Ads 468x60px

Tuesday, May 1, 2012

மே தினம் !


எதைக் கொண்டாடுகிறோம்
தொழிலாளர் தினமென்று
போரடிக்கும் மாட்டின்
வாய் கட்டிச் சிரிப்பதையா ?
சீரழிந்த சமூகத்தின்
அவல அரங்கேற்றத்தையா ?
எதைக் கொண்டாடுகிறோம் ?
முதலாளி வர்க்கத்தின்
அடிமைகளாய் வாழ்கின்ற
படைப்பாளி கூட்டத்தை
தொழிலாளர் என்றழைத்து
அடிமைப் படுத்தியதை
கொண்டாட ஓர் நாள்
மே தினம் நமதே என்று !

இலவசங்கள் வழங்கி வழங்கி
உழைப்பையும் ஊனமாக்கி
சோம்பேறிகளாய் பார்க்கின்ற
அரசுகளின் எண்ணமென்ன
வாக்கு வாங்க திட்டமிட்டு
பிச்சைக் காரர் ஆக்கிநிற்கும்
ஜன நாயக மன்னர்களில் 
ஒரு சாரர் தொழிலாளிகளாய் !

காரல் மார்க்ஸ் , லெனின் என்று
கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த
தலைவர்கள் இன்றில்லை
காகிதத்தில் மட்டும் வாழும்
பொதுயுடமைக் கொள்கைகளால்
வாழ்வு வளமாகுமென்றால்
அதுவும் கனவுகளாய் !

ரஷ்யா சிதைந்து காணவில்லை
அமெரிக்காவோ முதலாளிவர்க்கம்
சைனா மட்டும் இருக்கிறது
அங்கும் ஜனநாயகம் வாழவில்லை .

பக்கத்துக்கு வீட்டு பசிதீர்க்க
மனமில்லா மனதுடனே
பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிக்கும்
சுயநலங்கள் நமக்கு மட்டும்
உள்ளதைப் பகிர்ந்துண்டு
உள்ளத்தில் கருணை ஏந்தி
உயர்வான கொள்கை பூண்டு
உலகுயர நாம் உழைத்து
உறவெல்லாம் உயர்வதனை
உள்ளத்தில் கண்டு மகிழும்
நாளே மே தினம் !

அன்பும் அறிவும் ஒன்று சேர
அறனும் பண்பும் கூடிவாழ
அகல் விளக்காய் மனம் ஒளிர
பேசும் பேச்சை விட்டு விட்டு
வாழ வைத்தால் அது வாழ்க்கை !
முதலாளியின் முதலாளியாய்
ஆனவர் கதையுண்டு
தொழிலாளரிடம் தொழிளாளியாய்
போனவர் கதையுண்டு
உண்மையாய் வேலை செய்து
உயர்ந்தவர் எந்நாளும்
உலகிற்கு முதலாளி
இதுவே சித்தாந்தம் .

25 comments:

 1. மே தினம் என்பது தொழிலாளர்களை நினைவு கூர்ந்து கூட்டம் போடுவதாகவோ, தொழிலாளர்களுக்காக ஏதாவது ஆக்கபூர்வமாய் செய்யு்ம் தினமாகவோ இல்லாமல், மற்றொரு விடுமுறை தினம் என்றும் தொலைக்காட்சி்களுக்கு கொண்டாட்ட தினமாகவும்தான் மாறி விட்டிருக்கிறது. உழைப்பவன் ‘காந்தித்தாத்தா’ ‌நோட்டைப் பார்க்க படாத பாடுபட, முதலாளிகள் அதில் முகம் துடைக்கின்றனர்.

  உலகுயர நாம் உழைத்து
  உறவெல்லாம் உயர்வதனை
  உள்ளத்தில் கண்டு மகிழும்
  நாளே மே தினம் !

  -மிகமிகச் சரியாச் சொன்னீங்க தென்றல்! உங்களுக்கு ஒரு ஜே!

  ReplyDelete
 2. தார்மீகக் கோபமும் நாட்டு உண்மைநிலையும் அதற்கான் தீர்வும்
  கலந்து தந்த மே தினப் பதிவு அருமை
  தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவந்தாலே
  நல்ல கவிதைகள் யாரும் படைக்கலாம் என்கிற
  நம்பிக்கை பிறக்கிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்துக்கள்

  ReplyDelete
 3. ஆதங்கம் பளிச்...... பகிர்வுக்கு நன்றி படைப்பாளிக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 4. உண்மையை
  உரக்க சொன்னீர்கள் தோழி

  ReplyDelete
 5. எதைக் கொண்டாடுகிறோம்
  தொழிலாளர் தினமென்று
  போரடிக்கும் மாட்டின்
  வாய் கட்டிச் சிரிப்பதையா ?
  சீரழிந்த சமூகத்தின்
  அவல அரங்கேற்றத்தையா ?
  எதைக் கொண்டாடுகிறோம் ?“

  தொடக்கமே அசத்தல்!
  அடுத்து எந்த வரியை எடுத்துச் சொல்வது என்று தெரியவில்லை.
  அருமை. அருமை... வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 6. மிக அருமையான கவி அக்கா
  மே தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. உலகுயர நாம் உழைத்து
  உறவெல்லாம் உயர்வதனை
  உள்ளத்தில் கண்டு மகிழும்
  நாளே மே தினம் //

  அசத்தல் கவிதை சசி...

  மே தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. //உண்மையாய் வேலை செய்து
  உயர்ந்தவர் எந்நாளும்
  உலகிற்கு முதலாளி
  இதுவே சித்தாந்தம் .//
  உண்மை!உண்மை!

  ReplyDelete
 9. // உண்மையாய் வேலை செய்து
  உயர்ந்தவர் எந்நாளும்
  உலகிற்கு முதலாளி
  இதுவே சித்தாந்தம் .//

  உண்மை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வணக்கம்! மே தினத்தில் வித்தியாசமான சிந்தனை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. கணேஷ்...
  மே தினம் என்பது தொழிலாளர்களை நினைவு கூர்ந்து கூட்டம் போடுவதாகவோ, தொழிலாளர்களுக்காக ஏதாவது ஆக்கபூர்வமாய் செய்யு்ம் தினமாகவோ இல்லாமல், மற்றொரு விடுமுறை தினம் என்றும் தொலைக்காட்சி்களுக்கு கொண்டாட்ட தினமாகவும்தான் மாறி விட்டிருக்கிறது. உழைப்பவன் ‘காந்தித்தாத்தா’ ‌நோட்டைப் பார்க்க படாத பாடுபட, முதலாளிகள் அதில் முகம் துடைக்கின்றனர்.//
  தங்களின் கருத்து முற்றிலும் உண்மையே தங்களின் அழகிய பின்னூட்டம் காணவே பதிவிடத் தோன்றுகிறது வசந்தமே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 12. ரமணி ஐயா ...
  தார்மீகக் கோபமும் நாட்டு உண்மைநிலையும் அதற்கான் தீர்வும்
  கலந்து தந்த மே தினப் பதிவு அருமை
  தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவந்தாலே
  நல்ல கவிதைகள் யாரும் படைக்கலாம் என்கிற
  நம்பிக்கை பிறக்கிறது
  ஐயா தங்கள் ஆசிர்வாதம் என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 13. மனசாட்சி™...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 14. செய்தாலி...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 15. AROUNA SELVAME...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 16. Esther sabi...
  சகோதரிக்கு வணக்கம் தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

  ReplyDelete
 17. ரெவெரி...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 18. T.N.MURALIDHARAN..
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 19. வே.நடனசபாபதி...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 20. தி.தமிழ் இளங்கோ...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 21. வரிகளே வியர்வை சிந்துகிறது... அருமை..

  ReplyDelete
 22. ♔ம.தி.சுதா♔...
  தங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 23. ada daa!

  arasiyal-
  aathangam-
  arivurai-
  anaithin kalavai!

  ungal kavithai!

  ReplyDelete
 24. நல்லதோர் கவிதை வீச்சு ...

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி