Ads 468x60px

Saturday, July 21, 2012

காத்திருந்த பொழுதில் !


அத்திப்பழம் பெருத்திருக்கு
அதிகாலை வானம் விழித்திருக்கு
தண்ணி பாச்ச போகணுமே
தலப்பா எடு சின்னப்புள்ள!

நீச்ச தண்ணி எடுத்து வாரேன்
 குடிச்சிட்டுப் போங்க மாமா!

சுட்டெரிக்கும் சூரியனால்
சுருண்டிடுமே செங்கதிரும்
சேத்து நடை வெடிக்குமுன்னே-போய்
தண்ணீர் பாச்சணுமே செல்லப்புள்ள!

நாத்து நட நானும் வரேன்
கோகிலமும் கூட வரா
சேர்ந்துபோவோம் ...
செத்த இரு மச்சான்!

ஆத்தங்கரை குளிக்கபோயி
அரைநாழி காக்க வைப்ப
எட்டுமொழ புடவ சுத்தி
என்னையும் தான் ஏங்க வைப்ப!

ஒத்த பொம்பள புறப்படுமுன்
ஒரு அறுவடையும் முடிஞ்சிடுமே
பொறுத்து வாடி பொம்மியம்மா
கண்ணே பூமியங்கே காத்திருக்கும்!

26 comments:

 1. அருமையான நாட்டுப்புற கவிதை!

  ReplyDelete
 2. கிராமத்து சூழலை அழகா கொண்டு வந்திருக்கீGக சசி கவிதை ரொம்ப அருமை..

  ReplyDelete
 3. அருமையான ஒரு விவசாயி அழகாக பாடும் பாடல்...நாத்து நட போவதற்கு பொஞ்சாதி கிட்ட சொல்லி விட்டு போகும் அவனின் அந்த இயல்பான பேச்சும்...சந்தடி சாக்கில் பொம்பளைங்க எங்காச்சும் கெளம்பனுமுன்னா எவ்வளவு நேரம் ஆக்குவாங்க என்கிறதையும் சொன்னானே... அதுதான் சிறப்பு...

  வேலைக்கு போவதற்கு கடிகாரம் பார்க்காமல்
  நேரத்தை உணர்வதை சூரியனும் உதிச்சிருப்பதை பார்த்து சூரியன் தலைக்கு நேரே வந்தா உச்சி பொழுதாயிருச்சு என்று வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.. ஓடவில்லையா அவர்களின் காலங்களும்.. இப்போதும் ஓடத்தான் செய்கிறது.. நிலைதடுமாறி... அருமையான பாடல் வரிகள் சசி.. பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. தேவாதி ரஜன் அவர்களின் பின்னூட்டம்
  மிக மிக அருமை
  அருமையாக ரசித்து எழுதியுள்ளார்
  என் கருத்தும் அதுவே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்களின் அன்பான வாழ்த்தினை தலை சாய்த்து ஏற்றுக்கொள்கிறேன்..என்றுமே...

   Delete
 5. // ஒத்த பொம்பள புறப்படுமுன்
  ஒரு அறுவடையும் முடிஞ்சிடுமே// ரொம்ப ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.. நாட்டுபுறப் பாடலில் பெண்களின் இயல்பையும் உழவனின் கடமை உணர்வையும் சேர்த்துக் கூறி இருப்பது ரசித்தேன் படித்தேன் மகிழ்ந்தேன்

  TM 4

  ReplyDelete
 6. நல்ல கவிதை... எங்கள் கிராமமே கண் முன் வருகிறது...
  பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் ! (த.ம. 6)

  ReplyDelete
 7. அடாடா... கிராமத்தைக் கண்ணால பாக்காம வாழற என்னை மாதிரி ஜீவன்களுக்கு இந்த மாதிரிக் கவிதைகள் வெல்லக்கட்டி அக்கா. அடிக்கடி வெல்லக் கட்டி தாங்க. (என் தளம் வந்து எல்லாக் கருத்தையும் பாத்தீங்களா?)

  ReplyDelete
 8. kiraamathukku azhaithj sentrathu-
  vaazhthukkal!

  ReplyDelete
 9. அழகான நடையில் அருமையான நாட்டுப்புறக்கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மண்ணின் மைந்தர்களான கிராமத்து ஜனங்களின் எளிய நடையில் அழகான கவிதை மனதைக் கொள்ளையடித்தது.

  ReplyDelete
 11. கிராமச் சூழலை மனதில் கொண்டு வந்து அழகாக எடுத்துரைத்த இந்த கிராமிய கவிதை என்னையும் தான் ஏங்க வைக்கிறது

  ReplyDelete
 12. என்ன இயல்பான நடை!.கிராமிய மணம் கவழும் அற்புதமான நாட்டுப்புறக் கவிதை.

  ReplyDelete
 13. காத்திருந்த பொழுதில்
  பூத்து வந்த பாடல் உங்களது சசிகலா.
  சூப்பர்ங்க.

  ReplyDelete
 14. சீக்கிரமா முதலிடத்தை பிடிக்க
  வாழ்த்துக்கள்! தமிழ் மணத்தை
  சொன்னேன்!

  ReplyDelete
 15. இதைத்தான் கிராமிய எக்காளப் பாடல்கள் என்பார்கள்..
  ஒருவருக்கு ஒருவர் கிண்டலடித்து பாடக்கூடிய பாடல்கள்..
  அருமையா இருக்கு சகோதரி..

  ReplyDelete
 16. அச்சச்சோ... என்னப்பா இப்படி எழுதிட்டீங்க... பாவம் பொம்மி, மச்சானோடு சோடி போட்டு போலாமுன்னு ஆசையா இருந்திருப்பா...

  கிராமிய நடையில் மனங்கவரும் வரிகள். காதலும் கடமையும் போட்டி போடும் அழகு. பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 17. அருமையான நாட்டுப் புற கவிதை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. கிராமிய மணம் கமழ கமழ அழகானதொரு கவிதை படிப்பவர்களை வயல் காட்டுக்கே இழுத்து சென்று விடும்.

  ReplyDelete
 19. கிராமத்து நடையில் கிராம வெள்ளந்திகள் பேசுவது போலவே உள்ளது உங்கள் எழுத்து...

  ReplyDelete
 20. அழகான கிராமத்து கவி....
  அருமை அக்கா....

  ReplyDelete
 21. கிராமிய மணம் அற்புதம்!நன்றி!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி