Ads 468x60px

Sunday, May 27, 2012

அசுத்தங்களாய் நாம் ..!


உலகை சுத்தப்படுத்தும்
காக்கை இனம் இவர்கள் ..
அசுத்தங்களாய் நாம்
வீசியெறியும் குப்பைகளை
அப்புறப்படுத்திவிட்டு அவலங்களாய்
நம்முன் தோன்றுகின்ற அதிசயங்கள்
கழிவறைக் குழிகளிலே
நனைந்து போன இவர்களை
காட்சிப் பொருளாய்ப் பார்கின்ற
அவலங்கள் நாம் ..!

கிடைத்த ஐந்து ரூபாயில்
டீயும் பன்னும் சாப்பிட்டு
அதில் மூன்று ரூபாயை
மனைவிக்கும் மகவுக்கும்
கொடுக்கின்ற நல்ல இதயத்தின் முன்
நாம் தான் அற்பங்கள்
இவர் மட்டும் இல்லையெனில்
சுவாசக் காற்றும் கெட்டிருக்கும்
நம் இதயம் நின்றிருக்கும்
ஆனாலும் மதிக்க மாட்டோம்
உயர் ஜாதி மனங்களெல்லாம்
உள்ளழுக்கோடு ...
கணிவான பார்வை இல்லையெனினும் 
அவர்களைக்  காயப்படுத்தும்
பார்வை வேண்டாமே !

22 comments:

 1. உண்மை.. அவர்களை கடந்தாலே முகம் சுழிக்கும் நாம்... இதை யோசிப்பதில்லை... அழகு வரிகளில் சொன்ன சசி அவர்களுக்கு நன்றி.. நன்றி நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து மிகவும் சரியானதே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 2. இப்ப சில இடங்கள்ல மிஷின் வந்துட்டதாச் சொல்றாங்கக்கா... ஆனாலும் இந்த மனிதர்கள் இன்னும் கண்ணில் படத்தான் செய்கிறார்கள். மதிக்கறதுக்கு நாமதான் கத்துக்கணும். உங்க வரிகள் எல்லாமே மிகச் சரி.

  ReplyDelete
  Replies
  1. அந்த மிசினை இயக்கம் மனிதர்களையும் இப்படித்தான் பார்ப்பார்கள் சொல்ல முடியாது நிரூ மா .

   Delete
 3. மிருகத்திடமும் இல்லாத-
  குணம்!

  மனிதனிடம் உள்ள-
  குணம்!

  தீண்டாமை குணம்!

  உங்களது-
  கவிதையின் மூலம்
  விளக்கி விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. என் ஆதங்கத்தை உங்கள் பின்னூட்ட வரிகளில் கண்டேன் சகோ .

   Delete
 4. மனிதனை மனிதராய் மதித்திடல் வேண்டும் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மட்டுமில்லை தென்றல்... செய்யும் வேலையை வைத்து ஒருவரை மதிப்பிடுவதும் தவறுதான். என் ஆதங்கங்களில் ஒன்றை உங்களின் கவிதையில் கண்டதில் மிக மகிழ்கிறேன்.

  ReplyDelete
 5. அவர்களை மதிக்காவிட்டாலும் அவர்களுக்கு பேசும் கூலியை குறைத்துக் கொடுத்து அவர்கள் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி எனத்தோன்றுகிறது வசந்தமே .

  ReplyDelete
 6. excellent kavi kala avl, salute u kala avl. really they are great.

  ReplyDelete
 7. வலைச்சரம் வாங்க
  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

  ReplyDelete
 8. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 9. // உயர் ஜாதி மனங்களெல்லாம்
  உள்ளழுக்கோடு ...
  கணிவான பார்வை இல்லையெனினும்
  அவர்களைக் காயப்படுத்தும்
  பார்வை வேண்டாமே !//

  நல்ல சவுக்கடி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 10. சுத்தப் படுத்தப் படவேண்டியது சாக்கடை அல்ல. நம் மனங்களே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க அதை உணரும் மனங்கள் தான் குறைவு .

   Delete
 11. மனிதனின் புற அழுக்கை சுத்தப்படுத்தலாம்
  மனிதனின் அக அழுக்கை யார் சுத்தப்படுத்த?

  ReplyDelete
  Replies
  1. அவரவர்களே சுத்தப்படுத்தினால் உண்டு .

   Delete
 12. எங்க ஊரில இவங்கள சேரி புறத்தில தள்ளி வைச்சிருக்காங்க..
  ஆனாலும் அங்களும் மனு’ங்கதான் என்று யாரும் பதாக்கிறதில்ல..

  அழகான கவி அக்கா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி எங்க ஊரிலும் உண்டு . என்ன செய்வது ...

   Delete
 13. கணிவான பார்வை இல்லையெனினும்
  அவர்களைக் காயப்படுத்தும்
  பார்வை வேண்டாமே !

  மிகவும் கவனிக்கவேண்டிய ஒரு பதிவு. பதிவு மட்டுமின்றி உணர்வும் கூட...
  நம்மை நமக்குள்ளே சுயபரிசோதனை செய்யத் தூண்டும் பதிவு...
  அருமை சகோதரி

  ReplyDelete
 14. மனத்துக்கண் மாசிலன் ஆதலை அருமையாக வலியுறுத்தி உள்ளீர்கள்! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 15. கணிவான பார்வை இல்லையெனினும்
  அவர்களைக் காயப்படுத்தும்
  பார்வை வேண்டாமே !

  அருமை.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி