Ads 468x60px

Wednesday, June 13, 2012

காதலின் பார்வையில் !


கொட்டிக் கிடக்கும்
ரோசா நோக்கின்
ராசா வந்தானே ....
குண்டு மல்லி
வாங்கப் போனேன்
முன்னே குழைந்து நின்றானே !

வயகாட்டு வழி நடக்கையில
முறைச்சி பார்த்தானே
முக்கி முனகி திரும்பி பார்த்தேன்
முழுசா மறைந்தானே !

செவுத்த பார்த்தும்
சேத்த பார்த்தும்
அவனே நிக்கிறான்
சொப்பனம் கண்டு
எழுந்து பார்த்தா
அங்கும் அவனே நிக்குறான் !

சோறு தண்ணி
மறந்து நாளாச்சி ,
மாமா மறந்து நாளாச்சி !

மாடு கண்ணு பார்த்த விழி
இப்போ மாமனத் தேடுதே
மல்லிகைப்பூ வாசம் கூட
என்கூட மல்லுக்கு நிக்குதே !

வயக்காட்டுப் பக்கம்
நானும் போக வழியும் தெரியல
வாக்கப் பட போகும்
நாள எண்ணி மனசும் ஏங்குதே !

போருக்குப் போகும் வாளா
நீயும் விறைச்சி நிக்குற
என் புத்திக்குள்ள புகுந்து நீயும்
என்னை ஆட்டி வைக்குற !

உன் பார்வை என்ன
தீயா மாமா ?
பற்றி எரியுதே ...
உணர்வும் பற்றி எரியுதே !

நாத்து நடும் பொழப்ப
மறந்து நானும் நின்னேனே
நாலு நாளா பித்து பிடிச்சி
நானும் அலைந்தேனே !

கூத்து மேடை தனிலே
நானும் காதல் பார்த்திருக்கேன்
இதென்ன உசுர குத்திக் கொலைக்கும்
வலியா இல்ல காதலும் இருக்குது .
இந்த காதலும் இருக்குது .

33 comments:

 1. கிராமத்து காதல்
  அதுதான் மண்வாசனை மணக்குது
  வரிகளில்

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருக்குங்க எங்க ஊர் மண் வாசம் .

   Delete
 2. உன் பார்வை என்ன தீயா மாமா... பற்றி எரியுதே உணர்வும் பற்றி எரியுதே... காதலின் தீவிரம் கவிதையிலும் பற்றி எரிகிறது. படிப்பவரைத் தொடுகிறது. கிராமத்துக் காதலின் அழுத்தம் நகரத்துக் காதலைவிட என்றுமே அதிகம்தான் தென்றல். கவிதையும் அப்படியே.

  ReplyDelete
  Replies
  1. உண்மைக் காதல் எங்கிருந்தாலும் மணக்கும் . நன்றி வசந்தமே .

   Delete
 3. மண்மயக்கும் காதல்
  படித்ததால்
  மனமயக்கம் ஆனேன்

  ReplyDelete
  Replies
  1. மயக்கும் வார்த்தை கொண்டு பாராட்டியது கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

   Delete
 4. எளிமையான வழங்கு மொழியில் இந்த கிராமியக் கவிதை படிக்க இதம்மா இருக்குக்கா. செவுத்த பாத்தாலும் சேத்தை பாத்தாலும் சொப்பனம் கண்டு பாத்தாலும் அவனே நிக்கிறான்னு காதலோட ஆழத்தை அழகா சொல்லிட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி மா .

   Delete
 5. உசுர குத்தி கொள்ளும் வரிகள்.

  ReplyDelete
 6. கள்ளங் கபடு இல்லாத கிராமத்து பெண்ணின் காதல் வலி மாமனை நினைத்து நல்லாத்தான் கொழுந்து விட்டு எரியுது..காதலுக்கு கிராமம்,நகரம் வேறுபாடா தெரியுது...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க

   Delete
 7. வரப்போரம் போறவளே
  வந்தவாசி சின்னப்புள்ள
  தலையிலதான் கஞ்சிக்கலயம்
  இறக்க வரட்டுமா
  என் மனசுக்குள்ளே
  குத்திக்கிட்டு குடஞ்சிருக்கும்
  ஆசை எல்லாம்
  உன் நெஞ்சுக்குள்ளே நானும் வந்து
  ஏத்தி விடட்டுமா...

  என்ன சொல்ல தங்கையே
  நாட்டுப்புற கவியின் சுவையே தனிதான்
  படித்தாலே மனம் துள்ளல ஆட்டம் போடும்..
  அதிலும் கிராமியக் காதலில் இருக்கும்
  அந்த நையாண்டியும் கிண்டலும்
  எதேச்சையும் சிறு பிள்ளைத் தனமும்
  நம்மை கிளர்ச்சியுறச் செய்யும்...

  அருமையான பாடல்..
  தாளம் போட்டு பாடி விட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. என் ஊரின் பெயரிட்டு எழுதிய கவி வரிகள் அழகு அண்ணா எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் .

   Delete
 8. இயல்பான நடையில் உள்ளது கவி...ஒரு காவியம்போல்...வாழ்த்துக்கள் சசி!!

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து ஊக்கபடுத்திய தங்களுக்கு நன்றி சகோ .

   Delete
 9. கண்ணையும் கடந்து,
  இதயத்தில் புகுந்து,
  குடியமர்ந்த கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து ஊக்கபடுத்திய தங்களுக்கு நன்றி.

   Delete
 10. மண் வாசனைக் காதல்......
  அருமையான கவிதை அக்கா......

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி மா .

   Delete
 11. மண்ணின் காதல்/வாழ்க.கவிதையில் எங்கோ நாட்டுப்புற பாடலின் சாய்ல் ஒட்டிக்கிடக்கிறதே.நல்ல பாரவை.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து ஊக்கபடுத்திய தங்களுக்கு நன்றி.

   Delete
 12. காதலில் மண் மணம் வீசுது....

  நல்ல பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து ஊக்கபடுத்திய தங்களுக்கு நன்றி.

   Delete
 13. ''...போருக்குப் போகும் வாளா
  நீயும் விறைச்சி நிக்குற
  என் புத்திக்குள்ள புகுந்து நீயும்
  என்னை ஆட்டி வைக்குற !...''
  இப்படியாக நல்ல வரிகள். சசி. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 14. Replies
  1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 15. மிக மிக அருமை
  காதலின் ஆழத்தை
  காதலியின் தவிப்பை
  மிக எளிமையான சொற்களில்
  மிக அழகான கவிதையாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  மீண்டும்மீண்டும் படித்து ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் ஐயா . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 16. மண்வாசனை மணமணக்க வீசு தென்றலில் கவிதைபாடுவதில் ர,யமாக உள்ளது.

  ReplyDelete
 17. வரப்புமேல செந்தமிழ் ஆடி வருகுது......மண்வாசம் வரியெல்லாம் ஓடி வருகுது.....வரியோட என் மனசு பாடி உருகுது.......!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி