Ads 468x60px

Wednesday, July 18, 2012

வழிகாட்டுதல் நம்கடமை!பிள்ளையதை கையிலேந்தி வாழ்வுக்காய்
பிச்சை எடுக்கும் ஓர் கூட்டம்!
பட்டினியிருந்து காத்தவளும் தாய்தான்
 இங்கு பிள்ளை திருடி பட்டினி போட்டு
பிழைப்பவள் அவள் யாரோ?

அங்காடி தொடங்கி
ஆலயம் வரை அரங்கேற்றங்கள்!
சந்தை தொடங்கி சாலையோரத்திலும் !

புண்ணியமென்ற பெயரில்
இவர்கள் ....இப்புவியில்
வாழ்வை இழந்த சாபங்கள் !
அன்னதானமென்றே கொடுக்க
ஆலயத்தில் ஒரு வரிசை
அதிலும் பாவங்களுக்கிடமில்லை

இலவசமென்றே பெயர்சொல்லி
சம்பாதிக்கும் அரசாங்கமும்
சம்பளத்திற்கு இவரை
வேலைக்கமர்த்தி- வரும்
சந்ததிகள் வாழ வழிசெய்வாரோ?

பிறந்த நாளென்றே
பிச்சையிடும் ஓர் கூட்டம்
இவர்க்கு வாழ்வை பிச்சையிடுமோ?
 
இவர்களை சோம்பேறியாக்குவதே நாம்
பிச்சைியிடாது வேலை செய்ய
வழிகாட்டுதல் நம்கடமை!

20 comments:

 1. கடமையை செய்வதிலும் ஒரு தெளிவு இருக்கவேண்டும். பிச்சை இடுவதிலும் ஒரு வரைமுறையை நான் கையாளவேண்டும். இலவசம் என்பது மக்களை சோம்பேறிகளாக மாற்றிவிடும். இயலாதவர்களுக்கு ஈவதில் தவறில்லை... முயலாதவர்களுக்கு முயற்சியை ஊட்டுங்கள்..அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு பெரிய புண்ணியமாகும். கடமையை பிறருக்கு உணர்த்துவதும் ஒரு வகை கடமையே ஆகும்... பாராட்டுக்கள் சசி...நல்லதொரு தட்டி எழுப்பும் ஒரு பதிவு... தூக்கத்தில் இருந்து அல்ல. தூங்குவதை போல் நடிப்பவர்களை...

  ReplyDelete
 2. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டத்தை எப்பவோ அரசாங்கம் கொண்டு வந்தது.சரியான வழிகாட்டுதல் இல்லாமல் காலப்போக்கில் மறந்து விட்டார்கள்.திட்டத்திற்கு உயிர் கொடுத்தால் நாடு முன்னேறும். நல்ல பதிவு.

  ReplyDelete
 3. நல்ல அருமையான வரிகள் அற்புதம் சசி அக்கா.... ஆமாம் அக்கா பிச்சையிடாது வேலை செய்ய வழிகாட்டுதல் நம்கடமை!

  ReplyDelete
 4. நல்ல சிந்தனை தென்றல். பிச்சையிடுவதற்குப் பதில் உழைக்க வழிகாட்டினால் நன்றாகத்தான் இருக்கும. ஆனால் பிச்சையெடுத்து சுகம் கண்டு விட்டவர்கள் மாற மனம் வைக்க வேண்டுமே... அதுவும் கடினமான ஒன்று. மற்றபடி முயற்சித்தல் நம் கடமை என்பதை அழுத்தமாகச் சொன்ன கவிதை நன்று.

  ReplyDelete
 5. //வாழ்வை இழந்த சாபங்கள்// வலிகள் உணர்த்தும் வரிகள்
  //சந்ததிகள் வாழ வழிசெய்வாரோ?// உருபடுவதர்க்கு இந்நாட்டில் வழி சொல்வோர் மிகக் குறைவு தோழி
  ஆம் வழிகாட்டுதல் நம் கடமை தான் தோழி

  சிறந்த சிந்தனை உயர்ந்த சிந்தனை வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சிந்தனைகளுக்கும்

  ReplyDelete
 6. இவர்களை சோம்பேறியாக்குவதே நாம்
  பிச்சைியிடாது வேலை செய்ய
  வழிகாட்டுதல் நம்கடமை!

  பிரச்சனையினை உணர்வு பூர்மாகச் சொல்லி
  அதற்கான தீர்வினை அறிவுப் பூர்வமாக
  சொல்லிப் போகும் பதிவு
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமையான கசிதை சகோ, வழக்கம் போல்! (TM 3)

  ReplyDelete
 8. கவிதையில் சமூகத்தைக் குறித்த, உங்கள் ஆதங்கம்
  தெரிகிறது.
  நான் இரு சக்கர வண்டியில் செல்லும்போது, ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் SIGNAL - இல் நிற்கும்போது கைக் குழந்தையுடன் இவர்கள் பரிதாபமாக நிற்பதைக் காண்பேன்.. உண்மையில் இவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே. யாரும் இந்த சமூக அவலத்தைக் கண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

  ReplyDelete
 9. வழிகாட்டுதல் நம் கடமைதான்..நற்சிந்தனை..

  ReplyDelete
 10. இன்னல்கள் விழைந்தாலும்
  சன்னல்கள் உண்டென
  அன்னாருக்கு உரைத்தல் நன்று....

  ReplyDelete
 11. //இவர்களை சோம்பேறியாக்குவதே நாம்
  பிச்சைியிடாது வேலை செய்ய
  வழிகாட்டுதல் நம்கடமை!//

  அருமையான சிந்தனையில் அற்புதமான கவிதை...

  ReplyDelete
 12. நல்ல சிந்தனை..

  ReplyDelete
 13. நல்ல கவிதை சகோதரி...! நல்ல கருத்துக்கள்...!

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 7)

  "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete
 14. "வழிகாட்டுதல் நம் கடமை" நல்ல தீர்வு.

  ReplyDelete
 15. பசித்திருப்பவனுக்கு மீன் களை தருவதைவிட அவனுக்கு மீன் பிடிக்க சொல்லிதந்தால் அவன் வாழ்நாள முழுவதும் கஷ்டப்படாமல் வாழ்வான் என்று சொல்லுவார்கள் அதைத்தான் நீங்கள் அழகாக கவிதை வடிவில் அள்ளி தந்திருக்கிறார்கள்

  ReplyDelete
 16. //பிறந்த நாளென்றே
  பிச்சையிடும் ஓர் கூட்டம்
  இவர்க்கு வாழ்வை பிச்சையிடுமோ?//
  சரியான சாட்டையடி பிறந்த நாள் என்றபெயரில் விளம்பரம் தேடிக்கொண்டு பிச்சைக்காரகள் ஆக்குகிறார்கள்.
  த.ம.9

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி