Ads 468x60px

Thursday, April 5, 2012

கனவு இல்லம் ...


வாஸ்த்தெல்லாம் சரிபார்த்து,
சாமிக்கு  பூஜைவைத்து பூஜித்து,
செய்வினைக்கு  மந்திரமோதி,
அவன்  கட்டிய அழகான மாளிகை,
அவன்  பெயர் சொல்லும்படி,
ஊரிலே பெரிதாக ஆனந்தவிலாஸ்,
கிரகப்பிரவேச நாள் குறித்து,
பத்திரிகைப் பார்த்தெடுத்து,
பங்காளி, பகையாளி அனைவரையும்,
அழைக்க முடிவெடுத்து,
ஓலைகள் அனுப்பிவிட்டேன்,
பால்பொங்கும் புதன்கிழமை!

பின்நோக்கிப் பார்த்தால்
இருபதுவருடக் கதையிது
மனைவாங்க வேண்டுமென்ற
மனஆசைத் தீயெரிய
கொடுத்த கடனுக்காய் நண்பன்,
வட்டிசெலுத்த முடியாமல்,
நின்றநிலை சாதகமாக்கி,
வாங்கிய பூமியிது அவனுக்கு
விதிசெய்த சதி-எனக்கு?
வீட்டைச்சுற்றி பார்கின்றேன்,
சுவரெல்லாம் கிரானைட்கல்,
தரைக்கு வெள்ளைமார்பிள்,
ஜன்னல்,கதவெல்லாம் ஈட்டி,
தேக்குமரத்தாலே !
அடுப்பறை,குளியலறை,
விருந்தினர்காய் தனியறை,
அவன் கண்ட கனவெலலாம்,
மாளிகை வடிவத்தில்!
சுற்றிப்பார்த்து மனம்மகிழ்ந்து,
அறை  அறையாய்த் தாழிட்டு
முன்அறையில் மாட்டிவைத்த,
இறைவனை வணங்கிவிட்டு,
இன்று "நான்"மட்டும் இனிமேல்,
எனைத்தேடி உறவெல்லாம்,
ஓடிவரும் என்றெண்ணி,
முன்வாதில் பூட்டுகையில்,
நெஞ்சில் ஏதோ உருள்வதைப்போல்!
விரல் நுனியில் இருந்து,
மெதுவாய் மேல்நகர்ந்து,
வலியொன்று பயணிக்க,
அடிவயிற்றில் மற்றொன்று,
இதயம்நோக்கி நகர்ந்துவர,
அவனுக்கு புரிந்தது-காலன்,
வாதில் படியிலென்று!
எல்லாம் "நான்" கட்டினேன்,
எனக்காகக் கட்டவில்லையோ?
மெதுவாய்ப் படியமர்ந்து,
காப்பாற்ற யாராவது வருவாரா?
தெருநோக்கிப் பார்த்தான்,
வேர்வைத்துளி முத்தாட,
காட்சி-கறுப்பு வெள்ளையாக,
"நான்"எனதென்று கட்டியது,
 நினைவுச்சின்னமா! கல்லறையா?
மெதுவாய்ச் சாய்ந்தான்!
தூரத்தில் "பூமி"கொடுத்த,
நண்பன் முகம்..நிழலாய்!

41 comments:

 1. மிக மிக அருமையான கருத்தாழம் மிக்க கவிதை

  ReplyDelete
 2. ஒவ்வொரு படிக்கட்டாய் ஏறி உச்சம் தொடுவதுபோல்
  சொல்லவேண்டியதை
  மிக மிக அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நான்"எனதென்று கட்டியது,
  நினைவுச்சின்னமா! கல்லறையா?

  அருமையான பதிவு!
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 4. கருத்தாழமிக்க கவிதை...அருமை!

  ReplyDelete
 5. Avargal Unmaigal...
  தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 6. ரத்னவேல் நடராஜன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 7. hi pa sasi supero super. unga name nan padmasri ku recommand panre pa. nice one pa.  great

  ReplyDelete
 8. ரமணி..
  ஐயா உணர்ந்து படித்து கருத்து சொன்ன விதம் அருமை . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

  ReplyDelete
 9. AROUNA SELVAME ..
  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 10. கீதா லட்சுமி ...
  தங்கள் முதல் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 11. koodal bala ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 12. raja66 ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 13. அழகான , தெளிவான கவிதை வரிகள் ... கடைசி ஆறு வரிகள் மிக அருமை

  ReplyDelete
 14. "என் ராஜபாட்டை"- ராஜா ..
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 15. "நான்" கட்டினேன்,
  எனக்காகக் கட்டவில்லையோ?
  மெதுவாய்ப் படியமர்ந்து,
  காப்பாற்ற யாராவது வருவாரா?"

  கொன்னுட்டீங்க!

  ReplyDelete
 16. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று இதுதானா? சோகமாயிருந்தாலும் கவிதை சுகமாய் இருந்தது.

  ReplyDelete
 17. மிக சோகம். வாழ்வே இது தான் எனது உனது எதுவுமே இல்லை. இதை உணராது நாமும் பூமியில். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. கவிதையின் ஊடாக கதையும் பின்னியிருக்கிறீர்கள். வலிமையான தமிழ் வார்த்தைகளால் எங்கள் மனதையும் பின்னி விட்டீர்கள் தென்றல். மற்றவரின் வயிறெரியப் பெறும் எதுதான் நிலைக்கும்...? பிரமாதம் கருத்தும், சொன்ன நடையும். நாளுக்கு நாள் உங்கள் எழுத்து உ(ய)ரம் பெற்று வருவதைக் கண்டு நான் மிகமிக அகமகிழ்கிறேன்.

  ReplyDelete
 19. சசி வழக்கம்போல கவிதை அருமை. ஆனாலும் இதில் வரிகளை கொஞ்சம் அழகாகவே கோர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. மனதைப் படித்தெழுதும் வரிகள் சசி !

  ReplyDelete
 21. அற்புதம், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. இல்லங்களை கட்டுவது கனவாகவே ஆகிப்போன சூழலிது.அதைகட்டுக்குள் கொண்டுவரவேண்டியவர்கள் வேடிக்கைபார்த்துக்கொண்டு/
  நல்ல பதிவு ,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. T.N.MURALIDHARAN...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 24. வே.நடனசபாபதி ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 25. kovaikkavi ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 26. கணேஷ் ...
  வசந்தமே தங்கள் வருகையும் விரிவான அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

  ReplyDelete
 27. விச்சு ...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 28. ஹேமா...
  சகோ தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  ReplyDelete
 29. S.Raman,Vellore ....
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 30. விமலன்...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 31. நெஞ்சம் கனக்க நினைவே வலிக்க
  பஞ்சில் நெருப்பென பற்றின துயரம்
  அருமை!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 32. கனவாகிப் போனது இல்லம்! நெஞ்சின் குமுறல்களுக்கு விடையானது உள்ளம்!

  ReplyDelete
 33. புலவர் சா இராமாநுசம் ...
  ஐயா தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா .

  ReplyDelete
 34. தி.தமிழ் இளங்கோ ..
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 35. நிஜம் சொல்லும் கவிதை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. அருமையான கவிதை.........

  ReplyDelete
 38. உண்மை அருமை!
  கவிதை!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி