Ads 468x60px

Saturday, July 14, 2012

உத்தரவின்றி...!விழி பார்த்துப் பேசி
விரல் கோர்த்து நடந்து
முறையேதும் இல்லாமல்
முடிந்த  திருமணங்கள்!

முகம் சுளிக்க வைக்கும்
பார்வைகள்..
முன்னெதிரே முறைத்துப்
போகும் ஏளனச் சிரிப்புகள்...
தென்றலது வாசலை தீண்டுமுன்னே
தேவையெதுவென தெரியுமுன்னே!

முகம் சோர்ந்து
முன்னே வயிறும் தள்ளி
கால்  தடுமாறி நிற்க
அன்பாய் அருகிலிருந்து
அள்ளி அரவணைக்க
அன்னையவளும் இல்லாமல்
சோர்ந்து முடங்கிய  வேளையிலே
சேர்த்தணைத்து  தேற்றும்
தந்தையும் உடனில்லாது
அனாதையாய் நிற்கும் போதே
ஆறமர  யோசிக்கிறது நெஞ்சம்!

வாசலில் போய் நிற்காதே
நிலம் நோக்கி நடந்திடு
நேர்த்தியான எண்ணம் கொள்
நெஞ்சத்தில் உறுதி வை
வார்த்தையில் செழுமை வேண்டும்
விருந்தோம்பலில் சளைக்காதே
பிள்ளைகள் மாண்புறவே
தாயவளின் நன்மொழிகள் !
உள்நுழையும் காதலோ
ஒத்திவைக்கும் தேன்மொழிகள்!


27 comments:

 1. வாசலில் போய் நிற்காதே
  நிலம் நோக்கி நடந்திடு
  நேர்த்தியான எண்ணம் கொள்
  நெஞ்சத்தில் உறுதி வை
  வார்த்தையில் செழுமை வேண்டும்
  விருந்தோம்பலில் சளைக்காதே
  பிள்ளைகள் மாண்புறவே
  தாயவளின் நன்மொழிகள் !
  உள்நுழையும் காதலோ
  ஒத்திவைக்கும் தேன்மொழிகள்!

  கலக்கல் கவிதை நண்பரே ...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகையும் கலக்கல் வாழ்த்துரையும் மகிழ்வுரச்செய்தது நன்றிங்க.

   Delete
 2. சொல்லென்னா ஒரு கவர்ச்சி எனும் ஈர்ப்பில் விழுந்து ஒரு சில பெண்மை விட்டில் பூச்சிகளாய் தன் வாழ்க்கையை தானே அழித்துக் கொள்கின்றனர்...கேட்பதற்கும் ஆளின்றி ஆதரிப்போர் யாருமின்றி...பரிதாபத்திற்கு உரியவர்களாய் நம் உடன் பிறவா எண்ணற்ற சகோதரிகள் நிற்கதியாய் நிற்கும்போது பார்த்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாத நிலையில்.. வேண்டாமே இந்த அவலநிலை. நாமாகவே தேடிக்கொள்ளும் இந்த வாழ்க்கை.. நல்லதொரு கருத்தினை ஆழ்மனதில் பதியவைத்த சசிக்கும் என் மனம் திறந்த பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் தங்கள் கருத்தும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. அருமையான வரிகள். ஆழ்ந்த உட்கருத்து. பெண்க்ளுக்குத் தேவையான விஷயம் கவிதையாக இங்கே... அருமை தென்றல்.

  ReplyDelete
  Replies
  1. அது என்ன பெண்களுக்கு மட்டும் அம்மா அப்பா அரவணைப்பு இருவருக்கும் பொருந்தும்.

   Delete
 4. நல்ல வரிகள்... தேவை என வரும்போது தானே அருமை புரிகிறது!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தேவை என வரும்போது தான் தவிப்பே தெரிகிறது பிள்ளைகளுக்கு.

   Delete
 5. அருமையான கவிதை., முடித்த விதம் அருமை!

  ReplyDelete
 6. நாம் பொய்யாய்ப் போகுமட்டும்
  மாற்றங்கள் நம்மைத் தொடரும்
  நேற்று சரியென நாம் எண்ணியது
  இன்று கேள்விக்குறியோடு நம்முன்
  நாளை இன்றைய நினைவுக்கு
  பதிலுரைக்கும்.உங்கள் கவிதையில்
  வாழும் உண்மை எனக்குக்கூட
  காலம் கடந்த பாடம்.அம்மா
  அப்பா சொன்னவை மட்டுமல்ல
  முன்னோர்களும் அனுபவத்தில்
  அறிந்ததை சொன்னபோது அது
  வேப்பங்காயாய் கசந்தது.இன்று
  பிள்ளைகளிடம் நாம் கூறுகையில்
  அன்று எல்லாம் எனக்குத்தெரியும்
  என்றுநாம் பார்த்த அதேதிமிரான
  பார்வை இன்று பிள்ளைவடிவில்.
  விட்டுக்கொடுத்த நமைபெற்றவர்
  வடிவில் நாம்...திரும்பி ஓடமுடியாது!
  முடிவில்லா நாடகங்கள் நாம் அதில்
  நடிகர்கள்.கவிதைக்கு கருத்துசொல்ல
  எனக்குத் தகுதியில்லை..இந்தகவிதை
  ஆணுக்கும் பொருந்தும்.வாழ்க கவி!

  சேர்த்தணைத்து தேற்றும்
  தந்தையும் உடனில்லாது
  அனாதையாய் நிற்கும் போதே....?

  ReplyDelete
  Replies
  1. தெளிவுபடுத்தும் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 7. யோசிக்க வைக்கும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. // அனாதையாய் நிற்கும் போதே
  ஆறமர யோசிக்கிறது நெஞ்சம்! //

  என்று பெண்ணாய்ப் பிறந்து பட்டவளின் கவலையையும்,

  // பிள்ளைகள் மாண்புறவே
  தாயவளின் நன்மொழிகள் ! //

  என்று பெண் பிள்ளையைப் பெற்றவளின் கவலையையும்
  கவிதையாய் தந்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தெளிவுபடுத்தும் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. காதல் வந்துவிட்டாலே மற்றதெல்லாம் மறந்து,மறைந்து போகிறதே!
  நன்று

  ReplyDelete
 11. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 12. // உள்நுழையும் காதலோ
  ஒத்திவைக்கும் தேன்மொழிகள்! //

  காதலின் பின் வரும் சோகத்தை எடுத்து கூறிய விதம் அருமை

  ReplyDelete
 13. எனது வேதனை கலந்த பின்னூட்டத்தை நீக்கியதற்கு நன்றி!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி