Ads 468x60px

Friday, July 6, 2012

பார்வையில் ஜனனமின்றி !ஆடி முடித்து பாடி முடிந்து
ஆசை தீர பார்த்து தீர்த்து
ஆடிபோக ஆவணி மலர
ஆராட்டுபாடி தாவணிபோக
ஆலாபலமாய் பட்டுடுத்தி
ஆசையோடு திருமணம்!

உற்றார் பெற்றார் நட்பு
சுற்றமென்று சொந்தம்கூடி
வாழத்துப்பாடி வழியனுப்ப
பிறந்த கூட்டுக்கு பிரிவெழுதி
எல்லாம் புதிதாய் ..பயம்சூழ!

காலை கதிரவன் வேறுதிசையில்
ஜன்னலின் பார்வையில் ஜனனமின்றி
காப்பி குடிடி அம்மா இல்லை
குழந்தையை தூங்க விடுடி
அரட்டும் அப்பாவுமில்லை
அடுப்பை ஏற்றி அடுத்து
என்னசெய்ய அறியாமல்நிற்க
சொல்லிக்கொடுத்து -அன்று!

ஓடியது முன்னால் வாழ்க்கை
உருண்டது பின்னால் காலம்
குழந்தைகள் கணவன் வேலை
கற்பனை கோட்டை மெதுவாய்
கனவோடு உறவாடி நிற்க
பறந்தது பத்து வருடங்களும்!

இன்பமும் துன்பமும் மாறிமாறி
நிலையற்ற வருமானத்தோடு ஓடி
மழலைகளின் எதிர் காலம் நினைத்து
இனிவழியில்லை என்றெண்ணி
கொலுசுப்பாதமும் சுமையைப் பகிர
இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கை!

ஐந்தில்  கல்வி பயம்
பத்தில் பரீட்சை பயம்
பதினாறில் இளமை பயம்
இருபதில் மணவாழ்வு  பயம்
முப்பதில் எதிர்கால பயம்
நாற்பதுக்குள் தீருமா பயம்!

இனியொன்றுமில்லையென
தலைதாழ்ந்தபோது
ஆதரவாய் கைதட்டல்
நினைவுகளும் கனவுகளும்
கவிதைகளாய் துணையாக
ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!

31 comments:

 1. sako!

  pennin unmai unarvukalai!
  azhakaa ethaarththamaa sollideenga !
  nantru!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகையும் முத்தான வரிகளும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

   Delete
 2. ஐந்தில் கல்வி பயம்
  பத்தில் பரீட்சை பயம்
  பதினாறில் இளமை பயம்
  இருபதில் மணவாழ்வு பயம்
  முப்பதில் எதிர்கால பயம்
  நாற்பதுக்குள் தீருமா பயம்!

  இனியொன்றுமில்லையென
  தலைதாழ்ந்தபோது
  ஆதரவாய் கைதட்டல்
  நினைவுகளும் கனவுகளும்
  கவிதைகளாய் துணையாக
  ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு

  அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
  வார்த்தைகளும் உணர்வுகளும்
  ஜோடிக்காளைகளாய் இணைந்து
  செல்வதை மிகவும் ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  !

  ReplyDelete
  Replies
  1. அழகு வார்த்தைகளால் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 3. Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 4. ஆ... ஆ... எல்லாம் பயமெனக்கு... கவிதை எழுத பயம். படிக்க பயம், கமெண்ட் போடுவதென்டாலும் மெத்த பயமெனக்கு... ஹி... ஹி... பயம்னு நீங்க அடுக்கினதும் தெனாலி ஞாபகம் வந்துட்டுது, ஸாரிக்கா. அருமையான கவிதை. பெண்ணின் வாழ்க்கையை அழகான வரிகள்ல அருமையா சொல்லியிருக்கீங்க. சூப்ப்பர். செய்தாலி அண்ணாகிட்ட விருது வாங்கின உங்களுக்கு என்னோட நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தென்றலைக் கவரும் நிரூ மாவின் வரிகள் அழகு.

   Delete
 5. வாழ்க்கையின் அன்றாட நிஜத்தை சற்றும் மாறாமல் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் சசி...வாழும் வரை நம்மால் யாருக்கும் துன்பம் வாராத ஒரு வாழ்க்கையை வாழவேண்டும்... அதுதான் உண்மையான வாழ்க்கையும் கூட.. அப்படி வாழாதவர்கள் இருந்தும் இறந்தவர்களே.....சின்ன சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்யும்... அது கூட இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது... பாராட்டுக்கள்..வளர்க தங்களின் அழகான சிந்தனை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 6. பெண்கள் குடும்பத் தலைவியாய் மட்டும்
  வாழ ஆசித்தாலும்,விரட்டும் பொருளாதார
  சுமைகளை பங்கிட வேண்டிய கட்டாயம்.
  பட்டாம்பூச்சி கனவுகளின் சிறகுகள் உதிரும்
  சோகங்கள்.வாழ்வின் அடுத்த நிர்பந்த தேடல்.
  அதற்காக நினைவுடன் நிற்காத ஓட்டம்.
  பெண்மனதின் பாடுகள்...சபாஷ்!
  எதுஎப்படியோ உங்களைப் பெற்றவர்கள்
  சீதனமாய் கவிதையுடன் அனுப்பியிருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 7. Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 8. நினைவுகளும் கனவுகளும்
  கவிதைகளாய் துணையாக
  ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!

  இது போதும் சசிகலா....
  அர்த்தமுள்ள வாழ்வென்பது இதுதான்.
  வாழ்த்துக்கள்ங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.

   Delete
 9. //ஐந்தில் கல்வி பயம்
  பத்தில் பரீட்சை பயம்
  பதினாறில் இளமை பயம்
  இருபதில் மணவாழ்வு பயம்
  முப்பதில் எதிர்கால பயம்
  நாற்பதுக்குள் தீருமா பயம்!//
  பெண்வாழ்க்கையே இதுதானோ
  அருமை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா பெண் வாழ்க்கை இது தான் ...

   Delete
 10. அழகான சிந்தனை...ரசித்தேன்
  ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. அருமையான கவிதை ரசித்தேன்! (TM 5)

  ReplyDelete
 12. ஆஹா ... அருமை !
  "காலமிது.. காலமிது.. கண்ணுறங்கு மகளே.." என்ற பாடல் ஏனோ நினைவிருக்கு வந்தது சகோ !
  நன்றி.. வாழ்த்துக்கள் ! (TM 6)

  ReplyDelete
 13. //இனியொன்றுமில்லையென
  தலைதாழ்ந்தபோது
  ஆதரவாய் கைதட்டல்
  நினைவுகளும் கனவுகளும்
  கவிதைகளாய் துணையாக
  ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!//
  இந்த வரிகளுக்கு முன்பு வரை சராசரி பெண்ணின் நிலையைச் சொன்ன கவிதை இந்த வரிகளில் அந்தப் பெண்ணை உயர்த்திக் காண்பிக்கிறது.
  நல்ல சொல்லாடலுடன் மின்னுகிறது கவிதை

  ReplyDelete
 14. ஐந்தில் கல்வி பயம்
  பத்தில் பரீட்சை பயம்
  பதினாறில் இளமை பயம்
  இருபதில் மணவாழ்வு பயம்
  முப்பதில் எதிர்கால பயம்
  நாற்பதுக்குள் தீருமா பயம்!
  அருமை.....

  ReplyDelete
 15. ஐந்தில் கல்வி பயம்
  பத்தில் பரீட்சை பயம்
  பதினாறில் இளமை பயம்
  இருபதில் மணவாழ்வு பயம்
  முப்பதில் எதிர்கால பயம்
  நாற்பதுக்குள் தீருமா பயம்!

  ReplyDelete
 16. ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 17. அடுக்கடுக்காக அழகாக இருக்கிறது கவிதை

  ReplyDelete
 18. இனியொன்றுமில்லையென
  தலைதாழ்ந்தபோது
  ஆதரவாய் கைதட்டல்
  நினைவுகளும் கனவுகளும்
  கவிதைகளாய் துணையாக
  ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!...mika arumai

  ReplyDelete
 19. பெண்களின் வாழ்வே ஒரு வரை சார்ந்துதானே உள்ளது,பிறந்தவுடன் பெற்றோரகளை,மணம் முடித்ததும்,கணவணை,வயதானதும் பெற்ற பிள்ளைகளை சார்ந்து இருக்கிறறவாழ்வே அவர்களுக்கு விதிக்கப்பட்டதாக/இன்று நிலை கொஞ்சம்
  பரவாயில்லை.
  ஆனாலும் சொந்தக்காலில் பெண்கள் முழுவதுமாக நிற்க வேண்டும்.

  ReplyDelete
 20. அழகான கவி அக்கா பெண்வாழ்வின் சோகங்களை வீயுள்ளீர்கள்.......

  ReplyDelete
 21. பெண்ணின் மன உணர்வுகளோடும் எதிர்கால நம்பிக்கையோடும் பயணப்படும் கவிதையில் நானும் சங்கமமாகிறேன் தோழி. அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி