Ads 468x60px

Tuesday, May 8, 2012

வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !

கிலத்தின் தோற்றத்தில் 
அகரமெது தேடிப்பார்த்தேன்

காயமா? பூமியா ?
ஆடிவரும் கடல் அலையா ?

மயம் முட்டும் சிகரங்களா ?
இயற்கை படைத்த சீதனமா ?

ரப்பதமிழந்த பாலை மணல்விரிப்பா ?
ஈடில்லா ஒளியா? பார்வை பறிக்கும் இருளா ?

றவுகளை கோர்க்கின்ற
உயிர் பிராணி மறுகுலமா?

மையாய் புவிக்குள்ளே
ஊறிக்கிடக்கும் தாதுகளா ?

ட்டாத உயரத்தில் புன்னகைக்கும்
எழில் கொண்ட விண்மீனா?

றாத மலையெல்லாம் தாவி
ஏறிச் செல்லும் காற்றலையா ?

ந்தென்றும் ஐம்பதென்றும்
ஐக்கியமாய் வாழ்கின்ற கணக்குகளா ?

வ்வோர் கணமும் வளர்ந்து வரும்
ஒழியாத இசை மொழியா ?

மங்களின் பிறப்பிடமாய்
ஓங்கி எரியும் தீச்சுடரா ?

ஒளஷதம் உயிர்கள் வாழ்வில்
ஒளவையும் பங்கு பெற்ற காதலா ?

அஃ திணையின் ஆரம்பமென்ன ?
அஃமார்க் எந்தப் புள்ளி வடிவினிலே ?

விடையில்லா கேள்விகளாய்
எழுந்து நின்ற போதினிலும்
உயிருண்டு உடலுண்டு  உணர்வும் அதுபோல
நினைவுண்டு கனவுண்டு நிஜம் இன்றிதுவே !
இனிமைகளை அரங்கேற்ற
இயன்றவரை நாம் உழைப்போம்
உறுதியுடன் எழுது கோலின்
வேலைகளைச் செய்கின்றேன் .
ஐந்தறிவு கொண்ட உருவில்
வாழ்கின்ற அன்பு கண்டேன்
சட்ட புத்தகம் ஏதுமின்றி
ஒழுங்காய் வாழும் வாழ்வு கண்டேன் !
ஆறறிவு என்றுரைத்து மனிதன்
வசதிக்காய் சமைத்து வைத்த
இறைவனில் ஆரம்பம் காண்கின்றேன் .
பரமாத்மா படைத்தவனென்றும்
ஜீவாத்மா மனிதனென்றும்
பாவாத்மா பாவிகளென்றும்
தொடங்கிய ஓட்டத்தில்
இளைப்பாற இடம் காணவில்லை .
நமை ஆட்டிய பயத்தினாலே
படைத்த காப்பாளர் ஏராளம் !
இறைவனில்லை சொல்லவில்லை
அவன் யாரோ நாமறிவோம் !
மேல்குலம் வாழ்வதற்காய்
சமைத்து வைத்த சமாச்சாரம்
அடிமை வாழ்வுக்கு வித்திட்ட
அடிப்படை இங்கு ஆரம்பம் !

சொன்னால் கோபம் வரும்
சொல்லாவிட்டால் சாபம் வரும்
இன்று மடிந்து நாளை மலரும்
நாளை மலர்ந்து மீண்டும் மடியும்
இயற்கையின் ஓட்டத்துடன்
நாம் ஓடியே ஆகவேண்டும் .
இங்கேதான் நானிருப்பேன்
பிடிவாதம் பிடித்து நின்றால்
இருக்குமிடத்தில் நான் இருக்கும்
மற்றதெல்லாம் கடந்து போகும்
வாருங்கள் விதைத்திடுவோம்
வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !

30 comments:

 1. //நான் இருக்கும்
  மற்றதெல்லாம் கடந்து போகும்
  வாருங்கள் விதைத்திடுவோம்
  வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !//அருமை ..நிஜம்

  அகரக் கோர்ப்பு அருமை
  நல் சிந்தனை தோழி

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. வார்த்தைகளில் விளையாடி உள்ளிர்கள் .. அருமையான கவிதை

  ReplyDelete
 4. செய்தாலி...
  தங்கள் உடன் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 5. என் ராஜபாட்டை ராஜா...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 6. இயற்கையின் ஓட்டத்துடன்
  நாம் ஓடியே ஆகவேண்டும் .
  இங்கேதான் நானிருப்பேன்
  பிடிவாதம் பிடித்து நின்றால்
  இருக்குமிடத்தில் நான் இருக்கும்
  மற்றதெல்லாம் கடந்து போகும்
  வாருங்கள் விதைத்திடுவோம்
  வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம்//

  துள்ளிவரும் வரும் வார்த்தைகள்
  அள்ளித் தரும் கருத்துகள்
  சொல்லுகின்ற முறைக் கண்டே
  சொல்லுகின்றீர் கவி கொண்டே

  உயிர் எழுத்து அத்தனையும்
  ஒலித்து வர முதலெழுத்தாய்
  பயிற்சி பெற பாங்காக
  பாடி விட்டீர் வாழ்கதமிழ்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 7. சிந்தனை வேகமும் வீச்சும் பிரமிக்க வைக்கிறது
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஐயா தங்கள் ஆசிர்வாதம் மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டுகிறேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 8. ஆஹா... மறுபடி ஆத்திச்சூடியில் தொடங்கி முத்தான கருத்துக்களை வழங்கிய நற்கவிதை! ரசித்துப் படி்க்க வைத்தது. அருமை!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி வசந்தமே .

   Delete
 9. இறைவனில்லை சொல்லவில்லை
  அவன் யாரோ நாமறிவோம் !
  மேல்குலம் வாழ்வதற்காய்
  சமைத்து வைத்த சமாச்சாரம்
  அடிமை வாழ்வுக்கு வித்திட்ட
  அடிப்படை இங்கு ஆரம்பம் !“

  அருமை.. அருமை.. சசிகலா!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 10. எட்டு ஊருக்கு கேட்கும் என் குரலின் உரைநடைக்கு
  சற்றே நில் உரைத்தேன் இரண்டு வரியில் பொருள் என
  கவிதை பாடும் வலையுக புதுக் கவிதாயினிகள்!

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் மீண்டும் உற்சாகம் தரும் தங்கள் வரிகளைக் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 11. \\மேல்குலம் வாழ்வதற்காய்
  சமைத்து வைத்த சமாச்சாரம்
  அடிமை வாழ்வுக்கு வித்திட்ட
  அடிப்படை இங்கு ஆரம்பம்\\

  இறந்தகாலத் தவறுகளின் ஆணிவேரினை அறியச்செய்யும் அற்புத வரிகள்.

  \\விடையில்லா கேள்விகளாய்
  எழுந்து நின்ற போதினிலும்
  உயிருண்டு உடலுண்டு உணர்வும் அதுபோல
  நினைவுண்டு கனவுண்டு நிஜம் இன்றிதுவே !\\

  நிகழ்கால நிதர்சனத்தை எடுத்துரைக்கும் உண்மை வரிகள்.

  \\இங்கேதான் நானிருப்பேன்
  பிடிவாதம் பிடித்து நின்றால்
  இருக்குமிடத்தில் நான் இருக்கும்
  மற்றதெல்லாம் கடந்து போகும்
  வாருங்கள் விதைத்திடுவோம்
  வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் \\

  எதிர்காலத்தைத் தெளிவுற வரையறுக்கும் இனிய வரிகள்.

  எல்லாம் இணைந்தொரு அழகிய கவியாய்ப் பரிணமிக்க, வாழ்வியல் விளக்கம் எளிதாய் உணர்த்தப்படும் விந்தை கண்டு வியக்கிறேன். பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பம் முதல் முடிவு வரை படித்து ருசித்து கருத்திட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 12. வழக்கம் போல கவிதை நன்றாக இருக்கிறது

  /வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் !/
  வசந்தகாலம் என்றாலே எங்களை போல உள்ளவர்களுக்கு அலர்ஜி. அதனால் வசந்த காலத்தை நான் யாருடன் பகிரமாட்டேன். (அமெரிக்காவில் பாதி பேருக்கு வசந்தகாலம் என்றால் அலர்ஜிகாலம் )

  ReplyDelete
  Replies
  1. அலர்ஜி அனுபவும் இங்கு இல்லை ஆதாலால் வசந்தங்களைப் பகிர்ந்திடுவோம் .

   Delete
 13. அகர வரிசையில்..... அருமையான தொகுப்பு கவி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 14. இன்னொரு ஔவையாராக மாறிட்டீங்களா? அகர வரிசையில கவிதை படைத்து இருக்கீங்களே!? கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 15. கவிதை ரொம்ப நல்லாவே இருந்தது சசிககா. இதுக்கு மேல எதுவும் சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸீயு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 16. அகிலத்தின் தோற்றத்தில்
  அகரமெது
  வசந்தங்களை விதைத்து
  வளமாய வாழ
  வழிசொல்லும் அருமையாக கவிதைக்கு
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. புலவர் சா இராமாநுசம்...
   ஐயா எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
  2. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

   Delete
 17. வாய்மூடி மௌனம் தவிர்ப்போம்.சமயங்களில் ரௌத்ரமும் கற்று வைப்போம் தோழி !

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி