Ads 468x60px

Friday, April 20, 2012

வாராதோ வசந்த காலம் !


மஞ்சள் பூசி நீராடி,  
 கண்டாங்கிச்  சேலை கட்டி      
 பொட்டு வைத்து பூச்சூடி
காதோரம் ஜிமிக்கி போட்டு
கழனிக்கு  போன மசசானுக்கு
கஞ்சி கொண்டு நானும் போனேன்! 

ஓரப்பார்வையாலே எனை அள்ளி        
 வந்தாயோ என்று கொஞ்சி
கஞ்சி குடிச்ச மச்சானுக்கு
களைப்பு தீர பாட்டு பாடி ...
என்னன்பே என்று மச்சான்
மயங்கிய நேரம் காதோரம் சேதி
சொல்லிகாசுமாலை கேட்டு நின்றேன்!

புன்னகை ஏக்கத்தோடு,
 மச்சான் முகம் நோக்கி
என்னை உற்றுப் பார்த்து!
காசுமாலை கேட்ட புள்ள
களையெடுக்கவும் ஆள் இல்ல
வளர்ந்து வரும் நெல்மணிக்கும்
தண்ணிபாச்ச நாதியில்லை
கால் வயிறு இனிகண்காணாது போலும் ...

அடி என் கண்ணே,
மணியேகண்ணுக்கு அழகா தெரியும்
ஜிமிக்கி கொஞ்சம் தாயேன் புள்ள!
விதை நெல்லு வாங்கின
கடனுக்குவட்டியாச்சும் கட்ட உதவும் ...
காசுமாலைக்கு ஆசைப்பட்டு
காது ஜிமிக்கியும் போனதென்ன?    
காலமெல்லாம் வராதோ வசந்தகாலம்!                                                                               

35 comments:

 1. தங்கள் கவிதையை படித்தபோது, ‘காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்கம்’ என்ற கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடலும்,‘உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது.

  அன்று முதல் இன்றுவரை உழவனின் நிலை மாறவில்லை என்பதை அழகான கவிதைமூலம் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. உழுது உழுது மற்றவருக்காய் உழைப்பவனுக்கு மிஞ்சுவது வறுமைதான் என்பதை நினைக்கையில் வருத்தம் மேலிடுகிறது. வசந்த வார்த்தைகளால் வேதனையைப் பகிர்ந்துள்ளீர்கள் தென்றல்.

  ReplyDelete
 3. ஆலோலம் பாட்டுப்பாடி
  ஆழமாக உழுது வந்தேன்...
  வரப்பெல்லாம் போட்டாச்சடி
  வடிவான கட்டழகி

  தேனீ கம்பமெல்லாம்
  தேடிவந்து எனைப்புடிச்ச
  தங்கமான செல்லமச்சான்
  உன்குறைய சொல்லிடுங்க!

  இப்படி நடவுப் பாட்டும்
  ஏற்றப் பாட்டும்..

  மனதுக்கு நிறைவாய் இருந்தாலும்.
  உழவர்கள் படும் பாடு இன்னும் தீர்ந்த பாடில்லை
  என்பதை அழகான நாட்டுப்புறப் பாட்டில்
  சொல்லியமைக்கு

  என் மனமுவந்த மலர்க்கொத்தை பிடியுங்கள்
  சகோதரி...

  ReplyDelete
 4. வே.நடனசபாபதி...
  இனிமையான பாடல் வரிகளை நினைவு படுத்திடீங்க, உடன் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

  ReplyDelete
 5. கணேஷ்...
  உண்மைதான் வசந்தமே உழைப்பவனுக்கு நிம்மதியும் கானல் நீரே .

  ReplyDelete
 6. மகேந்திரன்....
  மலர் கொத்தை பெற்றுக்கொண்டேன் அண்ணா . தங்களைப் பார்த்து பார்த்து எதோ கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன் அண்ணா எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் .

  ReplyDelete
 7. இன்றைய விவசாயியின் நிலை இப்படித்தான் இருக்கிறது.விரிசல் விட்ட நிலம் போல/

  ReplyDelete
 8. சசி அக்கா எனக்கு உழவர் வாழ்வு அவ்வளவு பெரிதாக தெரியாது நான் பிறந்து வளHந்தது எல்லாமே மீனவ சமூகத்தில்தான். கவி சூப்பர் நிச்சயம் வசந்த காலம் வரும்.

  ReplyDelete
 9. அடி என் கண்ணே,
  மணியேகண்ணுக்கு அழகா தெரியும்
  ஜிமிக்கி கொஞ்சம் தாயேன் புள்ள!
  விதை நெல்லு வாங்கின
  கடனுக்குவட்டியாச்சும் கட்ட உதவும் ...
  காசுமாலைக்கு ஆசைப்பட்டு
  காது ஜிமிக்கியும் போனதென்ன?
  காலமெல்லாம் வராதோ வசந்தகாலம்! //////

  உழைப்பவர்களின் நிலை இன்று வசந்தம் வீசா காலமாகி விட்டது. தங்கள் வரிகள் உண்மை சகோ...

  ReplyDelete
 10. விதைத்த விதையும் கடனுக்கு,அணிந்த ஜிமிக்கியும் கடனடைக்க,கனவுகள் வாழ்வாக,நம்பிக்கை பொய்யாக,நாளைக்கு நெல்மணியும் காட்சிசாலையிலோ?தனைக்கொன்று நமை வாழவைப்பவரை நினைத்து வாழவைத்ல் நன்று!நமக்கும் மனமில்லை-ஆள்பவர்கும் நினைவில்லை-உங்களுக்காவது நினைவில் வந்தார்களே!..பாவங்களான பாவிகள்--சபாஷ்!

  ReplyDelete
 11. விவசாயியின் அவல நிலை கூறும் அருமைக் கவிதை

  ReplyDelete
 12. ஏற்றம் இறைக்கும் இந்த புகைப்படம் எங்குதான் கிடைத்தது? ஆச்சர்யமாக இருக்கிறது. கவிதையும் அருமை!

  ReplyDelete
 13. சகோதரி நாட்டுப் பாடல் முயற்சி செய்துள்ளீர்கள். போகப் போக இன்னும் சிறப்பாக வரும். பாடப் பாட ராகம் என்பது போல. முன்னேற வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. ஒரு கிராமத்து ரசனை இருக்கிறது கவிதையில் சசி !

  ReplyDelete
 15. மண்வாசனை கமழும் கவிதை அருமை சகோதரி. நான்லாம் கனகாம்பரம், டிசம்பர் பூலாம் முழம் முழமா வச்சுக்குவேன். என் பொண்ணுங்க கனகாம்பர பூவை கண்டாலே பட்டிக்காடுன்னு காத தூரம் ஓடுதுங்க. ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

  ReplyDelete
 16. உழவனின் இன்றைய நிலையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடைசி பகுதி அருமை. வே. நடனசபாபதி அழகாகச் சொல்லியிருக்கிறார். ஆதரிக்கிறேன். மகேந்திரனின் கவிதை பதிலையும் ரசித்தேன்.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. உழுது பிழைக்கறவன் நிலை அழுது புலம்பறதுதான் அழகாச் சொல்லிருக்கீங்க சசிக்கா. கவிதையின் நடையழகை ரொம்பவே ரசிச்சேன் நான்!

  ReplyDelete
 19. ரொம்ப இனிமையாக இருக்கிறது ! அது சரி, இந்த படமெல்லாம் எங்கே கிடைக்கிறது ? படங்களும் சூப்பர் !

  ReplyDelete
 20. விமலன் ...
  உண்மைதாங்க விரிசல் விட்ட நிலமாய் அழகான வார்த்தை நன்றிங்க .

  ReplyDelete
 21. Esther sabi ...
  எங்கள் குடும்பம் விவசாய குடும்பம் தங்கையே விதை நெல்லைப் பற்றி தெரியவில்லை என்றாலும் விவசாயின் நிலை தெரியும் நன்றி தங்கை .

  ReplyDelete
 22. தமிழ்வாசி பிரகாஷ் ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 23. D.G.V.P.SEKAR ...
  நெல்மணிகள் காட்சிப் பொருள் என்றால் நாமெல்லாம் எதைத் தின்பது .

  ReplyDelete
 24. சென்னை பித்தன்...
  அவல நிலைக்கு காரணம் எதுவென்றே தெரியவில்லை ஐயா .

  ReplyDelete
 25. கவிப்ரியன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

  ReplyDelete
 26. kovaikkavi ..
  உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 27. ஹேமா...
  நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததை மறக்கவில்லை சகோ . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 28. ராஜி...
  ஆமாங்க எங்க வீட்ல மஞ்சள் கனகாம்பரம் கூடை கூடையா பறிப்போம் கட்டி தலையில் வைக்க சோம்பேறித்தனம் அம்மாவிடம் திட்டு வாங்குவோம் இப்போ அந்த பூவும் பார்கமுடியல .

  ReplyDelete
 29. ஸ்ரீராம்...
  ரசித்து பின்னூட்டம் இட்டதைக் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

  ReplyDelete
 30. நிரஞ்சனா...
  ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி மா .

  ReplyDelete
 31. AMK.R.PALANIVEL...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

  ReplyDelete
 32. படங்கள் கூகிள் இல் இருந்து எடுக்கப்பட்டது கூகுளுக்கு நன்றி.

  ReplyDelete
 33. நாட்டு பாடல் உழவர் பாட்டு ரசித்து வாசித்தேன்

  படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. மனசாட்சி™ ...
  ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க .

  ReplyDelete
 35. azhakaa sollideeng!

  uzhavanin kanneeerai.....

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி