Ads 468x60px

Thursday, July 19, 2012

உறக்கமென்ன மானிடரே !


உயிர்முயற்சி இருந்தால் மட்டுமே
முட்டையிலிருந்து குஞ்சும்
வெளிவர முடியும் !

கருவிலிருக்கும் குழந்தையும்
அசைவோடு இருந்தால் மட்டுமே
அகமகிழ்வாள் தாயும் !

நிலத்தில் வீழ்ந்ததும்
நிமிர்ந்தெழுந்து துள்ளி
ஓடும் கன்றுக்குட்டியையே
தாய்ப்பசுவும் சேர்த்தணைக்கும் !

பசியென்றுணர்த்த
வாய்திறந்தால் மட்டுமே
தாய்ப்பறவையும் ஊட்டிவிடும் !

மலரும் பூக்கள் எல்லாம்
மணிமகுடத்தை மட்டுமே
அலங்கரிக்க மலர்வதில்லை!

தோல்வியே முன்நின்றாலும்
துவண்டுவிடாமல் முயற்சிப்போம்
ஆமையைப் போல்.

உயிரில்லா பொருட்களையே
உழல வைக்கும் நம் இனம் !
உதிரத்தில் தமிழ் உணர்விருக்க
உறக்கமென்ன மானிடரே
உயிர்த்தெழுவாய் தமிழா
தமிழினம் வாழ்ந்திடவே!

41 comments:

 1. முயற்சி இருந்தால் முன்னேற்றம் என்பதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சசி..அருமை..

  ReplyDelete
 2. தோல்வி என்பது
  துவண்டுவிட அல்ல
  வெற்றி போரட்டத்தின்
  வேர்வையை துடைக்க!

  மரணத்தை நினைத்து
  மலர்கள் அழுவதில்லை
  வீழ்ந்துபோனாலும்
  வீரிய விதைக்கு
  வித்திட்டுபோகின்றன!
  என்ற சிந்தனையுடன் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகையும் முத்தான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

   Delete
 3. உதிரத்தில் தமிழ் உணர்விருக்க... அருமையான வரிகள். உறக்கம் கலைந்து தமிழினம் தலைநிமிர தட்டி எழுப்பும் கவிதை வரிகள். சூப்பர் தென்றல்.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தரும் வரிகள் கண்டு மகிழ்ந்தேன். நன்றி வசந்தமே.

   Delete
 4. Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. உங்கள் கவிதையை படிக்கும் பொழுது பாரதிதாசனின் வரிகள் தான் நியாபகம் வருகிறது
  உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா

  ReplyDelete
  Replies
  1. பாரதிதாசனின் வரிகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க.

   Delete
 6. உறக்கத்தைத் துறந்து உயிர்த்தெழுந்துவிட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மகிழ்ச்சிங்க.

   Delete
 7. கவிதையின் வரிகள் அனைத்தும் உணர்ச்சி உள்ளதாக உள்ளது...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. கருவிலிருக்கும் குழந்தையும்
  அசைவோடு இருந்தால் மட்டுமே
  அகமகிழ்வாள் தாயும் !//
  உண்மையான வரிகள்.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. எழுச்சி வரிகள் முயன்றால் அனைத்தும் சாத்தியம்...

  அழகிய கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. அருமையான உவமைகள்
  மிக அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் தொடர் வருகையே எனக்கு ஆசிர்வாதமாய். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 11. சோம்பித்திரிவோரை பெற்றவளும் ஏற்பதில்லை அவனையும் அவனின் செயலையும். மாறாக அவனுக்கு ஊக்கத்தை ஊட்ட முயற்சி செய்வார்.
  இதுபோன்ற மூடர்களை திருத்தும் முயற்சி நல்லதொரு வேலைதான் சசி.. எனக்கென்னவென்று போகும் இந்த காலத்திலும் மற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களின் உன்னத பணி சிறக்க என் வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த சேவைப்பணி...

  விலங்குகளோ, பறவைகளோ பிறந்த சில மணிநேரத்தில் எழுந்து நின்று விடுகின்றன. ஆனால் நம்முடைய மனித இனம் மட்டுமே எழுந்து நிற்பதற்கே மாதக்கணக்கில் ஆகிறது... அப்பேற்பட்ட உயர் பிறவியில் பிறந்த நாம் இன்னமும் சுறுசுறுப்பின்றி இருந்தால் நாம் கட்டியிருக்கும் துணியும் காணாமல் போய்விடும். காலம் அதுமாதிரி ஒரு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மனிதா இனியாவது காலம் தெரிந்து விழித்துக்கொள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் மேலும் உங்களுக்கு சசி...

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் தங்கள் வரிகள் அருமை. நன்றி நட்பே.

   Delete
 12. உறங்கி கிடக்கும் மானிடரின் தமிழ் உணர்வை தட்டி எழுப்பும் புயலாக வீசிய தென்றல் சசிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோவின் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன்.

   Delete
 13. அருமையான கவிதை சகோ (TM 7)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 14. மிகவும் அருமையான வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 15. வாசிக்கும்போதே உடல் ஒருமுறை சிலிர்த்தது. மிகவும் அற்புதமான உவமைகளைக் கையாண்டிருக்கிறீர்கள் சசிகலா. சோர்ந்து விழும் மனதை தூக்கி நிறுத்தும் வரிகளுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. சகோவின் உணர்ச்சிமிகும் வரிகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 16. // உயிர்த்தெழுவாய் தமிழா
  தமிழினம் வாழ்ந்திடவே! //

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு – என்று முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில உங்கள் உணர்வும் உதித்தெழுகின்ற கவிதை வரிகளும் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தரும் வரிகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 17. //உயிரில்லா பொருட்களையே
  உழல வைக்கும் நம் இனம் !
  உதிரத்தில் தமிழ் உணர்விருக்க
  உறக்கமென்ன மானிடரே
  உயிர்த்தெழுவாய் தமிழா
  தமிழினம் வாழ்ந்திடவே!//
  அற்புதமான தென்றல் .... அருமை சசி அக்கா ...

  ReplyDelete
 18. எழுச்சி கவிதை - அருமைங்க சசிகலா.

  ReplyDelete
 19. நாவுறங்கா தமிழனின் தூக்கம்
  நாளையாயினும் கலையுமா?
  நாடாளப் பிறந்த தமிழன்
  நாலாய்பிரிதல்நியாயமா?
  நாசங்களும் மோசங்களும்
  நாம் தூங்கிப் போனதாலே!
  கவியின் அழைப்பு-அழகு!
  எழுவானா தமிழன்?
  வாழுமா தமிழ்?

  ReplyDelete
 20. தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியான வரிகள்! அழகான அற்புதமான கவிதை! வாழ்த்துக்களும் நன்றியும்!

  ReplyDelete
 21. சொன்னதெல்லாம் தமிழனுக்கு மட்டும்தானா.?

  ReplyDelete
 22. thannampikai kavithai arumai!

  ReplyDelete
 23. சிறந்த கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 24. கவிதை என்று ஏதோ எழுதி கழுத்தறுப்பவர்கள் மத்தியில் நல்ல கருத்தை (கரு)க'விதை' யாக மனதில் பதிக்கும் உங்களுக்கு மனம்திறந்த பாராட்டுக்கள். உயிர்த்தெழுவாய் தமிழா என்ற வரிகளை படிக்கும் மனமும் உடலும் சிலிர்த்தெழுகிறதே....உவமைகள் அருமையாக இருக்கின்றன.

  ReplyDelete
 25. அற்புதமான வரிகள்! என்னுடைய வலைப்பூவில் உள்ள விழுந்ததும் எழுந்திரு! எனும் கவிதையை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி