
கூட வருவதென்ன ஏதுமில்லையே.

சந்தோஷமாக வாழ
சட்டம் தேவையில்லை
சர்ச்சையும் தேவையில்லை
சந்நிதியாய் அன்பு போதும்.
இன்னும் வாசிக்க... "வரமாய் உனைத்தந்து ...!"

Thursday, August 2, 2012

தீண்டாமை..!


ஆடிக்கு ஆடியும் போச்சி
ஆரவார கல்யாண தேதியும்
வந்து வருஷம் நாலு ஆச்சி...

தேவதையெனத் தேடிவந்தே
தேனொழுக பேசி நின்னு
நாடி வந்த கதை என்ன சொல்ல.

நாடகமாத்தான் ஆச்சுதே
என் வாழ்வதுவும்...
நான் நடிக்கும் மனைவி
கதாபாத்திரத்தில்....

கட்டான உடம்புக்காரி
கரிசன பேச்சுக்காரி
காது மூக்கு குறையுமில்ல
கல்யாண வாழ்வில் நிறைவுமில்ல..

அடி வயிற்றை தொட்டுப்பார்த்தே
அன்றாடம் அழுதழுது மாய்ந்து போனேன்
தெருவோர பேச்சுச் சத்தம்
தேள் கொடுக்கா கொட்டிடுதே.

கோவில் குளம் தேடிப்போய்
மண் சோறு உண்ட பின்னும்
மண்பாண்டம் உடைந்த கதையா
மருத்துவமும் கைவிடவே..

தேனொழுக கொஞ்சியவனும்
அம்மாவின் தேவையறிந்தே
அடுத்த பெண்ணைப் பார்த்தான்.

வேண்டாத தெய்வமில்ல-எனை
வேண்டுமென யாரும் எண்ணலியே
தீண்டாமை ஒழிந்த பின்னும்
சடங்குகளில் தள்ளி வைக்கும்
 நியாயமென்ன....?

இன்னும் வாசிக்க... "தீண்டாமை..!"

Wednesday, August 1, 2012

என்னவனைக் காணாமல்...!


வாசலெங்கும் தோரணமிட்டு
வாத்தியங்கள் முழங்கக்கேட்டு
வாசல் வந்தே நானும் நிக்க
வண்டாட்டம் கண்ணிரன்டு_பூச்
செண்டோட வந்து நிக்க
வாயடைத்து நானும் நின்னேன் 
வந்தவற காணலியே

மூச்சிழுத்து முனகி முனகி
முன்னும் பின்னும் ஓடிப்பிடித்து
ஓர் அணி ஜெய்க்கும் 
கபடியாட்டம் அங்கும் காணலியே.

கிட்டிப்புள் தட்டிவிட
புள் போகும் திசைநோக்கி
புயலென ஓடும் கூட்டம் (அங்கும் காணலியே)

வழுக்கு மர உச்சிதனில்
பரிசொன்னு காத்திருக்க
உசுருக்குள் புகுந்தவனை
உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலியே)

இரு பிரிவாய் சேர்திழுக்க
ஒரு புறமாய் வந்துசேரும்
பலம் சொல்லும் கயிறாட்டம் (அங்கும் காணலியே)

கண்கட்டி சுத்திவிட்டே
காலாட்டம் போடக்கண்டு
கதைத்திருந்த ஒரு கூட்டம்
சிரித்தடங்கும் வேளையிலே
சிறந்திடுமே உறியாட்டம் (அங்கும் காணலியே)

பருவ பெண்கள்
பல்லாங்குழி ஆட்டமாட
தூண்டிலென விழி வீச
துரத்திடுதே ஒரு கூட்டம்  (அங்கும் காணலியே)

கண்களிரண்டை கட்டிவிட்டு
தொட்டிடவே தொடர்ந்து வந்து
தூரத்தே விலகி ஓடும் கண்ணாமூச்சி . (அங்கும் காணலியே)

ஆலமர விழுதில் தொங்கி
ஆட்டமாடும் ஊஞ்சலாட்டம்  (அங்கும் காணலியே)

தத்தித் தத்தி நடந்து வந்து
தாவி குதித்தே முன்னே வரும்
சாக்கு பையாட்டம்  (அங்கும் காணலியே)

நிலா வெளிச்சம் நீண்டிருக்க
பச்சைக் குதிரை தாண்டிஆட
பார்த்திருக்கும் கூட்டமிங்கே . (அங்கும் காணலியே)

வட்டமான கூட்டத்திலே
தந்திரமாய் நுழைந்திடவே
தாளத்தோடு பாட்டிசைக்கும்
ஆடு புலி ஆட்டம் பாரு  (அங்கும் காணலியே)

வெட்டவெளி மைதானத்தில்
பட்டமிட்டு பார்த்து மகிழும்
கூட்டமுண்டு  (அங்கும் காணலியே)

எங்கு தேடியும் காணமல்
ஏங்கிப் போய் நானும் வந்தேன்
என் வீட்டுத்திண்ணையிலே
மடிக்கணினி பார்த்து நிக்கான்
மன்னவன என்ன சொல்ல?
இன்னும் வாசிக்க... "என்னவனைக் காணாமல்...!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி