Ads 468x60px

Monday, June 25, 2012

காற்றோடு முட்டி மோதி !


புழுதியோடு புகையும்
விடியலோடு ஓட்டமும்
வியர்வையோடு தேடலும்
விடை காணாது தொடர

காற்றோடு முட்டி மோதி
கனவினை தள்ளி வைத்து
சுடும் உறவுகளுக்கு
சுருக்கமாய் முன்னுரை கூறி
ஆடையில் சுத்தமும்
அருகில் நட்பும் சூழ ...

அள்ளிவைத்த மதிய
உணவோடு அரை மணி நேர
தாமதமும் சேர்ந்து அழுத்த
ஆசிரியரை நெருங்கும்
மாணவனாய் ...
மனம் தாமதத்திற்கான
காரணம் தேடியபடி ..
கை கட்டி நிற்கிறது .

5 comments:

  1. மிக தெளிந்த சமூக கவிதை நன்றி

    ReplyDelete
  2. அடுத்த பதிவு மறைந்து விட்டதே...

    ReplyDelete
  3. அருமை... மற்றய பதிவை பார்க்க முடியவில்லை அக்கா...

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை...சூப்பர்

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி