Ads 468x60px

Tuesday, July 31, 2012

நிகழ்வனைத்தும் பொக்கிஷமாய் !நாவசைத்து இசையெடுத்து
நாமுறங்க பாட்டெடுப்பாள்-அவள்
தூணருகே சாய்ந்துறங்க
தூளி ஆட கையசையும்!

பூம்பாதம் தானசைய
பொன்னெழிலாய் பூரிப்பாள்
நிலவதனை உடனழைத்து
நித்தம் நூறு கதை சொல்வாள்!

கோபத்தை தான் ரசித்து
கொஞ்சு மொழி பேசிடுவாள்!
பசித்திருந்தால் துடித்திடுவாள்
பால் சோறு ஊட்டிடவே-நமை சுமந்து
பாதையெங்கும் அலைந்திடுவாள்.

உச்சிதனில் குடுமியிட்டு
ஊர் பார்க்குமென திருஷ்டி பொட்டுமிட்டு
நடையதை நாட்டியமாய்
குறுநகையதை ஓவியமாய்
நிகழ்வனைத்தும் பொக்கிஷமாய்
நினைவதினில் சேமித்து..!

வாழ்நாளை நமதாக்கும்
தாய் தந்தை நலம் காப்போம்!

29 comments:

 1. ஹய்யோ... அந்த குழந்தை படம் செம க்யூட். கவிதையும் கூடத்தான். அழகாய் மழலையின் பார்வையில் அன்னையை போற்றுவதுடன் தாய் தந்தை நலம் காக்கும செய்தியும் சொல்லியிருப்பது வெகு சிறப்பு. சூப்பர் தென்றல்.

  ReplyDelete
 2. அழகான குழந்தை . அருமையான வரிகள். அற்புதம் அக்கா...

  ReplyDelete
 3. எச்சில் வாய்தனை வாசம் பிடித்து...
  கன்னத்தினை இதமாக கடித்தே இழுத்து நெத்திதனை முகர்ந்தே வாழ்வின் சொர்கமே இதுதானென்று வாழும் பெற்றவர்களின் உள்ளத்திற்கு ஈடாக சொல்ல வேறேதுமில்லையே இவ்வுலகில்... நிலவினை விட குளிர்ச்சி பொருந்திய தாயல்லவா... பொறுமைக்கு எடுத்துக்காட்டாம் பூமா தேவி..அவளே இப்போதெல்லாம் பொறுமை காப்பதில்லையே. பூகம்பம் எனும் பெயரில் பொங்கி எழுந்து விடுகிறாள்...

  அதனை கூட செய்வதில்லையே நம் தாயெனும் பொறுமையின் உருவாய் இருக்கும் உலகின் பொதுவான தெய்வம்... வயிற்றில் பத்து மாதம் சுமந்தால் தாய் என்றால்.. தன் மார்பிலும் தோளிலும் சுமந்து இந்த உலகினை நமக்கு அறிமுகம் செய்து வைத்தது நம் தந்தை எனும் ஒப்பில்லா தெய்வம்தானே...

  நாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோது நாம் செய்த குரும்புத்தனமென்னும் அத்தனை சேட்டைகளையும்
  பொறுத்து நம்மை உயர்வடைய அவர்கள் பட்ட பாட்டை இப்போது நாம் நினைவில் வைத்து அவர்களின் வயதான காலத்தில் கோபம் கொள்ளாமல் பொறுமை காத்து அவர்களை நம் கண்ணுக்குள் வைத்து காப்போம்... பிள்ளைகளே... பாராட்டுக்கள் சசி... இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தேவையான ஒன்றுதான்... மறந்து விட்ட பிள்ளைகளே இனியாவது மனிதர்களாக மாறுங்களேன்...தாய் தந்தையை காப்பற்றுவதன் மூலமாக.

  ReplyDelete
 4. அடடே..தோழர் தேவாதிராஜன் கருத்துரையில் ஒரு பதிவே இட்டு விட்டாரே!..
  கவிதை பிடித்தது சகோதரி..அப்புறமென்ன..வாக்கு இட்டு வாக்கு எண்ணை போடவேண்டியதுதான்..

  ReplyDelete
 5. அழகு
  குழ்ந்தைபோலவே கவிதையும்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கவிதை அழகு

  //உச்சிதனில் குடுமியிட்டு
  ஊர் பார்க்குமென திருஷ்டி பொட்டுமிட்டு//

  இந்த வரிகள் மிக அழகு ஒரு தாய் தன் குழந்தையின் நினைவுகளைக் கூறுவது போல் உள்ளது.... ஆனால் தந்தையைப் பற்றி கூற மறந்து விட்டீர்களோ ஹா ஹா ஹா

  ReplyDelete
 7. கவிதையும் அருமை குழந்தை படமும் அருமை (TM 4)

  ReplyDelete
 8. படமும் கவிதையும் அழகு...

  ReplyDelete
 9. //வாழ்நாளை நமதாக்கும்
  தாய் தந்தை நலம் காப்போம்!
  //

  கண்டிப்பாக

  ReplyDelete
 10. ஒரு குழந்தை வளர்வதை பெற்றோர் எப்படி ரசிப்பார்கள் என்பது நான் பெற்றோர் ஆகும் போதுதான் உணர முடிகிறது

  ReplyDelete
 11. குழந்தை என்றால் அனைத்தையும் இழக்கச் சம்மதமே! அத்தனை இன்பம்...இன்பம்...
  அப்படி ஒரு கவி அருமை. நான் அனுபவிப்பது. இன்று மாலையும் அவரைக் கொஞ்சப் போவேன் ஆ!.....நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 12. கவிதை, குழந்தை போல் அழகாக உள்ளது.
  நன்றி சகோதரி.

  நன்றி.
  (த.ம. 6)

  ReplyDelete
 13. அழகான கவிதை ......
  அழகு என்று நான் சொல்லவா வேண்டும்.....

  ReplyDelete
 14. குழந்தை
  கவிதை
  அழகு சகோ

  ReplyDelete
 15. கவிதையும் அழகு,குழந்தையும் அழகுன்னு பெரும்பான்மையானவங்க கருத்து சொல்லிருக்காங்க. பெரும்பான்மைல ஒருத்தி தானே நானும்.... அதனால நானும் அதையே சொல்லிப்புட்டு ஜுட் விடறேன். சூப்பர்க்கா.

  ReplyDelete
 16. நிகழ்வனைத்தும் பொக்கிஷமாய்
  நினைவதினில் சேமித்து..!

  வாழ்நாளை நமதாக்கும்
  தாய் தந்தை நலம் காப்போம்!“

  அருமையான வரிகள்.
  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 17. தாயன்பையும்,நேசத்தையும் அழகாய் எடுத்து கூறும் வரிகள்..அருமை சகோ..தாய்க்கு கோயில் கட்டவேண்டாம் வரும் இளைய சமுதாயம்...முதுமையில் நேசத்தை பகிர்ந்தாலே முதியோர் இல்லம் ஒழியும்.

  ReplyDelete
 18. குழந்தை போலவே கவயும் அருமை......

  ReplyDelete
 19. படமும் கவிதையும் மனதை கொள்ளை கொண்டது
  த.ம.8

  ReplyDelete
 20. இங்கு ஒரு போட்டி!குழந்தைக்கும்,கவிதைக்கும்!யார் அழகென்பதில்!

  ReplyDelete
 21. தோழி... குழந்தைகளை கவனமாக வளர்த்த பல பெற்றோர்கள் நிற்கதியாக ஆனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளனர்... கல்நெஞ்சம் கொண்டு வயதான பெற்றோர்களை நிற்கதியாக்கிய நபர்கள் இந்த கவிதையை பிடித்து தங்கள் பெற்றோர் வளர்க்க சிரமபட்ட நிகழ்வுகளை எண்ணி பார்க்கவேண்டும்.. உங்கள் கவிதை அருமை!

  ReplyDelete
 22. குழந்தையும் கவிதையும் அழகு!

  ReplyDelete
 23. குழந்தை செய்யும் குறும்புகளும் அதற்கு நாம் செய்யும் அலங்காரங்களும் எப்போதும் நினைவில் நிற்பது. தங்களின் கவிதை அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. அருமையான குழந்தை படத்தை தேர்ந்தெடுத்து அழகாய் செதுக்கிய ஒர் கவிதை

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி