Ads 468x60px

Thursday, April 12, 2012

கண்மணியே ....

அன்பாய் உச்சிமோர்ந்து 
அழகே ஆருயிரே எனக்கொஞ்சிய 
அம்மாவின் இதயத்தை 
பறித்தெடுத்த மாபாவி !
அப்பா வேடத்தில் சில 
அரக்கர்கள் தோன்றிஇங்கே
அணைக்கின்றார் தீபங்களை 
அழியவேண்டும் இவரெல்லாம் !
கண்ணே கனியமுதே 
கட்டிக்கரும்பே கண்மணியே 
கலிகாலத்தில் நீ ஏன் பிறந்தாய் 
உருகொடுத்தவனே உனை
தீயினால் சுட்டானே 
என் தேகம் ஏறயுதடி 
உனை அறியா என் இதயம் 
வலிக்கிறது ஐயோ 
கொடுமையிது பசுந்தளிரைப் 
பறித்தானே படுபாவி !
சண்டாளன்  வைத்த நெருப்பில் 
செல்வமே நீ வளர்ந்த 
கருவறையே தவறான இடமாய் 
தெரிகிறதே தாங்கவில்லை !
நீ எனக்கு உறவில்லை ஆனாலும் 
நீ என் குழந்தையானாய் 
நினைவே கதறுமாபபோல்
நீச்சனவன் செய்துவிட்டான் 
படைத்தவனே நீ இருந்தால் 
பாதகனை கொன்று விடு 
உயிரை எடுதல்ல 
கைகால்கள் முடமாக்கி 
வீதியில் எறிந்துவிடு
ஒருவாய்க் கூழுக்கும் 
அவன் அலைந்து சாக வேண்டும் 
ஊர் உலகம் எல்லாமும் 
காறி அவன் மேல் உமிழவேண்டும் !
எந்தத் தாய் ஆனாலும் 
இந்த செய்தி பொறுப்பாளா ?
பெற்ற தாய் இனி உலகில் 
நடைபிணமே எந்நாளும் !
விசாரணைத் தேவையில்லை 
கை கால்கள் வெட்டி எறிந்து
கண்களை குருடாக்கி 
ஆண்மையை  பறித்தெடுத்து 
அலையவிட வேண்டும் !
நீதி மன்றம் இவன்வழக்கை 
விசாரிக்க மறுக்க வேண்டும் 
வழக்கறிஞ்ர்  ஒன்று கூடி 
இவனுகெதிராய் நிற்கவேண்டும் 
பணத்தை இவனுணவாய் 
உண்டு வாழ உத்தரவிட்டு 
இவனைப் பாடமாய் அரங்கில் 
நிறுத்தி வைக்க வேண்டும் !
அன்பே உன் மரணத்தால் 
உருகுலைந்து போனோமடா 
பிஞ்சு முகத்தைப் பார்க்கையிலே 
வெம்பி மனம் மருகுதடா 
உன் சமூதாய விடுதலைக்கு 
ஆரம்பமெழுதிப் போனாயோ ?
மகாத்மா ஆனாயோ 
கலங்கரை விளக்கம் நீ கண்ணே 
கண்ணீரால் அஞ்சலி செய்து 
கதறுகிறேன் நானும் கூட 
வேண்டாம் இந்தக்கொடுமை 
தாய்மையை தீயிலிட்டு 
கொளுத்தாதீர் சுனாமிபோல் 
அழிவெழுதும் மானிடமே 
இவள்   போல் மனதில் 
எத்தனையோ சுனாமிகள் 
இவரையெல்லாம் இரக்கமின்றி 
களை எடுத்தல் நீதிஎன்பேன் 
புண்ணிய பூமி என்பதெல்லாம் 
பொய்யாய் திரை விரிகிறது 
விம்மியழும் இதயத்தோடு 
எழுதுகிறேன் ஓர் தாயாய் !

 
    
 

32 comments:

 1. வரிககு வரி ஆமோதிக்கிறேன் தென்றல். தாயின் குமுறல் மட்டுமல்ல... நல்லிதயம் படைத்த அனைருக்குமே இந்த ஆவேசம் வரும், வரவேண்டும். மலரைக் கசக்கிய அந்த மாபாவியை என்ன செய்தாலும் தகும்...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. பெண்
  பிள்ளை என்பதற்காக
  பச்சிளம் குழந்தையை
  சுட்ட தந்தை

  அதை வாசித்தே போதே
  அவனை அவனைப் போன்றவர்களின் மீது
  கொலைவெறி இருந்தது

  அதை கவிதையாக்கி விடீர்கள்
  மீண்டும் ரணப் படுகிறது
  மனம்

  பெண்ணை
  இழிவாக கருதும் ஆண் என்ற எதிர் பாலினத்திற்க்கான
  பதிவு ஓன்று பதிந்துள்ளேன்
  நேரமிருந்தால் வாருங்கள்

  ReplyDelete
 4. அருமை மகளே!
  தாய்மையின் உயர்வை, தவிக்கும்
  நெஞ்சத்தை அழுத்த மாக, சோகம் கலந்த நிலையில் பாடல்!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 5. தாய்மையின் வலி கவியில் தெரிகிறது சசிகலா.

  உங்களுடைய அனைத்து பதிவிற்கும் பின்னோட்டமிட ஆசைதான். ஆனால் உங்கள் வலையில் கருத்துரை இடும் பெட்டி அனேக நேரங்களில் இருப்பதில்லை. இது எதனால்? கொஞ்சம் கவனியுங்கள். நன்றி.

  ReplyDelete
 6. நீ எனக்கு உறவில்லை ஆனாலும்
  நீ என் குழந்தையானாய்
  >>>
  அடுத்தவர் துன்பம் கண்டு துடிக்க கருவறையில் சுமக்க வேண்டிய அவசியமில்லை. நெஞ்சத்தில் சிறிது ஈரம் இருந்தாலே போதும். வலி நிறைந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. அந்த யோக்கியனுக்கும் மன நிலை சரியில்லாதவன்
  எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்கவேண்டு என வாதாட
  ஒரு வக்கீல் வருவார்.பொறுத்திருந்து பார்ப்போம்

  ReplyDelete
 8. //கை கால்கள் வெட்டி எறிந்து
  கண்களை குருடாக்கி
  ஆண்மையை பறித்தெடுத்து
  அலையவிட வேண்டும் !//

  செய்தியைப் படித்து ஏற்பட்ட கோபத்தை இரணத்தை வார்த்தையால் வடித்திருக்கிறீர்கள்.
  உங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.அவனுக்கு எல்லாம் வல்ல இறைவன் தக்க தண்டனையைத் தருவது உறுதி.

  ReplyDelete
 9. பெண் குழந்தைகள் பிறப்பதுக்குக் காரணமே ஆண்களின் விந்தின் அதிகரித்த வேகம் என்றே சொல்கிறார்கள்.என்றாலும் கொடுமை !

  ReplyDelete
 10. கணேஷ்..
  சட்டத்தின் பிடியில் இருந்து இவன் போன்றவர்கள் தப்பி விடக் கூடாது .

  ReplyDelete
 11. செய்தாலி...
  பெண்களை வாழவைப்பதாக சொல்லி அழிவின் விளிம்பில் தள்ளி விடுகின்ற வேதனைகள் .

  ReplyDelete
 12. புலவர் சா இராமாநுசம்...
  சோகம் கலந்த நிகழ்வினால் வந்த துயரத்தின் வெளிப்பாடு .

  ReplyDelete
 13. AROUNA SELVAME
  கணினியோடு பதிவிடவும் இப்படிதான் போராடிக் கொண்டிருக்கிறேன் .

  ReplyDelete
 14. ராஜி ..
  ஒரு தாய் மக்கள் நாம் என்போம் .

  ReplyDelete
 15. Ramani ...
  அப்படி ஒருவன் வந்தால் அவனும் அவனைப் போலவே இருப்பான்.

  ReplyDelete
 16. வே.நடனசபாபதி...
  அவனை விடுங்கள் குழந்தை என்ன பாவம் செய்தது .

  ReplyDelete
 17. ஹேமா...
  கொடுமையால் ஆளப்படுவது பெண்களா ?

  ReplyDelete
 18. என்ன சொல்ல சசி? மனம் வெறுத்துப் போகிறது இதைப் போன்ற மனிதாபிமானமற்ற மனிதர்களைக் கண்டால். உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியோடும் ஓராயிரம் முறை உடன்படுகிறேன் தோழி.

  ReplyDelete
 19. கட்டிக்கரும்பே கண்மணியே
  கலிகாலத்தில் நீ ஏன் பிறந்தாய் ! கொடுமை !!!

  ReplyDelete
 20. உங்கள் மன வேதனையும்,தார்மீகக்கோபமும் கவிதையாக வெடித்து வந்திருப்பது புரிகிறது!இக்கோபம் சமூகத்துக்கு வர வேண்டும்.

  ReplyDelete
 21. மிக வேதனையான அவலம். உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.;

  ReplyDelete
 22. கண்மணியே ஏன் பிறந்தாய்?? சொற்களில் வேதனை புலப்படுகின்றது அக்கா

  ReplyDelete
 23. தாய்மையை தீயிலிட்டு
  கொளுத்தாதீர் சுனாமிபோல்
  அழிவெழுதும் மானிடமே
  இவள் போல் மனதில்
  எத்தனையோ சுனாமிகள்
  இவரையெல்லாம் இரக்கமின்றி
  களை எடுத்தல் நீதிஎன்பேன்

  அருமை அக்கா..

  ReplyDelete
 24. நன்று சொன்னீர்கள் தாயே!

  ReplyDelete
 25. அருமையான க(வி)தை நன்றி சகோதரி

  ReplyDelete
 26. அவர்கள் அரக்கர்களாய் ஏன் ஆகிப்போனார்கள்?அப்படி அவர்களை ஆக்கியது எது என சொல்லாமலேயே சாபமிட்டால் எப்படி?கூலிக்கு சென்று சம்பாதிக்கும் சொற்பத்தையும் பிடுங்கிக்கொண்டு டாஸ்மாக் மூலம் வருமானம் வளர்க்கும் அரசு அரக்கரகள் வளர்வதை பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறது.உலகின் பல சமுகங்களில் குடி என்பது ஓய்வு நேர பொழுதுபோக்குதான்.இங்குதான் அது வாழ்க்கையின் பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது.என்கிறார் மனுஷ்யபுத்திரன்/அப்படி இருக்கிறவரையில் சமூகம் இப்படி கேடு கெட்டு பயணிக்கிற வாய்ப்புகள் அதிகமாகும் என்பதே மெய்யாகிறது.

  ReplyDelete
 27. இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 28. இனிய புததாண்டு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 29. enakku intha seythi-
  theriyaathu!

  ada paavi-
  ungal karuththai -
  naanum aamothikkiren!

  ReplyDelete
 30. செய்தித்தாளில் அந்த கொடூர செய்தியை வாசித்து பெருங்கோபம் கொண்டேன் நானும்.

  அப்பிஞ்சு பிரபஞ்சத்தின் ஆன்மா அவனைக் கொல்லும்.

  செய்தியைக் கவிபடுத்திய நீங்கள், அச்செய்தியை சுருக்கமாக பின் குறிப்பில் தெரியப்படுத்தியிருந்தால் தகவல் தெரியாத பலருக்கும் எளிதில் புரியும் என்பது என் தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 31. காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்தபோதும் மனிதன் இதுபோன்ற செயல்களை செய்ததில்லை. ஆயிரம் சட்டங்கள் இருந்தென்ன. பிறந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லையே!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி