Ads 468x60px

Monday, April 9, 2012

வாழவைத்து வாழ்தல் வேண்டும் !


இயற்கையாய்..........
கோழி முட்டையிட ஆறுமாதங்கள்
நாய் குட்டிபோட-மூன்று மாதங்கள்
பசு கன்றுபோட மனிதர்போல்
பத்துமாதங்கள்-இதுஇயற்கை!
வாழைத் தார் குலைக்க
பெண்மை தாய்மை அடைய
முட்டைகள் பொரித்துடைய
இறக்கைகள் முளைத்து பறக்க
இயற்கை நிர்ணயித்த
காலத்தைமாற்றுகின்ற
சுயநலத்தின் வெளிப்பாடு

பலவந்தமாய் மாறியதோ?
இருப்பதை இணைத்தெடுத்து
பறப்பதையும் உருவாக்கி
பகையையும் அதில்பூட்டி
நாம்பெற்ற வெற்றியென்ன?
நோயினறி வேறில்லை
பிரிவுகளும் தொடர்கதையாய்!

எண்ணிநாம் தூவுகின்ற
விஷங்களே நமைஅழிக்கும்
விபரீதம் உணரவில்லை.
இனவிருத்தி பெயராலே
ஒட்டினம் என்றுரைத்து
விரிவாக்கம் செய்வதெல்லாம்
வினையன்றி வேறில்லை!
கணநேர சிந்தனையி்ல்
தோன்றிமறையும் கனவல்ல
எதிர்காலம் நமதில்லை
அதைஅழித்தால் சுனாமிதான்
அதற்குமேல் அழிவெல்லாம்
ஆகாயமார்க்கம் வரும்!
தேவையென்ற பாத்திரம்
நிறைவதுமட்டும் இலக்கானால்
இழப்பொன்றே நாடிவரும்
இனமு்ம் நமக்கில்லை
மனதிலும் மாண்பில்லை
பலவந்தமாய் உரிமைகளை
சுயநலமாப் பறிக்கின்றோம்!
சிற்றின்பம்,பேரின்பம்
திசைமாறிய பறவைகளாய்!
காட்டாற்று நீரினிலே
உருண்டு,புரண்டோடி
உருமாறும் கூழாங்கல்
மணலாய் வடிவெடுத்தால்
அதையும் திருடிடுவோம்
நீர் ஆதாரம் அழித்திடுவோம்!

படைப்புகள் அத்தனையும்
நமதென்று வேதம் செயவோம்
நாமெதையும் ஈயமாட்டோம்
தீமைமட்டும் விதைத்திடுவோம்!
சுயநலம் மட்டுமே-நம்

வாழவைத்து வாழ்தல் வேண்டும்,
வாசமான வாழ்விதுவே!
இயற்கையோடு போட்டியிட்டு
இருப்பதெல்லாம் நாம்அழித்தால்
காலம் காத்திருந்து ,நமை
அழிக்கும் காலம்வரும்!
பலவந்தமாப் பறித்தெடுக்கும்
மனநிலை மாறவேண்டும்.
இயற்கை மரணமானால்
நீயுமில்லை,நானுமில்லை!

36 comments:

 1. //
  வாழவைத்து வாழ்தல் வேண்டும்,
  வாசமான வாழ்விதுவே!
  இயற்கையோடு போட்டியிட்டு
  இருப்பதெல்லாம் நாம்அழித்தால்
  காலம் காத்திருந்து ,நமை
  அழிக்கும் காலம்வரும்!
  பலவந்தமாப் பறித்தெடுக்கும்
  மனநிலை மாறவேண்டும்.
  இயற்கை மரணமானால்
  நீயுமில்லை,நானுமில்லை

  ?//

  அழம்மான , அழகான வரிகள்

  ReplyDelete
 2. அழகாக ஆழமாக கவிதை வாயிலாக பதிவு செய்துள்ளீர்கள் ஆம்.........வாழவைத்து வாழ்தல் வேண்டும்.

  ReplyDelete
 3. வணக்கம் தங்கை சசிகலா,
  இயற்கையாக நடப்பவையை
  செயற்கையாய் விசைப்படுத்தி
  அதிவிரைவில் பணம் செய்யத் துடிக்கும்
  வளம் கொழிக்க நினைக்கும்
  இன்றைய ஒரு சாரார் செய்யும்
  செயல்களை அழகாக உணர்வுப்பூர்வமாக
  சொல்லி இருக்கிறீர்கள்..

  இதில் என்ன வேடிக்கை என்றால்
  அப்படி எடுத்த பொருட்களிலும்
  கலப்படத்தை கலந்து விடுகிறார்கள்..
  அடுத்த சாரார்...

  காலக் கொடுமை தான்..

  ReplyDelete
 4. சமூகச் சிந்தனை அதிகம் சசி உங்களிடம்.அதே வரிசையில் மீண்டும் ஒரு அற்புதமான கவிதை.பாராட்டுக்கள் !

  ReplyDelete
 5. இயற்கை மரணமானால் நீயுமில்லை நானுமில்லை... முத்தாய்ப்பு அருமை. இயற்கையுடன் இயைந்து வாழாமல் மனிதன் எப்போது முரண்படத் தொடங்கினானோ, அப்போதே இயற்கையின் சீற்றம் ஆரம்பித்து தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அருமை தென்றல்!

  ReplyDelete
 6. ஃஃஃஇருப்பதை இணைத்தெடுத்து
  பறப்பதையும் உருவாக்கி
  பகையையும் அதில்பூட்டி
  நாம்பெற்ற வெற்றியென்ன?ஃஃஃஃ

  அருமையான கேள்வி சகோதரி...

  இதன் விடை பூச்சியம் தானே..

  ReplyDelete
 7. இயற்கை மாற்றத்தை-
  செயற்கை செய்தால்-
  அழிவுதான் என்று-
  சொல்லிடீங்க!

  உண்மைதான்!

  புரியவேண்டியவர்கள்-
  புரியமாட்டேன்கிறார்களே...!

  ReplyDelete
 8. காட்டாற்று நீரினிலே
  உருண்டு,புரண்டோடி
  உருமாறும் கூழாங்கல்
  மணலாய் வடிவெடுத்தால்
  அதையும் திருடிடுவோம்
  நீர் ஆதாரம் அழித்திடுவோம்!
  -உண்மைதான்
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 9. அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது அக்கா....

  ReplyDelete
 10. நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். வாழவைத்து வாழ்ந்தால்தான் இயற்கை நம்மை வாழவைக்கும். சிறப்பான பதிவு.

  ReplyDelete
 11. //இயற்கையோடு போட்டியிட்டு
  இருப்பதெல்லாம் நாம்அழித்தால்
  காலம் காத்திருந்து ,நமை
  அழிக்கும் காலம்வரும்!//

  உண்மைதான்.நீங்கள் சொல்லியிருக்கும் அழிவு காலம் வந்துவிட்டது.இப்போதாவது விழித்துக்கொள்வோமா?
  நல்ல பொருள் பொதிந்த கவிதை.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இயற்கையை அழிப்பவர்களை வறுத்தெடுக்கும் கவிதை...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. "என் ராஜபாட்டை"- ராஜா ...
  தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 14. மனசாட்சி™ ..
  புரிந்து கொள்ளும் மனங்கள் இல்லையே என்ன செய்வது ? . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 15. மகேந்திரன் ....
  அண்ணா வணக்கம் . கலப்படம் என்பது மன எண்ணத்திலும் கலைந்துவிட்டதே , அதனால் விளைகின்ற தீமையே இவ்வளவும் . நன்றி அண்ணா .

  ReplyDelete
 16. ஹேமா ...
  வணக்கம் சகோ . சமூகம் தான் சிந்திக்க மறுக்கிறதே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 17. vincible.vijay....
  தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 18. கணேஷ்....
  வசந்தமே இயற்கையை நாம் கொடுமை படுத்துவதன் மூலம் நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்கிறோம் இதை உணருவாரோ ? . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 19. ♔ம.தி.சுதா♔....
  இயற்கையின் விடை பூஜ்யம் என்றால் நம் வாழ்வும் பூஜ்யமே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 20. Seeni ...
  புரிய வேண்டியவர் புரிந்து கொண்டால் அழிவே இல்லையே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 21. Seshadri e.s.....
  உண்மையை உணர்த்தவும் வழியில்லை என்ன செய்வது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 22. எஸ்தர் சபி....
  இயற்கையை அழிக்காதீர்கள் என கெஞ்சுகிறது சகோ .

  ReplyDelete
 23. T.N.MURALIDHARAN...
  நம் அழிவை நாமே எதிர்கொள்ளும் அவலம் .
  தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 24. வே.நடனசபாபதி ....

  உண்மைதான்.நீங்கள் சொல்லியிருக்கும் அழிவு காலம் வந்துவிட்டது.இப்போதாவது விழித்துக்கொள்வோமா?
  நல்ல பொருள் பொதிந்த கவிதை.
  வாழ்த்துக்கள்!////
  விழித்துக்கொண்டால் நல்லது . விழி இருந்தும் குருடராய் நாம் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 25. koodal bala ...
  உணர்த்த முடியாமல் வெறுத்து எழுதிய வார்த்தைகள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 26. இது வெறும் கவிதையல்ல!பாடம்!

  ReplyDelete
 27. “இயற்கையோடு போட்டியிட்டு
  இருப்பதெல்லாம் நாம்அழித்தால்
  காலம் காத்திருந்து ,நமை
  அழிக்கும் காலம்வரும்!“

  அருமையான வரிகள்.
  பாராட்டுக்கள் சசிகலா

  ReplyDelete
 28. ''..பலவந்தமாப் பறித்தெடுக்கும்
  மனநிலை மாறவேண்டும்.
  இயற்கை மரணமானால்
  நீயுமில்லை,நானுமில்லை!...''
  மிகச் சிறந்த கருத்துகள். வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 29. சென்னை பித்தன்...
  பாடம் என்பதாலே படிக்க மறுக்கும் சமூகம் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 30. AROUNA SELVAME ...\
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  ReplyDelete
 31. kovaikkavi..
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  ReplyDelete
 32. அனைத்தும் அருமை..
  முடிவு ரொம்ப அருமை..முத்தாயிப்பாய் முடித்திருக்கிறீர்கள்..

  "இயற்கை மரணமானால்
  நீயுமில்லை,நானுமில்லை!"

  ReplyDelete
 33. நயமாக சொன்னீர்கள்
  அதிலும்
  செயற்கையால் நலம் கெடும்
  இயற்கையை சொன்னிர்கள்

  ரெம்ப நல்ல கவிதை தோழி

  ReplyDelete
 34. படமும் பாடலும் பகுத்து அறியவேண்டிய பாடம்! நன்று!

  சா இராமாநுசம்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி