Ads 468x60px

Thursday, May 10, 2012

கூடவரும் துணை யாருமில்லை !

மரித்த பூவே மாலையாகும்
மனிதமனம் நினைப்பதில்லை !
மணம் வீசும் நேரம் வரை
மரியாதை எதுவெனினும் !
உள்ளார்க்கு எல்லாமே
எந்நாளும் அரங்கேற்றம்
இல்லார்க்கு உறவுகளும்
தூரத்தில் கரும் புள்ளிகளாய் !
பணம் படுத்தும் பாடு கண்டேன்
பணம் படும் பாடும் கண்டேன்
குணம் கொண்ட மாந்தர்தமை
பணம் பாடு படுத்தக்கண்டேன் .
வழியெல்லாம் விதைக்கின்ற
நெல்களம் போய் சேர்வதில்லை !
ஒளியாய் உலவி வரும்
நிலவிலும் தண்ணொளிஇல்லை !
எல்லாமும் கிடைத்துவிட்டால்
எல்லாரும் நல்லவரே
இல்லாமை சூழ்ந்து விட்டால்
இறைவன்  கூட தீயவனே !
நமக்கிடர் இல்லையெனில்
நயவஞ்சகனும் கோமானாய்!
நம்வழி நின்று விட்டால்
நல்லவனும் கொடும் கோலனே !
உண்மையென்று எழுதிவிட்டால்
தீமை உண்மை ஆகிடுமா ?
நன்மை என்றுரைத்திட்டால்
அது வந்து சூழ்ந்திடுமா ?
அடுப்பெரியும் அழகினிலே
வீட்டின் கதை புரிந்திடலாம்
கண்ணீன் கீழ் கருவளையம்
இதயத்தின் கதை சொல்லும் !

யாரிலும் யாருமில்லை
யாவும் பயணத்துணைகளே!
ஜனனம் முதல் மரணம் வரை
கூடவரும் துணையாருமில்லை !
தாய் இறக்கி விட்டபின்னே
மடிசேரும்  வரை ஓட்டங்களே!
புன்னகையும் கண்ணீரும்
நிகழ்வுகளின் வெளிப்பாடே !
பசியென்று ஒன்று மட்டும்
படைப்பில் இல்லையெனில்
இயக்கங்கள் நின்றிருக்கும்
இரையெடுத்த மலைப்பாம்புபோல் !
நோக்கத்தை மனமணிந்து
ஆக்கத்தை உழைப்பாக்கி
அன்பை மட்டும் சீராட்டின்
அகிலமே நமதாகும் !

34 comments:

 1. நான் என்னமோ தொட்டுக்க ஊறுகாயாத்தான் கவிதை பாடுறீங்களோன்னு முன்னாடி பின்னூட்டம் போட்டதை இப்பத்தான் நினைவு கொண்டேன்.உங்களுக்கும் ஹேமா மாதிரியே கவிதைதான் உயிர் மூச்சு என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தேன்.தொடருங்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் திரு .ராஜ நடராஜன் அவர்களே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு செயல் இருக்கும் விட நினைத்தாலும் விட முடியாமல் அப்படித்தானே எனக்குள்ளும் கிறுக்கல்கள் .

  ReplyDelete
 3. //பசியென்று ஒன்று மட்டும்
  படைப்பில் இல்லையெனில்
  இயக்கங்கள் நின்றிருக்கும்
  இரையெடுத்த மலைப்பாம்புபோல் !///நல்ல உவமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. followers widget இணைக்க வில்லையா அன்பரே

  ReplyDelete
 6. வணக்கம்

  கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

  யாழ் மஞ்சு

  ReplyDelete
 7. //உள்ளார்க்கு எல்லாமே
  எந்நாளும் அரங்கேற்றம்
  இல்லார்க்கு உறவுகளும்
  தூரத்தில் கரும் புள்ளிகளாய் !//
  யதார்த்தம்!கவிதை அருமை.-வழக்கம்போல்.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

   Delete
 8. //அன்பை மட்டும் சீராட்டின்
  அகிலமே நமதாகும் !//

  இரு வரிகளில் ஆதங்கத்தை சொல்லிவிட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 9. அத்தனையும் தத்துவ முத்துக்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 10. யாரிலும் யாருமில்லை
  யாவும் பயனத்துணைகளே!

  ReplyDelete
 11. சரளமான எதுகை மோனை....மரித்த பூவே மாலையாகும்
  மனிதமனம் நினைப்பதில்லை !இந்த முதல் வரியே போதும்.இதை சினிமாவில் பெரிய ஆட்கள் எழுதும்போது மிகவும் ஆராதிக்கபடுகிறது.தமிழ் தாயின் மகளுக்கு வாழ்த்துக்கள்.இணைந்திருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 12. ''..நோக்கத்தை மனமணிந்து
  ஆக்கத்தை உழைப்பாக்கி
  அன்பை மட்டும் சீராட்டின்
  அகிலமே நமதாகும் ...''
  மிக நல்ல வரிகள். கவிதை சிறப்பு. நல்வாழ்த்து. (சகோதரி சில சொற் பிழைகள் தெரிகிறது நேரமிருக்கும் போது பாருங்கள்).
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 13. //இல்லாமை சூழ்ந்து விட்டால்
  இறைவன் கூட தீயவனே !//
  அற்புதமான வரிகள்.எங்கிருந்தான் வருது?
  தமிழ்மணம் வாக்கு- 4 -போட்டுட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 14. யாரிலும் யாருமில்லை; யாவரும் பயணத் துணைகளே!
  ஆக்கத்தை உழைப்பாக்கி; அன்பை மட்டும் சீராட்டின்; அகிலமே நமதாகும்!
  -மின்னுகின்றன வரிகள்! கருப்பொருளும், சொல்லாடலும் அசத்தல்! தொடரட்டும் அழகுக் கவிதைகளின் அணிவகுப்பு!

  ReplyDelete
  Replies
  1. மின்னல் வரிகளிடம் இருந்தே வாழ்த்துக்களா ..மகிழ்ந்தேன் . நன்றி வசந்தமே .

   Delete
 15. நோக்கத்தை மனமணிந்து
  ஆக்கத்தை உழைப்பாக்கி
  அன்பை மட்டும் சீராட்டின்
  அகிலமே நமதாகும் !

  நன்று! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 16. இல்லாமை சூழ்ந்து விட்டால்
  இறைவன் கூட தீயவனே !
  நமக்கிடர் இல்லையெனில்
  நயவஞ்சகனும் கோமானாய்!
  நம்வழி நின்று விட்டால்
  நல்லவனும் கொடும் கோலனே !“

  உண்மையின் உரைகற்கள்!!
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 17. பணம் படுத்தும் பாடு கண்டேன்
  பணம் படும் பாடும் கண்டேன்
  குணம் கொண்ட மாந்தர்தமை
  பணம் பாடு படுத்தக்கண்டேன் .
  வழியெல்லாம் விதைக்கின்ற
  நெல்களம் போய் சேர்வதில்லை !
  ஒளியாய் உலவி வரும்
  நிலவிலும் தண்ணொளிஇல்லை !
  எல்லாமும் கிடைத்துவிட்டால்
  எல்லாரும் நல்லவரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 18. நல்ல நல்ல வரிகள். கலக்குறீங்க சசி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 19. எத்தனை எத்தனை நல்ல கருத்துள்ள வரிகள்க்கா! குணம் உள்ள மனிதர்களைப் பணம் படுத்தும் பாடு கண்டேன்னு நீங்க சொல்லியிருக்கிறதும், அன்பை மட்டும் சீராட்டின் அகி‌லமே நமதாகும்னு முடிச்சிருக்கிற வரிகளும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தங்கைக்கு வணக்கம் . தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி மா .

   Delete
 20. puthu puthu vaarthaikal!

  nalla kavithai!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி