Ads 468x60px

Thursday, June 7, 2012

உடலூனம் தவறில்லை!


பார்வையற்றோர் பார்வையிலே,
பாட்டின் உருவில் காட்சிகள்.
மொழியிழந்தோர் கண்களில்,
காட்சியெல்லாம் பாடல்கள்.
நடைமெலிந்தோர் கனவுகளில்,
ஓட்டங்கள்வெறும் நிழல்களாய்,
மனம் உடைந்த மனிதனுக்கோ,
வாழ்க்கையே பெரும்பேரிடராய்!

விதைத்தவர்க்கிது விளையாட்டு,
அறுப்பவனும் கவலைப்படுவதில்லை,
முளைத்த நாள் முதலாய் இவர்கள்,
இருளின் உறவுகளாய் புவியில்,
வாழ்ந்தும் வாழா தேரைகளாய்!

தென்றல் இவரைத் தீண்டுவதில்லை,
புயலிவரை விட்டு நீங்குவதுமில்லை,
களிமண்ணில் செய்த பானைகளாய்,
அகிலத்தில் வெந்துநொந்து மாய்கின்ற,
இவர்செய்த பாவமென்ன;முன்னோர்,
செய்த தவறென்றுரைத்தலே பாவம்!
படைத்தவன் படைப்பில் இவரெல்லாம்,
உள்ளவர்கு உதாரணம் என்றாயின்,
இறைபடைப்பே தவறென்ற கொள்கை,
சரியாயென ஞானம் உரைக்கிறது.
மனமா மதியா வாழ்வைஎதுவெல்லும்,
அன்புவெனறால் அது நன்றென்பேன்!

ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,
ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,
ஊழிகாலமும் தீமைசெய்யும்.

உடலூனம்  தவறில்லை,
உள்ளஊனம் பெருங்கேடு!!

22 comments:

 1. உடலூனம் தவறில்லை,
  உள்ளஊனம் பெருங்கேடு!//!

  உயரிய சிந்தனையைக் கருவாகக் கொண்ட
  கவிதை அருமை
  உடல் ஊனம் நிச்சய்ம் குறையில்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூடமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா.

   Delete
 2. //உடலூனம் தவறில்லை,
  உள்ளஊனம் பெருங்கேடு!//

  உள்ளம் சுட்ட வரிகள்
  சிறப்பன்ன சிந்தனை கவிதை சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 3. ஊனத்தின் ஓர் பக்கம் எண்ணங்களும்,
  அதன் மறுபுறமாய் நம் உள்ளங்களும்.
  நடுக்கடலில் தத்தளிக்கும் பாய்மரமாய்,
  வாழ்கையென்ற விதி பயணங்களும்.
  யாருக்கு எந்தவேடம் நாமறியோம்,
  பாரில் நம்பிக்கை நாம் விதைப்போம்.
  ஊன்றுகோலாய் இல்லாமற்போனாலும்,
  ஊனமில்லா எண்ணம் அணிந்திடுவோம்.
  நல்லெண்ண கவிதைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 4. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 5. மானுட வாழ்வில் ஊனமில்லாப் பிறவிகளைக் கான்பதரிது. உணர்ந்து கொண்டால் அன்பால் ஊனமுள்ளோரை வெல்லலாம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 6. ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
  ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,

  அழகாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 7. superb! ஒவ்வொரு வரியும் அருமை
  //உடலூனம் தவறில்லை,
  உள்ளஊனம் பெருங்கேடு!!//
  உண்மை சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 8. /////ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால், ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
  ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
  ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,ஊழிகாலமும் தீமைசெய்யும்.
  உடலூனம் தவறில்லை, உள்ளஊனம் பெருங்கேடு!!/////


  மிக அழகாகச் சொன்னீர்கள்.அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 9. உடலூனம் தவறில்லை,
  உள்ளஊனம் பெருங்கேடு//

  உண்மை முற்றிலும் உண்மை! த ம ஓ5

  -ஆ இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

   Delete
 10. உடலூனம் தவறில்லை,
  உள்ளஊனம் பெருங்கேடு

  நிச்சயம் நியாயமான கருத்து அக்கா...

  உடலில் ஊனமிருந்தாலும் உள்ளத்தில்
  அது இருக்க கூடாது
  .................

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 11. மன ஊனமுள்ளவர்கள்தான் நிறைய நம்மிடையே !

  சசி...ஏனோ உங்கள் தளம் வரக் கஸ்டமாயிருக்கு !

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி