Ads 468x60px

Saturday, April 21, 2012

அழையா விருந்தாளி ...!


அவனியில் அவதரித்த
நாள்முதல் பார்கின்றேன்
அழையா விருந்தாளிகளாய்
ஆயிரம் வாழ்வினிலே !


அழுகைக்கு குரல்கொடுத்து
வந்ததை அறிவித்தோம்
துன்பத்தின் குடியேற்றம்
ஆரம்பமாய் பார்க்கின்றோம் !

வாழ்வு வேண்டுமென கேட்டா
நாம் வந்தோம்
வந்து உதித்ததனால் நாம்
வாழ ஓடுகிறோம் !
கையை மூடி வைத்து
களத்தில் விழுந்தோம் நாம்
கையேந்தி நிற்கின்றோம்
கனவுகள் மெய்ப்படவே !

கடல் உள்வாங்கினாலும்
வெளியே கரை கடந்தாலும்
அழிவோம் என்ற பயம்
மனிதனைக் கொல்கிறது !
மனமும் இப்படித்தான்
இல்லாத உருவத்தை
கற்பனையில் சமைத்துவைத்து
நம்பிக்கையில் காத்திருக்கும்
கண்முன்னே வாழ்திருக்கும்
உயிர்களை மறந்துவிடுவோம்
கண்காணா கடவுளுக்கு
உருவங்கள் கொடுக்கின்றோம் !

கேட்டது கிடைத்து விட்டால்
வெற்றி நமதென்போம்
கேள்வியாய் அது நின்றால்
கேவலம் தோல்வி என்போம் !
எது வெற்றி , எது தோல்வி
எனதென்று எதுவுமில்லை
எல்லாமே பொதுவுடைமை
நினைவே வெற்றி என்பேன் !
காலச் சக்கரத்தின்
வேகம் அதிகமானால்
காலைக்குப் பதில் மாலை வரும்
கனவில் நிலையும் இதுவே காண்!
தீமைகள் கூடுதேடி
பறந்தோடித் திரிகிறது
தீயில் போய் வீழுமுன்
விழித்தெழுதல் நன்றென்பேன் !

நன்மையெது தீமையெது
பகுத்தறிதல் லாபமென்பேன்
பார்வையில் நன்மையானவை
நாளை தீமைஎனில் என் செய்வோம் !
ஆயத்தம் செய்துவைத்த
ஆயுதங்கள் வீணாய்ப்போன
ஆயிரம் கதைகளுண்டு
ஆனாலும் ஆயத்தம் -தேவை !
படங்கள் கூகுள் நன்றி கூகுளுக்கு .

43 comments:

 1. அழையா விருந்தாளி.......

  எப்படீங்க இப்படீல்லாம்.. சிந்தித்த விதம் சொன்ன முறை ......பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. //நன்மையெது தீமையெது
  பகுத்தறிதல் லாபமென்பேன்
  பார்வையில் நன்மையானவை
  நாளை தீமைஎனில் என் செய்வோம் //ம்ம்ம் மீசை இல்லா பாரதியின் வரிகள்

  நல்ல கவிதை தோழி
  சிறந்த வரிகள் சிறப்பான சிந்தனை
  என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  கடைசி வரிகளில் பாரதியின் வரி வேட்கை

  ReplyDelete
 3. தலைப்பே சிறப்பு சசி.உங்கள் கவிதைகளில் உள்ள அழுத்தம் எப்போதும் என்னை வியக்கவைக்கும்.பாராட்டுக்கள் தோழி !

  ReplyDelete
 4. மனசாட்சி ...
  தங்கள் உடன் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 5. செய்தாலி...
  மனம் சாட்சி சொல்கின்ற போது நம் கைகளே நம்மை சுட்டிக்காட்டாமல் இருக்கும் வாழ்வு தேவை ஆனாலும் நன்மை எது தீமை எது அறியும் கருவி நம்மிடம் இல்லை .

  ReplyDelete
 6. ஹேமா...
  என்ன சகோ தங்கள் வரிகளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றும் தங்களைப் போல் நமக்கு எழுத வருமா என்று , தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 7. என்ன சகோ, பிளாக்கு கலர் புல்லா மாறி இருக்கு... நச்சுன்னு.,
  நல்லா இருக்கே

  ReplyDelete
 8. // கேட்டது கிடைத்து விட்டால்
  வெற்றி நமதென்போம்
  கேள்வியாய் அது நின்றால்
  கேவலம் தோல்வி என்போம் !/

  மனித இயல்பே அதுதானே.

  புதிய கருத்துக்களோடு கூடிய தங்கள் கவிதைகள் நாளுக்கு நாள் புதிய எழுச்சியைத் தருகிறது என்பேன் நான்.

  ReplyDelete
 9. அழகாக உள்ளது அக்கா இந்த டெம்பிளேட். ஓட்டு பட்டைகளை சீக்கிரம் பொருத்துங்கள்.

  ReplyDelete
 10. சசிககா... பழைய தளத்தை விட இப்போதைய தோற்றம் ரொம்ப அழகாய்டுச்சு.கையை மூடி வைத்து களத்தில் விழுந்தோம் நாம் கையேந்தி நிற்கின்றோம் கனவுகள் மெய்ப்படவே! எவ்வளவு அழகான வரிகள்... பொருள் பொதித்த அர்த்தமுள்ள கவிதை! உங்கள் சிந்தனையின் Dimension ஒவ்வொரு முறையும் பிரமிக்க வைக்குது!

  ReplyDelete
 11. குறைகளை ஒத்துக் கொள்ளா மனித மனம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே பெரும்பாலும் விழைகிறது. அருமை.

  ReplyDelete
 12. தீமைகள் கூடுதேடி | பறந்தோடித் திரிகிறது | தீயில் போய் வீழுமுன் | விழித்தெழுதல் நன்றென்பேன்! மிக நல்ல வரிகள் தென்றல்! ஒவ்வொருவர் பார்க்கும் கோணத்தில்கூட நல்லது எது, தீயது எது என்பதில் வேறுபாடு இருககத்தானே செய்கிறது..? அருமையான சிந்தனையும், அதன் வெளிப்பாடாய் அமைந்த கவியும் மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்தன சசி! (ப்ளாக் இப்ப முன்னைவிட நல்லாவே இருக்கு) எஸ்தர் சொன்ன மாதிரி ஓட்டுப்பட்டை உடனே வைங்க சசி. நல்ல கவிதையப் படிச்சுட்டு, வாக்களிக்காம போறது என்னவோ போல இருக்கு!

  ReplyDelete
 13. // கண்முன்னே வாழ்திருக்கும்
  உயிர்களை மறந்துவிடுவோம்
  கண்காணா கடவுளுக்கு
  உருவங்கள் கொடுக்கின்றோம் !///

  இது எல்லாருக்கும் ஏன் புரிய மாட்டேன்கிறது,,,, அருமையான கேள்வி சசி.....

  ReplyDelete
 14. கேட்டது கிடைத்து விட்டால்
  வெற்றி நமதென்போம்
  கேள்வியாய் அது நின்றால்
  கேவலம் தோல்வி என்போம் !
  அருமையான வரிகள்

  ReplyDelete
 15. azhakaa!
  seythali sollittaaru!

  athai vida naan enna sollaa!

  arumai!

  ReplyDelete
 16. ஆயத்தம் செய்துவைத்த
  ஆயுதங்கள் வீணாய்ப்போன
  ஆயிரம் கதைகளுண்டு
  ஆனாலும் ஆயத்தம் -தேவை //

  சீரிய சிந்தனை
  சொற்சிக்கனம்
  தொடக்கம் தொடுப்பு முடிவு அனைத்தும்
  தங்கள் படைப்புகளில் மிக நேர்த்தியாய்
  அமைந்திருப்பது மகிழ்வூட்டுகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  !

  ReplyDelete
 17. கவிதை நன்றாக உள்ளது. படங்களை நடு நடுவே போடாமல் முதலில் படம் போட்டுவிட்டு பின் கவிதையை போடவும். தொடர்ந்து படிக்க சிரமமாக உள்ளது

  ReplyDelete
 18. அருமையாக இருக்கிறது !
  மாற்றமும் அழகாக இருக்கிறது !

  ReplyDelete
 19. ''...வாழ்வு வேண்டுமென கேட்டா
  நாம் வந்தோம்
  வந்து உதித்ததனால் நாம்
  வாழ ஓடுகிறோம் ..''
  அத்தனை வரிகளும் சிறப்பு. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. மிக அருமையான வெளிபாடு

  ReplyDelete
 21. //ஆயத்தம் செய்துவைத்த
  ஆயுதங்கள் வீணாய்ப்போன
  ஆயிரம் கதைகளுண்டு
  ஆனாலும் ஆயத்தம் -தேவை !//
  அருமை--தொடக்கம் முதல் இறுதி வரை!

  ReplyDelete
 22. ஆயத்தமாய் இருப்பது எப்போதும் எதிலும் நல்லதாகவும்,மிகச்சிறந்த ஒன்றாயும்/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. தெளிவு தரும் நல்ல படைப்பு.

  ReplyDelete
 24. வே.நடனசபாபதி...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 25. Esther sabi...
  சரி தங்கையே நன்றி .

  ReplyDelete
 26. நிரஞ்சனா...
  தங்கைக்கு வணக்கம் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி மா .

  ReplyDelete
 27. ஸ்ரீராம்...
  தெளிவு படுத்தும் தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

  ReplyDelete
 28. கணேஷ்...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி வசந்தமே .

  ReplyDelete
 29. shanmuham Dhana...
  ஆமாம் சகோ .

  ReplyDelete
 30. அன்பை தேடி,,,அன்பு...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 31. Seeni...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 32. Ramani...
  தங்கள் பின்னூட்டமே எனக்கு ஆசீர்வாதமாய் தெரிகிறது ஐயா . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 33. எல் கே...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 34. AMK.R.PALANIVEL
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 35. kovaikkavi...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 36. Jaleela Kamal...
  தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 37. சென்னை பித்தன்...
  தங்கள் பின்னூட்டமே எனக்கு ஆசீர்வாதமாய் தெரிகிறது ஐயா . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 38. விமலன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 39. சத்ரியன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 40. அழையா விருந்தாளி.......
  >>>
  தலைப்பே பல கருத்துக்கள் சொல்லுது பகிர்வுக்கு நன்றி தோழி

  ReplyDelete
 41. அட போட வைத்த கவிதை!

  ReplyDelete
 42. தென்றல் கவி சசிகலா அவர்களின் பிறந்தநாள்- 24-04-2012.......வாழ்த்துவோம் கவியை!

  ReplyDelete
 43. கவிதை பிரமாதம்..நாளுக்கு நாள் உங்களின் எழுத்து மெருகேறி வருகிறது..தொடர்ந்து சிறப்பான எழுத்துக்களை தரும் உங்களுக்கு எனது பாராட்டுகள்..

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி