Ads 468x60px

Friday, April 27, 2012

சுயநலத்தின் முதல் குழந்தை...!

   
   கரம்முதல் சிகரம்வரை,
   ண்டவன்துவங்கி அடிமைவரை,
   தயங்களும் எண்ணங்களும்,
   ரமற்ற கொடும் பாலையாய்,
   ண்மைகளை உண்டுவாழ்ந்து,
   னமான எண்ணம் சூடி,
   ரிகின்ற பச்சைமரத்தை,
   ய்கின்ற காலம் பார்த்து,
   ம்பொன் சாமி திருட்டுபோல்,
   ருநாளும் திருந்தாத மனதோடு,
   டுவதேன் சுயநலப் பாட்டோடு!

   சுயநலத்தின் முதல் குழந்தை,
   யார? பதில்தான் தேடுகிறேன்!
   வானில்லைப் புவியில்லை,
   நீரில்லை,மலையில்லை,
   மண்ணில்லை,மரமில்லை,
   காற்றில்லை-பாவமனிதனுமில்லை.

   எதுவுமில்லா வெறுமையின்,
   வசந்தகாலம் கொன்றுவிட்டு,
   இயற்கையெனும் விதையை,
   ஊன்றியதின் நோக்கமென்ன!
   என்பெயர் விளங்க வேண்டும்,
   எனைவணங்க கைகள் தேவை,
   என்ற சக்தியின் சுயநலத்தால்,
   நாம் வந்து வீழ்ந்தோமோ?

   முற்பிதாக்கள் செய்த பாவம்,
   முல்லைப்பூவைச் சேருவதேன்,
   அதைக்கொய்து உயிரெடுக்கும்,
   இதயமற்ற செய்கையேன்,
   பேசா மடந்தைகளை- நாம்,
   நம் உணவாய் நினைப்பதேன்,
   நமைக்காக்க சட்டங்களைத்,
   தீட்டிவைத்து அழிப்பதேன்,
   உறவென்ற பெயர்சொல்லி,
   அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
   எல்லாமே பொய்யுரைகள்,
   சுரண்டும் சுயநலங்கள்!

   திறந்துவிட்டால் பறந்துபோகும்,
   என்பதினால் திருமணங்கள்!
   நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
   அரங்கேறும் நாடகங்கள்,
   மனதைக் கேட்டால் தெரிந்துவிடும்,
   வலியைச் சுமந்து பயணங்கள்,
   பிரியங்களும்,பிரிவுகளும்,
   ஒருகூட்டுப் பறவைகளாய்,
   இறகைவெட்டிப் போட்டதனால்,
   கூண்டில் இணை ஜோடிகளாய்.
   என் உதிரம்,என் குடும்பம்,
   என்பிள்ளை,என்வீடு,
   என்சுற்றம்,என் சமூகம்,
   என்சொத்துஎன் பணம்,
   என்தேசம்,என் உலகம்,
   எனதென்றே பாடுகிறோம்,
   என் மூச்சிக் காற்றுக்கும்,
   எனக்கும் பந்தமென்ன ?
   எங்கிருந்தோ வருகிறது,
   என்னுயிர் காக்கிறது!

   எதையுமது கேட்டதில்லை,
   எப்போது அதுபோகும்,
   எனக்குச்சொல் மானுடமே!
   அடங்காத  ஆழ்கடலும்,
   அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
   அறியாத தாதுக்களும் ,
   அழகாய் ஒளிரும் கதிரவனும்,
   அடியில்வாழும் பொக்கிஷமும்,
   அத்தனையும் நமதேயெனறு,
   அனைவருமே நினைக்கும்வரை,
   அத்தனையும் சுயநலமே,
  அமைதி வேண்டுமெனில்
   அழுக்கான சுயம் அழிப்போம்!
படங்கள் நன்றி கூகுளுக்கு .

41 comments:

 1. //அத்தனையும் நமதேயெனறு,
  அனைவருமே நினைக்கும்வரை,
  அத்தனையும் சுயநலமே,
  அமைதி வேண்டுமெனில்
  அழுக்கான சுயம் அழிப்போம்!//

  நல்ல எதிர்பார்ப்பு.ஆனாலும் இது நடக்குமா என்பது ஐயமே. எனினும் நடக்கும் என் நம்புவோம். நல்ல கவிதை.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. Anbu Thozhi SSK
  Unarvukal sirukathai uravukal thodarkathai enave suyanalathin muthal kuzhandhai yaar endru puriya mudiyatha puthirthan. ennai poruthavarai suyanalathin muthal kuzhandhai thannai thane arinthu kollum manithan endru solven. Yenedral avanai avan ariya murpaduvathu oruvitha suyanalamthane?

  ReplyDelete
 3. சுயநலம் அழிக்கச்சொல்லும் நல்ல கவிதை!
  அ,ஆ,இ..... நல்ல சிந்தனை!

  ReplyDelete
 4. அழுக்கான சுயநலம் அழிப்போம்! அத்தனை எளிதா தென்றல் அது? நிகழ்ந்தால் அனைவருக்கும் நலமே...! ஆத்திச்சூடிக் கவிதையாய் ஆரம்பித்த விதம் அழகோ அழகு! சசிச்சூடி!

  ReplyDelete
 5. //அடங்காத ஆழ்கடலும்,
  அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
  அறியாத தாதுக்களும் ,
  அழகாய் ஒளிரும் கதிரவனும்,
  அடியில்வாழும் பொக்கிஷமும்,
  அத்தனையும் நமதேயெனறு,
  அனைவருமே நினைக்கும்வரை,
  அத்தனையும் சுயநலமே,//

  சுயநலத்தின் எல்லைகளை அழகாக வரையறுத்துவிட்டீர்கள். சுயநலம் தொலைத்த மனிதமே தழைக்கும். அழகான மற்றும் மிகவும் தேவையான சிந்தனை. பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 6. வே.நடனசபாபதி...
  நம்பிக்கையே வாழ்க்கை என்று சொல்றிங்க நம்புவோம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 7. ganpatsuresh...
  தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நண்பரே .

  ReplyDelete
 8. “இறகைவெட்டிப் போட்டதனால்,
  கூண்டில் இணை ஜோடிகளாய்.“

  என்ன ஒரு அருமையான ஆழ்ந்த கருத்து!!
  சூப்பர் சசிகலா.
  இப்படியான கருத்து அனைவருக்கும் தோன்றிவிடாது.
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 9. நம்பிக்கைபாண்டியன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 10. கணேஷ்...
  முடியாத ஒன்றை எதிர்ப்பார்க்கும் நாம் அதானே வாழ்க்கை பார்ப்போம் . தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி வசந்தமே .

  ReplyDelete
 11. கீதமஞ்சரி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ .

  ReplyDelete
 12. AROUNA SELVAME...
  தங்கள் வருகையும் ரசித்துப் பாராட்டியது கண்டும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 13. அமைதி வேண்டுமெனில்
  அழுக்கான சுயம் அழிப்போம்!

  இதைவிட சுருக்கமாக தெளிவாக
  இவ்வளவு பெரிய விஷ்யத்தை சொல்வது கடினமே
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. Ramani...
  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

  ReplyDelete
 15. என் மூச்சிக் காற்றுக்கும்,
  எனக்கும் பந்தமென்ன ?
  எங்கிருந்தோ வருகிறது,
  என்னுயிர் காக்கிறது!//

  nice lines!!!

  ReplyDelete
 16. அழுக்கான சுயநலம் அழிப்போம்...அழகான + ஆழ்ந்த எண்ணம் + வரிகள்...வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 17. " அடங்காத ஆழ்கடலும்,
  அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
  அறியாத தாதுக்களும் ,
  அழகாய் ஒளிரும் கதிரவனும்,
  அடியில்வாழும் பொக்கிஷமும்,
  அத்தனையும் நமதேயெனறு,
  அனைவருமே நினைக்கும்வரை,
  அத்தனையும் சுயநலமே"

  அருமை..அருமை..

  ReplyDelete
 18. நானும் எல்லாச் செல்வங்களையும் நமதே’னுதான் நினைக்கிறேன். எடுக்கத்தான் விடமாட்டுக்காங்க.சும்மா ஜோக்! சசி வரவர கலக்குறீங்க.

  ReplyDelete
 19. அடங்காத ஆழ்கடலும்,
  அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
  அறியாத தாதுக்களும் ,
  அழகாய் ஒளிரும் கதிரவனும்,
  அடியில்வாழும் பொக்கிஷமும்,
  அத்தனையும் நமதேயெனறு,
  அனைவருமே நினைக்கும்வரை,
  அத்தனையும் சுயநலமே//

  -அருமையான வரிகள்! -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 20. இந்த வரி என்று
  குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை தோழி

  வரிகளில் நல் சிந்தனைகள்
  அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. அருமை. நல்ல சிந்தனை. சுயநலம் நாடும்போது அதன்மூலம் பொதுநலமும் சேர்வது போல அமைத்துக் கொண்டால் சுயநலம் தவறில்லை என்று சொல்ல வைக்கலாம்!

  ReplyDelete
 22. ஔவ்வை பாட்டி போல னீங்க எழுதிய ஆத்திச்சூடி நல்ல கருத்துக்களை தாங்கி வந்துள்ளது பகிர்வுக்கு நன்றி தோழி. த ம 7

  ReplyDelete
 23. sugamana sumaigal...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 24. ரெவெரி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ

  ReplyDelete
 25. சுயநலம் எங்கும் எதிலும் அடங்கப்பா...

  பாராட்டுக்கள் சகோ

  ReplyDelete
 26. மதுமதி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ

  ReplyDelete
 27. விச்சு...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ.

  ReplyDelete
 28. Seshadri e.s...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ.

  ReplyDelete
 29. செய்தாலி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 30. ஸ்ரீராம்...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. ராஜி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 32. மனசாட்சி™...
  ங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 33. அ முதல் ஓ வரை சுயநலத்தை விரட்டும் வரிகள்... பகிர்வு அருமை

  ReplyDelete
 34. சுயநலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வென்றும். கவிதை நன்று.

  ReplyDelete
 35. சுயமும் கொஞ்சம் அவசியமாய்ப்படுகிறது மேடம்.சுயங்களே பலைடங்களில் நம்மை அடையாளப்படுத்துவதாக/நன்றி வணக்கம்.

  ReplyDelete
 36. முற்பிதாக்கள் செய்த பாவம்,
  முல்லைப்பூவைச் சேருவதேன்,
  அதைக்கொய்து உயிரெடுக்கும்,
  இதயமற்ற செய்கையேன்,
  பேசா மடந்தைகளை- நாம்,
  நம் உணவாய் நினைப்பதேன்,
  நமைக்காக்க சட்டங்களைத்,
  தீட்டிவைத்து அழிப்பதேன்,
  உறவென்ற பெயர்சொல்லி,
  அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
  எல்லாமே பொய்யுரைகள்,
  சுரண்டும் சுயநலங்கள்!//

  சுயநலங்கள் சூசகமாய் சுரண்டும் குணங்கள்.
  உண்மைதான். அருமையான வரிகள் தோழமையே.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 37. பறவைகள் முதல் மனிதன் வரை சுயநலம்தான்.அந்தச் சுயநலம் அடுத்தவரைப் பாதிக்காதவரை பிரச்சனை குறைவு.எப்போதும் போல விரிவான கவிதை சசி !

  ReplyDelete
 38. முதல் 11 வரிகளுமே அருமை மீண்டும் ஒருமுறை வாழ்த்திகிறேன் நீங்கள் தொடர்ந்து பதிவிட

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி