Ads 468x60px

Monday, May 28, 2012

கைதியாய் வாக்காளர் !


கை நாட்டு காலம் மாறி
கைபேசி காலமாகி
கையூட்டு தேசமாகி
கைதியாய் வாக்காளர் !

அரசர் ஆட்சி வேண்டாமென்று
அடிமையானோம் கும்பனியார்க்கு
அகிம்சை வழி நடந்து எப்படியோ
அடிமை விலங்கொடித்தோம் !

மூச்சுவிட உரிமையில்லா -கொடும்
முன்னூறு வருடங்கள்
மூக்கணாங் கயிரிட்டவராய்
மூடர்களாய் இந்தியர்கள் .

விடுதலையின் ஆரம்பம்
வில் பூட்டி வைத்ததிலும்
விதைகளாய் நாமில்லை
விந்தை பார் அவரும் அந்நியரே !

காங்கிரஸ் பேரியக்கம்
காட்டிய பாதையிலே
காலைப் பதித்தபோது
காட்டுக் களையாக ஜனநாயகம் !

1885 இல் விதைத்த நல்வித்து
1910 இல் மகாத்மா வரவினால்
1947 இல் சுதந்திர இந்தியா
1950 இல் குடியரசு நாமானோம் !

62 வருடப் போராட்டத்தில்
உயிர் தியாகம் எத்தனையோ
பதவிக்காய் ஓடவில்லை
மக்களுக்காய் தலைவர் மாண்டார் .

சுதந்திரம் பெற்ற போது
ஜனத்தொகை 38 கோடி
வளர்ந்தோமோ இல்லையே
இன்று நாம் 120 கோடியாய் !
உண்டோம் உறங்கினோம் இது
நம் சாதனைகள் !

அன்பு வளரவில்லை, பண்பும் வாழவில்லை ,
ஆசையின் கைகளில்  ஆடும் பொம்மைகளாய் !
இன்பம் தேடியோடி ,இருளில் வாழ்கின்றோம் ,
ஈனங்கள் நாட்டை ஆளும் விபரீதம் காண்கின்றோம் .

விடுதலை நமக்கு வேண்டும்
ஜனநாயகம் வெல்ல வேண்டும்
மக்களாட்சி மலர்ந்திட
ஒன்று கூடி உழைக்க வேண்டும்
அவர் தவறு , இவர் தவறு
சொல்லி பயனில்லை
நம் தவறு களைந்திடுவோம் !
துயில் விட்டு எழுந்திடுவோம்
ஊக்கமாய் உழைத்திடுவோம்
மக்களாட்சி மலரச் செய்வோம் !

35 comments:

 1. ஒன்று கூடி உழைக்க வேண்டும்
  அவர் தவறு , இவர் தவறு
  சொல்லி பயனில்லை
  நம் தவறு களைந்திடுவோம் !
  துயில் விட்டு எழுந்திடுவோம்


  இன்னமும் சுதந்திரம் பெற்ற பயனை நாம் முழுமையாய் அடையவில்லை.. சுட்டிக் காட்டி விழிப்புணர்வு உண்டாக்கும் வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் உடன் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 2. நல்ல சமூக கவிதை
  நல்ல பார்வை சகோ
  நாம் எல்லாரும் குரல் கொடுக்க நினைக்கிறோ
  யாரும் இதழ் திறக்காமல் மௌனமாகவே இருக்கிறார்கள்
  அதனால் நாம் இன்னும் வதைபட்டுக்கொண்டு இருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து முற்றிலும் சரியே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 3. அடிமைகளாய் வாழ்ந்து,
  அம்மாவாசையாய் மாண்டு,
  அக்கினியில் வெந்துருகி,
  அழிந்தே போனாலும்,
  அடிமை விலங்கொடிக்கும்,
  அறம்தனை நாமணியோம்,
  அடிமைஇன உணர்வுகள்,
  அறிவிலும் துணையாக!

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 4. //ஈனங்கள் நாட்டை ஆளும் விபரீதம் காண்கின்றோம்//

  கவிதை அருமை.. சமூகம் மாறாதவரை இது இப்படியேதான் தொடரும்..

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருவரும் மாற நினைத்தால் சமூகமும் மாறும் என்பது என் கருத்து .

   Delete
 5. ஒரு சராசரி இந்தியனாய் இருக்க ஆசைப்படும் கவிஞரின் கன்வுகள் வசப் படட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
   நீக்கு

   Delete
 6. \\அவர் தவறு , இவர் தவறு
  சொல்லி பயனில்லை
  நம் தவறு களைந்திடுவோம் !
  துயில் விட்டு எழுந்திடுவோம்
  ஊக்கமாய் உழைத்திடுவோம்\\

  அடுத்தவரைக் குறைகூறும் பழக்கத்தாலேயே பல வேலைகள் தட்டுகெட்டு நிற்கும் வேதனையை தெளிவாய்ச் சொன்ன வரிகள். நாட்டைச் சீர்படுத்த நினைப்பவர் ஒவ்வொருவரும் தன்வரையில் தன்மானத்துடனும் தவறிழைக்காமலும் வாழ்ந்தாலே போதும் என்னும் அருமையான கருத்துக்களை முன்வைத்தக் கவிதைக்குப் பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 7. எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும், முன்னேறித்தான் இருக்கிறோம். மறுப்பதற்கில்லை. இன்னும் இன்னும் மேலேற விடாமல் நம் கலாச்சாரக் காரணங்களே தடுக்கின்றன. ராஜிவ் காந்தி சொன்னதாகக் கூறப் படும் நண்டு கதை உங்களுக்குத் தெரியுமா.?

  ReplyDelete
  Replies
  1. கற்றதும், கேட்டதுமே என் வரிகள் கூறுங்கள் கேட்டுக்கொள்கிறேன் .

   Delete
 8. //அன்பு வளரவில்லை, பண்பும் வாழவில்லை ,
  ஆசையின் கைகளில் ஆடும் பொம்மைகளாய் !
  இன்பம் தேடியோடி ,இருளில் வாழ்கின்றோம் ,
  ஈனங்கள் நாட்டை ஆளும் விபரீதம் காண்கின்றோம் .

  //

  ஆனால் ஊழலில் வளர்ந்து இருக்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து முற்றிலும் சரியே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 9. நம் தவறு களைந்திடுவோம் !
  துயில் விட்டு எழுந்திடுவோம்
  ஊக்கமாய் உழைத்திடுவோம்
  மக்களாட்சி மலரச் செய்வோம் !

  மிகவும் அருமை அக்கா வரிகள் சிந்திக்கவைக்கின்றன . வாழ்த்துக்கள் அக்கா...
  உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய வலைசரம் வாருங்கள் அக்கா. நம் நட்பு தொடரட்டும் ......

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வருகிறேன் .

   Delete
 10. பெருமூச்சுதான் வருகிறது!காலம் ஒரு நாள் மாற வேண்டும்!
  நல்ல சிந்தனைக்கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

   Delete
 11. //கை நாட்டு காலம் மாறி
  கைபேசி காலமாகி
  கையூட்டு தேசமாகி
  கைதியாய் வாக்காளர் !// மோனை நடையில் புகுந்து விளையாடுரீங்களே கலக்கல் அன்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 12. அருமையான, கருத்துள்ள கவிதை! நம் தவறு களைந்திடுவோம் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சிப் படி சரியான குடிமகனாய் நடந்து கொண்டாலே போதும்... தேசமுழுமையும் மாறிவிடும். சூப்பர்ப்! அசத்திட்டீங்க தென்றல்!

  ReplyDelete
  Replies
  1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 13. படிச்சதும் புரிஞ்சுது கவிதை மூலமா நீங்க சொல்லியிருக்கற நல்ல கருத்து. மனதி்ல் தைத்தது. வியக்க வைககின்றது உங்கள் சிந்தனைத் திறம் அக்கா! (எனக்குக் கொஞ்சம் கடனாத் தாங்களேன்... ப்ளீஸ்!)

  ReplyDelete
  Replies
  1. நிரூ மா தமிழில் பெயர் இருந்ததே என்ன ஆச்சி . நான் தங்கள் எழுத்து நடையைப் பார்த்து தங்களிடம் கேட்கலாம் என நினைத்தேனே .

   Delete
 14. அன்பு வளரவில்லை, பண்பும் வாழவில்லை ,
  ஆசையின் கைகளில் ஆடும் பொம்மைகளாய் !

  அவர் தவறு , இவர் தவறு
  சொல்லி பயனில்லை
  நம் தவறு களைந்திடுவோம் !

  -நல்ல சிந்தனையைத் தூண்டும் வரிகள்! அருமை! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 15. அருமையான கவி அக்கா
  உஙடகள் சிந்தனை முற்போக்கு தனமானது..
  சமூகத்தை உங்கள் கவி சீர்திருத்தும்...

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 16. ஓட்டு போடு என்று கேட்டால் எப்போ நோட்டு போடுவ என்று மக்கள் பழக்கப்படுத்தப் படுகிறார்கள்.

  இருக்கக் கூடிய அமைப்பில் மக்களுக்கு தேர்தெடுக்க மட்டுமே உரிமை, தவறு செய்தால் அதை திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதிக்குதான்

  வாழ்க ஜனநாயகம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 17. ஏற்றுமதிக்காக நண்டுகளை திற்ந்த கூடையில் இந்தியாவிலிருந்து அனுப்பினார்களாம். எண்ணிக்கையிலும் எடையிலும் குறையாமல் நண்டுகள் வந்து சேர்ந்தது கண்டு வெளிநாட்டினர் அதிசயப் பட்டு அப்போதைய நம் முதல்வர் ராஜீவ் காந்தியிடம் கேட்டார்களாம். அவர் சொன்னாராம்,” இவை இந்திய நண்டுகள். ஒன்று மேலே போனால் மற்றவை அதை இழுத்து மேலே போக விடாமல் செய்து விடும் “ இதுவே பொதுவாக நம் இந்தியர்களின் குணம் என்று கூற இந்தக் கதையைக் குறிப்பிட்டேன்.

  ReplyDelete
 18. பானைக்குள் போட்ட நண்டுகளின் கதையை தக்க சமயத்தில் சொன்ன முதல்வரின் கருத்தை எனக்கு எடுத்துரைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி